பழைய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்–3)
ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று. முதல் இரண்டு பாகத்தைப் பார்க்கதாதவர்கள் கீழே உள்ள லிங்க்-யை பயன்படுத்தி முதல் இரண்டு பாகங்களை வாசித்த பின்பு இந்த மூன்றாம் பாகத்தை வாசிப்பீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)
மொழி:
உலகில் தோன்றி முதல் மொழி அகாடியன் மொழி. தோன்றிய இடம் மெசப்பத்தாமியா நாகரீகம். மெசப்பத்தாமியாவை ஒட்டியுள்ள தேசங்களில் வேறு வேறு
பாபிலோனிய மொழிகள் இருந்தன. எ.கா: சுமேரியன்
மொழி, மெசப்பதாமிய மொழி.
உலகத்தில் தோன்றிய முதல் நூல் நிலையம்
கல்தேயாவில் உள்ள ஊர் என்ற பட்டணத்தில் இருக்கிறது. இங்கிருந்து வந்த நபர் தான் ஆபிரகாம். அங்கு உள்ள எழுத்துக்கள் அனைத்தும் கல்வெட்டுகளில்
பதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த எழுத்துக்கள்
அனைத்தும் அகாடியன் மொழி எழுத்துக்கள். எனவே,
உலகில் தோன்றி முதல் மொழி அகாடியன் மொழி என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
ஐரோப்பா தேசங்களில் வெவ்வேறு விதமான மொழிகளை
பேசுகிறார்கள். எ.கா: இத்தாலி, பிரன்சு, ஆங்கிலம் இது போன்று ஐரோப்பிய
மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும்போது இவை அனைத்திற்கும் அடித்தளமான ஒரு தாய்
மொழி இருந்திருக்க வேண்டும். அந்த தாய் மொழியிலிருந்தே
இந்த மொழிகள் அனைத்தும் பிரிந்திருக்க வேண்டும் என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள்
நம்புகிறார்கள்.
அதைப்போலவே, சைனீஸ், ஜப்பானிஸ், கொரியன்ஸ்,
மங்கோளியன், இந்திய மொழிகள், ஆப்பிரிக்கன் மொழிகள் போன்ற மொழிகளை ஆராய்ச்சி செய்யும்போது
இவை அனைத்திற்கும் அடித்தளமான ஒரு தாய் மொழி இருந்திருக்க வேண்டும் என்று மொழியியல்
ஆராயச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
அதைப்போலவே மத்தியக் கிழக்கு நாடுகளில்
பேசப்படுகிற அனைத்து மொழிகளுக்கும் அடித்தளமான ஒரு தாய் மொழி இருந்திருக்க வேண்டும்
என்று இவர்கள் நம்புகிறார்கள். மிஷாய் மொழி, அம்மோனிய மொழி, மோவாபிய மொழி, ஏதோமிய மொழி,
அசீரிய மொழி, சீரிய மொழி, சுமேரிய மொழி, அராமிய மொழி இதுபோன்ற அனைத்து மத்திய கிழக்கு
நாட்டில் உள்ள மொழிகளுக்கும் தாய் மொழி அகாடியன் மொழி என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
மற்ற இரண்டு மொழிப் பிரிவுகளுக்கும் தாய்
மொழி இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்த தாய் மொழி என்னவென்று அவர்களால் கண்டுபிடிக்க
முடியவில்லை. ஆனால் மத்தியக் கிழக்கு நாடுகளில்
வாழுகிறர்வகள் பேசும் அனைத்து மொழிக்கும் தாய் மொழி அகாடியன் மொழி என்பதை ஆணித்தரமாக
மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
மொழி
பிரிக்கப்படுதல்: (ஆதியாகமம்
11)
கடவுள் மொழியை தாறுமாராக்கினார் என்று
வேதத்தில் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 11:7).
ஆனால் எத்தனை மொழியாக தாறுமாறாக்கினார் என்று வேதத்தில் எழுதப்படவில்லை. ஜனங்கள் ஓர் இடத்தில் வாழ கூடாது என்பதற்காகவே கடவுள்
மொழியை தாருமாறாக்கினார். சரித்திரத்தின் படி
கடவுள் இரண்டு புதிய மொழிகளை மாத்திரமே தந்திருக்கிறார். பாபேல் கோபுரம் கட்டும்போது அவர்கள் பேசிய மொழி
அகாடின் மொழி. அந்த அகாடியன் மொழி பேசுகிறவர்கள்
அங்கேயே தங்கிவிட்டார்கள். மற்ற இரண்டு மொழி
பேசக்கூடியவர்கள் மொழிவாறியாக இரண்டு பகுதிகளாக பிரிந்து சென்றுவிட்டார்கள்.
