பழைய ஏற்பாட்டு ஆய்வு (பாகம் – 2)
ஆண்டவரும், மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பழைய ஏற்பாட்டில் உள்ள முக்கிய குறிப்புகளை மாத்திரம் இந்த பழைய ஏற்பாட்டு ஆய்வின் மூலமாக நாம் அறிந்துகொள்வோம்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு இரண்டாம் பாகம். முதல் பாகத்தைப் படிக்காதவர்கள் முதல் பாகத்தை படித்துவிட்டு இந்த இரண்டாம் பாகத்தைப் படிப்பீர்கள் என்றால், வேதாகமத்தில் உள்ள இரகசியங்களை முறைப்படி கற்றுக்கொள்ள அது பயனுள்ளதாக இருக்கும்.
Click to Link: பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
1.
ஆதியாகமம்
ஆதியாகமத்தை நாம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
முதல்
பிரிவு: 1-11 அதிகாரங்கள்
இரண்டாம்
பரிவு : 12-50 அதிகாரங்கள்
முதல்
பரிவு:
முதல் பிரிவு ஆதியிலே ஆண்டவர் வானத்தையும்,
பூமியையும் சிருஷ்டித்தது முதல் பூமியிலே பாஷைகள்
தாறுமாரானது வரை உள்ள வரலாற்றைக் கொண்டது.
எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர் உலகத்தை உருவாக்கி, ஆதாமைப்
படைத்தது முதல் ஜனங்கள் ஒன்றாக இணைந்து பாபேல் கோபுரத்தைக் கட்டுகிறார்கள், அப்பொழுது
ஆண்டவர் பாஷைகளை தாறுமாறாக்குகிறார், இதுவரை முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
உலக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிற எல்லா
கருத்துக்களும் உண்மை அல்ல. ஆனால் ஒரு சில
காரிங்கள் உண்மை. அவைகள் வேதத்திலும் எழுதப்பட்டுள்ளது. உலகத்தோற்றத்தின்போது பூமி ஒரே கண்டமாக இருந்தது,
பிற்காலத்தில் அவை அநேக கண்டங்களாக பிரிந்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இவை வேதத்தின்படியும் உண்மை.
ஆதியாகமம் 1:9
பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற
ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
ஆதியில்
ஜலம் வானத்தின் மேலும் இருந்தது:
ஆண்டவர் ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரித்து
ஆகாய விரிவை உண்டாக்கினார். (ஆதியாகமம்
1:6). ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (ஆதியாகமம் 1:2). அப்படியானால் பூமி முழுவதும் ஜலத்தினால் நிரைந்திருந்தது. எந்த அளவிற்கு ஜலம் இருந்தது என்றால், தண்ணீரின்
பெரும்பகுதியை பிரித்தெடுத்து வானத்தில் வைத்த பின்பும், பூமியில் வெட்டாந்தரை காணப்படவில்லை. அந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரை தண்ணீரிலிருந்து பிரித்து நடுவில் ஆகாயவிரிவை
வைத்தார் ஆண்டவர். பின்பு பூமியிலிருக்கிற
தண்ணீர் ஓரிடத்தில் சேரவும் வெட்டாந்தரை காணப்படவும் பண்ணினார். பூமியில் தண்ணீர் இருந்ததோடு, வானத்திலும் தண்ணீர்
இருந்தது என்று வேதம் கற்றுக்கொடுக்கிறது.
(ஆதியாகமம் 1:6)
குளோபல்வாமிங்:
விஞ்ஞான ரீதியாக தண்ணீர் என்பது இரண்டு
பதார்த்தங்களின் சேர்க்கை ஆகும். ஒன்று ஹைட்ரஜன்,
ஆக்ஜிஷன் (H2O). நமது பூமிக்கு
மேல் இப்போது ஓசோன் படலம் இருப்பதுபோல, முற்காலத்தில் ஓசோனோடு சேர்த்து ஒரு ஹைட்ரோ
ஆக்ஜைடு படம் இருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
சூரியனின் கதிர் நேரடியாக நமது பூமியை
வந்தடைந்தால், பூமி எறிந்து சாம்பலாகிவிடும்.
