Type Here to Get Search Results !

Acts Three 3 Bible Quiz in Tamil | அப்போஸ்தலர்கள் 3 வினா விடைகள் தொகுப்பு | Bible Questions with Answers | Jesus Sam

==============
Book of ACTS Chapter Three (3)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. ஒன்பதாம் மணி நேரம் தேவாலயத்தில் என்ன நேரமாக இருந்தது?
Answer: ஜெபநேரம்
    (அப்போஸ்தலர் 3:1)

02. ஒன்பதாம் மணி நேரத்தில் தேவாலயத்திற்குள் போனது யார்?
Answer: பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 3:1)

03. தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்தவனை நாடோறும் எங்கு கொண்டுவந்து வைப்பார்கள்?
Answer: அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையில்
    (அப்போஸ்தலர் 3:1,2)

04. சப்பாணியை எதற்காக தேவாலய வாசலண்டையில் கொண்டு வந்து வைப்பார்கள்?
Answer: தேவாலயத்தில் பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்பதற்காக
    (அப்போஸ்தலர் 3:2)

05. பேதுருவிடமும், யோவானிடமும் பிச்சை கேட்டது யார்?
Answer: பிறவி சப்பாணி
    (அப்போஸ்தலர் 3:3)

06. உற்றுப்பார்த்தது யார்? நோக்கிப்பார்த்தது யார்?
Answer: உற்றுப்பார்த்தது – பேதுரு, யோவான்
    நோக்கிப்பார்த்தது - சப்பாணி
    (அப்போஸ்தலர் 4:4,5)

07. ஏதாகிலும் கிடைக்கும் என்று எண்ணி பேதுருவையும், யோவானையும் நோக்கி பார்த்தது யார்?
Answer: பிறவி சப்பாணி
    (அப்போஸ்தலர் 3:5)

08. "வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்" யார் யாரிடம் சொன்னது?
Answer: பேதுரு சப்பாணியிடம் சொன்னது
    (அப்போஸ்தலர் 3:6)

09. எந்த நாமத்தினாலே எழுந்து நட என்று பேதுரு சப்பாணியிடம் சொன்னான்?
Answer: நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்
    (அப்போஸ்தலர் 3:6)

10. பேதுரு சப்பாணியை எந்த கையினாலே தூக்கிவிட்டபோது, அவன் கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது?
Answer: வலதுகையினாலே
    (அப்போஸ்தலர் 3:7)

11. நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு தேவாலயத்திற்குள் பிரவேசித்தது யார்?
Answer: பிறவி சப்பாணி
    (அப்போஸ்தலர் 3:8)

12. குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும், யோவானையும் பற்றிக் கொண்டிருக்கையில் ஜனங்கள் பிரமித்து எங்கு ஓடிவந்தார்கள்?
Answer: சாலொமோன் மண்டபத்திற்கு
    (அப்போஸ்தலர் 3:11)

13. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவன் யாரை மகிமைப்படுத்தினார்?
Answer: இயேசுவை மகிமைப்படுத்தினார்
    (அப்போஸ்தலர் 3:13)

14. இயேசுவை வீடுதலையாக்க தீர்மானித்தது யார்?
Answer: பிலாத்து
    (அப்போஸ்தலர் 3:13)

15. யாரை நீங்கள் மறுதலித்தீர்கள் என்று பேதுரு சொன்னார்?
Answer: பரிசுத்தமும் நீதியும் உள்ளவரை
    (அப்போஸ்தலர் 3:14)

16. யாரை உங்களுக்காக விடுதலை பண்ண வேண்டும் என்று கேட்டீர்கள் என்று பேதுரு சொன்னார்?
Answer: கொலைபாதகனை
    (அப்போஸ்தலர் 3:14)

17. யாரை கொலைசெய்தீர்கள் என்று பேதுரு சொன்னார்?
Answer: ஜீவாதிபதியை
    (அப்போஸ்தலர் 3:15)

18. உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பி ------------------ .
Answer: குணப்படுங்கள்
    (அப்போஸ்தலர் 3:20)

19. உலகத் தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் எது இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
Answer: பரலோகம்
    (அப்போஸ்தலர் 3:21)

20. உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார் என்றது யார்?
Answer: மோசே
    (அப்போஸ்தலர் 3:22)

21. ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுபவன் யார்?
Answer: கிறிஸ்து என்னும் தீர்க்கதரிசியின் சொல் கேளாதவன்
    (அப்போஸ்தலர் 4:23)

22. எந்த தீர்க்கதரிசிக்கு பின் வந்த எல்லா தீர்க்கதரிசிகளும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்?
Answer: சாமுவேல்
    (அப்போஸ்தலர் 3:24)

23. உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் யாரிடம் சொன்னார்?
Answer: ஆபிரகாம்
    (அப்போஸ்தலர் 3:25)


1. அப்போஸ்தலர் நடபடிகளில் பேதுருவும், யோவானும் எத்தனை முறை சேர்ந்து வருகிறார்கள்?
Answer: ஏழு முறை
    (அப்போஸ்தலர் 3:1,3,4,11)
    (அப்போஸ்தலர் 4:13,19)
    (அப்போஸ்தலர் 8:14)

2. ஒன்பதாம் மணி நேரம் என்றால் இந்திய நேரப்படி என்ன நேரம்?
மாலை மூன்று (3) மணி
Answer: இந்த ஜெப நேரத்தில் தான் சகரியா தேவ தூதனை சந்தித்தார்.
    (அப்போஸ்தலர் 3:1)

