Type Here to Get Search Results !

காலை மாலை ஆராதனை முறை | தென்னிந்திய திருச்சபையின் ஆராதனை முறைமைகள் | ஞாயிறு ஆராதனை முறை | CSI Church Sunday Order of Service | Jesus Sam

=============
ஆராதனை முறை (காலை மலை) (S.I.U.C)
===============
ஆரம்ப ஜெபம்:

கீதம்:
        ஆரம்ப ஜெபத்திற்கு பன்பு, ஒரு பாடல் பாடவும்.


(ஆராதனை நடத்துபவரும் சபையாரும் மாறிமாறி வாசிக்கவும்)
ஆயர்: கர்த்தரின் வாசல்களில் துதியோடும் அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, ஆண்டவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

சபை: கர்த்தர் நல்லவர். அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
(சங்கீதம் 100:4,5)

ஆயர்: நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து, குணிந்து, முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

சபை: அவர் நம்முடைய தேவன், நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
(சங்கீதம் 95:6,7)

ஆயர்: யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?

சபை: கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும் கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
(சங்கீதம் 24:3-4)

ஆயர்: ஆண்டவருக்கு விரோதமாக நாம் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு நமக்கு முன்பாக வைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக, நாம் அவருடைய வசனத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் நமது கடவுளாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
(தானியேல் 9:9,10)

சபை: தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்: தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
(சங்கீதம் 51:1)

ஆயர்: வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
(மத்தேயு 11:28)

சபை: நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப் போய், தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன் என்பேன்.
(லூக்கா 15:18)

யாவரும்: என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
(சங்கீதம் 19:14)

(அல்லது)

ஆயர்: கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது. (ஆபகூக் 2:20)

சபை: மகிமையும் கனமும் அவர் சமூகத்தில் இருக்கிறது. வல்லமையும், மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
(சங்கீதம் 96:6)

ஆயர்: நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்.

சபை: உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
(சங்கீதம் 5:7)

ஆயர்: கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர். யாருக்கு பயப்படுவேன்?

சபை: கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
(சங்கீதம் 27:1)

ஆயர்: அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

சபை: பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரியதாயிருக்கிறது.
(சங்கீதம் 103:10,11)

ஆயர்: கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?

சபை: இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொளளுவேன்.
(சங்கீதம் 116:12,13)

யாவரும்: ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும். அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். (சங்கீதம் 51:15)

(இவ்வசனங்களில் சிலவற்றை ஆராதனை நடத்துகிறவர் தெரிந்துகொண்டு வாசிக்கலாம்)

    கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், ஆண்டவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். 
    (ஏசாயா 55:6)

    பூமியின் குடிகளே, எல்லோரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
    (சங்கீதம் 100:1)

    மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தத்தோடே அவர் திருமுன் வாருங்கள்.
    (சங்கீதம் 100:2)

    கடவுள் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவாகிய கடவுகள் விரும்புகிறார்.
    (யோவான் 4:24)

பாவ அறிக்கை
(ஆராதனை நடத்துகிறவர் பின்வரும் ஏவுதலை வாசிக்கலாம்)
    கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர, சகோதரிகளே (சபையாரே) நம்முடைய பரம பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள கடவுளின் அளவில்லாத தயவினாலும் இரக்கத்தினாலும், பாவமன்னிப்பைப் பெறுவதற்காக, நாம் செய்த பலவிதமான பாவங்களையும் அக்கிரமங்களையும் அவர் சந்நிதியில் மாயமாய் மறைக்காமல், பணிவும், தாழ்மையும் துக்கமும் கீழ்ப்படிதலுள்ள இருதயத்தோடே அறிக்கையிடப் பற்பல வேதவாக்கியங்கள் நம்மை ஏவுகின்றன. நாம் எக்காலத்திலும் கடவுளுக்கு முன்பாக நாம்முடைய பாவங்களை மனத்தாழ்மையாய் அறிக்கையிட வேண்டுவதுமன்றி ஆண்டவரின் திருக்கரங்களிலிருந்து, நாம் பெற்றுக்கொண்ட மேன்மையான உபகாரங்களுக்காக நன்றி செலுத்தவும், அவரை மிகவும் சிறப்பாய்ப் புகழ்ந்து பிரஸ்தாபம் பண்ணவும், ஆண்டவரின் திருசவனத்தைக் கேட்கவும், நம்முடைய உடலாவிக்குத் தேவையானவைகளுக்காக வேண்டிக்கொள்ளவும் நாம் கூடிவந்திருக்கிற இத்தருணத்தில் பாவங்களை அறிக்கையிடுவது நமது விசேஷித்த கடமையாயிருக்கிறது. ஆகையால் இங்கே இருக்கிற நாம் யாவரும் சுத்த இருதயத்தோடும் தாழ்ந்த மனதோடும் பரமகிருபாசனத்தண்டையிலே பொதுவான பாவ அறிக்கை வழியாக நம்முடைய பாவங்களை நம் அறிக்கை செய்வோம்.