இடையில் இருக்கிற ஓசோன் படலம், சூரியக்கதிரின் வேகத்தைக் குறைத்து மிகக் குறைந்த
வெப்பத்தை பூமிக்கு அனுப்புகிறது. சில இடங்களில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்
கார்பன்-டை-ஆக்ஸைடு மூலமாக ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு சில இடங்களில் சூரியக்கதிர்கள் அதிகமாக
இருப்பதை நாம் காண முடிகிறது. இதனால் குளோபல்வாமிங்
உருவாகியுள்ளது. அதாவது பூமி வெப்பமயமாக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
ஆயிரத்து எண்ணூறுகளிலேயே (1800) ஓசோன்
படலத்தில் பாதிப்பு ஏற்பட துவங்கிவிட்டது.
இதனால் வடதுரும், தென்துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் கறைந்து கொண்டு இருக்கிறது. பனிப்பாறைகள் கறைய கறைய கடல்மட்டம் உயருகிறது. கடல்மட்டம் உயர உயர சின்ன சின்ன தீவுகள் கடலுக்குள்
மறைந்துவிடுகிறது.
ஓரிடத்தில் இருக்க வேண்டிய பனிபாறை
உருகி வேறுவேறு இடங்களுக்கு நகரத்து வருகிறது.
இதன் விளைவாகத்தான் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி HSF Titanic என்ற கப்பல்
தென் ஆப்பிரிக்காவிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்தபோது, உருகி நகர்ந்து வந்த
பனிப்பாறையில் மோதி மிகப்பொரிய அழிவை ஏற்படுத்தியது. 1912-டிலேயே பனிப்பாறைகள் உருகி கப்பல் பாதைக்கு
வரும் அளவிற்கு பூமி வெப்பமடைய துவங்கிவிட்டது.
ஆதாமின்
காலம்:
ஆதிக்காலத்தில் ஓசோன் படலத்திற்கு மேலாக
தண்ணீர் படலமும் இருந்தது. அதாவது மேகம் போன்ற
ஒரு அமைப்பு. இந்த தண்ணீர் படலம் இருப்பதால் சூரியக்கதிர் பூமியில் விழுவதில்லை. சூரியக்கதிர் பூமியில் விழுந்தால்தான் தண்ணீர் ஆவியாகி
மேலே எழும்பும், பின்பு அது குளிர்வடைந்து மலையாக பூமிக்கு வரும். ஆனால், ஆதாம் காலத்தில் சூரியக்கதிர் பூமியை வந்தடையாததால்,
தண்ணீர் ஆவியாவதும் இல்லை, மழை என்ற ஒன்றை அக்காலத்து மனிதர்கள் பார்த்ததும் இல்லை.
நோவா:
ஜனங்களுடைய அக்கிரமம் பெருகியதால் ஆண்டவர்
பூமியை ஜலத்தினால் அழித்தார். மழையால் பூமி
அழியப்போகிறது என்று நோவா சொன்னபோது ஒருவரும் நம்பவில்லை. காரணம் என்னவென்றால், அவர்கள் மழையைப் பார்த்தது
இல்லை, சூரியனைப் பார்த்தது இல்லை. தண்ணீர்
ஆவியானதும் இல்லை.
ஓசோன் படலத்திற்கு மேலே இருந்த அந்த
தண்ணீரைத்தான் பழையாக கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் தீர்மானித்திருந்தார். வானத்தின் மதகுகளும் திரவுண்டன என்று வேதத்தில்
வாசிக்கிறோம் (ஆதியாகமம் 7:11). உலகத்தின்
உயரமான மலைக்கு மேலாக பதினைந்து முழ உயரம் வரை மழை பெய்தது. (ஆதியாகமம்
7:20). பதினைந்து முழ உயரம் என்பது இருபத்து
மூன்று அடி.
