Type Here to Get Search Results !

Acts Five 5 Bible Questions & Answers Tamil | அப்போஸ்தலர் 5 கேள்வி பதில்கள் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Five (5)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் ஐந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. தங்கள் காணியாட்டியை விற்ற தம்பதிகள் யார்?
Answer: அனனியா, சப்பீராள்
    (அப்போஸ்தலர் 5:1)

2. கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கை கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தது யார்?
Answer: அனனியா
    (அப்போஸ்தலர் 5:2)

3. பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பொய்சொல்லும்படி சாத்தான் யாருடைய இருதயத்தை நிரப்பினான்?
Answer: அனனியா
    (அப்போஸ்தலர் 5:3)

4. நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன. யார்? யாரிடம் சொன்னது?
Answer: பேதுரு – அனனியாவிடம் சொன்னது
    (அப்போஸ்தலர் 5:3)

5. நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய் என்றது யார்?
Answer: பேதுரு
    (அப்போஸ்தலர் 5:4)

6. விழுந்து ஜீவனை விட்டது யார்?
Answer: அனனியா
    (அப்போஸ்தலர் 5:5)

7. வாலிபர் அனனியாவை எதிலே சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்?
Answer: சேலையில் சுற்றி
    (அப்போஸ்தலர் 5:6)

8. அனனியாவிற்கு பின் எவ்வளவு நேரம் சென்று சப்பீராள் அப்போஸ்தலரிடம் வந்தாள்?
Answer: மூன்று மணி நேரத்திற்கு பின்பு
    (அப்போஸ்தலர் 5:7)

9. நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள். எனக்குச் சொல். யார்? யாரிடம் சொன்னது?
Answer: பேதுரு – சப்பீராளிடம் சொன்னது
    (அப்போஸ்தலர் 5:8)

10. கர்த்தருடைய ஆவியை சோதிப்பதற்கு ஒருமனப்பட்டவர்கள் யார்?
Answer: அனனியா, சப்பீராள்
    (அப்போஸ்தலர் 5:9)

11. பேதுருவின் பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டது யார்?
Answer: சப்பீராள்
    (அப்போஸ்தலர் 5:10)

12. சப்பீராளை அடக்கம்பண்ணியது யார்?
Answer: வாலிபர்
    (அப்போஸ்தலர் 5:10)

13. ஒரே நாளில் மரித்துப்போன தம்பதிகள் யார்?
Answer: அனனியா, சப்பிராள்
    (அப்போஸ்தலர் 5:5,10)

14. தன் புருஷனண்டையில் அடக்கம்பண்ணப்பட்ட பெண் யார்?
Answer: சப்பிராள்
    (அப்போஸ்தலர் 5:10)

15. எல்லாரும் ஒருமனப்பட்டு எங்கு இருந்தார்கள்?
Answer: சாலொமோன் மண்டபத்தில்
    (அப்போஸ்தலர் 5:12)

16. பிணியாளிகளை யாருடைய நிழல் படும்படிக்கு வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்?
Answer: பேதுரு
    (அப்போஸ்தலர் 5:15)

17. சுற்றுப்பட்டணங்களிலிருந்து பிணியாளிகளையும் அசுத்த ஆவியினால் பாதிக்கப்பட்டவர்களையும் எங்கு கொண்டுவந்தார்கள்?
Answer: எருசலேமிற்க கொண்டு வந்தார்கள்
    (அப்போஸ்தலர் 5:16)

18. அப்போஸ்தலர்கள் மேல் பொறாமை கொண்டவது யார்?
Answer: பிரதான ஆசாரியர், சதுசேயர்
    (அப்போஸ்தலர் 5:17)

19. அப்போஸ்தலர்களை எந்த சிறையில் வைத்தார்கள்?
Answer: பொதுவான சிறையில் வைத்தார்கள்
    (அப்போஸ்தலர் 5:18)

20. சிறைச்சாலை கதவுகளைத் திறந்து, அப்போஸ்தலர்களை வெளியே விட்டது யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
    (அப்போஸ்தலர் 5:19)

21. கர்த்தருடைய தூதன் அப்போஸ்தலரை எந்த நேரத்தில் வெளியே வந்து விட்டான்?
Answer: இராத்திதி
    (அப்போஸ்தலர் 5:19)

22. நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றைம் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றது யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
    (அப்போஸ்தலர் 5:20)

