புதிய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்-1)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். புதிய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று. பழைய ஏற்பாட்டு ஆய்வு பற்றிய பதிவுகளை நீங்கள் படிக்காமல் இருந்தால் கீழே உள்ள லிங்க்யை பயன்படுத்தி, பழைய ஏற்பாட்டு ஆய்வுகளை படித்த பின்பு, புதிய ஏற்பாட்டு ஆய்வை படிப்பீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று (3)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு (4)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து (5)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஆறு (6)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஏழு (7)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் எட்டு (8)
புதிய ஏற்பாட்டை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து. சீஷர்களோடு கடைசியாக இராவிருந்து அனுசரிக்கும்போது,
ரசத்தைப் பங்கிட்டு, இது புதிய உடன்படிக்கையாகிய என்னுடைய இரத்தம் என்று சொல்லுகிறார். அப்படியானால், புதிய ஏற்பாட்டை ஏற்படுத்தியவர் இயேசு
கிறிஸ்து. எதன் மூலமாக ஏற்படுத்தினார் என்றால்,
தனது இரத்தத்தின் மூலமாக ஏற்படுத்தினார்.
கலாத்தியர் 4:4,5
4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக்
கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
5. காலம் நிறைவேறினபோது,
ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை
தேவன் அனுப்பினார்.
புதிய ஏற்பாட்டின் அடித்தள வசனம் கலாத்தியர்
4:4,5 ஆகும். இயேசு கிறிஸ்துவின் வருகையைப்
(பிறப்பு) பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர் சபைக்கு எழுதுகிறார்.
காலம் நிறைவேறின போது என்பது எதைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கு
முன்பு மல்கியா புத்தகம் எழுதப்பட்டது.
இயேசு கிறிஸ்து வருவார் என்று கடைசியாக
நானூறு வருடங்களுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. (மல்கியா 4:5)
அப்படியானால், மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்ததோடு இயேசு கிறிஸ்து வந்திருக்க
வேண்டும். ஏன் நானூறு ஆண்டுகள் சென்ற பின்
வந்தார்?
காலம்
நிறைவேறினபோது:
இயேசு கிறிஸ்து சரியான காலத்தில் வந்தார். இயேசு கிறிஸ்து கொஞ்சம் கால தாமதமாக வந்திருந்தால்
அது அநியாயம். ஆனால், கொஞ்சம் முன்னதாகவே வந்திருப்பாரானால்,
அநேக காரியங்களை அவரால் செய்ய முடியாமல் இருந்திருக்கும். என்ன காலம் நிறைவெறினபோது இயேசு கிறிஸ்து வந்தார்.
1. மொழி:
பழைய ஏற்பாடு எபிரெயு மொழியில் எழுதப்பட்டது. எபிரெயு மொழி யூதர்களின் மொழி. பழைய ஏற்பாடு யூதர்களுக்காக எழுதப்பட்டதால், அவர்களுடைய
மொழியாகிய எபிரெயு மொழியிலேயே பழைய ஏற்பாடு எழுதப்பட்டது.
ஆனால் இயேசு கிறிஸ்து யூதர்களுக்காக மாத்திரம்
வரவில்லை. இயேசு கிறிஸ்து யூதனாக வந்தார்,
இஸ்ரவேலில் வாழ்ந்தார், அவருடைய பன்னிரண்டு சீஷர்களும் யூதர்களாகவே இருந்தார்கள், அப்போஸ்தலனாகிய பவுலும் ஒரு யூதன். ஆனால், யோவான் 3:16-ன் படி இயேசு கிறிஸ்து யூதர்களுக்காகவரவில்லை. முழு உலகத்திற்காகவும் வந்தார்.
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை
அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய்
உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
அவரை: அதாவது இயேசுவை தந்தருளி
எவனோ: இப்பதன் யூதர்களை மாத்திரம் அல்ல,
உலகத்தில் எந்த நாட்டில் எந்த மொழி, எந்த இனத்தைச் சார்ந்தவனாகவும் இருக்க முடியும்.
உலகத்தில்: இஸ்ரவேலர்களிடத்தில், யூதர்களிடத்தில்
அன்பு கூர்ந்தார் என்று எழுதப்பட்டவில்லை.
முழு உலகத்தின் மீதும் அன்பு கூர்ந்தார்.
இயேசு கிறிஸ்து யூதர்களுக்காக வராமல்,
முழு உலகத்திற்கும் வரவேண்டுமானால், முழு உலகத்திற்கும் ஒரே மொழி வரும் வரை அவர் காத்திருக்க
வேண்டும்.
மல்கியாவின் காலத்தில் இயேசு கிறிஸ்து
வந்திருப்பாரானால், அவர் எபிரெயு மொழியிலேயே பேசியிருப்பார். நான்கு சுவிசேஷங்களும் (மத்தேயு, மாற்கு, லூக்கா,
யோவான்) எபிரெயு மொழியிலேயே எழுதப்பட்டிருக்கும்.
இயேசு கிறிஸ்து மரித்த பின்பு, சீஷர்கள் வேறு நாடுகளுக்கு சென்று கிறிஸ்துவை
அறிவிக்க விரும்பினால் அவர்கள் அந்த நாட்டு மொழியை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மத்தேயு 5:1-ல் இயேசு கிறிஸ்து திரளான
ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார் பிரசங்கம் செய்தார் என்று வாசிக்கிறோம். அந்த திரளான ஜனங்கள் யார் என்று மத்தேயு 4:25-ல்
வாசிக்கிறோம்.
