பழைய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்–4)
ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் உங்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். பழைய ஏற்பாட்டு ஆய்வு நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களை படிக்க்காதவர்கள் மூன்று பாகங்களைப்படித்துவிட்டு இந்த நான்காம் பாகத்தைப் படிப்பீர்கள் என்றால், வேதாகமத்தின் உண்மைத்தன்மையைக் குறித்து அறிந்துகொள்ள அது உங்களுக்கு வசதியாக இருக்கும்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று (3)
மோசே
எகிப்துக்கு புறப்படுதல் (மொழி):
மோசே எகிப்திற்கு போகவேண்டுமானால் அவருக்கு
இரண்டு மொழிகள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
பார்வோன் ராஜாவிடம் சென்று ஏதோ நண்பனிடம் பேசுவதுபோல பேச முடியாது. ஏனென்றால், இவர் உதவி கேட்டு பார்வோனிடம் செல்லவில்லை. என் ஜனங்களை அனுப்பிவிடு என்று ஆணையிட செல்லுகிறார். இஸ்ரவேலர்களின் ஆண்டவருடைய நாமத்தினால் பார்வோனுக்கு
கட்டளை கொடுக்க புறப்படும் ஒரு நபர் தூய்மையான, தெளிவான எகிப்திய மொழியில் தான் பேச
வேண்டும். எனவே, எகிப்திய மொழி மோசேக்கு தெரிந்திருக்க
வேண்டும்.
எகிப்திய மொழி என்பது மோசே நாற்பது ஆண்டுகளுக்கு
முன்பாக பேசிய ஒரு மொழி. ஆனால், எபிரெய மொழி
என்பது அவர் அறிந்திராத ஒரு மொழி. இஸ்ரவேலர்களிடம்
மோசே பேசும்போது எபிரெய மொழியில் தான் பேச வேண்டும். எனவே தான், மோசே ஆண்டவரிடம் நான் வாக்கு வல்லவன்
அல்ல என்று கூறுகிறார்.
ஆண்டவர் மோசேயிடம் சொல்லுகிறார், உனக்கு
பதிலாக உன் அண்ணன் ஆரோன் பேசுவான். நான் உனக்கு
சொன்னதை நீ ஆரோனுக்கு சொல்லு, ஆரோன் பார்வோன் மன்னனிடமும், இஸ்ரவேல் ஜனங்களிடமும் உனக்கு
பதிலாக பேசுவான் என்றார்.
எகிப்துதில்
இஸ்ரவேலரின் தெய்வங்கள்:
எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு எங்களுக்கென
ஒரு தெய்வம் உண்டு என்று தெரியும். ஆனால் அந்த
தெய்வத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. எங்கள்
ஆண்டவர் எங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன். தங்களுடைய தேவனைக் குறித்து இவர்கள் அறிந்த காரியங்கள்
இது மட்டுமே.
நம்முடைய ஆண்டவர் எப்படிப்பட்டவர். அவர் ஆணா? பெண்ணா? அவருக்கு எந்த எந்த காரியத்தை செய்ய முடியும். எந்த எந்த காரியத்தை அவரால் செய்ய முடியாது. எகிப்திய கடவுளைவிட நம்முடைய ஆண்டவர் பெரியவரா?
சிறியவரா? அவரை எப்படி ஆராதிக்க வேண்டும்?
இதுபோன்ற எந்த ஒரு தகவலும் தங்களுடைய தெய்வத்தைப் பற்றி இஸ்ரவேலர்களுக்கு தெரியாது.
இஸ்ரவேலர்கள் நானூற்று முப்பது ஆண்டுகள்
எகிப்திலேயே வாழ்ந்ததால், எகிப்தியருடைய தெய்வங்களைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். எகிப்தியர்கள் மழைக்கு ஒரு தெய்வம், வெயிலுக்கு
ஒரு தெய்வம், பூச்சி, புழுக்களுக்கு ஒரு தெய்வம், மாட்டுக்கு ஒரு தெய்வம், ஆட்டுக்கு
ஒரு தெய்வம், நெருப்புக்கு ஒரு தெய்வம், நதிக்கு ஒரு தெய்வம் இப்படி எத்தனையோ தெய்வங்களை
வணங்கினார்கள். இவை அனைத்தையும் இஸ்ரவேலர்களும்
வணங்கி வந்தனர்.
இஸ்ரவேலர்கள் எகிப்திய தெய்வங்களை வணங்கினாலும்,
தங்கள் இருதயத்தில் எங்களுக்கென்று ஒரு தெய்வம் இருக்கிறது என்று நம்பினார்கள். ஆனால், அதை வணங்கவில்லை. காரணம், அவர்களுடைய தெய்வத்தை எப்படி வணங்குவது
என்று அவர்களுக்குத் தெரியாது.
எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை அடிமையாக வைத்திருந்ததால். இஸ்ரவேலர்கள் தாங்கள் அடிமைத்தனத்தனத்திலிருந்து
வெளியேற வேண்டும் என்பதற்காக மாத்திரம் ஆபிரகாமின்
தேவனே இந்த அடிமைத்தனத்திலிருந்து எங்களை விடுவித்தருளும் என்று கதருவார்கள். மற்ற காரியங்களுக்கு எகிப்தியர்களைப் போலவே எகிப்திய
தெய்வங்களை வணங்கி வந்தார்கள். எகிப்தியர்கள்
இஸ்ரவேலரை அடிமையாக வைத்திருந்ததால், எகிப்திய தெய்வங்களிடம் சென்று, எங்களை அடிமைத்தனத்திலிருந்து
காப்பாற்று என்று சொல்ல முடியாது. எனவே, இதற்காக
மட்டும் தங்கள் தெய்வங்களை மனதில் நினைத்துக்கொண்டு புலம்புவார்கள். ஆபிரகாமின் தேவனே, எங்களை காப்பாற்றும் என்று புலம்புவார்கள்.
இஸ்ரவேலர்களில் யாருக்கேனும், நோய்வாய்ப்பட்டால்
அதற்காக தங்கள் தெய்வத்தை தேடமாட்டார்கள். நோயை குணமாக்குவதற்காக எகிப்தியர் வணங்கின தெய்வத்தையே
இவர்களும் வணங்குவார்கள்.
இஸ்ரவேலர்கள் வீட்டைச் சுற்றிலும் ஏதேனும்
தானியங்களை பயிரிட்டிருந்தால், அந்த பயிர்
செழிக்க வேண்டும் என்று, தங்கள் தெய்வத்தை வணங்க மாட்டார்கள். எகிப்திய விவசாய தெய்வத்தையே வணங்குவார்கள்.
இஸ்ரவேலர்களின் வாழ்வில் ஆசீர்வாதமான காரியங்கள்
நடக்க வேண்டுமானால், எகிப்தியரின் பிரதான அப்பா தெய்வாமாகிய ஹப்பி தெய்வம் நயில் நதியையே
வணங்குவார்கள். இன்னும் எகிப்திரின் இரண்டாவது
தெய்வம் இரா என்று சொல்லப்படக்கூடிய சூரிய தெய்வத்தையும் இவர்கள் வணங்கி வந்தார்கள்.
இஸ்ரவேலர்களின் குடும்பங்களில் யாருக்கேனும்,
திருமணம் நடைபெற்றால், யாருக்கேனும் குழந்தைகள் பிறந்தால், எகிப்தியர்கள் வணங்குகிற
ஓப்புஸ் தெய்வமாகிய மாட்டு தெய்வத்தையே இவர்களும் வணங்குவார்கள்.
ஆனால், எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து
எங்களை காப்பற்றும், என்று கேட்பதற்கு மாத்திரம் ஆபிரகாமின் தேவனே எங்களை காப்பாற்றும்
என்று கதறுவார்கள். இஸ்ரவேலர்கள் ஆபிரகாமின்
தேவனிடம் ஜெபிக்கவில்லை. கதறினார்கள், புலம்பினார்கள். ஏனென்றால், அவர்களுக்கு ஜெபிக்க தெரியாது. அதைத்தான் யாத்திராகமம் 3:7-ல் இஸ்ரவேலர் இடுகிற
கூக்குறலைக் கேட்டு என்று வாசிக்கிறோம்.
மோசே பார்வோனிடம் என் ஜனங்களை அனுப்பிவிடு
என்று சொன்னதும், பார்வோன் ஜனங்களை அனுப்பியிருந்தால், இஸ்ரவேலர்கள் எங்களை அடிமைத்தனத்திலிருந்து
விடுவித்த தேவனே உமக்கு நன்றி என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் எகிப்திலே வணங்கின அந்த தெய்வங்களை
மறந்திருக்க மாட்டார்கள். எகிப்திலிருந்த தெய்வங்களை
தங்களோடு எடுத்துச் சென்றிருப்பார்கள். நாங்கள்
பாலைவனத்தில் பிரயாணம் செய்யப்போகிறோம். எங்களுக்கு
துணையாக நீ இருக்க வேண்டும் என்று எகிப்திய தெய்வங்களை கையோடு எடுத்துச் சென்றிருப்பார்கள். புறப்படும் வழியில் யாருக்காவது நோய்வாய்ப்ட்டால்,
தங்கள் ஆண்டவரிடம் கேட்காமல், முன்போலவே எகிப்திய தெய்வங்களிடமே கேட்டிருப்பார்கள்.
