Type Here to Get Search Results !

James 3 Three Questions with Answers | யாக்கோபு 3 விவிலிய வினா விடைகள் | holy bible quiz in tamil | Jesus Sam

============
யாக்கோபு எழுதிய திருமுகம்
மூன்றாம் அதிகாம் (3) கேள்வி பதில்கள்
Book of JAMES Chapter Three (3)
Bible Questions & Answers
=============


1. ஏன் அநேகர் போதகராகாதிருக்க வேண்டும்?
Answer: அதிக ஆக்கினையை அடைவோன் என்று அறிந்து
    யாக்கோபு 3:1

2. ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் எப்படிப்பட்டவன்?
Answer: பூரண புருஷன்
    யாக்கோபு 3:2

3. தன் சரீரத்தைக் கடிவாளத்தினால் அடக்கிக்காள்ளக்கூடியவன் யார்?
Answer: பூரண புருஷன்
    யாக்கோபு 3:2

4. நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு எவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்?
Answer: குதிரைகள்
    யாக்கோபு 3:3

5. கப்பல்கள் மகா பெரியவைகளாயிருந்தலும், அவைகள் எதினால் திருப்பப்படுகின்றன?
Answer: மிகவும் சிறிய சுக்கானால்
    யாக்கோபு 3:4

6. கப்பல்கள், நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக எதினால் திருப்பப்படும்?
Answer: மிகவும் சிறிய சுக்கானால்
    யாக்கோபு 3:4

7. அநீதி நிறைந்த உலகம் எது?
Answer: நாவு
    யாக்கோபு 3:6

8. எது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும் நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது?
Answer: நாவு
    யாக்கோபு 3:6

9. எதினுடைய சுபாவங்கள் மனுஷ சுபாவத்தால் அடக்கப்படும்?
Answer: சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்களின் சுபாவங்கள்
    யாக்கோபு 3:7

10. அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருப்பது எது?
Answer: நாவு
    யாக்கோபு 3:8

11. ---------, ---------- ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது.
Answer: துதித்தலும், சபித்தலும்
    யாக்கோபு 3: 10

12. எதிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
Answer: ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து
    யாக்கோபு 3:11

13. அத்திமரம் ---------- பழங்களைக் கொடுக்குமா?
திராட்சச்செடி ---------- பழங்களைக் கொடுக்குமா?
Answer: அத்திமரம் – ஒலிவப்பழங்களைக்
    திராட்சச்செடி - அத்திப்பழங்களைக்
    யாக்கோபு 3:12

14. உவர்ப்பான நீர் எப்படிப்பட்ட ஜலத்தைக் கொடுக்கக்கூடுமா?
Answer: தித்திப்பான
    யாக்கோபு 3:12

15. ஞானத்திற்குரிய சாந்தத்தொடே, தன் கிரியைகளை எப்படி காண்பிக்கக்கடவன்?
Answer: நல்ல நடக்கையினாலே
    யாக்கோபு 3:13

16. வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ அங்கே என்ன உண்டு?
Answer: கலகமும் துர்ச்செயல்களும்
    யாக்கோபு 3:16

17. பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருப்பது எது?
Answer: பரத்திலிருந்து வரும் ஞானம்
    யாக்கோபு 3:17

18. சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுவது எது?
Answer: நீதியாகிய கனி
    யாக்கோபு 3:18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.