தெக்கப்போலியாவிலும் இருந்து வந்து ஜனங்கள்
வந்து இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தைக் கேட்டார்கள். தெக்கப்போலி என்பதன் அர்த்தம் பத்து பட்டணங்கள்
கொண்ட நகரம். தெக்கப்போலியில் இருந்து வந்தவர்கள்
அனைவரும் அந்நியர்.
இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தைக் கேட்டவர்களில்
அந்நியர், ரோம வீரர்கள், பரிசேயர், சதுசேயர், ஏரோதியர், நியாயசாஸ்திரிகள், ஆசாரியர்கள்
இப்படி அநேக தரப்பட்ட மக்கள் இருந்தார்கள்.
இவர்கள் அனைவருக்கும் இயேசு பேசியது நன்றாக புரிந்தது. பல்வேறு மொழிக்காரர்கள் இருந்தாலும் இயேசு கிறிஸ்து
பேசியதை நன்கு பரிந்துகொண்டார்கள்.
உலகில் இதுவரை மூன்று உலகப் பொது மொழிகள்
உள்ளது. இன்று உலகப் பொது மொழியாக இருப்பது
ஆங்கிலம். கி.பி. 1812-ல் ஆங்கிலம் உலகப் பொது
மொழியாக அறிவிக்கப்பட்டது.
கி.பி.404 முதல் கி.பி. 1811 வரை உலகப்
பொது மொழியாக இருந்தது இலத்தின் மொழி ஆகும்.
இக்காலக்கட்டத்தில் ரோமர்கள் உலகத்தை ஆட்சி செய்ததால் ரோமர்களின் மொழியாகிய
லத்தின் மொழியை உலகப் பொதுமொழியாக மாற்றினார்கள்.
கிரேக்க மொழியே, உலகில் தோன்றிய முதல்
உலகப் பொதுமொழி ஆகும்.
முதல்
சாம்ராஜ்யம்:
உலகத்தில் நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி
அமைத்த முதல் சாம்ராஜ்யம் அசீரிய சாம்ராஜ்யம்.
அநேக அரசர்கள் தங்கள் அண்டை நாடுகளைக் கைப்பற்றினார்கள். ஆனால் ஆசீரியர்களே முதல் முறையாக அநேக நாடுகளைக்
கைப்பற்றினார்கள். அசீரியர்கள் பல நாடுகளைக்
கைப்பற்றினாலும் அவர்களுடைய அசீரிய மொழியை உலகப் பொதுமொழியாக அறிவிக்கவில்லை.
இரண்டாம்
சாம்ராஜ்யம்:
உலகில் இரண்டாவது தோன்றி சாம்ராஜ்யம்
பாபிலோன் சாம்ராஜ்யம். பாபிலோனியர்கள் அசீரியர்களைக்
கைப்பற்றியதோடு, அசீரியர்கள் கைப்பற்றாத சில நாடுகளையும் கைப்பற்றினார்கள். பாபிலோனியர்கள் அசீரியர்களைக் கைப்பற்றியதால் ஆசீரியர்கள்
கைப்பற்றிய அனைத்து நாடுகளும் பாபிலோனுக்கு கீழாக வந்தது. மட்டுமல்லாமல் அசீரியர்கள் கைப்பற்றாத மற்ற நாடுகளையும்
பாபிலோனியர்கள் கைப்பற்றியதால் பாபிலோன் ஒரு சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. இதுவே உகில் தோன்றிய இரண்டாவது சாம்ராஜ்யம்.
எ.கா: இஸ்ரவேல் நாட்டின் தெற்கு ராஜ்யமாகிய
யூதா தேசத்தை அசீரியர்களால் கைப்பற்ற முடியில்லை.
ஆனால் பாபிலோன் சாம்ராஜ்யத்தின் போது நேபுகாத்நேச்சார், யூதா தேசத்தையும் கைப்பற்றினார். யூதா தேசம் கைப்பற்றப்பட்டபோது யூதாவின் ராஜாவாய்
இருந்தது சிதேக்கியா. இதைப்பற்றி எரேமியா புத்தகத்தில்
வாசிக்கலாம்.
பாபிலோன் சாம்ராஸ்யமானபோது பாபிலோனியர்கள்
பேசிய அகாடின் மொழியோ, சுமேரியன் மொழியோ உலகப் பொதுமொழியாக மாற்றப்படவில்லை.
மூன்றாம்
சாம்ராஜ்யம்:
மேதியர்களும், பெர்சியர்களும் பாபிலோனைக்
கைப்பற்றியதால் மேதிய, பெர்சியர்கள் ஒரு சாம்ராஜ்யமாக உருவெடுத்தார்கள். இவர்களைப்பற்றி தானியேல் ஐந்தாம் அதிகாரத்தில் வாசிக்கலாம். மேதியாவை விட பெர்சியா பெரிய தேசம். மூன்றாவது சாம்ராஸ்யத்தை பெர்சிய சாம்சாஸ்யம் என்று
அழைக்கலாம்.
பெர்சியா சாம்ராஜ்யமானபோது பெர்சியர்கள்
அவர்கள் பேசியர் பெர்சியா மொழியை உலகப் பொதுமொழியாக மாற்றப்படவில்லை.
