Type Here to Get Search Results !

Acts Four 4 Bible Questions with Answers | அப்போஸ்தலர்கள் 4 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Four (4)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் நான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
1. பேதுருவும் யோவானும், உபதேசிக்கிறதினாலும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டது யார்?
Answer: ஆசாரியர், தேவாலயத்து சேனைத் தலைவர், சதுசேயர்
    (அப்போஸ்தலர் 4:1,2)

2. சாயங்காலமாய் இருந்தபடியினால் மறுநாள் வரைக்கும் காவலில் வைக்கப்பட்டவர்கள் யார்?
Answer: பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 4:3)
    அப்போஸ்தலர் 3:1)

3. வசனத்தைக் கேட்டு விசுவாசித்தவர்களின் தொகை எவ்வளவாயிருந்தது?
Answer: ஐயாயிரம் பேர்
    (அப்போஸ்தலர் 4:4)

4. ஜனங்களுடைய அதிகாரிகளும், மூப்பர்களும், வேதபாரகரும், பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எங்கு கூட்டங்கூடினார்கள்?
Answer: எருசலேம்
    (அப்போஸ்தலர் 4:5,6,7)

5. ஜனத்தின் அதிகாரிகளுக்கும், இஸ்ரவேலின் மூப்பருக்கும் முன்பாக பரிசுத்த ஆவியினால் நிறைந்து பேசியது யார்?
Answer: பேதுரு
    (அப்போஸ்தலர் 4:8)

6. அவராலேயன்றி வேறொருவராலும் ------------ இல்லை.
Answer: இரட்சிப்பு இல்லை
    (அப்போஸ்தலர் 4:12)

7. படிப்பறியாதவர்களும், பேதைமையுள்ளவர்களுமாயிருந்தது யார்?
Answer: பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 4:13)

8. ஜனத்தின் அதிபதிகளும், இஸ்ரவேலரின் மூப்பர்களும் யார் பேசுகிறதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்?
Answer: பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 4:8,13)

9. அதிகாரிகள் யோசனைபண்ணும்படிக்கு பேதுருவையும், யோவானையும் எதைவிட்டு வெளியே போகச் சொன்னார்கள்?
Answer: ஆலோசனை சங்கத்தை விட்டு
    (அப்போஸ்தலர் 4:15)

10. எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கும் படி வெளியரங்கமான அற்புதத்தை செய்தது யார்?
Answer: பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 4:16)

11. எந்த நாமத்தைக் குறித்து எவ்வளவும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்கு (பேதுரு, யோவான்) கட்டளையிட்டார்கள்?
Answer: இயேசுவின் நாமத்தைக் குறித்து
    (அப்போஸ்தலர் 4:18)

12. தேவனுக்கு செவிகொடுக்கிறதைப் பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நீதானித்துப் பாருங்கள் என்றது யார்?
Answer: பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 4:19)

13. நாங்கள் கண்டவைகளையும் ---------------- பேசாமலிருக்கக் கூடாதே என்றார்கள்.
Answer: கேட்டவைகளையும்
    (அப்போஸ்தலர் 4:20)

14. பேதுருவையும் யோவானையும் தண்டிக்காமல் பயமுறுத்தி விட்டுவிட்டது ஏன்?
Answer: ஜனங்களுக்கு பயந்தபடியினால்
    (அப்போஸ்தலர் 4:21)

15. அற்புதமாய் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் எத்தனை வயதுக்கு மேற்பட்டவனாய் இருந்தான்?
Answer: நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாய் இருந்தான்
    (அப்போஸ்தலர் 4:22)

16. புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் --------------------- சிந்திப்பானேன்.
Answer: விருதா காரியங்களை சிந்திப்பானேன்
    (அப்போஸ்தலர் 4:25)

17. கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் எழும்பி நிற்பது யார்?
Answer: பூமியின் ராஜாக்கள் எழும்பி நிற்பார்கள்
    (அப்போஸ்தலர் 4:26)

18. அதிகாரிகள் ஏகமாய் கூட்டங்கூடினார்கள் என்று தேவன் யார் மூலமாக வாக்குரைத்திருக்கிறார்?
Answer: தாவீதின் மூலமாக வாக்குரைத்திருக்கிறார்
    (அப்போஸ்தலர் 4:26)

19. புறஜாதிகளோடும், இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட இயேசுவுக்கு விரோதமாய் கூட்டங்கூடியது யார்?
Answer: ஏரோது, பொந்தியுபிலாத்து
    (அப்போஸ்தலர் 4:27)

20. சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு எதை தைரியமாய் சொன்னார்கள்?
Answer: தேவவசனத்தைத் தைரியமாய் சொன்னார்கள்
    (அப்போஸ்தலர் 4:31)

21. ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தது யார்?
Answer: விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார்
    (அப்போஸ்தலர் 4:32)

22. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து மிகுந்த பலமாய் சாட்சி கொடுத்தது யார்?
Answer: அப்போஸ்தலர்கள்
    (அப்போஸ்தலர் 4:33)

23. யார்மேல் பூரண கிருபை உண்டாயிருந்தது?
Answer: அப்போஸ்தலர்கள் மேல்
    (அப்போஸ்தலர் 4:33)

24. நிலங்களையும் வீடுகளையும் விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தை யாருடைய பாதத்தில் வைத்தார்கள்?
Answer: அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள்
    (அப்போஸ்தலர் 4:34)

25. பர்னபா எந்த தீவைச் சார்ந்தவன்?
Answer: சீப்புரு தீவைச் சார்ந்தவன்
    (அப்போஸ்தலர் 4:36)

26. பர்னபா எந்த கோத்திரத்தைச் சார்ந்தவன்?
Answer: லேவி கோத்திரத்தைச் சார்ந்தவன்
    (அப்போஸ்தலர் 4:36)

27. அப்போஸ்தலர்கள் பர்னபாவை எப்படி அழைத்தார்கள்?
Answer: ஆறுதலின் மகன் (Son of Consolation)
    (அப்போஸ்தலர் 4:36)

28. பர்னபாவின் மறுபெயர் என்ன?
Answer: யோசே (Joses surnamed Barnabas)
    இவருடைய பெயர் யோசேப்பு பர்னபா (Joseph Barnabas) என்றும். அப்போஸ்தலர் 1: 23-ல் வரும் நபர் இவர் தான் என்றும் குறிப்புகள் உள்ளன.
    (அப்போஸ்தலர் 4:36)

 

1. தேவாலயத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காகவும் நியமிக்கப்பட்டிருந்தவர்கள் யார்?
Answer: தேவாலயத்துச் சேனைத் தலைவர்கள்
    (அப்போஸ்தலர் 4:1)

2. இஸ்ரவேலில் எத்தனை விதமான சிறைச்சாலைகள் இருந்தது?
Answer: 1. பிலாத்துவின் அரண்மனையில் இருந்த சிறைச்சாலை
2. ஏரோதுவின் மாளிகையில் இருந்த சிறைச்சாலை
3. காய்பா வீட்டில் இருந்த பாதால சிறை
    (அப்போஸ்தலர் 4:3)

3. எந்த குற்றம் செய்தவர்களை பிலாத்துவின் அரண்மனையில் இருந்த சிறைச்சாலையில் வைத்திருப்பார்கள்?
Answer: ரோம அரசாங்கத்திற்கு விரோதமாய், இராயணுக்கு விரோதமாய், சுதந்திரத்திற்காக போராடுகிறவர்களை இந்த சிறையில் வைத்தார்கள்.

4. எந்த குற்றம் செய்தவர்களை ஏரோதுவின் மாளிகையில் இருந்த சிறைச்சாலையில் வைத்தார்கள்?
Answer: கலவு, கொலை, கற்பலிப்பு போன்ற தவறு செய்கிறவர்களை இந்த சிறையில் வைத்தார்கள்

5. எந்த குற்றம் செய்தவர்களை காய்பா வீட்டில் இருந்த சிறையில் வைத்திருப்பார்கள்?
Answer: தேவாலயம் சார்பாக, தேவதூஷணம் சொன்னால், யூத மதத்திற்கு எதிராக, நியாயப்பிரமாணத்திற்கு எதிராக எவராவது குற்றம் செய்தால் அவர்களை இச்சிறையில் வைத்திருப்பார்கள்.

6. பேதுருவையும், யோவானையும் எந்த சிறையில் வைத்தார்கள்?
Answer: காய்பாவின் வீட்டில் இருந்த பாதாள சிறையில் இயேசு கிறிஸ்துவையும் இந்த சிறையில் தான் வைத்திருந்தார்கள்
    (அப்போஸ்தலர் 4:3)

7. அன்னா எத்தனை வருஷம் பிரதான ஆசாரியனாக இருந்தான்?
Answer: பதினொன்று வருஷம் பிரதான ஆசாரியனாக இருந்தான்
    (அப்போஸ்தலர் 4:6)

