Type Here to Get Search Results !

The Gospel of Mark Quiz Question With Answer in Tamil | மாற்கு நற்திசெய்தி நூல் கேள்வி பதில்கள் | 50 வினா விடைகள் | Bible Games | Jesus Sam

மாற்கு நற்செய்தி நூல்
பைபிள் கேள்வி பதில்கள்
(50 கேள்வி பதில்கள்)
01. வனாந்தரத்திலே ஞானஸ்நானம் கொடுத்து யார்?
A) யோவான்
B) இயேசு கிறிஸ்து
C) சீமோன் பேதுரு
விடை: யோவான்
    (மாற்கு 1:4)

02. இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் எத்தனை நாள் இருந்தார்?
A) இருபது நாள்
B) முப்பது நாள்
C) நாற்பது நாள்
விடை: நாற்பது நாள்
    (மாற்கு 1:13)

03. ஜுரமாய்க் கிடந்தது யார்?
A) சீமோன்
B) சீமோனின் மாமி
C) யோவான்
விடை: சீமோனின் மாமி
    (மாற்கு 1:30)

04. திமிர்வாதக்காரனை சுமந்துகொண்டு வந்தது எத்தனை பேர்?
A) இரண்டு பேர்
B) நான்கு பேர்
C) ஐந்து பேர்
Answer: நான்கு நபர்கள்
    (மாற்கு 2:3)

05. பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுடையவர் யார்?
A) மனுஷகுமாரன்
B) யோவான்ஸ்நானன்
C) பிரதான ஆசாரியன்
Answer: மனுஷகுமாரன்
    (மாற்கு 2:10)

06. மனுஷகுமாரன் இதற்கும் ஆண்டவராயிருக்கிறார்?
A) பூமிக்கும்
B) ஓய்வுநாளுக்கும்
C) தேவாலயத்திற்கும்
Answer: ஒய்வுநாளுக்கும்
    (மாற்கு 2:28)

07. ஓய்வு நாளில் இயேசுவை குற்றம் சாட்ட நினைத்தது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: பரிசேயர்
    (மாற்கு 3:2)

08. இயேசு கிறிஸ்துவைக் கண்டு: நீர் தேவனுடைய குமாரன் என்றது யார்?
A) யோவான்
B) சீமோன் பேதுரு
C) அசுத்த ஆவிகள்
Answer: அசுத்த ஆவிகள்
    (மாற்கு 3:11)

09. இயேசு எத்தனை பேரைத் தெரிந்துகொண்டார்?
A) ஏழு பேர்
B) பத்து பேர்
C) பன்னிரெண்டு பேர்
Answer: பன்னிரெண்டு பேரை தெரிந்துகொண்டார்
    (மாற்கு 3:14,15)

10. எந்த விதை முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தந்தது?
A) கற்பாறையில் விழுந்த விதை
B) மணலில் விழுந்த விதை
C) நல்ல நிலத்தில் விழுந்த விதை
Answer: நல்ல நிலத்தில் விழுந்து விதை
    (மாற்கு 4:8)

11. இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறவன் யார்?
A) சாத்தான்
B) துவதூதன்
C) புறஜாதியான்
Answer: சாத்தான்
    (மாற்கு 4:15)

12. பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியது எது?
A) கடுகு விதை
B) மிளகு விதை
C) சூரியகாந்தி விதை
Answer: கடுகு
    (மாற்கு 4:31)

13. கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மாண்டது எது?
A) பன்றிகள்
B) தெய்வங்கள்
C) ஆடு, மாடுகள்
Answer: பன்றிகள்
    (மாற்கு 5:13)

14. ஜெப ஆலயத் தலைவன் பெயர் என்ன?
A) யவீரு
B) கொர்நேலியு
C) நிக்கோதேமு
Answer: யவீரு
    (மாற்கு 5:22)