உலகத்தில் மொத்தம் ஐந்து கண்டங்கள் உள்ளது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா. ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட
நாடுகளாகும். அப்படியானால் முன்பு உலகத்தில்
இருந்த கண்டங்கள் மூன்று. அவைகள்: ஆசியா, ஆப்பிரிக்கா,
ஐரோப்பா. பெர்சியர்கள் இன்னும் அதிகமான நாடுகளை
கைப்பற்ற துவங்கினார்கள்.
எஸ்தர் 1:1-ல் இந்து தேசம் முதல் எத்தியோப்பியா
தேசம் வரை உள்ள நூற்று இருபத்தேழு நாடுகளை அகாஸ்வேரு ஆட்சி செய்தான். இந்த அகாஸ்வேறு பெர்சிய சாம்ராஜ்யத்தின் அரசன்.
இந்தியா ஆசியாவில் உள்ளது. எத்தியோப்பியா ஆப்பிரிக்காவில் உள்ளது. இந்தியா முதல் எத்தியோப்பியா வரை பெர்சியர்கள் கைப்பற்றினார்கள்
என்றால், ஏறக்குறைய முழு உலகத்தையும் கைப்பற்றிவிட்டார்கள்.
நயில்
நதி:
எத்தியோப்பியாவில் தான் நயில் நதி துவங்குகிறது. நயில்நதியின் மொத்த நீளம் ஆறாயிரத்து எழுநூற்று
இருபத்து மூன்று கிலோமீட்டர் (6723 கி.மீ).
இந்த நயில் நதி பதினொரு நாடுகளுக்கு ஓடுகிறது. இவற்றில் இரண்டாயிரத்து எழுநூறு கிலோமீட்டர்
(2700 கி.மீ) எகிப்தில் ஓடுகிறது. மற்ற நாடுகளை
விட எகிப்தில் நயில் நதி அதிக பரப்பளவு கொண்டதால் நயில்நதி என்றால் எகிப்து என்று நாம்
நினைக்கிறோம். உலகில் உயரமான நதி இந்த நயில்
நதி. உலகில் தெற்கிலிருந்து வடக்கிற்கு பாயும்
ஒரே நதி இந்த நயில் நதி. நயில் நதி எத்தியோப்பியாவில்
துவங்கி எகிப்தில் முடிவடைகிறது.
நான்காவது
சாம்ராஜ்யம்:
உலகில் தோன்றி நான்காவது சாம்ராஜ்யம் கிரேக்க சாம்ராஜ்யம். கி.மு. 334-ல் உலகில் பெரும்பகுதியைக் கைப்பற்றிய
பெர்சியாவை மகா அலெக்சாண்டர் கைப்பற்றினார்.
அதோடு மாத்திரம் அல்ல, பெர்சியர்கள் கைப்பற்றாத மற்ற அனைத்து நாடுகளையும் மகா
அலெக்சாண்டர் கைப்பற்றினார். உலக நாடுகள் முழுவதையும்
அலெக்சாண்டர் கைப்பற்றியதால் நாம் அவனை மகா அலெக்சாண்டர் என்று அழைக்கிறோம்.
முழு உலகத்தையும் கைப்பற்றிய மகா அலெக்சாண்டர்
இதுவரை உலகில் இல்லாத ஒரு சட்டத்தை இயற்றினான்.
இது என்ன சட்டம் என்றால், எனது ஆழுகைக்கு உட்பட்ட அனைத்து நாடுகளும் என் மொழியையே
பேச வேண்டும். கி.மு. 333-ம் ஆண்டு உலகில்
முதல் முறையாக ஒரு மொழி உலகப்பொதுமொழியாக மாற்றப்படுகிறது. இதுதான் கிரேக்க மொழி.
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தங்கள்
மொழியை பேசிக்கொள்ளலாம். பள்ளிகள், அலுவலகங்கள்,
பொது இடங்களில் கிரேக்க மொழியையே பேச வேண்டும் என்று மகா அலெக்சாண்டர் கட்டளையிட்டார்.
நமது இந்தியாவிலும் பல மன்னர்கள் ஆட்சி
செய்தார்கள். எ.கா: சேர, சோழ, பாண்டியர்கள். இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து மன்னர்களும் மகா
அலெக்சாண்டருக்கு வரி செலுத்திக்கொண்டிருந்தார்கள். சட்ட ரீதியாக அனைத்து காரியங்களையும் கிரேக்க மொழியிலேயே
பேசினார்கள். இதனால் அநேக மொழிகள் பேச்சு மொழியாக
மட்டுமே இருந்தது.
கிரேக்கம் உலகப் பொதுமொழியாக்கப்பட்டு
333 ஆண்டுகள் சென்று இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தார். இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது உலகில் எந்த மூலைக்குச்
சென்றாலும் அவர்கள் பேசிய மொழி கிரேக்க மொழியாகவே இருந்தது.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடும்
கிரேக்க மொழிக்கு மாற்றப்பட்டது. ஜெப ஆலயங்களைத்
தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பழைய ஏற்பாடு கிரேக்க மொழியிலேயே வாசிக்கப்பட்டது.
கி.மு 250-ல் எழுபது பேர் கொண்ட அமைப்பு,
எழுபது நாட்களில் முழு பழைய ஏற்பாட்டையும் கிரேக்க மொழிக்கு மாற்றினார்கள். இதன் பெயர் தான் செப்டுவர்ஜிட்.