(பொதுவான பாவ அறிக்யையை கூறும் முன்பதாக இந்த பாடலை பாடலாம்)

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே
தூய ஆவியே –கன நேய மேவியே
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே
(கீர்த்தனை-121)
(அல்லது)
நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன் வந்தேன்
(பாமாலை-292)

பொதுவான பாவ அறிக்கை ஜெபம்
    (கடந்த நாட்களில் நாம் ஆண்டவருக்கு விரோதமாக செய்த பாவங்களை உணர்ந்தவர்களாக, பின்வரும் பாவ அறிக்கை ஜெபத்தை அதன் பொருள் உணர்ந்து ஏறெடுப்போம்)
    சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே, தப்பிப்போன ஆடுகளைப்போல நாங்கள் உம்முடைய வழியைவிட்டு விலகி அலைந்துபோனோம். எங்கள் இருதயத்தின் யோசேனைகளுக்கும் விருப்பங்களுக்கும் மிகவும் இணங்கி நடத்தோம். உம்முடைய பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தோம். செய்யத்தக்கவைளைச் செய்யாமல், செய்யத்தகாதவைகளைச் செய்து வந்தோம். எங்களுக்கு சுகமேயில்லை ஆயினும் ஆண்டவரே, நீர் இயேசு கிறிஸ்து நாதர் மூலமாய் மனிதருக்கு அருளிச் செய்த வாக்குத்தத்தங்களின்படியே நிர்ப்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய அடியாருக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள்மேல் பொறுமையாயிரும். பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களைச் சீர்படுத்தும். மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி நாங்கள் இனித் தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாய் நடந்துவர, இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

(அல்லது)
பிழையுணர்ந்தோதல்
தேவாரம், இராகம் – ”பத்தனாய்ப் பாடமாட்டேன்”
1. நின்னடிக் கன்புசெய்யா நீசனே, ஈசனே உன்
பொன்னடிக் கன்பு செய்யும் புண்ணியர் சபையில்புக்கு
நன்னடை கற்றுமில்லேன். நன்றெல்லாம் நீங்கி நின்ற
என்னடை இகழ்ந்துமில்லேன். என் செய்வான் தோன்றினேனே

2. தன்னுயிர் போலவிந்தத் தடற்கடற் புடவியேமேய
மன்னுயிர்க் கிரங்கிமேனாள் மனுமகனாகத் தோன்றி
இன்னுயிர் கொடுத்திரசைஷ ஈட்டிய இறையை ஏத்தி
என்னுயிர் ஒம்புகிலலேன். என் செய்வான் தோன்றினேனே

3. சுத்தனே அல்லன், நன்மைசொல்ல வெட்டுணையுமில்லேன்
பித்தனான் பெரியபாவி பிழைக்குமா றுணரமாட்டேன்
நித்தநீ அருளும் ஈவை நினைக்கிலேன், நன்றியீனம்
எத்தனை இறைவனேயாம் என் செய்வான் தோன்றினேனே

பாவ மன்னிப்பைக் கூறும் வசனங்கள்
(பின்வருகிற வசனங்களில் ஆராதனை நடத்துகிறவர் சிலவற்றைப் பின்வரும் முகவுரையோடு வாசிக்க வேண்டும்)
    தங்கள் பாவங்களுக்காக உண்மையாய்த் துக்கப்பட்டுக் கடவுளிடம் மனந்திரும்பி அவருடைய ஆவியின் சகாயத்தால் தங்கள் வழிகளைச் சீர்திருத்தப் பிரயாசப்படுகிறவர்களைக் குறித்து கடவுள் சொல்லுகிற அருள்நிறைந்த பொழிகளைக் கேளுங்கள்.

