Type Here to Get Search Results !

நெகேமியா முதலாம் 1 அதிகாரம் கேள்வி பதில்கள் | விவிலியா வினா விடைகள் | nehemiah chapter 1 bible question and answer in tamil |

================
நெகேமியா அதிகாரம் ஒன்று (1)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter One (1)
==================

01. நெகேமியாவின் தகப்பன் பெயர் என்ன?
A) மோசே
B) அகலியா
C) ஆனான்
Answer: ஆ) அகலியா
    (நெகேமியா 1:1)

02. நெகேமியா இருந்த அரமனையில் பெயர் என்ன?
A) சூசான் அரமனை
B) அகாஸ்வேருவின் அரமனை
C) பார்வோன் அரமனை
Answer: அ) சூசான் அரமனை
    (நெகேமியா 1:1)

03. நெகேமியாவின் சகோதரனின் பெயர் என்ன?
A) மோசே
B) அகலியா
C) ஆனான்
Answer: இ) ஆனான்
    (நெகேமியா 1:2)

04. இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் ஆனானும், அவனோடு கூட வேறு சில மனுஷரும் எங்கிருந்து சூசான் அரமனைக்கு வந்தார்கள்?
A) யூதாவிலிருந்து
B) இஸ்ரவேலிலிருந்து
C) சமாரியாவிலிருந்து
Answer: அ) யூதாவிலிருந்து
    (நெகேமியா 1:1,2)

05 .இடிக்கப்பட்டது எது? அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது எது?
A) அலங்கம் இடிக்கப்பட்டது – வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது
B) வாசல்கள் இடிக்கப்பட்டது – அலங்கம் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது
C) அலங்கள் இடிக்கப்பட்டு, அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது
Answer: அ) அலங்கம் இடிக்கப்பட்டது – வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது
    (நெகேமியா 1:3)

06. நெகேமியா அழுது, சில நாளாய் துக்கித்து, உவபாசித்து, மன்றாடி யாரை நோக்கி ஜெபித்தான்?
A) இஸ்ரவேலின் தேவனை நோக்கி ஜெபித்தான்
B) பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபித்தான்
C) பாபிலோனின் தேவனை நோக்கி ஜெபித்தான்
Answer: ஆ) பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபித்தான்
    (நெகேமியா 1:4,5)

07. கர்த்தர்: தம்மிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு எதைக் காக்க வல்லவர்?
A) நீதியையும், நியாயத்தையும் காக்க வல்லவர்
B) உடன்படிக்கையையும், கிருபையையும் காக்க வல்லவர்
C) மகத்துவத்தையும், பயங்கரத்தையும் காக்க வல்லவர்
Answer: ஆ) உடன்படிக்கையையும், கிருபையையும் காக்க வல்லவர்
    (நெகேமியா 1:5)

08. அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் ------------ இருப்பதாக.
A) பார்த்தும்
B) நோக்கியும்
C) திறந்தும்
Answer: இ) திறந்தும்
    (நெகேமியா 1:6)

09. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவம் செய்தோம் என்று ஜெபித்தது யார்?
A) மோசே
B) நெகேமியா
C) அகலியா
Answer: ஆ) நெகேமியா
    (நெகேமியா 1:6)

10. கர்த்தர் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் யாருக்கு கற்பித்தார்?
A) மோசே
B) நெகேமியா
C) தாவீது
Answer: அ) மோசே
    (நெகேமியா 1:7)

11. கட்டளையை மீறினால், கர்த்தர் என்ன செய்வார்?
A) துரத்தியடிப்பார்
B) ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பார்
C) புறஜாதிகளுக்கு அடிமையாக்குவார்
Answer: ஆ) ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பார்
    (நெகேமியா 1:8)

12. சூசான் அரன்மனையில் நெகேமியாவின் பணி என்ன?
A) பானபாத்திரக்காரன்
B) ராஜாவுக்குப் பானபாத்திரக்காரன்
C) மந்திரிகளுக்கு பானபாத்திரக்காரன்
Answer: ஆ) ராஜாவுக்குப் பானபாத்திரக்காரன்
    (நெகேமியா 1:11)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.