அநேக இனத்தவர் வந்து இயேசுவின் வார்த்தைகளைக்
கேட்டார்கள். அவர்களுக்கும் இயேசு கிறிஸ்து
பேசிய மொழி தெரிந்தது. காரணம் முழு உலகிற்கும்
பேச்சு மொழியாக கிரேக்க மொழி மாறியது.
இயேசுவைப் பார்ப்பதற்கு நூற்றுக்கு அதிபதி
வருகிறான். நூற்றுக்கு அதிபதி என்றால் அவன்
ஒரு ரோமன். ரோமர்கள் லத்தின் மொழி பேசினாலும் அவர்களுக்கு கிரேக்க மொழி கட்டாயம் தெரிந்திருக்கும்.
ரோமர்கள் லத்தின் மொழி பேசுவார்கள். பரிசேயர்கள் எபிரெய மொழி பேசுவார்கள். சதுசேயர்கள் அராமிய மொழி பேசுவார்கள்.
பவுல் மூன்று மிஷனெரி பயணங்களை மேற்கொண்டார். அநேக பட்டணங்கள், நாடுகளை சுற்றித்திரிந்தார். எல்லா இடங்களிலும் கிரேக்க மொழி அதிகாரப்பூர்வ மொழி
என்பதால், எல்லா இடங்களிலும் கிரேக்க மொழியிலேயே பவுல் பிரசங்கித்தார்.
தோமா இந்தியா வந்தபோது கேரளாவில் ஊழியம்
செய்தார். கேரளாவில் தோமா மலையாளம் பேசவில்லை
கிரேக்கத்திலேயே பேசினார். தோமா சென்னையில்
ஊழியம் செய்த போதும் கிரேக்கத்திலேயே பேசினார்.
தோமா பேசியதை சரியாக புரிந்துகொள்ள முடியாத பிராமணர்கள் அவரை கொலை செய்தார்கள்.
காலம் நிறைவேறினபோது என்றால், கர்த்தர்
பேசக்கூடிய வார்த்தைகள் முழு உலகத்திற்கும் சென்றடைய வேண்டும். அப்படியானால், உலகம் முழுவதற்கும் ஒரே மொழி கொண்டு
வரப்படவேண்டும். அதற்கான காலம் வரும் வரை ஆண்டவர்
காத்திருந்தார்.
2.
சிலுவை மரணம்:
இயேசு கிறிஸ்து மரிப்பதற்காகவே உலகத்திற்கு
வந்தார். அவர் எப்படி மரிக்க வேண்டும் என்றால்,
இரத்தம் சிந்தி மரிக்க வேண்டும்.
1 யோவான் 1:7ஆ
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச்
சுத்திகரிக்கும்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே நம்மை
சுத்தப்படுத்த முடியும். இயேசு கிறிஸ்துவின்
சரீரத்தில் உள்ள அனைத்து இரத்தங்களும் சிந்தப்பட வேண்டும்.
உலகத்தில் கொடுக்கப்பட் மரண தண்டனைகளில்
மிகவும் கொடுமையான தண்டனை குற்றவாளியை சிலுவை மரத்தில் தூக்கி கொலை செய்வது. இம்முறையில் குற்றவாளி மரிப்பதற்கு இரண்டு அல்லது
மூன்று நாட்கள் ஆகும். அவ்வளவு எளிதாக அவர்கள்
உயிர் அவர்களை விட்டுப் பிரியாது.
ரோமர்கள் மூன்று விதமான சிலுவையை பயன்படுத்தினார்கள்.
ஒன்று ஒரு கம்பு மட்டுமே இருக்கும்
சிலுவை. இம்முறையில் இரண்டு ஆணிகளை மட்டுமே
பயன்படுத்தி அரைவார்கள்
இரண்டாவது முறை ஆலங்கில எழுத்து
“Y” வடிவில் இருக்கும் சிலுவை.
மூன்றாவது முறை கூட்டல் ”+” வடிவில்
இருக்கும் சிலுவை.
இம்மூன்று முறைகளில் எந்த சிலுவை மரணத்தில்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறைந்தார்கள் என்று நாம் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சிலுவையில் மரித்தார் அது உண்மை. இம்மூன்று முறைகளிலும் கைகளிலும், கால்களிலும் மட்டுமே
ஆணிகளால் அரைவார்கள்.
சில பயங்கரமான குற்றவாளிகளை மாத்திரம்
முப்பத்து ஒன்பது (39) முறை வாரினால் அடிப்பார்கள். வார் ஒவ்வொன்றும் கொக்கி வடிவில் இருக்கும். ஒரு முறை சரீரத்தில் அடித்து இழுக்கும்போது சரீரத்தில்
உள்ள சதையையும் எடுத்துக்கொண்டு வரும். வாரினால் அடித்த ஒரு நபரை சிலுவையில் அறையும்போது,
வாரினால் அடித்த காயங்களில் இருந்தும் இரத்தம் வெளியே வரும், ஆணிகள் அடித்த துவாரத்திலிருந்தும்
இரத்தம் வெளியே வரும்.
இரத்தம் உரையும் தன்மை கொண்டது. நமது சரீரத்தில் ஒரு காயம் ஏற்பட்டால் இரத்தம் கசியத்துவங்கும். சிறிது நிமிடங்களிலேயே இரத்தம் உரைந்து நின்றுவிடும்.