தண்ணீர் வற்றிப்போகும்படியாக ஆண்டவர்
காற்றை வீசப்பண்ணினார். (ஆதியாகமம்
8:1). அந்த காற்று கிழக்கிலிருந்து மேற்காக
வீசியது. அப்போது தண்ணீர் வடக்கு புறமாகவும்,
தெற்கு புறமாகவும் பிரிந்தது. அப்படி பிரிந்தவை
தான் ஆர்டிக், அண்டார்டிக் என்ற இரண்டு பனிமூடிய கண்டங்கள். 1986-ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்த Times
Magazine புத்தகத்தில் தண்ணீர் சம்பத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவர், ஆர்டிக் பனிப்பாறையை
ஆயிரம் துண்டுகளாக வெட்டி, அதில் ஒரு துண்டை கொண்டு வந்து, உலகில் மிகப்பெரிய பாலைவனமான
சகாரா பாலைவனத்தில் போட்டால், அந்த பாலைவனம் பசுஞ்சோலையாக மாறிவிடும் என்று அவர் எழுதியுள்ளார்.
மனிதனின்
ஆயுள் குறைய காரணம்:
ஆதாம் தொளாயிரம் முப்பது வருஷம் உயிரோடிருந்தார். (ஆதியாகமம் 5:5) ஆதாமின் பிரதான வேலை என்னவென்றால் குமாரரையும்,
குமாரத்திகளையும் பெற்றெடுப்பது. மெத்தூசலா
வேதாகமத்தில் அதிக நாட்கள் உயிர்வாழந்த ஒரு மனிதன். தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் உயிரோடிருந்தார். இவருடைய வேலையும் குமாரரையும், குமாரத்திகளையும்
பெற்றெடுப்பதே. இவர்களெல்லோரும் எப்படி இத்தனை
வருஷங்கள் உயிரோடு வாழ்ந்தார்கள் என்று நமக்கு ஒரு குழப்பம் இருக்கலாம்.
நோவாவின் ஜலப்பிரலயத்திற்கு முன்பாக
சூரியக்கதிரை அவர்கள் பார்த்தது இல்லை. எனவே,
அது நோயில்லாத ஒரு உலகம். வைரஸ், பாக்டீரியா,
பங்கஸ், நாடா புழு, கொக்கிப்புழு இவையெல்லாம் இல்லாத ஒரு உலகம். எனவே, எந்த ஒரு உணவுப் பண்டங்களும் கெட்டுப்போகாது,
எந்த மிருகமும் அவ்வளவு எதில் மரிப்பதும் இல்லை.
இந்த காலத்தில் அநேக நேரங்களில் வானத்தில்
சுற்றித்திரிகிற எரிகற்கல் பூமியில் வந்து விழுகின்றன. அவைகள் வாழ்நட்சத்திரம் என்று நாம் நினைக்கிறோம். அவைகள் வானத்திலிருந்து விழும் எரிகற்கல். இந்த கற்கலால் தான் நம்முடைய தோல்கள் சுருங்குகின்றன. நாம் வயது முதிர்வடைகின்றோம். ஆதிகாலத்தில் இதுபோன்ற கற்கல் பூமிக்குள் வரமுடியாது. ஏனென்றால் தண்ணீர் படலம் பூமிக்கு மேலாக இருந்தது.
ஆதியாகமம்
6 அதிகாரம்
தேவக்குமாரர்கள்,
மனுஷ குமாரத்திகள்
சேத்தின் சந்ததி தேவபுத்திரர் என்றும்,
காயீனின் சந்ததி மனுஷ புத்திரர் என்றும் மோசேயின் காலத்தில் சொல்லி வந்தார்கள். இராட்சதர்கள்
என்பதன் எபிரெய சொல் நெபீலின்கள். இதன் அர்த்தம்
அதிகாரவர்க்கம் மிகுந்தவர்கள்.