3. அலங்கார வாசல் எதினால் செய்யப்பட்டது?
Answer: வெண்கலத்தினால் மிகவும அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கம்.
    (அப்போஸ்தலர் 3:2)

4. நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்யப்பட்ட முதலாவது அற்புதம் எது?
Answer: சப்பாணி எழுந்து நடந்தது
    (அப்போஸ்தலர் 3:8)

5. சாலொமோன் மண்டபம் எத்தனை அடி நீளம் கொண்டது?
Answer: 800 அடி
    (அப்போஸ்தலர் 3:11)

6. சாலொமோன் மண்டபம் எப்படி அழைக்கப்பட்டது?
Answer: புறஜாதிகளின் மண்டபம்
    (அப்போஸ்தலர் 3:11)

7. கொலை பாதகன் என்பது யாரைக் குறிக்கிறது?
Answer: பரபாஸ்
    (அப்போஸ்தலர் 3:14)
    (மத்தேயு 27:15,16)
    (லூக்கா23:19)

8. "மனந்திரும்புதல்" என்பதன் கிரேக்கப்பதம் என்ன?
Answer: மெடானோயோ (Metanoeoo)
    (அப்போஸ்தலர் 3:20)

9. "உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: உபாகமம் 18:15
    (அப்போஸ்தலர் 3:22)

10. அந்த தீர்க்கதரிசியின் சொல் கேளாதவன் எவனே அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: உபாகமம் 18:19
    (அப்போஸ்தலர் 3:23)

11. "உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டி எங்கு உள்ளது?
Answer: ஆதியாகமம் 12:1-3,
    ஆதியாகமம் 22:18
    ஆதியாகமம் 26:24
    (அப்போஸ்தலர் 3:25)

12. அப்போஸ்தலர் நடபடிகளில் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள வசனங்கள் எத்தனை?
Answer: 26


01. எருசலேம் தேவாலயத்தில் ஜெபவேலை நேரம் எது?
A) மூன்றாம் மணி
B) ஆறாம் மணி
C) ஒன்பதாம் மணி
Answer: C) ஒன்பதாம் மணி
    (அப்போஸ்தலர் 3:1)

02. ஒன்பதாம் மணி நேரத்தில் தேவாலயத்திற்கு போனது?
A) பேதுரு, யோவான்
B) அனனியா, சப்பீராள்
C) பவுல், பர்னபா
Answer: A) பேதுரு,யோவான்
    (அப்போஸ்தலர் 3:1)

03. அலங்கார வாசலண்டையில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தது?
A) குருடன்
B) சப்பாணி
C) முடவன்
Answer: B) சப்பாணி
    (அப்போஸ்தலர் 3:2)

04. பேதுரு, யோவானிடமிருந்து ஏதாவது கிடைக்கும் என்று எண்ணியது?
A) சப்பாணி
B) பிரதான ஆசாரியன்
C) ஜனங்கள்
Answer: A) சப்பாணி
    (அப்போஸ்தலர் 3:5)

05. வெள்ளியும், பொன்னும் என்னிடத்திலில்லை என்னிடத்திலுள்ளதை உனக்கு தருகிறேன் என்றது?
A) பிரதான ஆசாரியன்
B) பேதுரு, யோவான்
C) இயேசு கிறிஸ்து
Answer: B) பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 3:6)

06. சப்பானியின் வலது கையை பிடித்து தூக்கியது யார்?
A) சவுல்
B) பிரதான ஆசாரியன்
C) பேதுரு
Answer: C) பேதுரு
    (அப்போஸ்தலர் 3:7)

07. தேவாலயத்தில் பேதுரு பிரசங்கித்த இடம் எது?
A) நுழைவு வாயில்
B) சாலமோன் மண்டபம்
C) அலங்கார வாசல்
Answer: B) சாலமோன் மண்டபம்
    (அப்போஸ்தலர் 3:11)

08. இயேசுவை மகிமைப்படுத்தியது யார்?
A) தேவன்
B) ஜனங்கள்
C) பேதுரு
Answer: A) தேவன்
    (அப்போஸ்தலர் 3:13)

09. இயேசுவை விடுதலையாக்க மனதாயிருந்தது யார்?
A) பேதுரு
B) பரிசேயர்
C) பிலாத்து
Answer: C) பிலாத்து
    (அப்போஸ்தலர் 3:13)

10. பரபாசை கொலைபாதகன் என்றது யார்?
A) பேதுரு
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: A) பேதுரு
    (அப்போஸ்தலர் 3:14)


11. ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்று சொன்னது யார்?
A) தேவன்
B) யோவான்
C) பேதுரு
Answer: C) பேதுரு
    (அப்போஸ்தலர் 3:15)

12. இயேசுவை தேவன் எழுப்பினார் இதற்கு நாங்கள் சாட்சிகள் என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) மத்தேயு
Answer: A) பேதுரு
    (அப்போஸ்தலர் 3:15)

13. கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந் தொழும்பப்பண்ணுவார் என்று சொன்னது யார்?
A) மோசே
B) ஆபிரகாம்
C) சாமுவேல்
Answer: A) மோசே
    (அப்போஸ்தலர் 3:22)

14. இயேசுவின் பிறப்பை முன்னறிவிப்பு முதல் தீர்க்கதரிசி யார்?
A) மோசே
B) சாமுவேல்
C) மீகா
Answer: B) சாமுவேல்
    (அப்போஸ்தலர் 3:24)

15. உன் சந்ததியினால் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் யாரிடம் சொன்னார்?
A) மோசே
B) ஆபிரகாம்
C) சாமுவேல்
Answer: B) ஆபிரகாம்
    (அப்போஸ்தலர் 3:25)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.