8. பிரதான ஆசாரியனாகிய அன்னாவிற்கு எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள்?
Answer: ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள்
    (அப்போஸ்தலர் 4:6)

9. அப்போஸ்தலர் 4: 6-ல் வருகின்ற யோவானின் முழுப்பெயர் என்ன?
Answer: யோவான் பென் லாகாய் (Johanan Ben Laccai)
    (அப்போஸ்தலர் 4:6)

10. அலெக்சந்தரின் முழுப்பெயர் என்ன?
Answer: அலெக்சந்தர் லிசிமாக்கஸ் (Alexander Lysimachus)
    (அப்போஸ்தலர் 4:6)

11. வல்லமை என்பதன் கிரேக்கப்பதம் என்ன?
Answer: டுனாமிஸ் (Dynamis)
    (அப்போஸ்தலர் 4:7)
    (2 பேதுரு 1:3)

12. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்” இந்த வசனத்தை வேதத்தில் மற்ற எந்த இடங்களில் வாசிக்கிறோம்?
Answer: சங்கீதம் 118:22
    மத்தேயு 21:42
    ஏசாயா 28:16
    ஏசாயா 49:7
    ரோமர் 9:33
    2 பேதுரு 2:7,8
    (அப்போஸ்தலர் 4:11)

13. இரட்சிப்பு என்பதன் கிரேக்கப் பதம் என்ன?
Answer: சொடோரியா (Sooteeria)
    (அப்போஸ்தலர் 4:12)

14. தைரியம் என்பதன் கிரேக்கப்பதம் என்ன?
Answer: பரேசியா (Parreesia)
    (அப்போஸ்தலர் 4:13)

15. வேதாகமத்தில் நீண்ட நாட்களாக வியாதியாய் இருந்த மனுஷன் யார்?
Answer: பிறவி சப்பாணி
    (அப்போஸ்தலர் 4:22)

16. ”புறஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன்” இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: சங்கீதம் 2:1-2)
    (அப்போஸ்தலர் 4:25)

17. முன்குறித்தவைகள் என்பதன் கிரேக்க பதம் என்ன?
Answer: ப்ரோரீஜோ (Proorizoo)
    (அப்போஸ்தலர் 4:27)


பர்னபாவைப் பற்றி
===========
1. பர்னபா அப்போஸ்தலர்களால் ஆறுதலின் மகன் என்று அழைக்கப்பட்டார்.
    அப்போஸ்தலர் 4:36

2. பர்னபாவின் மறுபெயர் யோசே (Joses surnamed Barnabas)
    அப்போஸ்தலர் 4:36

3. சில பதிப்புகளில் இவர் பெயர் யோசேப்பு பர்னபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    அப்போஸ்தலர் 4:36

4. பர்னபா சீப்புரு தீவைச் சார்ந்தவர்
    அப்போஸ்தலர் 4:36

5. பர்னபா லேவி கோத்திரத்தைச் சார்ந்தவர்
    அப்போஸ்தலர் 4:36

6. அப்போஸ்தலர் 1:23-ல் யூதாஸ்காரியோத்திற்காக ஒரு நபரை தெரிந்தெடுக்க வேண்டும் என்பதற்காக யோசேப்பு, மத்தியா என்ற இரண்டு நபர்களை தெரிவு செய்து சீட்டு போடுகிறார்கள். இந்த யோசேப்பு தான் பர்னபா.

7. இயேசு கிறிஸ்து மண்ணுலகில் வாழ்ந்தபோது அவரோடு இருந்த ஒரு மனிதன் என்பது தெரியவருகிறது. எப்படியென்றால் இயேசுயோடு கூட இருந்த இரண்டு மனிதர்களை தெரிவு செய்தே சீட்டுப்போட்டார்கள்.
    அப்போஸ்தலர் 1:21

8. பவுலை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தவன் இந்த பர்னபா.
    அப்போஸ்தலர் 9:25-27

9. பர்னபா பவுலின் உடன் ஊழியனாகவும் இருந்தவர்.
    அப்போஸ்தலர் 11:30
    அப்போஸ்தலர் 12:25
    அப்போஸ்தலர் 13:1
    அப்போஸ்தலர் 15:35

9. பர்னபா தீர்க்கதரிசி என்றும், போதகர் என்றும் அழைக்கப்பட்டார்.
    அப்போஸ்தலர் 13:1
    அப்போஸ்தலர் 14:14