எ.கா: ஒரு இந்திய குடிமகன் இந்தியாவில் அவன் சாகும்வரை வாழலாம். ஆனால் அவன் அமெரிக்காவிற்கு சென்றால், அவனுடைய பயண
நாட்கள் முடிவடைந்த உடன் அவன் மறுபடியும் இந்தியா திரும்பிவிட வேண்டும். இந்தியாவில் ஒரு இந்தியனுக்கு இருக்கும் உரிமை அமெரிக்காவில்
இருப்பதில்லை. அதேபோல அமெரிக்காவில் இருக்கும்
ஒரு நபருக்கு அமெரிக்காவில் இருக்கும் உரிமை இந்தியாவில் இருப்பதில்லை. ஆனால் ஒரு நபர் இரு நாட்டுக் குடியுரிமையும் வைத்திருப்பாரானால்,
அவருக்கு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அனைத்து உரிமைகளும் உண்டு. இந்திய குடியுரிமை வைத்திருப்பவரை விட, அமெரிக்க
குடியுரிமை வைத்திருப்பவரை விட, இரண்டு நாட்டு குடியுரிமை வைத்திருப்பவருக்கு உரிமைகள்
அதிகம் உள்ளது. இவர்களைப் போன்றவர்கள் தான்
இந்த இராட்சதர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள்.
சேத்தின் சந்ததியில் பிறந்தவர்கள், காயீனின்
சந்ததியில் பிறந்தவர்களை திருமணம் செய்யும் போது இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு
இரண்டு இடங்களிலும் உரிமைகள் வழங்கப்படுகிறது.
எனவே இவர்களைக் குறிப்பிடும்போது வேதத்தில் இராட்சதர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் இப்படி திருமணம் செய்தது ஆண்டவருடைய
பார்வைக்கு பிரியமில்லாதிருந்தது. எனவே தான்
”என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை.
(ஆதியாகமம் 6:3) என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
நோவா
காலத்து வெள்ளம்:
ஆதியாகமம் 6:3-ல் வாசிக்கிறோம் ஆண்டவர்
அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். ஆண்டவர் மனுஷனுடைய ஆயுசு நாட்களை நூற்று இருபது
வருஷமாக குறைத்து விட்டார் என்று நாம் நினைக்கிறோம். அது உண்மை அல்ல. இன்னும் நூற்று இருபது வருஷத்தில் வெள்ளத்தை அனுப்பப்போகிறேன்,
மழையை அனுப்பப்போகிறேன் என்பதற்கு அடையாளமாகத் தான் ஆண்டவர் இந்த வார்த்தையைச் பயன்படுத்துகிறார்.
வெள்ளம் வந்தபோது மேலே இருந்த ஹைட்ரோ ஆக்ஸைடு
படலத்தை ஆண்டவர் அப்படியே கீழே இறக்கினார்.
மாத்திரம் அல்ல பூமியிலிருந்தும் தண்ணீர்கள் ஊற்றெடுத்தன. நாற்பது நாட்கள் பெய்த மழையில் வானத்தில் இருந்த
ஹைட்ரோ ஆக்ஸைடு படலம் முழுவதும் பூமியில் விழுந்து விட்டது. எனவே சூரியக் கதிர்கள் பூமியின் மேல் அதிகமாக விழ
துவங்கிவிட்டது. ஜலத்தில் உயிரிழந்தை மனிதர்களின்,
விலங்குகளின் சரீரங்களில் பாக்டீரியா, வைரஸ் உருவாக ஆரம்பித்து விட்டது. தண்ணீர் வற்றும் போது முதலில் இருந்ததுபோல ஒரு சமுத்திரம்
ஒரு கண்டம் என்று பிரியாமல், அநேக கண்டங்களும், அநேக சமுத்திரங்களும் உருவானது. பூமியின் அமைப்பு உருவம் மாறுபட்டது. எனவே, இனி எந்த ஒரு பெரிய விஞ்ஞானி நினைத்தாலும்
ஏதேன் தோட்டம் எங்கு இருந்தது என்பதை கண்டறிய முடியாது. அநேகர் ஏதோன் தோட்டம் இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது
என்று பொய்யான கட்டுக் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏதோன்
தோட்டம் எங்கு உள்ளது:
ஆதாமும் ஏவாளும் இலங்கையில் தான் பிறந்தார்கள் என்ற கருத்து
பரவலாக பரவி வருகிறது.
