Type Here to Get Search Results !

Daniel Three 3 Question & Answer | தானியேல் கேள்வி பதில்கள் | Book of DANIEL Chapter 3 | பைபிள் வினா விடைகள் | Jesus Sam

=============
தானியேல் மூன்றாம் (3) அதிகாரம்
விவிலிய வினா விடைகள்
Book of Daniel Quiz Question & Answer
==============
01. தூரா என்னும் சமபு+மியிலே பொற்சிலையை நிறுத்தியது யார்?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) கோரேஸ்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 3:1)

02. நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையின் உயரம் அகலம் எவ்வளவு?
A) 30 முழ உயரம், 6 முழ அகலம்
B) 60 முழ உயரம், 9 முழ அகலம்
C) 60 முழ உயரம், 6 முழ அகலம்
Answer: C) 60 முழ உயரம், 6 முழ அகலம்
(தானியேல் 3:1)

03. பொற்சிலையின் பிரதிஷ்டை நாளன்று எத்தனை கீதவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது?
A) நான்கு
B) ஆறு
C) பத்து
Answer: B) ஆறு
(தானியேல் 3:5,7)

04. பொற்சிலையை பணிந்துகொள்ளாதவன் அக்கினி சூலையில் போடப்படுவான் என்று ஜனங்களிடம் சொன்னது யார்?
A) கல்தேயர்
B) நேபுகாத்நேச்சார்
C) கட்டியக்காரன்
Answer: C) கட்டியக்காரன்
(தானியேல் 3:4,6)

05. பாபிலோன் மாகாணத்து காரியங்களை விசாரித்தது யார்?
A) சாத்ராக்
B) மேஷாக்
C) ஆபேத்நேகோ
Answer: A) சாத்ராக், B) மேஷாக் C) ஆபேத்நேகோ
(தானியேல் 3:12)


06. சாத்ராக், மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்கள் பொற்சிலையை பணிந்துகொள்ளாததை ராஜாவிடம் சொன்னது யார்?
A) கல்தேயர்
B) கட்டியக்காரன்
C) மந்திரிமார்கள்
Answer: A) கல்தேயர் 
(தானியேல் 3:8,12)

07. உங்களை என் கைக்குத் தப்புவிக்கிற _____ யார்?
A) ராஜா
B) மனுஷன்
C) தேவன்
Answer: C) தேவன்
(தானியேல் 3:15)

08. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என்றது யார்?
A) சாத்ராக்
B) மேஷாக்
C) ஆபேஷத்நேகோ
Answer: A) சாத்ராக் B) மேஷாக் C) ஆபேத்நேகோ
(தானியேல் 3:17)

09. ராஜா சூலையை எத்தனை மடங்கு அதிகமாக்கி அதில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை போட்டான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
Answer: B) ஏழு
(தானியேல் 3:19)

10. சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டது யார்?
A) சாத்ராக்
B) மேஷாக்
C) ஆபேத்நேகோ
Answer: A) சாத்ராக் B) மேஷாக் C) ஆபேத்நேகோ
(தானியேல் 3:21)


11. மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்று ராஜா யாரிடம் சொன்னான்?
A) தானியேல்
B) இராணுவ வீரர்கள்
C) மந்திரிமார்கள்
Answer: C) மந்திரிமார்கள்
(தானியேல் 3:24)

12. அக்கினியில் உலாவுகிற நாலாம் ஆளின் சாயல் யாருக்கு ஒப்பாயிருந்தது?
A) ராஜா
B) தேவபுத்திரன்
C) தேவன்
Answer: B) தேவபுத்திரன்
(தானியேல் 3:25)

13. அக்கினியில் விடுதலையாய் உலாவிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை ராஜா எப்படி அழைத்தான்?
A) உன்னதமான தேவனுடைய தாசர்
B) உன்னதமான தேவனுடைய மனுஷர்
C) உன்னதமான தேவனுடைய குமாரர்
Answer: A) உன்னதமான தேவனுடைய தாசர்
(தானியேல் 3:26)

14. சாத்ராக், மேசாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம் என்றது யார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) மந்திரிமார்கள்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 3:28)

15. இவ்விதமாக இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை என்றது யார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) ஆபேத்நேகோ
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 3:29)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.