    துன்மார்க்கன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டுக் கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன். அவர் அவன்மேல் மனதுருகுவார். நம்முடைய ஆண்டவரிடத்திற்கே திரும்பக் கடவன். அவர் மன்னிக்கிறதற்குத் தயைபெருத்திருக்கிறார்.
    (ஏசாயா 55:7)

    கடவுள் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, இயேசுவைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    (யோவான் 3:16)

    என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
    (யோவான் 6:37)

    நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அறியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
    (1 யோவான் 1:9)

    ஒருவர் பாவம் செய்வாரானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே. நம்முடைய பாவங்களை மட்டும் அல்ல. அகில உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
    (1 யோவான் 2:1,2)

பாவ மன்னிப்பை அறிவித்தல்
பாவ மன்னிப்பின் உறுதியைப் பெற்றுக்கொள்ளுவோம்.
    சர்வ வல்லமையும், மிகுந்த இரக்கமுள்ள ஆண்டவர், மன்னிப்பையும் பாவ நிவிர்த்தியையும் நமக்குக் கட்டளையிட்டருளி நம்முடைய வாழ்வை சீர்ப்படுத்துவதற்கான காலத்தையும், தமது பரிசுத்த ஆவியின் கிருபையையும், தேற்றரவையும், தந்தருளுவாராக. ஆமென்.

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக்கூடாதே.
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
(கீர்த்தனை-77)

பொதுவான ஸ்தோத்திர ஜெபம்
    ஆயர்: பிரியமானவர்களே, கடவுள் நம்முடைய வாழ்க்கையில் செய்த எல்லாவித நன்மைகளையும் சற்று நம் உள்ளதில் நினைவுர்ந்து, நன்றி நிறைந்த உள்ளத்தோடே பொதுவான ஸ்தோத்திர ஜெபத்தை யாவரும் இணைந்து ஏறெடுப்போம்.
    சர்வவல்லமையுள்ள கடவுளே, சர்வஜீவதயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும், மற்றெல்லா மனிதருக்கும். தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும் நாங்கள் மிகுந்த தாழ்மையோடும் முழு இருதயத்தோடும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். எங்களைச் சிஷ்டித்ததற்காகவும், காப்பாற்றியதற்காகவும் இம்மைக்குரிய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம். விசேஷமாய் எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலே உலகத்தை மீட்டுக்கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும், மகிமையடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும், உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் உண்மையாய் நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாயிருக்கவும், எங்களை உமது ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் நீதியுமுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும் தேவரீர் செய்த உபகாரங்கள் எல்லவற்றையும் உணர்ந்து கொள்ளும் உணர்வை எங்களுக்கு அருளிச்செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். அவருக்கும் தேவரீருக்கும் பரிசுத்த ஆவிக்கும் எல்லா மேன்மையும் மகிமையும் சதாக்காலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.

சங்கீத பாடம்:
    நாம் நின்றபடியே மாரி மாரி வாசிக்க வேண்டிய சங்கீதத்தை வாசிப்போம்.