இன்னும் சிலர் ஏதோன் தோட்டத்தில் இருந்த
இரண்டு நதிகள் ஈராக் தேசத்தில் இருப்பதால் அங்கே தான் ஏதோன் தோட்டம் இருந்திருக்கும்
என்று நம்புகிறார்கள். வெள்ளம் நடந்து முடிந்த
பின்பு நோவாவின் குடும்பத்தார் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மேசிய மொழி அக்காடியன் மொழி. பாபேல் கோபுரம் கட்டப்பட்ட போது இருந்த மொழி அக்காடியன்
மொழி. அவர்கள் இருந்த இடத்திற்கு அக்காடியன்
மொழியில் ஒரு பெயர் வைத்தார்கள். அதுதான் மெசப்பத்தாமியா. மெசப்பத்தாமியா என்றால் இரண்டு நதிகளுக்கு இடையில்
இருக்கும் பள்ளத்தாக்கு. உலக வரலாறு படி உலகத்தில்
தோன்றிய முதல் நாகரீகம் மெசப்பத்தாமியா நாகரீகம்.
ஏதேன் தோட்டத்தில் இருந்த நான்கு நதிகளில் இரண்டு நதிகளின் பெயர்களை இந்த மெசப்பத்தாமியா
இடத்தில் இருந்த இரண்டு நதிகளுக்கும் வைத்தார்கள். இதை அறியாத சிலர் இங்கு தான் ஏதேன் தோட்டம் இருந்ததாக
நம்புகிறார்கள்.
எ.கா: ஒரு மனிதனுக்கு காபிரியேல் என்னும்
பெயர் இருந்தால். அவர் வெறும் காபிரியேல் தான். அவருடைய பெயர் காபிரியேல் என்பதால் உண்மையிலேயே
அவர் ஒரு பிரதான தூதனாக முடியாது. அதைப்போலவே,
ஏதேன் தோட்டத்தின் பெயரை இந்த ஈராக்கில் ஓடுகிற நதிக்கு வைத்ததால், ஈராக் ஏதேன் தோட்டமாகாது.
நோவா
மதுபானம் குடித்தாரா?
வெள்ளத்திற்கு பின்பு சூரிய ஒளி பூமியில்
அதிகமாக வீசுவதால், இனி பொருட்கள் கெட்டுப்போக துவங்கும். இறந்த உடல்கள் நாற்றமெடுக்க துவங்கும். இதை அறியாத நோவா திராட்சை தோட்டத்தை நாட்டினார். திராட்சை ரசத்தை அதிகமாக குடித்தார். அவருக்குள் வெறி (போதை) வந்தது. ஜலப்பிரளயத்திற்கு முன் பாக்டீரியா இல்லாததால் எந்த
ஒரு பொருளும் கெட்டுபோகாது. திராட்சை ரசத்தைக்
குடித்தாலும் வெறி (போதை) வராது. ஆனால் இப்பொழுது
பாக்டீரியாக்கள் இருக்கின்றன. திராட்சை ரசம்
நாட்களானதும் போதையை கொடுக்க துவங்கும். இதை
அறியாத நோவா வழக்கத்தின்படியே திராட்சைரசத்தை குடிக்கிறார். தன் நிலையை மறந்து போதை நிலையை அடைகிறார். இதை வைத்துக்கொண்டு அநேக கிறிஸ்தவர்கள் நோவா திராட்சைரசம்
குடித்ததால் நாமும் குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நோவா திராட்சை ரசம் குடித்தால் வெறி வரும் என்று
தெரியாத ஒரு காலத்தில் குடித்தார்.
ஓரினச்
சேர்க்க நடைபெற்ற முதல் இடம்:
வெள்ளத்திற்கு பின்பு உலகத்தில் வாழ்ந்தவர்கள்
நோவாவின் குடும்பம் மட்டுமே (எட்டு நபர்கள்).