சிந்து
சமவெளி நாகரீகம்:
உலகில் தோன்றி இரண்டாவது நாகரீகம் சிந்து
சமவெளி நாகரீகம். மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகம். இங்கு இருந்துதான் சிலர் சீன தேசத்திற்கும், சிலர்
ஜப்பான் நாட்டிற்கும், ஆரியர்கள் வட பகுதிக்கும், திராவிடர்கள் தென்பகுதிக்கும் பிரிந்து
சென்றனர்.
இவர்கள் அனைவரும் காமின் சந்ததி என்றும். காமின் சந்ததி முழுமைக்கும் கடவுள் தனி மொழியை கொடுத்தபோது
அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்த இடம் தான் சிந்து நதி என்றும் அராய்ச்சியாளர்கள்
நம்புகிறார்கள். இவர்கள் பேசிய மொழி ஆசிய மொழி,
இந்திய மொழிகள்.
இந்த சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து
பிரிந்து சென்றவர்கள் தான் நயில்நதி நாகரீகத்தை உருவாக்கினார்கள்.
ரயில்
நதி நாகரீகம்:
கடவுள் யாப்பேத்தின் வம்சத்தினருக்கு ஒரு
மொழியைக் கொடுத்தார் என்றும், அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வடக்கு நோக்கி பிரயாணப்பட்டு
ரயில் நதி நாகரீகத்தை உருவாக்கினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இதுதான் உலகில் தோன்றிய மூன்றாவது நாகரீகம். இந்த யாப்பேத்தின் சந்ததியார் பேசிய மொழி தான் ஐரோப்பிய
மொழிகள்.
இவர்கள் தான் உலகில் அதிக நாடுகளை பிடித்தவர்கள். உலகம் முழுவதும் அதிக இடங்களுக்கு சென்று ஆக்கிரமிப்பு
செய்தவர்கள். இவர்களில் இருந்து ஒரு சிலர்
பிரிந்து சென்று சிந்து சமவெளி நாகரீகத்தை அடைந்தார்கள். அவர்கள் தான் பிராமினர்கள்.
ஆபிரகாம்:
ஆதியாகமம் 14:13-ல் எபிரேயனாகிய ஆபிரகாம்
என்று வாசிக்கிறோம். ஆபிரகாம் எபிரெய மொழி
பேசியதால், எபிரெயன் என்று குறிப்பிடவில்லை.
ஆதியாகமத்தை எழுதியவர் மோசே. மோசேயின்
காலத்தில் ஆபிரகாமை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆண்டவர் எபிரெயனாகிய ஆபிரகாம்
என்ற பதத்தை பயன்படுத்துகிறார். ஆபிரகாம் வாழ்ந்த
கல்தேயர் தேசத்தில் எபிரெய மொழியை ஒருவரும் பேசவில்லை.
ஆதியாகமம் 11:31-ல் தேராகு அனைவரையும்
கூட்டிக்கொண்டு ஊர் என்ற பட்டணத்தில் இருந்து ஆரான் மட்டும் வந்தான் என்று வாசிக்கிறோம். அவர்கள் ஆரான் என்ற இடத்திற்கு வரவில்லை. கானான் தேசத்திற்கு செல்ல புறப்பட்டார்கள். வரும் வழியில் ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள். அந்த இடத்திற்கு தன் மூத்த மகனாகிய ஆரானின் பெயரை
தேராகு வைக்கிறார். பின் நாட்களில் மோசே இந்த
சரித்திரத்தை எழுதும் போது ஆரானிலே வந்து தங்கினார்கள் என்ற எழுதுகிறார்.
ஆபிரகாம் தான் முதல் எபிரெயன். இதை மோசே அறிந்திருந்தார். எனவே தான் எபிரேயனாகிய ஆபிரகாம் என்று எழுதுகிறார்.
எபிரெயர்கள் என்ற பதம் உருவானதே எகிப்தில் தான்.
ஆபிரகாமின் சந்ததி எகிப்தில் வந்து பழுகி பெருகியபோது, எபிரெயர்கள் பலுகி பெருகுகிறார்கள்
என்ற பார்வோன் சொல்லுகிறார். நான் தான் முதல்
எபிரெயன் என்று ஆபிரகாமிற்கு தெரியாது.