சிலுவை மரணத்தின் போது சரீரத்தில் உள்ள
அனைத்து இரத்தமும் சரீரத்தை விட்டு வெளியேறி, இரத்தம் இல்லாமல் அந்த மனிதர் மரிக்க
வேண்டும். இரத்தம் உரையும் தன்மை கொண்டது என்பதால்,
ஒருவரை சிலுயைில் அறையும் போது, கொஞ்ச நேரத்திலேயே இரத்தம் உரைய துவங்கும். இரத்தம் உரையக்கூடாது, குற்றவாளி முழு இரத்தத்தையும்
இழந்தவனாக மரிக்க வேண்டும் என்பதற்காக போர்வீரர்கள் ஒரு தடியை எடுத்து, அதின் நுணியை
ஒரு திரவத்தில் தோய்த்து, கைகளிலும் கால்களிலும் உள்ள காயங்களில் வைப்பார்கள். அப்பொழுது அந்த திரவம் இரத்தத்தை உரையச் செய்யாமல்
வெளியேற்றிக்கொண்டே இருக்கும். போர்வீரர்கள்
சில மணி நேரத்திற்கு ஒரு முறை இத்திரவத்தை குற்றவாளியின் காயங்களில் வைப்பார்கள். சுமார் மூன்று நாட்கள் குற்றவாளியின் சரீரத்திலிருந்து
இரத்தம் வெளியேரும். பின்பு அந்த குற்றவாளி
மரித்துப்போவார்.
ஒருவரை சிலுவையில் அறைந்ததற்கு மறுநாள்
ஓய்வுநாளாக இருக்குமானால், அந்த நாளில் யாரும் வேலை செய்யக்கூடாது என்பதால் ஆறாம் நாள்
மலையில் குற்றவாளியின் கால் எழும்புகளை அடித்து நொறுக்குவார்கள். அப்படி அடிக்கும்போது தொங்கிக்கொண்டிருக்கும் குற்றவாளி
வேதனை தாங்க முடியாமல், மூச்சு விட முடியாமல் மரித்துப்போவார்.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது
ஆறாம் நாள். மறுநாள் ஓய்வு நாள் என்பதால் இயேசுவோடு
சிலுவையில் அறையப்பட்டவர்களின் கால் எழும்புகளை முறித்தார்கள். இயேசுவின் கால் எழும்புகளை முறிக்க முற்படும்போது,
போர்வீரன் கவனித்துப்பார்க்கிறான் இயேசு கிறிஸ்து மரித்துப்போயிருந்தார். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் அனைத்து இரத்தங்களும்
வெளியேறி அவர் மரித்துவிட்டாரா என்ற சந்தேகம் போர்ச்சேவகர்களுக்கு வந்தது. உடம்பில் உள்ள அனைத்து இரத்தங்களும் விலா எலும்பு
பகுதியிலேயே வந்து தங்கும்.. இயேசு கிறிஸ்து
மரித்துப் போயிருப்பாரானா அவர் விலாவில் இரத்தம் இருக்காது. இதை அறிந்துகொள்வதற்காகவே போர்ச்சேவகர்கள் விலாவிலே
குத்துகிறார்கள். அப்படி இயேசுவின் விலாவில்
போர்ச்சேவகர்கள் குத்தியபோது, தண்ணீரும் இரத்தமும் வெளியே வந்தது. இது எதைக் குறிக்கிறது என்றால், இயேசு கிறிஸ்துவின்
சரீரத்தில் உள்ள அனைத்து இரத்தங்களும் வெளியேறிவிட்டது என்பதைக் காட்டுகிறது.
போர்ச்சேவகர்கள் இயேசு கிறிஸ்துவின்
விலாவில் குத்தியதும் இரத்தமும் தண்ணீரும் வந்தது ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது என்று
சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான
ஒரு நம்பிக்கை.
இயேசு கிறிஸ்து தாகமாயிருக்கிறேன் என்று
சொன்னது ஆத்தும தாகத்தை சொன்னதாக அநேகர் நினைக்கிறார்கள். அவர் சிலுவையில் தொங்கியபோது சரீரத்தின் வேதனையால்
அப்படி சொன்னார். அதற்கு போர்ச்சேவகர்கள் தண்ணீரை
கொடுக்கவில்லை. இரத்தம் உரையாமல் இருக்க ஒரு
திரவத்தைக் காயங்களில் வைத்தார்களே, அத்திரவத்தையே அருந்துமாறு இயேசுவுக்கு கொடுத்தார்கள். அது ஒரு கசப்பான திரவம்.
சிலுவை மரத்தில் இயேசு மரித்தால் மட்டுமே
அவர் சரீரத்தில் உள்ள அனைத்து இரத்தங்களும் வெளியேரும். சிலுவை மரண தண்டனை கொடுக்கும் காலம் வரும் வரை ஆண்டவர்
காத்திருந்தார்.
சிலுவை மரணத்திற்கு முன்பாக புலக்கத்தில்
இருந்த மரண தண்டனைகள் என்னவென்றால், கழுத்தை அறுத்து கொலை செய்வார்கள், கல்லெறிந்து
கொலை செய்வார்கள், தூக்கு மாட்டி கொலை செய்வார்கள். இயேசு கிறிஸ்து மரிக்கும்போது அவர் சரீரத்தில் உள்ள
அனைத்து இரத்தமும் வெளியேர வேண்டும், அவருடைய சரீரத்தில் உள்ள ஒரு எலும்பாகிலும் முறிக்கப்படக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு மரண தண்டனை உலகத்திற்கு வரும்
வரை அவர் காத்திருந்தார்.
