Type Here to Get Search Results !

Acts Eight 8 Bible Quiz in Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் கேள்விகளும் பதில்களும் | Bible Questions with Answers | Jesus Sam

==============
Book of ACTS Chapter Eight (8)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. ஸ்தேவானை கொலை செய்வதற்கு சம்மதித்தது யார்?
A) சவுல்
B) கமாலியேல்
C) சீமோன்
AnswerA) சவுல்
    (அப்போஸ்தலர் 8:1)

02. ஸ்தேவான் கொலை செய்யப்பட்டதால் சபையார் எங்கு சிதறி போனார்கள்?
A) காசா, எகிப்து
B) சமாரியா, யூதேயா
C) யூதேயா, கானான்
AnswerB) சமாரியா, யூதேயா
    (அப்போஸ்தலர் 8:1)

03. ஸ்தேவானை அடக்கம் பண்ணியது யார்?
A) அப்போஸ்தலர்
B) தேவபக்தியுள்ள மனுஷர்
C) பிரதான ஆசாரியர்
AnswerB) தேவபக்தியுள்ள மனுஷர்
    (அப்போஸ்தலர் 8:2)

04. புருஷரையும் ஸ்திரீகளையும் காவலில் போட்டு சபையை பாழாக்கியது யார்?
A) சவுல்
B) கமாலியேல்
C) சீமோன்
AnswerA) சவுல்
    (அப்போஸ்தலர் 8:3)

05. சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்தில் கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்தது யார்?
A) சீமோன்
B) யோவான்
C) பிலிப்பு
AnswerC) பிலிப்பு
    (அப்போஸ்தலர் 8:5)


06. சமாரியா பட்டணத்தில் உள்ள மாயவித்தைகாரன் பெயர் என்ன?
A) சவுல்
B) கமாலியேல்
C) சீமோன்
AnswerC) சீமோன்
    (அப்போஸ்தலர் 8:9)

07. சமாரியர் தேவனுடைய பெரிய சக்தி என்று யாரை நினைத்தார்கள்?
A) பேதுரு
B) பிலிப்பு
C) சீமோன்
AnswerC) சீமோன்
    (அப்போஸ்தலர் 8:10)

08. சமாரியர் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டதை கண்டு எருசலேமிலிருந்து வந்தது யார்?
A) பேதுரு, யோவான்
B) யோவான், யாக்கோபு
C) பிலாப்பு, ஸ்தேவான்
AnswerA) பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 8:14)

09. தேவனுடைய வரத்தை பணத்தினால் சம்பாதிக்க நினைத்தது யார்?
A) சீமோன்
B) கமாலியேல்
C) கந்தாகே
AnswerA) சீமோன்
    (அப்போஸ்தலர் 8:20)

10. சீமோனை பார்த்து நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதை காண்கிறேன் என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) பிலிப்பு
AnswerA) பேதுரு
    (அப்போஸ்தலர் 8:23)


11. எருசலேமிற்கு தெற்கு முகமாய் உள்ள பட்டணம் எது?
A) காசா
B) சமாரியா
C) யூதேயா
AnswerA) காசா
    (அப்போஸ்தலர் 8:26)

12. எத்தியோப்பிய ராஜஸ்திரியின் பெயர் என்ன?
A) காசா
B) கமாலியேல்
C) கந்தாகே
AnswerC) கந்தாகே
    (அப்போஸ்தலர் 8:27)

13. கந்தாகேயின் மந்திரி எந்த தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்தான்?
A) ஏசாயா
B) எசேக்கியா
C) எரேமியா
AnswerA) ஏசாயா
    (அப்போஸ்தலர் 8:28)

14. கந்தாகேயின் மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) பிலிப்பு
AnswerC) பிலிப்பு
    (அப்போஸ்தலர் 8:38)

15. கர்த்தருடைய ஆவியினால் காணாமல் போனது யார்?
A) பேதுரு
B) பிலிப்பு
C) சவுல்
AnswerB) பிலிப்பு
    (அப்போஸ்தலர் 8:39)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.