(சங்கீதங்களின் முடிவில் யாவரும் பின்வருமாறு பாடலாம் அல்லது சொல்லலாம்)

பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

(அல்லது)

தந்தை தனைய ரோடுமே
சாரும் பரிசுத்தாவிக்கும்
எந்த நாளும் மகிமையே
இனிது இருப்பதாகுக


கற்பனைகளில் A அல்லது B வாசிக்கவும்
A. பத்துக் கற்பனை
பூர்வகாலத்தில் கடவுள் தமது ஜனங்களுக்கு அருளிய கற்பனைகளாவன:

1. உன் ஆண்டவராகிய கடவுள் நானே. என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருகு்க வேண்டாம்

2. நீ உனக்கு யாதொரு விக்கிரகததையும் உண்டாக்கி அதை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்

3. உன் ஆண்டவராகிய கடவுளின் நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

5. உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக

6. கொலை செய்யாதிருப்பாயாக

7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக

8. களவு செய்யாதிருப்பாயாக

9. பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
    யாத்திராகமம் 20:1-17

யாவரும்: ஆண்டவரே எங்களுக்கிரங்கி இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
(அல்லது)
இராகம்: அம்மானை || தாளம்: ரூபகம்
யாவரும்: கர்த்தா எம் நெஞ்சிலிந்தக் கற்பனைகள் யாவையுமே
நித்தம் பதித்தருள்க, நேசப்பரம் பொருளே!


B. நியாயப்பிரமாணங்களையும் தீர்க்கதரிசனங்களையும் நமது ஆண்டவர் தொகுத்து அருளியது:
    நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னதாவது: இஸ்ரவேலே, கேள்: நம்முடைய கர்த்ராகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் ஆண்டவராகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்பதே
    மாற்கு 12:29,31
    மத்தேயு 22:36-40

யாவரும்: ஆண்டவரே எங்களுக்கிரங்கி, இந்தப் பிரமாணங்களைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
(அல்லது)
யாவரும்: கர்த்தா எம் நெஞ்சிலிருந்தக் கற்பனைகள் யாவையுமே
நித்தம் பதித்தருள்க, நேசப்பரம் பொருளே!

திருமறைப்பாடம்:
யாவரும் அமர்ந்து திருமறைப்பாடம் படிக்கக் கேட்போம்.
1. பழைய ஏற்பாட்டுப் பகுதி
2. நிருபப் பகுதி
3. சுவிசேஷப் பகுதி (யாவரும் எழுந்து நின்று வாசிக்கவும்)

அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்:
(திருமறை பாடங்கள் படித்து முடிந்த பின்பு யாவரும் எழுந்து நின்று அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணத்தை ஏறெடுக்கவும்)
    நாம் யாவரும் எழுந்து நின்று அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணத்தை ஏறெடுப்போம்

    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கிறேன்.

அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டுப் பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளின் வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறோம். ஆமென்.

(நாம் இந்த விசுவாசத்தில் கடைசிவரை நிலைத்திருக்க ஆண்டவர் தாமே நமக்கு அருள்புரிவாராக. ஆமென். (யாவரும் அமருவோம்)

மகிழ்விக்கும் மன்னா:


(சங்கீத முறைமை)
உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்
இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்

அவரோடு பேறாமைந்தனுமாய் ஆதி முதலெங்கர்த்தனுமாய்த்
தவறிலேகக்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்

பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய் உருவாய் நரரவதாரமாய் உதிததாரெனவும் நம்புகிறேன்

பொந்தியுபிலாத்ததி பதிநாளில் புகலரு பாடுகளை யேற்று உந்துஞ்
சிலுவையிலறையுண்டு உயிர்விட்டா ரென நம்புகிறேன்

இறந்தே அடங்கிப்பாதாளம் இறங்கி மூன்றாந் தினமதிலே
இறந்தோரிடநின்றே உயிரோடெழுந்தாரெனவும் நம்புகிறேன்

சந்ததமோட்சம் எழுந்தருளிச் சருவவல்ல பரனான எந்தை
தன்வல பாரிசமேயிருக்கின்றாரென நம்புகிறேன்

உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே
ஜெயமாய்த் திரும்பவரு வாரெனச் சிந்தையார நம்புகிறேன்

பரிசுததாவியை நம்புகிறேன். பரிசுத்தமாபொதுச்சபையையும்
பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண் டென நம்பகிறேன்

பாவ மன்னிப்புளதெௌவும் மரித்தோருயிர்த் தெழுவாரெனவும் ஓவா நித்தியசீவனமே உளதெனவும் யான் நம்புகிறேன்.