10. பர்னபா பவுலிடம் இருந்து பிரிந்து சென்றவர்
    அப்போஸ்தலர் 15:36-41

11. பர்னபா பவுலுடன் ஒப்புரவாகியவர்.
    1 கொரிந்தியர் 9:6
    கலாத்தியர் 2:1


01. சாலமோன் மண்டபத்தில் பேதுரு பேசியதால் பேதுருவை எத்தனை நாள் சிறையில் வைத்தனர்?
A) ஒரு பகல்
B) சாயங்காலம் வரை
C) ஒரு இரவு
Answer: C) ஒரு இரவு
    (அப்போஸ்தலர் 4:3)

02. சாலமோன் மண்டபத்தில் பேதுரு பேசியதைக் கேட்டு விசுவாசித்தவர்கள் எத்தனை பேர்?
A) மூவாயிரம்
B) ஐயாயிரம்
C) ஏழாயிரம்
Answer: B) ஐயாயிரம்
    (அப்போஸ்தலர் 4:4)

03. அன்னா, காய்பா, யோவான், அலெக்சந்தர் இவர்கள் யார்?
A) வேதபாரகர்
B) பிரதான ஆசாரியர்
C) அப்போஸ்தலர்கள்
Answer: B) பிரதான ஆசாரியர்
    (அப்போஸ்தலர் 4:6)

04. பிரதான ஆசாரியர் முன் பரிசுத்த ஆவியினால் நிறைந்து பேசியது யார்?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) யோவான்
Answer: A) பேதுரு
    (அப்போஸ்தலர் 4:8)

05. அவராலேயன்றி வேறெருவராலும் ________ இல்லை.
A) சுகம்
B) இரட்சிப்பு
C) விடுதலை
Answer: B) இரட்சிப்பு
    (அப்போஸ்தலர் 4:12)


06. பிரதான ஆசாரியர் யாரை படிப்பறிவில்லாத பேதை என்று எண்ணினர்?
A) சவுல், சீலா
B) பேதுரு, யோவான்
C) மத்தியா, யுஸ்து
Answer: B) பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 4:13)

07. எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமாய் அற்புதம் செய்தது யார்?
A) பேதுரு
B) ஸ்தேவான்
C) பர்னபா
Answer: A) பேதுரு
    (அப்போஸ்தலர் 4:16)

08. நாங்கள் கண்டதையும், கேட்டதையும் பேசாமலிருக்ககூடாதே என்றது யார்?
A) பேதுரு, யோவான்
B) பிலிப்பு, ஸ்தேவான்
C) யாக்கோபு, யோவான்
Answer: A) பேதுரு, யோவான்
    (அப்போஸ்தலர் 4:20)

09. தேவாலயத்தில் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த சப்பாணி ஏறக்குறைய எத்தனை வயதுள்ளவன்?
A) இருபது வயது
B) முப்பது வயது
C) நாற்பது வயது
Answer: C) நாற்பது வயது
    (அப்போஸ்தலர் 4:22)

10. புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களை சிந்திப்பானேன் என்று சொன்னது யார்?
A) மோசே
B) சாமுவேல்
C) தாவீது
Answer: C) தாவீது
    (அப்போஸ்தலர் 4:25)


11. இயேசுவுக்கு விரோதமாக கூட்டம் கூடியது யார்? யார்?
A) ஏரோது, பொந்தியுபிலாத்து
B) பிரதான ஆசாரியர், பரிசேயர், வேதபாரகர்
C) அன்னா, காய்பா
Answer: A) ஏரோது, பொந்தியுபிலாத்து
    (அப்போஸ்தலர் 4:28)

12. நிலத்தையும், வீடுகளையும் விற்றவர்கள் கிரயத்தை யாருடைய பாதத்தில் வைத்தார்கள்?
A) விசுவாசிகள்
B) பிரதான ஆசாரியன்
C) அப்போஸ்தலர்
Answer: C) அப்போஸ்தலர்
    (அப்போஸ்தலர் 4:34,35)

13. சீப்புரு தீவைச் சேர்ந்த லேவியன் யார்?
A) பேதுரு
B) அனனியா
C) பர்னபா
Answer: C) பர்னபா
    (அப்போஸ்தலர் 4:36)

14. பர்னபா யாரால் ஆறுதலின் மகன் என்று அழைக்கப்பட்டார்?
A) ஜனங்கள்
B) அப்போஸ்தலர்கள்
C) விசுவாசிகள்
Answer: B) அப்போஸ்தலர்கள்
    (அப்போஸ்தலர் 4:36)

15. பர்னபாவின் மற்றொரு பெயர்?
A) யோசே
B) பர்சபா
C) யுஸ்து
Answer: A) யோசே
    (அப்போஸ்தலர் 4:36)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.