ஆபிரகாமை ஆண்டவர் அழைத்த பின்பு அவனை
பல நாடுகளுக்கு அலைந்து திரியப்பண்ணுகிறார்.
பல நாட்டுக் கலாச்சாரம் அவனுக்குள்ளாக வந்தது. பிற்பாடு ஆபிரகாமிற்கென்று ஒரு தனி கலாச்சாரத்தை
உருவாக்குகிறார். அவனுக்கொன்று தனி மொழியையும்
கொடுக்கிறார். அந்த மொழி எபிரெய மொழி.
உலகில் முதல் பிறந்த எபிரெயன் ஈசாக்கு. ஆபிரகாம் முதல் எபிரெயன். ஆனால் முதல் பிறந்த எபிரெயன் அல்ல. அவர் பிறக்கும்போது பாபிலோனியன்.
ஆபிரகாமிற்கு ஆண்டவர் கொடுத்த கலாச்சாரத்தைப்
பற்றி வேதத்தில் நாம் வாசிக்க முடியாது. ஆனால்
இஸ்ரவேலர்களின் புத்தகமான தல்மோட், மிஸ்பா, கெமாஹா இந்த புத்தகங்களில் யூதர்களின் கலாச்சாரத்தைப்
பற்றி அறிந்து கொள்ள முடியும். இவைகள் இஸ்ரவேலர்களின்
கலாச்சார புத்தகங்கள் மட்டுமே. இவைகள் வேதபுத்தகம்
அல்ல.
எ.கா: யூதக்கலாச்சாரப்படி ஒரு ஆண் மகன்
நாற்பது வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும்.
இவை வேதத்தில் இல்லை. ஆனால் யூத ஆண்கள்
நாற்பது வயதில் தான் திருமணம் செய்தார்கள்.
ஈசாக்கு நாற்பது வயதில் திருமணம் செய்தார். (ஆதியாகமம் 25:20). யூதர்கள் நாற்பது வயதில் திருமணம் செய்ய வேண்டும்
என்று அவர்களுடைய கலாச்சார புத்தகத்தில் உள்ளது.
ஏசா,
யாக்கோபு:
உலகில் பிறந்த இரண்டாவது எபிரெயன் ஏசா. உலகில் தாயின் கருவில் உருவான இரண்டாவது கரு யாக்கோபு.
ஒரு தாயின் கருவில் இரட்டைக் குழந்தைகள்
இருக்கிறார்கள் என்றால், முதலில் உருவான குழந்தை தான் இரண்டாவதாக வெளியே வரும். இரண்டாவதாக உருவான குழந்தைதான் முதலில் வெளியே வரும். இது சரித்திர ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
உலகத்தின் பார்வையில் ஏசா மூத்த மகனாக
இருந்தாலும், ஆண்டவருடைய பார்வையில் யாக்கோபே மூத்த மகனாக இருந்தார். எனவே தான் யாக்கோபு ஏசாவை ஏமாற்றி ஈசாக்கினிடத்தில்
ஆசீர்வாதத்தைப் பெற்ற போது ஆண்டவர் அதை தடுக்கவில்லை. ஆண்டவரும் அதை அனுமதித்தார்.
யாத்திராகமம்:
பார்வோன்
அரண்மனை:
யாத்திராகமம் புத்தகத்தில் மோசே அறிமுகமாகிறார். மோசே லேவி கோத்திரத்தான். மோசே ஆண்டவருடைய திட்டத்தின்படி நாற்பது ஆண்டுகள்
பார்வோனின் அரண்மனையில் வளர்கிறார். பார்வோனின்
மகனைப் போன்றே வாழ்கிறார். மோசே ராஜாவாவதற்கு
தேவையான அனைத்து பயிற்சிகளையும் எகிப்து மன்னனின் மூலமாக ஆண்டவர் மோசேக்கு கொடுத்தார். ஏனென்றால், நாற்பது ஆண்டுகள் அவன் இஸ்ரவேலருக்கு
ராஜாவாக இருந்து அவர்களை வழிநடத்த வேண்டும் என்பதற்காக.
மீதியான்
தேசம்:
மோசே தனது நாற்பதாவது வயதில் அரண்மனையை
விட்டு மீதியான் தேசத்திற்கு புறப்படுகிறார்.
