Type Here to Get Search Results !

Acts Ten 10 Bible Questions with Answers Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் 10 கேள்விகளும் பதில்களும் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Ten (10)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பத்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. செசரியா பட்டணம் எந்த பட்டாளத்தில் இருந்தது?
A) சமாரியா
B) இத்தாலியா
C) கலிலேயா
AnswerB) இத்தாலியா
    (அப்போஸ்தலர் 10:1)

02. செசரியா பட்டணத்தில் இருந்த நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன?
A) சீமோன்
B) கொர்நேலியு
C) ஐனேயா
AnswerB) கொர்நேலியு
    (அப்போஸ்தலர் 10:1)

03. கொர்நேலியுவிற்கு தேவதூதன் தரிசனமான நேரம் எது?
A) மூன்றாம் மணி நேரம்
B) ஆறாம் மணி நேரம்
C) ஒன்பதாம் மணி நேரம்
AnswerC) ஒன்பதாம் மணி நேரம்
    (அப்போஸ்தலர் 10:3)

04. யாருடைய ஜெபமும் தர்மமும் தேவனுடைய சந்நிதியில் வந்து எட்டியது?
A) பிலிப்பு
B) கொர்நேலியு
C) தொற்காள்
AnswerB) கொர்நேலியு
    (அப்போஸ்தலர் 10:4)

05. தோல் பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீடு யோப்பா பட்டணத்தில் எங்கு இருந்தது?
A) மலைக்கு அருகில்
B) ஆற்றுக்கு அருகில்
C) கடலுக்கு அருகில்
AnswerC) கடலுக்கு அருகில்
    (அப்போஸ்தலர் 10:6,32)


06. கொர்நேலியு பேதுருவினிடத்திற்கு எத்தனை பேரை அனுப்பினார்?
A) இரண்டு பேர்
B) மூன்று பேர்
C) நான்கு பேர்
AnswerB) மூன்று பேர்
    (அப்போஸ்தலர் 10:7,19)

07. யோப்பா பட்டணத்தில் மேல் வீட்டில் ஆறாம் மணி நேரத்தில் ஜெபித்தது யார்?
A) பேதுரு
B) கொர்நேலியு
C) தொற்காள்
AnswerA) பேதுரு
    (அப்போஸ்தலர் 10:9)

08. வானத்திலிருந்து ஒருவிதமான கூடு இறங்கிவருகிறதாக தரிசனம் கண்டது யார்?
A) பேதுரு
B) கொர்நேலியு
C) பிலிப்பு
AnswerA) பேதுரு
    (அப்போஸ்தலர் 10:11)

09. நீதிமான், தேவனுக்கு பயந்தவன், யூத ஜனங்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவர் யார்?
A) பேதுரு
B) கொர்நேலியு
C) அனனியா
AnswerB) கொர்நேலியு
    (அப்போஸ்தலர் 10:22)

10. கொர்நேலியுவைப் பார்த்து எழுந்திரு நானும் ஒரு மனுஷன் தான் என்றது யார்?
A) பேதுரு
B) சீமோன்
C) பிலிப்பு
AnswerA) பேதுரு
    (அப்போஸ்தலர் 10:26)


11. தேவதூதன் கொர்நேலியுவை சந்தித்து எத்தனை நாளுக்கு பின் பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்கு வந்தார்?
A) இரண்டு நாள்
B) மூன்று நாள்
C) நான்கு நாள்
AnswerC) நான்கு நாள்
    (அப்போஸ்தலர் 10:30)

12. ஞானஸ்நானத்தை குறித்து பிரசங்கித்தது யார்?
A) பேதுரு
B) யோவான்ஸ்நானன்
C) இயேசு கிறிஸ்து
AnswerB) யோவான்ஸ்நானன்
    (அப்போஸ்தலர் 10:37)

13. தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் யாரை அபிஷேகம் பண்ணினார்?
A) பேதுரு
B) இயேசு கிறிஸ்து
C) கொர்நேலியு
AnswerB) இயேசு கிறிஸ்து
    (அப்போஸ்தலர் 10:38)

14. உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோருக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி யார்?
A) பேதுரு
B) யோவான்ஸ்நானன்
C) இயேசு கிறிஸ்து
AnswerC) இயேசு கிறிஸ்து
    (அப்போஸ்தலர் 10:42)

15. புறஜாதிகள் பரிசுத்த ஆவியை பெற்ற முதல் இடம் எது?
A) லிபியா
B) மெலித்தா
C) செசரியா
AnswerC) செசரியா
    (அப்போஸ்தலர் 10:44)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.