23. தூதன் சொன்னதைக் கேட்டு எப்போது போதகம்பண்ண தொடங்கினார்கள்?
Answer: அதிகாலையில்
    (அப்போஸ்தலர் 5:21)

24. அப்போஸ்தலரை கொண்டுவரும்படி சிறைச்சாலைக்கு யாரை அனுப்பினார்கள்?
Answer: சேவகரை அனுப்பினார்கள்
    (அப்போஸ்தலர் 5:21)

25. இது என்னமாய் முடியுமோ என்று, அப்போஸ்தலரைக் குறித்து கலக்கமடைந்தது யார்?
Answer: ஆசாரியன், தேவாலயத்து சேனைத்தலைவன், பிரதான ஆசாரியன்
    (அப்போஸ்தலர் 5:24)

26. பலவந்தம்பண்ணாமல் அப்போஸ்தலரை அழைத்துக்கொண்டு வந்தது யார்?
Answer: சேனைத்தலைவன்
    (அப்போஸ்தலர் 5:26)

27. சேனைத்தலைவன் யாரோடு கூட போய் அப்போஸ்தலரை அழைத்துக்கொண்டு வந்தான்?
Answer: சேவகரோடு கூடபோய் அப்போஸ்தலரை அழைத்துக்கொண்டு வந்தான்
    (அப்போஸ்தலர் 5:26)

28. சேனைத்தலைவன் ஏன் அப்போஸ்தலரை பலவந்தம்பண்ணாமல் அழைத்துக்கொண்டு வந்தான்?
Answer: ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால்
    (அப்போஸ்தலர் 5:26)

29. அப்போஸ்தலரை அழைத்துக்கொண்டு வந்து எங்கு நிறுத்தினார்கள்?
Answer: ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள்
    (அப்போஸ்தலர் 5:27)

30. நீங்கள் அந்த நாமத்தைக் குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? என்றது யார்?
Answer: பிரதான ஆசாரியன்
    (அப்போஸ்தலர் 5:27,28)

31. மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்கு கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது என்றது யார்?
Answer: பேதுருவும், மற்ற அப்போஸ்தலரும்
    (அப்போஸ்தலர் 5:29)

32. இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை ----------------, --------------- தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்?
Answer: அதிபதியாகவும், இரட்சகராகவும்
    (அப்போஸ்தலர் 5:31)

33. தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின --------- சாட்சி என்றார்கள்.
Answer: பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்
    (அப்போஸ்தலர் 5:32)

34. சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரி யார்?
Answer: கமாலியேல்
    (அப்போஸ்தலர் 5:34)

35. கமாலியேல் ஒரு ------------ .
Answer: பரிசேயன்
    (அப்போஸ்தலர் 5:34)

36. ஆலோசனை சங்கத்திலிருந்து அப்போஸ்தலர்களை வெளியே போகச்சொன்ன பரிசேயன் யார்?
Answer: கமாலியேல்
    (அப்போஸ்தலர் 5:34)

37. இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றது யார்?
Answer: கமாலியேல்
    (அப்போஸ்தலர் 5:35)

38. தெயுதாசைப் பின்பற்றினவர்கள் எத்தனை பேர்?
Answer: நானூறு பேர்
    (அப்போஸ்தலர் 5:36)

39. யாரை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்?
Answer: தெயுதாஸ்
    (அப்போஸ்தலர் 5:36)

40. குடிமதிப்பின் நாட்களில் தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தது யார்?
Answer: கலிலேயனாகிய யூதாஸ்
    (அப்போஸ்தலர் 5:37)

41. யாரை நம்பினவர்கள் அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்?
Answer: கலிலேயனாகிய யூதாஸ்
    (அப்போஸ்தலர் 5:37)

42. தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றது யார்?
Answer: கமாலியேல்
    (அப்போஸ்தலர் 5:39)

43. அப்போஸ்தலர்கள் இயேசுவின் நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால் எப்படி ஆலோசனை சங்கத்தை விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்?
Answer: சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள்
    (அப்போஸ்தலர் 5:41)

44. அப்போஸ்தலர்கள் தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, --------------------- பிரசங்கித்தார்கள்.
Answer: இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்
    (அப்போஸ்தலர் 5:42)