மீதியான் தேசம் என்பது கர்த்தருடைய பர்வதம். அங்கு எத்திரோ என்கிற ஆசாரியன் ஆண்டவருக்கு நாள்தோறும்
பலிசெலுத்தி கொண்டிருக்கிறார். மோசே அந்த எத்திரோவின்
குடும்பத்தோடு நாற்பது ஆண்டுகள் தங்கியிருந்து, எத்திரோவின் ஆடுகளை பராமரிக்கிறார். மோசே தற்செயலாக இந்த மீதியான் தேசத்திற்கு வரவில்லை. கடவுள் இவரை ஒரு நோக்கத்தோடு இங்கு அழைத்து வந்தார்.
இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல
ஒரு ராஜா தேவை என ஆண்டவர் மோசேயை ராஜாவுக்கு தேவையான எல்லா பயிற்சியையும் பார்வோனின்
அரண்மனையில் நாற்பது வருஷம் கற்பித்தார். மோசே
ஜனங்களை பாலைவனத்தில் வழிநடத்த வேண்டும் என்பதால் பாலைவன அனுபவத்தை மீதியான் தேசத்தில்
உள்ள பாலைவனத்தில் நாற்பது வருஷம் கற்பித்தார்.
இந்த மீதியான் தேசத்து ஆசாரியன் மகளை
மோசே திருமணம் செய்கிறார். அவள் பெயர் சிப்போராள்.
(யாத்திராகமம் 2:21)
மோசேக்கு
கடவுளின் தரிசனம்:
மோசேயின் என்பதாவது (80) வயதில் ஆண்டவர்
மோசேயோடு பேசுகிறார். ஆண்டவர் மோசேயிடம் முற்செடியின்
நடுவில் இருந்து பேசினதாக நாம் தமிழில் வாசிக்கிறோம். (யாத்திராகமம் 3:2). ஆனால் மூல பாஷையில் செடி என்ற பதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முட்செடி என்பது சரியான மொழியாக்கம் அல்ல. அந்த செடியானது இன்றும் இருக்கிறது. அந்த செடியின் வயதையும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.
ஆண்டவர் மோசேயோடு மீதியானிய பாஷையில் பேசினார். ஏனென்றால், மோசே அரண்மனையில் வளர்ந்ததால் அவனுக்கு
எகிப்திய மொழி தெரியும். நாற்பது ஆண்டுகள்
மீதியான் தேசத்தில் வாழ்ந்ததால் மீதியானிய மொழி தெரியும். எகிப்திய மொழி பேசி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால்
ஆண்டவர் எகிப்திய மொழியில் பேசியிருக்க வாய்ப்பு இல்லை. மோசேக்கு தன் சொந்த ஜனங்கள் பேசுகிற எபிரெய மொழி
தெரியாது. ஏனென்றால் அவன் பால் மறந்தது முதல்
அரண்மனையிலேயே வளர்ந்தான். எனவே ஆண்டவர், மோசே
தற்போது பேசிக்கொண்டிருந்த மீதியானிய மொழியிலேயே அவனிடம் பேசியிருப்பார்.
நம்முடைய ஆண்டவருக்கென்று தனிப்பட்ட பெயர்
இல்லை. காரணம், அவர் ஒருவரே கடவுள். அப்படியானால் அவருக்கு பெயர் இருக்க வேண்டிய அவசியம்
இல்லையே. மனிதர்கள் அநேகர் இருப்பதால் அவர்களை
அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்படுகிறது. ஆண்டவருடைய பார்வையில் அவர் ஒருவரே கடவுள். அப்படியானால் அவருக்கு பெயர் இருக்க வேண்டிய அவசியம்
இல்லையே.
