===============
குருத்தோலை ஞாயிறு பாடல்கள்
===============
1) ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே
2) பவனி செல்கின்றார் ராசா
3) இயேசு ராஜா முன்னே செல்கிறார்
4) சிங்கார மாளிகையில்
5) யோசனையில் பெரியவரே
6) எக்காளம் ஊதிடுவோம்
7) கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
8) வெற்றிக் கொடி பிடித்திடுவோம்
9) மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
10) நன்றியால் துதிபாடு
11) ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
12) கால் மிதிக்கும் தேசமெல்லாம்
13) குதூகலம் கொண்டாட்டமே
14) விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
15) ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்!
16) வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
17) ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
பாடல் - 1
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.
2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.
3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.
4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.
5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.
பாடல் - 2
பவனி செல்கின்றார் ராசா
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்
பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்
1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத
3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற
பாடல் - 3
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
1. அல்லேலூயா துதி மகிமை - என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே
பாடல் - 4
சிங்கார மாளிகையில்
சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்
1. ஆனந்தம்பாடி அன்பரைச் சேர்ந்து
ஆதலடைந்திடுவோம் - அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்
2. குருசை சுமந்த பரிசுத்தர் முன்னால்
குருத்தோலை பிடித்திடுவோம் - அங்கே
கற்புள்ள கறைபடாக் கர்த்ரைப் பின்பற்றி
மீட்பரின் கீதம் பாடுவோம்
3. முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் - அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவோம்
பாடல் 5
யோசனையில் பெரியவரே
யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே
ஆரானை ஆராதனை
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
1. கண்மணிப்போல் காப்பவரே
ஆராதனை ஆராதனை
கழுகுபோல சுமப்பவரே
ஆராதனை ஆராதனை
- ஓசன்னா....
2. சிலுவையினால் மீட்டவரே
ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே
ஆராதனை ஆராதனை
- ஓசன்னா....
3. தேடி என்னை காண்பவரே
ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே
ஆராதனை ஆராதனை
- ஓசன்னா....
பாடல் 6
எக்காளம் ஊதிடுவோம்
எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்
பாடல் - 7
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு வெற்றி உண்டு
1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்
2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்
3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு
4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
பாடல் - 8
வெற்றிக் கொடி பிடித்திடுவோம்
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்
1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே
வீரநடை நடந்திடுவோம்
1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே
2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்
3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
பிசாசை வென்றிடுவோம்
பாடல் - 9
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
பாடல் - 10
நன்றியால் துதிபாடு
நன்றியால் துதிபாடுநம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு (2)
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)
1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2)
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2)
2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் (2)
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் (2)
3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2)
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2)
4. துன்மார்க்கத்திற்கு ஏகேதுவான வெறிக் கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே (2)
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு (2)
தெய்வ பயத்தோடு என்றுமே (2)
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு (2)
5. சரீரம் ஆத்துமா ஆவியினாலும் சோர்ந்து போகும்
வேளையில் எல்லாம் (2)
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் (2)
வேளையில் எல்லாம் (2)
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் (2)
பாடல் - 11
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம்
இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ
1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்
2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்
3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே! – இது எழுப்புதலின்
கர்த்தருக்கு சொந்தமாகும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே! – இது எழுப்புதலின்
பாடல் - 12
கால் மிதிக்கும் தேசமெல்லாம்
கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்
கல்வாரி கொடிபறக்கும்
1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
4. திறக்கட்டும் திறக்கட்டும்
சவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்
சவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்
பாடல் - 13
குதூகலம் கொண்டாட்டமே
குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்திலே
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே
3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றிதந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றிதந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா
பாடல் - 14
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
பாடல் 15
ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்!ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்!
2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்!
3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்
புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்!
4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,
சிந்தையில் மகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்!
5. யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்,
ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்!
6. சகல கூட்டத்தார்களே, சாஷ்டாங்கம் செய்யுங்கள்,
மகத்வ ராசரிவரே, மாமுடி சூட்டுங்கள்!
பாடல் 16
வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்
1) திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்
2) அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்
3) சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்
4) இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
நீதிக்கவசம் கையாடுவோம் வசம்
5) விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம்
6) பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்
பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம்
சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்
1) திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்
2) அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்
3) சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்
4) இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
நீதிக்கவசம் கையாடுவோம் வசம்
5) விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம்
6) பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்
பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம்
பாடல் 17
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
1) சத்திருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு
2) கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு
3) விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் நிறவேற்றி முடிப்பார்
நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
1) சத்திருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு
2) கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு
3) விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் நிறவேற்றி முடிப்பார்
நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.