Type Here to Get Search Results !

Daniel Four 4 Quiz Question With Answer | தானியேல் புத்தகம் கேள்வி பதில்கள் | Book of DANIEL Q & A | Jesus Sam

===========
தானியேல் நான்காம் (4) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
Book of DANIEL Question & Answer
===========
01. உன்னதமான தேவனுடைய ராஜ்யம் ______ ராஜ்யம்.
A) பரம
B) தலைமுறை தலைமுறையான
C) நித்திய
Answer: C) நித்திய
(தானியேல் 4:3)

02. சாஸ்திரிகளின் அதிபதி யார்?
A) தானியேல்
B) அஸ்பேனாசு
C) மேல்ஷார்
Answer: A) தானியேல்
(தானியேல் 4:9)

03. மனித இருதயத்திற்கு பதில் மிருக இருதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு?
A) கோரேஸ்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 4:16)

04. தானியேலிடத்தில் பரிசுத்த தேவர்களின் ஆவி இருக்கிறது என்று சொன்ன ராஜா யார்?
A) அஸ்பேனாகூ
B) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ
C) நேபுகாத்நேச்சார்
Answer: C) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 4:8,9,18)

05. காவலாளனாகிய ______ ஒருவன் வானத்திலிருந்து இறங்கினான்.
A) தூதன்
B) மனுப்புத்திரன்
C) பரிசுத்தவான்
Answer: இ) பரிசுத்தவான்
(தானியேல் 4:13)


06. ஒரு நாளிகை மட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கியது யார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) கோரேஸ்
Answer: C) தானியேல்
(தானியேல் 4:19)

07. நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட விருட்சம் என்பது யாரைக் குறிக்கிறது?
A) தேவன்
B) நேபுகாத்நேச்சார்
C) தானியேல்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 4:20-22)

08. நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தின் சொப்பனம் எத்தனை நாள் சென்று நிறைவேறிற்று?
A) மூன்று மாதம்
B) ஏழு மாதம்
C) பனிரெண்டு மாதம்
Answer: C) பனிரெண்டு மாதம்
(தானியேல் 4:29)

09. ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று என்ற சத்தம் உண்டான இடம்?
A) வானம்
B) அரண்மனை வாசல்
C) பூமியின் ஆழம்
Answer: A) வானம்
(தானியேல் 4:31)

10. மனுஷரினின்று தள்ளப்பட்டு, மிருகங்களோடு சஞ்சரித்து, மாடுகளைப் போல புள்ளை மேய்ந்த ராஜா யார்?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) கோரேஸ்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 4:32)


11. நேபுகாத்நேச்சார் எத்தனை காலங்கள் மிருகங்களோடு சஞ்சரித்தான்?
A) ஏழு காலம்
B) ஒன்பது காலம்
C) பத்து காலம்
Answer: A) ஏழு காலம்
(தானியேல் 4:32)

12. நேபுகாத்நேச்சார் தள்ளப்பட்டபோது அவனுடைய தலைமயிர் எதைப்போல் மாறியது?
A) காகங்களின் இறகு
B) கழுகுகளின் இறகு
C) பட்சிகளின் இறகு
Answer: B) கழுகுகளின் இறகு
(தானியேல் 433)

13. நேபுகாத்நேச்சார் தள்ளப்பட்டபோது அவனுடைய நகங்கள் எதைப்போல் மாறியது?
A) கழுகின் நகம்
B) சிங்கத்தின் நகம்
C) பட்சியின் நகம்
Answer: C) பட்சியின் நகம்
(தானியேல் 4:33)

14. யாருடைய சரீரம் ஆகாயத்துப் பணியில் நனைந்தது?
A) கோரேஸ்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 4:33)

15. அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்றது யார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 4:37)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.