ஆண்டவரே உம்முடைய பெயர் என்ன என்று மோசே
ஆண்டவரைப் பார்த்து கேட்கிறார். மோசேயின் இந்த
கேள்விக்கு ஆண்டவர் ”ஹயா” என்று எபிரெய
மொழியில் பதில் கொடுக்கிறார். ஹயா என்பதன்
தமிழ் பதம் ”நான் தான்” என்பதாகும். ஆங்கிலத்தில் ”I am that I am”. (யாத்திராகமம் 3:14) நான் சொன்னேன் என்று சொல் எப்பதை ஆண்டவர் எபிரெய
மொழியில் ஹயா என்று சொல்லுகிறார். எபிரெய மொழி
தெரியாத மோசே ஹயா என்பது தான் ஆண்டவரின் பெயர் என்று நினைத்துகொள்கிறார். ஹயா என்ற பதத்தைத் தமிழில் இருக்கிறவராக இருக்கிறேன்
(யாத்திராகமம் 3:14) என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
இயேசு
கிறிஸ்து:
கடவுள் ஹயா என்ற வார்த்தையை தன்னுடைய பெயராக
எடுத்துக்கொண்டதால், ஹயா என்ற வார்த்தையை அதாவது ”நானே” என்ற வார்த்தையை இஸ்ரவேலர்கள்
பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் பால ஆண்டுகளுக்கு
பின் வந்த இயேசு கிறிஸ்து ஹயா அதாவது ”நானே” என்ற வார்த்தையை பல முறை பயன்படுத்துகிறார். அவற்றில் ஏழு நானே வார்த்தைகளை மாத்திரம் யோவான்
நற்செய்தியாளர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1. ஜீவ அப்பம் நானே.
(யோவான் 6:35)
2. வெளிச்சம் நானே
(யோவான் 6:35)
3. வாசல் நானே (யோவான்
10:9)
4. நானே நல்ல மேய்ப்பன்
(யோவான் 10:11)
5. நானே வழி (யோவான்
14:6)
6. நானே மெய்யான திராட்சைச்
செடி (யோவான் 15:1)
7. நானே உயிர்த்தெழுதலும்
ஜீவனும் நானே (யோவான் 11:25)
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தன்னை
ஒரு கடவுளாக எங்கும் காட்டவில்லை என்று அநேகர் நினைக்கிறார்கள். யோவான் நற்செய்தியாளர் திட்டவட்டமாக சொல்லுகிறார்,
பழைய ஏற்பாட்டில் கடவுள் மோசேயிடம் பேசிய அதே வார்த்தையை, புதிய ஏற்பாட்டில் இயேசு
கிறிஸ்து மக்களிடம் சொல்லுகிறார்.
மோசே:
யாத்திராகமம் 4:10-ல் ஆண்டவரே நான் திக்குவாயும்,
மந்த நாவும் உள்ளவன் என்று மோசே ஆண்டவரிடம் சொல்லுகிறார். உண்மையிலேயே மோசே திக்குவாய் உள்ளவர் அல்ல. அப்போஸ்தலர் 7:22-ல் வாசிக்கிறோம் மோசே எகிப்தியருடைய
சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அப்படியானால், ஏன் மோசே இந்த வார்த்தையை சொல்லுகிறார்
என்றால், மோசேக்கு தன் சொந்த ஜனங்கள் பேசக்கூடிய எபிரெய மொழி தெரியாது. எகிப்திய மொழி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய
மொழி. மீதியானிய மொழி மட்டுமே மோசேக்கு தெளிவாக
தெரியும். மீதியானிய மொழி எகிப்தியருக்கும்,
இஸ்ரவேலர்களுக்கும் தெரியாது. இதைத்தான் தமிழில்
திக்குவாயும் மந்த நாவும் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
மோசே
எகிப்துக்கு புறப்படுதல்:
யாத்திராகமம் 4:24-ல் கர்த்தர் மோசேயை
கொல்லப்பார்த்தார் என்று வாசிக்கிறோம். ஆனால்
உண்மையிலேயே கர்த்தர் கொலை செய்ய பார்க்கவில்லை.
மோசே தன் மனைவி, பிள்ளைகளோடு எகிப்திற்கு போகும் வழியில், ஓர் இடத்தில் தங்குகிறார்கள். அவர்களைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மோசேயை கொலை
செய்யப் பார்த்தார்கள். காரணம் என்னவென்றால்,
மோசே மீதியான் தேசத்தான் அல்ல. அவர் எபிரெயன். மீதியான் தேசத்தாருக்கும், எபிரெயர்களுக்கும் உள்ள
நிர வேறுபாடு முற்றிலும் வேறுபட்டது. எனவே,
மீதியான் தேசத்து பெண் சிப்போராளையும், எபிரெயனாகிய மோசேயையும் அப்பகுதி மக்கள் பார்த்தபோது
மோசே வேற்று இனத்தை சேர்ந்த மனிதன் என எண்ணி கொலை செய்ய வகைதேடினார்கள்.
அந்த நேரத்தில் சிப்போராள், தன் மகனின்
நுனித்தோளை வெட்டி, அதை மோசேக்கு முன்பாக எரிந்து, இவன் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்
என்று சொல்லுகிறாள். இதைப் பார்த்த அப்பகுதி
ஜனங்கள் மோசே குற்றவாளி அல்ல, நமது இனத்தைச் சார்ந்தவன் என்பதாக புரிந்துகொண்டு அவனைவிட்டு
சென்று விடுகிறார்கள்.