சிலுவை மரணத்தை உருவாக்கியவர்கள் ரோமர்கள்.
3. புத்திர சுவிகார சட்டம்
ரோமர் 8:15
அந்தபடியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின்
ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப்
பெற்றீர்கள்.
கலாத்தியர் 4:6
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே!
என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
பிள்ளைகளை தத்து எடுக்கும் முறை என்பது
அந்த காலம் தொட்டு இன்று வரை அநேக கலாச்சாரங்களில் இருந்து வருகிறது. இம்முறையானது ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் மாறுபடும்.
சில கலாச்சாரத்தில் குழந்தை இல்லாத தகப்பன்
ஒரு குழந்தையை தத்து எடுக்கிறார் என்றால், அவருடைய அனைத்து சொத்துக்களும் தத்துப்பிள்ளையை
சாரும். அந்த தகப்பனுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால், தத்தெடுத்தவனை காட்டிலும், தன் மூலமாக பிறந்த மகனுக்கே
அனைத்து சொத்துக்களும் சென்றுவிட வேண்டும் என்ற கலாச்சாரமும் உண்டு. அதாவது வாரிசு என்று சொல்லுவார்கள்.
வாரிசு என்ற கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள்
ரோமர்கள். ரோமர்கள் கலாச்சாரப்படி யார் வேண்டுமானாலும்
பிள்ளைகளை தத்தெடுக்கலாம். அவர்களுக்கு பிள்ளைகள்
இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் பிள்ளைகளை தத்தெடுக்கலாம். அப்படி தத்து எடுக்கும் பிள்ளை ஆண் பிள்ளையாக இருந்தால்,
தன் மூலமாக பிறந்த மகனுக்கு தகப்பன் எவ்வளவு உரிமைகள் கொடுக்கிறாரோ, அந்த உரிமையை தத்து
எடுத்த மகனுக்கும் கொடுக்க வேண்டும்.
யூத
காலாச்சாரம்:
யூத கலாச்சாரத்தில் மூத்த ஆண் மகனுக்கு
மாத்திரமே சொத்து கொடுக்கப்படும். ஒரு தகப்பனுக்கு
முதல் மூன்று பெண் குழந்தைகள் பிறந்த பின்பு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறான் என்றால் தகப்பனின்
முழு சொத்தும் அந்த நான்காவதாக பிறந்த ஆண் மகனையே சேரும். அவன் தான் குடும்பத்தின் வாரிசு. அந்த பெண் பிள்ளைகளுக்கு ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் பிறந்தாலும் அவனுக்கும்
ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். ஒரு குடும்பத்தில்
முதல் பிறக்கும் ஆண் மகனே குடும்பத்தின் வாரிசு.
அவனுக்கே அனைத்து சொத்துக்களையும் அந்த தகப்பன் கொடுப்பான்.
நம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் தன்னுடைய பிள்ளைகளாக
தத்தெடுத்திருக்கிறார். யூதர்களின் சட்டப்படி
அல்ல. ரோமர்களின் சட்டப்படி. அதையே ரோமர் 8:15-ல் வாசிக்கிறோம்.
ரோம சட்டத்தின் படி தத்து எடுக்கும் ஒரு
பிள்ளைக்கு, தகப்பனுடைய பிள்ளைக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் உண்டு. இந்த சட்டத்தின்படியே ஆண்டவர் நம்மை அவருடைய பிள்ளையாக
தத்தெடுத்திருக்கிறார்.
ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்து. நாம் அனைவரும் தத்து எடுக்கப்பட்ட பிள்ளைகள். இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவினிடத்தில் எவ்வளவு உரிமைகள்
இருக்கிறதோ, அந்த அளவிற்கு உரிமை நமக்கும் பிதாவினிடத்தில் உண்டு. அந்த அத்துனை உரிமைகளையும் நாம் பரலோகத்தின் அனுபவிக்கப்போகிறோம். பூமியில் அந்த உரிமையை நம்மால் முழுமையாக அனுபவிக்க
முடியாது.
பிதாவின் பார்வையில் ஆண்கள், பெண்கள் அனைவருமே
மகனாக கருதப்படுகிறார்கள். கிறிஸ்துவின் பார்வையில்
சபை மணவாட்டியாக கருதப்படுகிறது. நாம் அதை
தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஆணாக
இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கிறிஸ்துவுக்கு நாம் மணவாட்டி. நாம் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பிதாவுக்கு
நாம் பிள்ளைகள். பரலோகத்தில் ஆண்கள், பெண்கள்
என்ற வித்தயாசம் இல்லை.
தத்துப் பிள்ளைக்கும் அனைத்து உரிமைகளும்
கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் ரோமர்கள். அந்த சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே பிதா நம்மை
அவருடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடியும்.
எனவே, அந்த சட்டம் (புத்திர சுவிகார சட்டம்) ஏற்ப்படுத்தப்படும் வரை ஆண்டவர்
காத்திருந்தார்.
4.
வழியை ஆயத்தப்படுத்துதல்
உலகத்தில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றியது. அநேக அரசர்கள் அநேக நாடுகளைக் கைப்பற்றினார்கள். ஆனால் ஒருவரும் சாலைகளை அமைக்கவில்லை. ரோமர்கள் தான் உலகம் முழுமைக்கும் சாலைகளை அமைத்தார்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ”All
Roads Need to Roam”. ரோமர்களே அவர்கள் கைப்பற்றின
அனைத்து தேசங்களுக்கு சாலைகளை அமைத்தார்கள்.