15. தலீத்தாகூமி என்பதன் அர்த்தம் என்ன?
A) பெண்னே எழுந்திரு
B) சிறு பெண்னே எழுந்திரு
C) மகளே எழுந்திரு
Answer: சிறு பெண்ணே எழுந்திரு
    (மாற்கு 5:41)

16. ஏரோதுவின் சகோதரன் பெயர் என்ன?
A) பிலாத்து
B) யோவான்
C) பிலிப்பு
Answer: C) பிலிப்பு
    (மாற்கு 6:17)

17. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: B) ஐயாயிரம் பேர்
    (மாற்கு 6:44)

18. சீஷர்களின் இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினாலே எதைக் குறித்து உணராதிருந்தார்கள ?
A) பசி
B) அற்புதம்
C) அப்பம்
Answer: C) அப்பம்
    (மாற்கு 6:52)

19. தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றது யார்?
A) மோசே
B) பிரதான ஆசாரியர்
C) தேவன்
Answer: A) மோசே
    (மாற்கு 7:10)

20. மனுஷனுடைய இருதயத்திலிருந்து தோன்றி மனுஷனை தீட்டுப்படுத்தும் செயல்கள்
மொத்தம் எத்தனை?
A) பத்து
B) பதின்மூன்று
C) பதினைந்து
Answer: B) பதின்மூன்று
    (மாற்கு 7:21,22)

21. எப்பத்தா என்பதன் அர்த்தம்?
A) திறக்கப்பட்டது
B) திறக்கப்படுவாயாக
C) திறக்கப்படும்
Answer: B) திறக்கப்படுவாயாக
    (மாற்கு 7:34)

22. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் அற்புதத்தில் மீதியான துணிக்கைகள் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?
A) ஏழு
B) பத்து
C) பனிரெண்டு
Answer: A) ஏழு
    (மாற்கு 8:8)

23. மனுஷ குமாரன் எத்தனை நாளுக்கு பின்பு உயிர்த்தெழுவார்?
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
Answer: A) மூன்று
    (மாற்கு 8:31)

24. இயேசுவை கடிந்து கொண்ட சீஷன் யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
    (மாற்கு 8:32)

25. இயேசு மறுரூபமான மலையில் அவரோடு பேசியது யார்?
A) மோசே, எலியா
B) எலியா, எலியா
C) ஆபிரகாம், எலியா
Answer: A) மோசே, எலியா
    (மாற்கு 9:4)

26. தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணியது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
    (மாற்கு 9:34)

27. எது இடறல் உண்டாக்கினால் அதை பிடுங்கிபோட வேண்டும்?
A) கண்
B) கை
C) கால்
Answer: A) கண்
    (மாற்கு 9:47)

28. சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தவர்களை அதட்டியது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
    (மாற்கு 10:13)

29. இயேசுவிடம் வந்து துக்கத்தோடே திரும்பிச் சென்றது யார்?
A) நிக்கோதேமு
B) நூற்றுக்கு அதிபதி
C) ஐசுவரியவான்
Answer: C) ஐசுவரியவான்
    (மாற்கு 10:22)

30. பர்திமேயு என்ற குருடனின் தகப்பன் பெயர் என்ன?
A) திமேயு
B) அல்பேயு
C) செபதேயு
Answer: A) திமேயு
    (மாற்கு 10:46)

31. ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் _______ .
A) அதிசயமானவர்
B) ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
C) ஆசீர்வதிக்கப்பட்டவர்
Answer: B) ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
    (மாற்கு 11:9)

32. இயேசு கழுதை பவனியாக எங்கு சென்றார்?
A) பெத்பகே
B) பெத்தானியா
C) எருசலேம்
Answer: C) எருசலேம்
    (மாற்கு 11:11)

33. இயேசு கிறிஸ்து சபித்த மரம் எந்த மரம்?
A) ஒலிவ மரம்
B) கேதுரு மரம்
C) அத்தி மரம்
Answer: C) அத்தி மரம்
    (மாற்கு 11:13,14,21)

34. நாணயத்தின் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையதாயிருந்தது?
A) பிலாத்து
B) இராயன்
C) ஏரோது
Answer: B) இராயன்
    (மாற்கு 12:16)

35. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
A) பரிசேயர்
B) ஏரோதியர்
C) சதுசேயர்
Answer: C) சதுசேயர்
    (மாற்கு 12:18)

36. இயேசு யாரைப் பார்த்து “நீ தேவனுடைய ராஜ்யத்துக்கு தூரமானவனல்ல” என்றார்?
A) பரிசேன்
B) வேதபாரகன்
C) ஏரோதியன்
Answer: B) வேதபாரகன்
    (மாற்கு 12:34)

37. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே __________ .
A) இரட்சிக்கப்படுவான்
B) காப்பாற்றப்படுவான்
C) விடுவிக்கப்படுவான்
Answer: A) இரட்சிக்கப்படுவான்
    (மத்தேயு 13:13)

38. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசி யார்?
A) ஏசாயா
B) தானியேல்
C) யோவேல்
Answer: B) தானியேல்
    (மத்தேயு 13:14)

39. கள்ள கிறிஸ்துக்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி யாரை வஞ்சிப்பார்கள்?
A) விசுவாசிகள்
B) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
C) அவிசுவாசிகள்
Answer: B) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
    (மத்தேயு 13:22)

40. வானமும் பூமியும் ஒழிந்துபோம் எது ஒழிந்துபோவதில்லை?
A) வேதம்
B) வார்த்தை
C) வசனம்
Answer: B) வார்த்தை
    (மத்தேயு 13:31)

41. பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்தது யார்?
A) சீமோன்
B) பர்திமேயு
C) யாக்கோபு
Answer: A) சீமோன்
    (மாற்கு 14:3)

42. ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
A) யோவான்
B) சீமோன் பேதுரு
C) யாக்கோபு
Answer: B) சீமோன் பேதுரு
    (மாற்கு 14:37)

43. பேதுருவை பார்த்து நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்று சொன்ன ஸ்திரீ யாருடைய வேலைக்காரி?
A) ஏரோது
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: B) பிரதான ஆசாரியன்
    (மாற்கு 14:66)

44. பிலாத்து யாரை பிரியப்படுத்த மனதுள்ளவனாய் இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான்?
A) இயேசு
B) பிரதான ஆசாரியர்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
    (மாற்கு 15:15)

45. இயேசுவை சிலுவையில் அறைந்த நேரம்?
A) மூன்றாம் மணி
B) ஆறாம் மணி
C) ஒன்பதாம் மணி
Answer: A) மூன்றாம் மணி
    (மாற்கு 15:25)

46. எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று இயேசு கூப்பிட்ட நேரம்?
A) மூன்றாம் மணி நேரம்
B) ஆறாம் மணி நேரம்
C) ஒன்பதாம் மணி நேரம்
Answer: C) ஒன்பதாம் மணி நேரம்
    (மாற்கு 15:34)

47. கனம்பொருந்திய ஆலோசனைக்காரன், அரிமத்தியா ஊரான், தேவனுடைய ராஜ்யம் வரக்காத்திருந்தவன் யார்?
A) சீமோன்
B) யோசேப்பு
C) பரபாஸ்
Answer: B) யோசேப்பு
    (மாற்கு 15:43)

48. பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டது?
A) சீமோன்
B) யோசேப்பு
C) யாக்கோபு
Answer: B) யோசேப்பு
    (மாற்கு 15:43)

49. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எங்கு போவதாக சொல்லியிருந்தார்?
A) எருசலேம்
B) ஒலிவமலை
C) கலிலேயா
Answer: C) கலிலேயா
    (மாற்கு 16:7)

50. இயேசு உயிர்த்தெழுந்து முதல் முதலில் யாருக்கு தரிசனமானார்?
A) சீஷர்கள்
B) கிராமத்துக்கு போகிற இருவர்
C) மகதலேனா மரியாள்
Answer: C) மகதலேனா மரியாள்
    (மாற்கு 16:9)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.