மன்றாட்டு பிரார்த்தனைகள்
(அந்த நாளுக்குரிய சுருக்க ஜெபமும் இதர ஜெபங்களும்)

ஆண்டவர் அருளிய பிரார்த்தனை
    பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு பிரோதமாய்க் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

(அல்லது)

கர்த்தருடைய ஜெபம் (சங்கீத முறை)
நாதநாமக்கிரியை
ஆதிநாளம்
1. பரமண்டலங்களில் வீற்றிருக்கும்
பரம பிதாவே எந்நாளும்
பரிசுத்தப் படுக உம் நாமம்
பரிசுடன் வருக உம் ராஜ்யம்

2. பரலோகத்தில் உமது சித்தம்
பண்புடன் செய்யப் படுவதுபோல்
தரைமிசை உமது சித்தமுமே
தவறாது செய்யப்படுக சதா

3. அன்றன்றுளள எம் ஆகாரம்
அன்புடன் எங்களுக்கின்றருளும்
நன்றயலார் கடன்யாம் மன்னிக்கும்
நன்னயம்போலெம் பிழை மன்னியும்

4. தே வே சோதனைக் கெமை விலக்கித்
தீமையினின்றெமை இரட்சியுமே
மேவும் ராஜ்யம், வல்லமை மகிமை
மிகவும் உமதென்றும்மே. ஆமென்.


ஒரு சிறப்புப் பாடல் பாடலாம்:

அருளுரை:

அறிவிப்புகள்:

காணிக்ககை கீதம்:



காணிக்க பிரார்த்தனை
    மிகுந்த இரக்கமும் கிருபையுமுள்ள கடவுளே, உம்மிடத்தில் நாங்கள் எல்லோரும் பெற்ற நன்மை அதிகம். நாங்கள் படைக்கும் காணிக்கையை நீர் அங்கீகரிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம். இதன் மூலமாய் மனிதருக்குள்ளே பிரியமும் சமாதானமும் பெருகவும், எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யம் பரம்பவும் இக்காணிக்கையை ஆசீர்வதிக்க வேண்டும் என்று பரார்த்திக்கிறோம். ஆமென்.

அருட்பிரகாசத்திற்னாகப் பிரார்த்தனை
    வல்ல கடவுளே, எங்கள் கால்களுக்குத் தீபமும் எங்கள் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காகத் திருவசனத்தைத் தந்தீர். பரம பிதாவே, நாங்கள் அதைச் சரியாய் உபயோகிக்கும்படி அருளையும் உத்தம குணத்தையும் கட்டளையிட்டருளும். நாங்கள் உமது வேதத்தை அறிந்து கொள்ளும்படி உமது பரிசுத்த ஆவியினால் எங்கள் இருதயத்தையும் மனதையும் திறந்தருளும். இன்றைக்கும் உமது திருவசனத்தை நாங்கள் சொல்லும்போதும் கேட்கும்போதும் எங்களை ஆசீர்வதியும். இவைகளை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

(அல்லது)

(சங்கீத முறை)
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
நொறுக்கும், உருக்கும், உருவாக்கி நிரப்பும்
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்


பிரார்த்தனை:
    சர்வ வல்லமையுள்ள கடவுளே, இன்று நாங்கள் காதாலே கேட்ட வாக்கியங்கள் பலனற்றதாய்ப் போகாமல், உம்முடைய நாமத்துக்குக் கனமும் புகழும் உண்டாவதற்கு ஏதுவாக நன்னடக்கையாகிய கனியைக் கொடுக்கும்படி, உம்முடைய கிருபையால் அந்த வாக்கியங்களை எங்கள் இருதயத்திலே பதித்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

ஆசீர்வாதம்:
    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களை காக்ககடவர். கர்த்தர் தம்முடைய திருமுகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உங்கள் மேல் கிருபையாய் இருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய திருமுகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். ஆமென்.
(அல்லது)
    நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய கடவுளுடைய அன்பும், தூய ஆவியானவருடைய பாதுகாப்பும், பராமரிப்பு, வழிநடத்துதளும் நம் அனைவரோடும் கூட இன்றும் என்றும் சதாக்காலங்களிலும் நின்று நிலைத்திருப்பதாக. ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.