தரை வழிப் பாதை மாத்திரம் அல்ல, கடல் வழிப்பாதை வரைபடங்களையும் அமைத்தவர்கள்
இந்த ரோமர்கள். சுவிசேஷம் அறிவிக்க சாலைகள்
அமைக்கப்படும் வரை ஆண்டவர் காத்திருந்தார்.
பேசுவதற்கு மொழி, இரத்தம் வெளியேறி மரிக்கும்
தண்டனை, நம்மை பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் முறை, சுவிசேஷம் அறிவிக்க சாலை வசதிகள் இவை
அனைத்தும் நிறைவேறும் வரை ஆண்டவர் காத்திருந்தார். இவை அனைத்தும் நிறைவேறினபோது அதாவது காலம் நிறைவேறினபோது
ஆண்டவர் வெளிப்பட்டார்.
இயேசு
கிறிஸ்து ஏன் பெத்லகேமில் பிறந்தார்:
யோசேப்பும் மரியாளும் நாசரேத்தில் வாழ்ந்தார்கள். திபேரியு ராயன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள்
சொந்த ஊருக்கு சென்று குடிமதிப்பு எழுதவேண்டும் என்று சட்டம் இயற்றினான். அப்பொழுது மரியாள் இன்றோ, நாளையோ குழந்தை பிறந்து
விடும் நிலையில் இருந்தாள்.
1.
தாவீதின் குமாரன்:
இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் வந்தவர். ஒருவேலை ரோமர்கள் உலகை ஆட்சி செய்யாதிருந்தால்,
இஸ்ரவேலை ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய மன்னன் யோசேப்பு. அப்படியானால் ராணி மரியாள். இயேசு கிறிஸ்து யோசேப்பு என்னும் மன்னனுக்கும்,
மரியாள் என்ற ராஜாத்திக்கும் மகனாக பிறந்தார்.
யோசேப்பு ஒரு தச்சன் என்பதால் அவன் ஒரு
கூலித் தொழிலாளி என்று நாம் நினைக்கிறோம்.
தச்சன் என்பதன் எபிரெய பதம் என்னவென்றால், யோசேப்பு நகரங்களையும், கட்டிடங்களையும்
கட்டி எழுப்புகிற ஒரு கட்டிடக் கலைஞன். இவருக்கு
கீழ் நூற்றுக்கணக்கான வேலையாட்கள் இருந்தார்கள்.
பெரிய பெரிய நகரங்களை நிர்மானிக்கக்கூடியவர் இந்த யோசேப்பு.
யோசேப்பு பலி கொடுக்க புறா கொண்டு சென்றதை
வைத்து சிலர் அவர் ஒரு ஏழை என்று நினைக்கிறார்கள். அவன் உண்மையில் ஒரு பெரிய பணக்காரர்.
பெத்லகேம் யோசேப்பின் சொந்த ஊர். அப்படியானால் அவருக்கு அறிமுகமானவர்கள், நண்பர்கள்,
உறவினர்கள் அங்கு இருந்திருப்பார்கள். ஏன்
யோசேப்பு அங்கு செல்லவில்லை. ஏனென்றால் ஒரு
ராஜா குலத்தை சார்ந்தவர்கள் அவ்வளவு எளிதாக உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்க மாட்டார்கள்.
லுக்கா 2:7-ல் சத்திரத்திலே இடமில்லாதிருந்தபடியால்
என்று வாசிக்கிறோம். சத்திரம் என்பது ஒரு விடுதி. சத்திரம் என்பது இங்கு பன்மையில் சொல்லப்படவில்லை,
ஒருமையில் சொல்லப்பட்டுள்ளது. சத்திரங்களிலே
இடம் இல்லை என்று சொல்லப்படவில்லை. சத்திரத்திலே
என்று எழுதப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது
என்றால், பெத்லகேம் ஒரு சிறிய கிராமம். சுற்றுலாப்பயணிகள்
வந்து செல்கிற ஒரு இடம் அல்ல. பெத்லகேமில்
ஒரே ஒரு சத்திரம் மட்டுமே இருந்தது.
அந்த சத்திரத்தில் இடம் இல்லாததால், சத்திரத்திற்கு
வெளியே குதிரைகள் கழுதைகள் நிறுத்தும் இடத்தை சுத்தம் செய்து அங்கு மரியாள் இயேசுவை
பெற்றெடுத்தார்கள். இப்பொழுது நாம் எந்த ஒரு
விடுதிக்கு சென்றாலும் அங்கு வாகனங்களை நிறுத்தும் இடம் இருப்பதுபோல, அந்த காலக்கட்டத்தில்
கால்நடைகளை நிறுத்துவதற்கான ஒரு இடம் இருந்தது.
அங்கு தான் இயேசு கிறிஸ்து பிறந்தார்.
எதற்காக பிறந்தார், சத்திரத்திலே இடம் இல்லாததால் தொழுவத்தில் பிறந்தார். யோசேப்பு மரியாளிடம் பணம் இல்லாததால் அல்ல.
குழந்தை பிறந்த அன்றோ, அதற்கு அடுத்த நாளோ,
சில நாளைக்குள்ளேயே யோசேப்பும் மரியாளும் ஒரு வீட்டை வாங்கி அங்கு சென்றுவிட்டார்கள். சாஸ்திரிகள் வந்து இயேசுவை தொழுவத்தில் காணவில்லை. வீட்டில் கண்டார்கள் என்றே நாம் மத்தேயு 2:11-ல்
வாசிக்கிறோம்.