01. தன் மனைவி அறிய கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தது யார்?
A) பர்னபா
B) அனனியா
C) பர்மெனா
Answer: B) அனனியா
    (அப்போஸ்தலர் 5:2)

02. அனனியா செத்து மூன்று மணி நேரம் கழித்து அப்போஸ்தலரிடம் வந்தது யார்?
A) பர்னபா
B) ஸ்தேவான்
C) சப்பீராள்
Answer: C) சப்பீராள்
    (அப்போஸ்தலர் 5:7)

03. கர்த்தருடைய ஆவியை சோதிக்கும் படி ஒருமனப்பட்ட இருவர் யார்?
A) ஆதாம், ஏவாள்
B) அனனியா, சப்பீராள்
C) பர்னபா, மத்தியா
Answer: B) அனனியா, சப்பீராள்
    (அப்போஸ்தலர் 5:9)

04. பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்தது யார்?
A) சப்பீராள்
B) ஸ்தேவான்
C) அனனியா
Answer: A) சப்பீராள்
    (அப்போஸ்தலர் 5:10)

05. ஒரே நாளில் செத்த கணவன் மனைவி யார்?
A) ஆதாம், ஏவாள்
B) அனனியா, சப்பீராள்
C) ஏரோது, ஏரோதியாள்
Answer: B) அனனியா, சப்பீராள்
    (அப்போஸ்தலர் 5:6,10)


06. அப்போஸ்தலர் எல்லாரும் ஒருமனப்பட்டு எங்கு இருந்தார்கள்?
A) தேவாலயம்
B) சாலமோன் மண்டபம்
C) மேல் வீட்டில்
Answer: B) சாலமோன் மண்டபம்
    (அப்போஸ்தலர் 5:12)

07. யாருடைய நிழல் பட்டு பிணியாளிகளுக்கு சுகம் கிடைத்தது?
A) இயேசு
B) ஸ்தேவான்
C) பேதுரு
Answer: C) பேதுரு
    (அப்போஸ்தலர் 5:15)

08. திரளான ஜனங்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவியினால் வாதிக்கப்பட்டவர்களையும் எங்கு கொண்டு வந்தார்கள்?
A) எருசலேம்
B) கப்பர்நகூம்
C) கலிலேயா
Answer: A) எருசலேம்
    (அப்போஸ்தலர் 5:16)

09. பிரதான ஆசாரியரும் சதுசேயரும் யார் மேல் பொறாமை கொண்டார்கள்?
A) பரிசேயர்
B) அப்போஸ்தலர்
C) வேதபாரகர்
Answer: B) அப்போஸ்தலர்
    (அப்போஸ்தலர் 5:17,18)

10. அப்போஸ்தலரை பிடித்து எங்கு வைத்தார்கள்?
A) பிலாத்துவின் வீடு
B) பிரதான ஆசாரியன் வீடு
C) பொதுவான சிறை
Answer: C) பொதுவான சிறை
    (அப்போஸ்தலர் 5:18)

 

11. சகல ஜனங்களாலும் கனம் பெற்ற நியாயசாஸ்திரி யார்?
A) சவுல்
B) அலெக்சந்தர்
C) கமாலியேல்
Answer: C) கமாலியேல்
    (அப்போஸ்தலர் 5:34)

12. கமாலியேல் ஒரு __________ .
A) பரிசேயன்
B) பிரதான ஆசாரியன்
C) வேதபாரகன்
Answer: A) பரிசேயன்
    (அப்போஸ்தலர் 5:34)

13. தெயுதாஸை பின்பற்றியவர்கள் எத்தனை பேர்?
A) நானூறு பேர்
B) ஐந்நூறு பேர்
C) அறுநூறு பேர்
Answer: A) நானூறு பேர்
    (அப்போஸ்தலர் 5:36)

14. குடிமதிப்பின் நாட்களில் தன்னை பின்பற்றும் படி அநேகரை இழுத்த கலிலேயன் யார்?
A) இயேசு
B) தெயுதாஸ்
C) யூதாஸ்
Answer: C) யூதாஸ்
    (அப்போஸ்தலர் 5:37)

15. தேவனோடு போர்செய்கிறவர்களாய் காணப்படாத படிக்கு பாருங்கள் என்றது?
A) பேதுரு
B) கமாலியேல்
C) காய்பா
Answer: B) கமாலியேல்
    (அப்போஸ்தலர் 5:39)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.