கர்த்தர் கொல்லப் பார்த்தார் என்பதை
விட கர்த்தர் கொல்ல அனுமதித்தார் என்பதே சரியான மொழியாக்கம். ஏனென்றால் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே
மோசே எகிப்துக்கு புறப்பட்டார். போகும் வழியில்
அங்குள்ள மனிதர்கள் அவனை கொலைசெய்யப் பார்த்ததால், கர்த்தர் கொலை செய்ய அனுமதித்தார்
என்று மோசே எழுதுகிறார்.
ஆண்டவர் என்னை அழைத்தது உண்மையானால், அவர்
ஏன் என்னை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மோசே சிந்தித்து, எகிப்துக்குப் போகாமல்,
மீண்டும் தன் மாமாவின் (எத்திரோ) வீட்டிற்கே வந்து தங்கி விடுகிறார்.
விருத்த
சேதனம்:
விருத்தசேதனம் என்பது ஒரு யூக்கலாச்சார முறையாக இருந்தாலும்,
இந்த முறையை யூதர்கள் மாத்திரம் அல்ல, மற்ற நாடுகளில் வாழ்ந்த மனிதர்களும் பின்பற்றி
வந்தார்கள். உதாரணமாக: யோபு, மெல்கிசெதேக்கு,
எத்திரோ இவர்கள் அனைவரும் விருத்தசேதனம் பண்ணிக்கொண்டவர்கள். இன்னும்கூட ஆப்பிரிக்கர்கள் இன்றளவும் விருத்தசேதனம்
பண்ணிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு விருத்தசேதனம்
என்பது ஒரு சட்டம் அல்ல. தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக
விருத்தசேதனம் பண்ணிக்கொள்வார்கள். ஆனால் யூதர்களை
பொருத்த மட்டில் விருத்தசேதனம் என்பது அவர்களுடைய கலாச்சார சட்டம் ஆகும்.
ஒருவன் விருத்தசேனம் செய்தால் மட்டுமே அவன் ஒரு யூதன் அல்லது இஸ்ரவேலன் என்று
ஆண்டவர் அவர்களுக்கு ஒரு பிரமாணத்தைக் கொடுத்திருந்தார்.
ஆரோனும்
- மோசேயும்:
மோசேயின்
அண்ணன் ஆரோன். அக்கா மிரியாம். அவர்கள் இருவரும் இணைந்துதான் மோசேயை அரண்மனைக்கு
அனுப்பினார்கள். நாற்பது வருஷம் மோசே அரண்மனையில்
வளர்ந்தார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் நாற்பது வருஷம் சென்ற பின்பு மோசே அரண்மனையிலிருந்து காணாமல் போகிறார். ஆரோனுக்கும், மிரியாமுக்கும் மோசே என்ன ஆனான் என்றே
தெரியாது. உயிரோடு இருக்கிறானா? இல்லையா? என்று
கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால்
மோசே ராஜாவாக வாழ்ந்த ஒரு மனிதன். இவர்கள்
அடிமைகள் என்பதால், மோசே என்னுடைய சகோதரன் தான் அவன் எப்படி இருக்கிறான், எங்கே இருக்கிறான்
என்று யாரிடமும் இவர்கள் கேட்க முடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உன் சகோதரன்
மோசேயைப் பார்க்க நீ தேவ பர்வதத்திற்கு புறப்பட்டு போ என்று ஆண்டவர் ஆரோனிடம் சொல்லுகிறார்.
(யாத்திராகமம் 4:27). மோசே உயிரோடு இருக்கிறான் என்றும், அவன் மீதியான் தேசத்தில் இருக்கிறான்
என்றும் அப்பொழுது தான் ஆரோனுக்கு தெரிந்திருக்கும். பின்பு ஆரோன் கர்த்தருடைய பர்வதத்திற்கு வந்து மோசேயை
பார்க்கிறார். பின்பு இருவரும் எகிப்திற்கு
புறப்படுகிறார்கள்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று மூலமாக வேதாகமத்தில் உள்ள அநேக புதிய காரிங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன்.
நீங்கள் புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டிருப்பீர்கள் என்றால், உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்தவும்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வாதிப்பாராக. ஆமென்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.