எனவே, ஆண்டவர் எகிப்திய தெய்வங்கள் அனைத்தையும்
விட நான் பெரியவர் என்பதை இஸ்ரவேலருக்கு காண்பிப்பதற்காகவே பார்வோனின் இருதயத்தைக்
கடினப்படுத்தினார்.
எகிப்தின்
பிரதான மூன்று தெய்வங்கள்:
எகிப்தியருக்கு பல தெய்வங்கள் இருந்தாலும், குறிப்பாக மூன்று
தெய்வங்களை வணங்கினார்கள். ஒன்று அப்பா தெய்வம்
(ஹப்பி) நயில்நதி. இரண்டாவது அம்மா தெய்வம்
(இரா) சூரியன். மூன்றாவது இவர்கள் இருவருக்கும்
பிறந்த பார்வோன் மன்னன். இவைதான் எகிப்தியரின்
பிரதான தெய்வங்கள்.
ஒவ்வொரு நாள் காலையிலும் பார்வோன் மன்னன்,
அதாவது பிள்ளை தெய்வம் நயில்நதியில் இரங்கி, பூசாரிகள் மந்திரத்தை ஓதும்போது நதியில்
இருக்கும் தண்ணீரை வானத்திற்கு நேராக எறிவார்.
அப்பொழுது சூரியன் உதயமாகும்.
அதாவது, ஒவ்வொரு நாள் காலையும், அப்பா
தெய்வம் நயில்நதியும், மகன் தெய்வம் பார்வோனும் இணைந்து அம்மாவை வரவேற்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையும் பார்வோன் நயில் நதிக்கு வந்து,
நதியின் நீரை வானத்துக்கு எறிந்தால் தான், அம்மா தெய்வமாகிய சூரியன் தோன்றும் என்று
எகிப்திய ஜனங்களை நம்பவைத்திருந்தார்கள். இந்த
நிகழ்வைப் பார்ப்பதற்காக தினந்தோறும் காலையில் எகிப்தியர்களும், இஸ்ரவேலர்களும் நயில்நதிக்கரைக்கு
வருவார்கள்.
சூரியன் கிழக்கிலே தோன்றி மேற்கிலே மறைவதை,
எகிப்தியர்கள் சூரியன் கிழக்கிலே தோன்றி மேற்கு பகுதி வழியாக மறுஉலகத்திற்கு போவதாக
நம்பினார்கள். எனவே மேற்கு பக்கத்தில் கல்லரைகளை
அமைத்தால் மிகவும் எளிதாக மோட்சத்தை அடையளாம் என்று அவர்கள் நம்பினார்கள். எனவேதான், எகிப்தில் உள்ள பிரமிடுகள் அனைத்தும்
மேற்கு பதிகுதியிலேயே அமைந்திருக்கும்.
நயில்நதி
இரத்தமாக மாறுதல்:
ஒரு நாள் காலையில் சூரியனை வரவேற்பதற்காக
பார்வோன் மன்னன் நதிக்குள் இரங்குகிறார். ஜனங்கள்
அனைவரும் ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஆரோனும், மோசேயும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். ஆரோன் சொல்லுகிறார், நீ மட்டும் உன் கடவுளை ஆராதிக்கலாமா?
நாங்களும் எங்கள் கடவுளை ஆராதிப்பதற்காக எங்களை அனுப்பிவிடு என்று சொல்லுகிறான். பார்வோனின் இருதயம் கடினப்பட்டதால், பார்வோன் விடமுடியாது
என்று சொல்லுகிறார். உடனே மோசே தன் கோலினால்
நயில்நதியை அடித்த போது நதி இரத்தமாய் மாறிற்று. (யாத்திராகமம் 7:15-18)
இது எகிப்தியருக்கு பெரிய அவமானம். ஏனென்றால், எகிப்தின் பிரதான அப்பா தெய்வமாகிய நயில்
நதியிலிருந்து இரத்தம் வருகிறது.
எகிப்தியரின்
முழுமுதற்கடவுளாகிய நயில்நதியையே நம்முடைய ஆண்டவர் இரத்தம் வர அடிப்பாரானால், அவர்தான்
பெரியவர் என்பதை இஸ்ரவேலர் புரிந்திருப்பார்கள்.
