Type Here to Get Search Results !

நெகேமியா இரண்டாம் 2 அதிகாரம் கேள்வி பதில்கள் | வேதாகம வினா விடைகள் | nehemiah chapter two question and answer in tamil | jesus sam

================
நெகேமியா அதிகாரம் இரண்டு (2)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Two (2)
==================

01. ”நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன” யார் யாரிடம் கேட்டது?
A) ஆசாப் - நெகேமியா
B) அர்தசஷ்டா - நெகேமியா
C) நெகேமியா - ஆசாப்
Answer: B) அர்தசஷ்டா - நெகேமியா
    (நெகேமியா 2:1)

02. யூதா தேசத்துக்கு தன்னை அனுப்புமாறு அர்தசஷ்டாவின் வேண்டிக்கொண்டது யார்?
A) ஆசாப்
B) நெகேமியா
C) தொபியா
Answer: B) நெகேமியா
    (நெகேமியா 2:5)

03. அர்தசஷ்டா ராஜாவின் வனத்துக் காவலாளன் பெயர் என்ன?
A) ஆசாப்
B) சன்பல்லாத்து
C) தொபியா
Answer: A) ஆசாப்
    (நெகேமியா 2:8)

04. அர்தசஷ்டா நெகேமியாவிற்கு எத்தனை கடிதங்களை கொடுத்தார்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
    (நெகேமியா 2:7,8)

05. அர்தசஷ்டா ராஜா நெகேமியாவோடு கூட யாரை அனுப்பினார்?
A) யூத ஜனங்கள்
B) இராணுவ சேர்வைக்காரர், குதிரை வீரர்
C) யூத ஜனங்கள், இராணுவ சேர்வைக்காரர்
Answer: B) இராணுவ சேர்வைக்காரர், குதிரை வீரர்
    (நெகேமியா 2:9)

06. இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது யாருக்கு மிகவும் விசனமாயிருந்தது?
A) கேஷேன், தொபியா
B) சன்பல்லாத்து, தொபியா
C) ஆசாப், ஆனான்
Answer: B) சன்பல்லாத்து, தொபியா
    (நெகேமியா 2:10)

07. சன்பல்லாத்து ஒரு --------------- .
A) அரபியன்
B) அம்மோனியன்
C) ஓரோனியன்
Answer: C) ஓரோனியன்
    (நெகேமியா 2:10)

08. தொபியா ஒரு ---------------- .
A) அரபியன்
B) அம்மோனியன்
C) ஓரோனியன்
Answer: B) அம்மோனியன்
    (நெகேமியா 2:10)

09. நெகேமியா எருசலேமிற்கு வந்து எத்தனை நாளுக்கு பின்பு நகரத்தை சோதனை செய்தான்?
A) மூன்று நாள்
B) ஐந்து நாள்
C) ஏழு நாள்
Answer: A) மூன்று நாள்
    (நெகேமியா 2:11,12)

10. நெகேமியா நகரத்தை சோதனை செய்த நேரம் என்ன?
A) அதிகாலை
B) மத்தியானம்
C) இராத்திரி
Answer: C) இராத்திரி
    (நெகேமியா 2:12)

11. நெகேமியா பள்ளத்தாக்கின் வழியாய் புறப்பட்டு, எதைக் கடந்து, குப்பை மேட்டு வாசலுக்கு வந்து அலங்கத்தையும், வாசலையும் பார்த்தான்?
A) துரவைக் கடந்து
B) வலுசர்ப்பத் துரவைக் கடந்து
C) வலுசர்ப்பத்தை கடந்து
Answer: B) வலுசர்ப்பத் துரவைக் கடந்து
    (நெகேமியா 2:13)

12. கேஷேம் ஒரு -------------- .
A) அரபியன்
B) அம்மோனியன்
C) ஓரோனியன்
Answer: A) அரபியன்
    (நெகேமியா 2:19)

13. நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றது யார்?
A) சன்பல்லாத்து
B) சன்பல்லாத்து, தொபியா
C) சன்பல்லாத்து, தொபியா, கேஷேன்
Answer: C) சன்பல்லாத்து, தொபியா, கேஷேன்
    (நெகேமியா 2:19)

14. பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்கு காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார். அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுதுகட்டுவோம் என்றது யார்?
A) ஆசாப்
B) அர்தசஷ்டா
C) நெகேமியா
Answer: C) நெகேமியா
    (நெகேமியா 2:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.