யோசேப்பும் மரியாளும் பெரிய பணக்காரர்கள்
என்றாலும், அவர்கள் பணம் முழுவதும் தற்போது நாசரேத்தில் இருக்கிறது. பெத்லகேமிற்கு வந்து திரும்பும் அளவிற்கே அவர்கள்
பணம் எடுத்து வந்திருப்பார்கள். பெத்லகேமில்
இருந்த மரியாளும் யோசேப்பும் மீண்டும் நாசரேத் செல்லாமல் எகிப்துக்கு போகிறார்கள். எரோது மரிக்கும் வரை ஏறக்குறை நான்கு ஆண்டுகள் அவர்கள்
எகிப்தில் வாழ வேண்டிய இருந்தது. அந்த காலத்தில்
யோசேப்பிற்கு சாஸ்திரிகள் கொடுத்த வெகுமதி மிகவும் பயன்பட்டது. யோசேப்பு பெரிய பணக்காரன் என்பதால் அவ்வளவு எளிதில்
எகிப்தில் வேலை செய்ய முடியாது.
சாஸ்திரிகள் ஏதோ ஒரு சிறிய பெட்டியில்
கொண்டுவந்து காணிக்கைகைளை படைக்கவில்லை. அவர்கள்
தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து என்று மத்தேயு 2:11-ல் வாசிக்கிறோம். அப்படியானால் சாஸ்திரிகள் படைத்த பொருட்கள் அனைத்தும்
விலைமதிப்பில்லா பொருட்களாகவே இருந்திருக்கும்.
பொன், வெள்ளி, தூபவர்க்கம் இவை மூன்றும் ராஜாக்களுக்கு அளிக்கும் வெகுமதிகள். பொன் என்றதும் ஏதோ ஒரு மோதிரம் என்று நாம் நினைக்கக்
கூடாது. பொக்கிஷங்களைத் திறந்து என்றால், அவ்வளவு
பெரிய பொருட்களை அவர்கள் காணிக்கையாக படைத்தார்கள்.
யோசேப்பும் மரியாளும் நாசரேத்தில் வாழ்ந்த
வீட்டில் தான் இன்று மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அவ்வளவு பெரிய பணக்காரர்கள் இந்த மரியாளும் யோசேப்பும்.
இவ்வளவு செல்வ செழிப்பாக வாழ்ந்த யோசேப்பை
ஆண்டவர் எதற்காக பெத்லகேம் அனுப்புகிறார் என்றால், தாவீது பிறந்தது பெத்லகேமில். அதே பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறக்க வேண்டும்
என்பதற்காகவே, ஆண்டவர் யோசேப்பை பெத்லகேமிற்கு அனுப்புகிறார்.
2.
ஜீவ அப்பமாகிய கிறிஸ்து:
ஜீவ அப்பம் நானே என்று இயேசு சொன்னார். இஸ்ரவேல் நாட்டில் அப்பம் என்பது விசேஷித்த ஒன்று. அதிஉயர்ரக கோதுமைகள் பெத்லகேமில் மட்டுமே கிடைக்கும். பெத்லகேம் இக்கிராமத்தின் உண்மையான பெயர் எப்பிராத்தா. அப்பங்கள் அதிகாமாக இங்கு கிடைப்பதால் அப்பத்தின்
வீடு என்று இஸ்ரவேலர்கள் அழைத்தார்கள். அப்பத்தின்
வீடு என்றால் அவர்கள் பாஷையில் பெத்லகேம்.
ஜீவ அப்பம் நானே என்று சொன்ன இயேசு கிறிஸ்து அதிஉயர்ரக அப்பமாக வரவேண்டும் என்பதற்காக,
முழு இஸ்ரவேலிலேயும் அதிஉயர்ரக அப்பம் கிடைக்கின்ற பெத்லகேமிலே பிறந்தார்.
3.
ஆட்டுக்குட்டியானவர்:
யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்துவை உலகத்தின் பாவத்தை சுமந்து
தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டி என்று அழைக்கிறார். (யோவான் 1:29)
இயேசு கிறிஸ்து பஸ்கா ஆடாக மரிப்பதற்காகவே
பூமிக்கு வந்தார். ஆடு என்றால் சாதாரண ஆடாக
அவர் வரவில்லை. அதிஉயர்ரக ஆடாக வந்தார். செம்மறி ஆடுகளிலேயே அதிஉயர்ரக ஆடு நொக்கோட்
(Noqod) என்று சொல்லப்படும் ஆடு. இந்த ஆடுகள்
முழு இஸ்ரவேலிலும் பெரும்பான்மையாக இருந்தது எப்பிராத்தாவில், அதாவது பெத்லகேமில். தெக்கோவாவிலும் சில ஆடுகள் இருந்தன. தெக்கோவா பெத்லகேமிற்கு அருகில் இருந்த ஒரு பட்டணம். தாவீதும் இந்த நொக்கோட் வகை ஆட்டையே மேய்த்தார். தாவீதும் ஒரு பெரிய பணக்காரன்.
இயேசு கிறிஸ்து அதிஉயர்ரக ஆடாக வந்ததால்,
அந்த அதிஉயர்ரக ஆடுகள் இருக்கின்ற பெத்லகேமிலே பிறந்தார்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.