எனவே அவர்களுக்கு ஒரு தனிமை உணர்வு இருந்திருக்கும். அந்த தனிமை உணர்வை பிசாசானவன் பயன்படுத்தி, நோவாவின்
மகன் காமை தன் தகப்பனோடு தவறான உறவை ஏற்படுத்த தூண்டுகிறான். உலக சரித்திரத்தில் தன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட
முதல் மனிதர்கள் நோவாவும், அவருடைய மகன் காமும்.
இதை காம் மற்ற இரண்டு பேரிடமும் வந்து தெரிவிக்கிறான். இதை அறிந்த மற்ற சகோதரர்கள் காமைப்போன்று தகப்பனோடு
தவறான உறவு கொல்லாமல், தகப்பனின் நிர்வாணத்தை மூடுகிறார்கள். மயக்கம் தெளிந்த பின்பு நடந்ததை அறிந்து கொண்ட நோவா
காமை சபிக்காமல், காமின் மகன் கானானை சபிக்கிறார்.
ஆதியாகமம் 9:22-ல் காம் தன் தகப்பனின்
நிர்வாணத்தைப் பார்த்தான் என்பது நம்முடைய பார்வையில் ஆடைகள் விலகி படுத்திருந்த நோவாவின்
நிர்வாணத்தை தூரத்தில் நின்று காம் பார்த்தான் என்று தெரியலாம். ஆனால் இதை எழுதின மோசேயின் பார்வையில் நிர்வாணத்தைக்
கண்டு என்றால் முறையாக ஆணும் பெண்ணும் உறவு கொள்வது. இந்த வசனத்தில் நோவாவும், காமும் தன் இனச் சேர்க்கையில்
ஈடுபட்டார்கள் என்பதையோ மோசே குறிப்பிட்டு காட்டுகிறார்.
ஆதியாகமம் 4:1-ல் ஆதாம் தன் மனைவியாகிய
ஏவாளை அறிந்தான் என்றால், ஏவாளை சந்தித்து அவளோடு பேசினான் என்பது பொருள் அல்ல. அவர்கள் இருவரும் உறவு கொண்டார்கள் என்பதுதான் அதன்
பொருள்.
லேவியராகமம் 20:11-ல் மோசே எழுதுகிறார்,
தகப்பன் திருமணம் செய்த ஒரு ஸ்திரீயோடு மகன் சேர்ந்தால் அது தகப்பனின் நிர்வாணத்தைப்
பார்த்ததற்கு சமம்.
சாதாரணமாக நிர்வாணத்தை மாத்திரம் பார்த்திருந்தால்,
அதற்காக நோவா சந்ததியையே சபிக்க வேண்டிய அவசியம் இல்லையே. நோவா கானானை சபித்த சாபம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சேம்:
நோவா சேமை ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று
வாழ்த்துகிறார். இவருடைய வம்சத்தில் வந்தவர்கள்
தான் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆபிரகாமும் இந்த சந்ததியைச் சார்ந்தவர்.
யாப்பேத்:
யாப்பேசின் எல்லைகள் விஸ்தாரமாகும் என்று
நோவா ஆசீர்வதிக்கிறார். வெள்ளை நிரத்தவர்கள்
தான் இந்த யாப்பேத்தின் சந்ததிகள்.
எ.கா:
இங்கிலாந்து, ஸ்போர்ச்சுகள், ஸ்பெயின்
நோவா யாப்பேசின் எல்லைகள் விஸ்தாரமாகும்
என்று சொன்னது போலவே இவர்களுக்குத் தான் அநேக புதிய நிலங்கள் கிடைத்தன. அமெரிக்காவை கண்டுபிடித்தவர்கள் ஸ்போர்ச்சுக்கள். ஆஸ்திரேலியாவை கண்டு பிடித்தது இங்கிலாந்து நாட்டவர்கள்.
வெள்ளையர்கள் தான் புதுபுது நாடுகளை கண்டுபிடிக்கிறார்கள். நியூசிலாந்தைக் கண்டுபிடித்தவர்களும்
இந்த வெள்ளையர்கள் தான்.
காமின்
மகன் கானான்:
சேமுக்கும், யாப்பேத்துக்கும் நீ அடிமையாய்
இருப்பாய் என்று நோவா கானானை சபிக்கிறார்.
