Type Here to Get Search Results !

James 2 Two Questions and Answers | யாக்கோபு எழுதிய நிருபம் 2 வினா விடைகள் | Bible Quiz in Tamil | Jesus Sam

============
யாக்கோபு எழுதிய திருமுகம்
இரண்டாம் அதிகாம் (2) கேள்வி பதில்கள்
Book of JAMES Chapter Two (2)
Bible Questions & Answers
=============


1. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர்?
Answer: மகிமையுள்ளவர்
    யாக்கோபு 2:

2. நம்முடைய கர்த்தரகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள எதை பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக?
Answer: விசுவாசத்தை
    யாக்கோபு 2:1

3. பொன் மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற தரித்திரனும் எங்கு வருவார்கள்?
Answer: ஆலயத்திற்கு
    யாக்கோபு 2:2

4. ஆலயத்தில் யாரை நல்ல இடத்தில் உட்காரப் பண்ணுகிறார்கள்?
Answer: மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனை
    யாக்கோபு 2:3

5. ஆலயத்தில் யாரை நில்லு அல்லது பாதபடியண்டையில் உட்காரு என்று சொல்லுகிறார்கள்?
Answer: தரித்திரனை
    யாக்கோபு 2:3

6. தேவன் இவ்வுலகத்தில் தரித்திரரை எப்படி ஐசுவரியவானாக்கினார்?
Answer: விசுவாசத்தினால்
    யாக்கோபு 2:5

7. தேவன் யாருக்கு தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாக தெரிந்துகொண்டார்?
Answer: தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களை
    யாக்கோபு 2:5

8. யாரை கனவீனம் பண்ணுகிறீர்கள்?
Answer: தரித்திரரை
    யாக்கோபு 2:6

9. உங்களை ஒடுக்குவது யார்?
Answer: ஐசுவரியவான்கள்
    யாக்கோபு 2:6

10. உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறவர்கள் யார்?
Answer: ஐசுவரியவான்கள்
    யாக்கோபு 2:6

11. உங்களுக்கு தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை தூஷிக்கிறவர்கள் யார்?
Answer: ஐசுவரியவான்கள்
    யாக்கோபு 2:6,7

12. ராஜசீக பிரமாணம் என்பது என்ன?
Answer: உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
    யாக்கோபு 2:8

13. ராஜசீக பிரமாணத்தை நிறைவேற்றினால் என்ன செய்வீர்கள்?
Answer: நன்மை செய்வீர்கள்
    யாக்கோபு 2:8

14. பட்டசபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவங்செய்து மீறினவர்களென்று எதினால் தீர்க்கப்படுவீர்கள்?
Answer: நியாயப்பிரமாணத்தினால்
    யாக்கோபு 2:9

15. ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் அவன் எப்படிப்பட்டவனாயிருப்பான்?
Answer: குற்றவாளியாயிருப்பான்
    யாக்கோபு 2:10

16. எதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்?
Answer: சுயாதீனப்பிரமாணத்திற்கேற்றபடி
    யாக்கோபு 2:12

17. விசுவாசத்தை எதினால் காண்பிக்க வேண்டும்?
Answer: கிரியைகளினால்
    யாக்கோபு 2:18

18. கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டது யார்?
Answer: ஆபிரகாம்
    யாக்கோபு 2:21

19. கிரியைகளினால் எது பூரணப்பட்டது?
Answer: விசுவாசம்
    யாக்கோபு 2:22

20. தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டது யார்?
Answer: ராகாப் என்னும் வேசிழ
    யாக்கோபு 2:25

21. எப்படிப்பட்ட சரீரம் செத்ததாயிருக்கிறது?
Answer: ஆவியில்லாத சரீரம்
    யாக்கோபு 2:26

22. எப்படிப்பட்ட விசுவாசம் எத்ததாயிருக்கிறது?
Answer: கிரியைகளில்லாத விசுவாசம்
    யாக்கோபு 2:26

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.