இந்த சந்ததியினர் தான் நயில் நதி, சிந்து சமவெளி பகுதியில் வாழ்கிறவர்கள் (ஆப்பிரிக்கா,
இந்தியா, பாக்கிஸ்தான், பங்காளதேசம், இலங்கை).
இவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்களுக்கு அடிமையாக இருப்பார்கள். இல்லையென்றால், மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழ்கிறவர்களுக்கு
அடிமைகளாக இருப்பார்கள். சவுதி அரேபியா, குவைத்,
துபாய், ஓமன் இதுபோன்ற மத்திய கிழக்கு நாடுகளில் எங்கு சென்றாலும் அங்கு வேலை செய்யக்கூடியவர்கள்
இந்த காமின் சந்ததியாராகவே இருப்பார்கள்.
இந்தியர்கள் பாடுவார்கள் ”எந்த வளம் இல்லை
இந்நாட்டிலே” எல்லா வளமும் மிகுந்த நாடுதான் காமின் சந்ததி வாழும் நாடுகள். யாப்பேத்தின்
சந்ததியும், சேமின் சந்ததியும் வாழுகின்ற நாட்டில் மூன்று மாதம் அதிக குளிர், மூன்று
மாதம் அதிக வெளில் என எல்லா காலசூழ்நிலைகளும் மாறி மாறி காணப்படும். இப்படி வெவ்வேறு கால சூழ்நிலைகளை கொண்டிருந்தாலும்
அவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள். எல்லா
வளமும் நிறைந்த காமின் சந்ததியார் அவர்களுக்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள்.
காமின் மகன் கானானின் சந்ததி என்பவர்கள்
வேறு. கானான் தேசத்தில் வாழ்ந்தவர்கள் வேறு. இவர்கள் ஒரே இனத்தவர் அல்ல.
மொழிகள்
பிரிதல்:
ஆதியாகமம் 11:9-ல் ஆண்டவர் மொழியை தாறுமாறாக்கினார்
என்று வாசிக்கிறோம். அதையும் ஆண்டவர் சரியாய்
தான் செய்தார். யாப்பேத்தின் வம்சத்தினருக்கு
மாத்திரம் ஒரு மொழியைக் கொடுத்தார். அப்படி
ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆண்டவர் ஒவ்வொரு மொழியைக் கொடுத்தார். அவர்கள் மொழிவாரியாக பிரிந்து வெவ்வேறு இடங்களுக்கு
சென்றார்கள். அதிலும் ஒரு பிரிவினர் அந்த மெசப்பத்தாமியாவிலேயே
தங்கிவிட்டார்கள். அவர்கள் பேசிய மொழி அக்காடியன்
மொழி. இதை வைத்துதான் பாபேல் கோபுரம் கட்டுவதற்கு
முன்பு அவர்கள் பேசிய மொழி அக்காடியன் மொழிதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் உறுதியாய் நம்புகிற காரியம் என்னவென்றால்
இந்த பிரிந்த மொழிகளில் எந்த மொழியும் தமிழ் மொழி அல்ல.
அநேகர் ஆபிரகாம் தமிழன் என்றும், இயேசு
கிறிஸ்து சிலுவையில் பேசிய மொழி தமிழ் என்றும், உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மெசப்பத்தாமியா
நாகரீகத்தில் உள்ள கல்வெட்டுகளில் அகாடியன் மொழி பதிக்கப்பட்டிருப்பதை நாம் இன்றும்
பார்க்க முடிகிறது. எனவே உலகில் தோன்றி மொழிகளில்
முதல் மொழி அகாடியன் மொழியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
ஆண்டவர் உலகத்தை படைத்தது முதல், ஜளப்பிரளயம் முடிந்து, மொழி தாருமாறான நிகழ்வு வரை ஆதியாகமம் 1-11 வரை உள்ள அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ஆதியாகமம் 12-50 வரை உள்ள 39 அதிகாரங்களில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பைப் பற்றி அதாவது ஆபிரகாமின் சந்ததியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.