தாவளை:
தவளையும் எகிப்திய தெய்வங்களில் ஒன்று. தவளை - கெக்ட் தெய்வம். தவளை இவ்வுலகில் மரிக்கிறவர்களை
மறுஉலகத்திற்கு (மோட்சத்திற்கு) அழைத்துச் செல்லும் தெய்வம் என எகிப்தியர் நம்பினர்.
பார்வோன் நினைக்கிறார், நதி இரத்தமாக மாறிவிட்டது,
மீன்கள் அனைத்தும் செத்துவிட்டது. ஆனால், நம்முடைய தவறை தெய்வம் சாகவில்லையே என்று
மன்னன் யோசிக்கிறார்.
எனவேதான், ஆண்டவர் இரண்டாவது வாதையாக தவளைகள்
முழுவதையும் அழித்துப்போடுகிறார். எது தங்களை
மறுஉலகிற்கு அழைத்துச் செல்லும் என்று எகிப்தியர் நம்பினார்களோ, அந்த தெய்வம் குவியல்
குவியலாக அவர்கள் கண்முன்னே செத்துக்கிடக்கிறது.
இதனால் தேசம் முழுவதும் நாற்றம் எடுத்தது.
இதைப்போன்று எகிப்திய பிராதான பத்து தெய்வங்களை
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தெய்வம் அடிக்கிற அடிதான் இந்த பத்து வாதைகள். எனவேதான், ஒவ்வொரு வாதையின்போதும், பார்வோன் இஸ்ரவேல்
ஜனங்களை அனுப்ப தீர்மானிப்பான், ஆண்டவர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவார். ஏனென்றால், எகிப்தில் உள்ள பத்து தெய்வங்களும் அடிவாங்க
வேண்டுமே.
இஸ்ரவேலர்
புறப்படுதல்:
இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்படும்போது,
எகிப்தில் உள்ள பத்து பிரதான தெய்வங்களை விட நம்முடைய ஆண்டவரே பெரியவர் என்பதை இஸ்ரவேலர்கள்
உணர்ந்திருப்பார்கள்.
பாலைவனத்தில் பகல்பொழுதில் தோலில் புண்கள்
வரும் அலவிற்கு வெளியில் இருக்கும். இரவில்
அதற்கு மாறாக நடுக்கம் கொடுக்கும் அளவிற்கு குளிர் இருக்கும். எனவே, பகலிலே
மேகஸ்தம்பமாகவும், இரவிலே அக்கினிஸ்தம்பமாகவும் ஆண்டவரே இஸ்ரவேலர்களுக்கு துணையாக வந்தார்.
இஸ்ரவேலர்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு
தடையாய் இருந்தது செங்கடல். அப்பேர்பட்ட கடலையும்
ஆண்டவர் கடக்க உதவி செய்தார்.
எகிப்திய தெய்வங்களை அடித்தார், மேகஸ்தம்பமாக,
அக்கினிஸ்தம்பமாக இருந்தார். செங்கடலை பிளந்து
வழிநடத்தினார். இப்படியாக மீதியான் தேசம்
வரை வந்து விட்டார்கள். இப்பொழுது இஸ்ரவேலர்களுக்கு
அவர்களுடைய ஆண்டவரைப் பற்றியும், அவரால் என்னென்ன செய்ய முடியும் என்பது பற்றியும்
ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.
பத்து
கட்டளைகள்:
இவை அனைத்தின் மூலமாகவும் கடவுள் தான்
யார் என்பதை நிரூபித்த பின்பே, இஸ்ரவேல் ஜனங்களுக்கு பத்து கட்டளைகளைக் கொடுக்கிறார். பத்து கட்டளைகளை ஆண்டவர் எதற்காக இரண்டு பலகைகளில்
எழுதினார் என்றால். முதல் நான்கு கட்டளைகள்
மனிதன் ஆண்டவருக்கு செய்ய வேண்டியது இவைகளை ஒரு பலகையிலும். மற்ற ஆறு கட்டளைகள் மனிதன் மற்ற மனிதனிடம் கடைபிடிக்க
வேண்டியது. இவைகளை மற்ற ஒரு பலகையிலும் ஆண்டவர்
எழுதுகிறார்.
மூன்றாம்
கட்டளை:
என்
நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
என் நாமத்தை வீணிலே வழங்காதே என்பதன் அர்த்தம்
என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்தில் வாழும்போது, எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால்,
அந்த தெய்வம் கோபித்துக்கொண்டது, இந்த தெய்வம் கோபித்துக்கொண்டது என்று தெய்வத்தின்
மேல் பழிபோடுவார்கள்.
இவர்களாக வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வார்கள். ஆண்டவர்தான் இதை அனுமதித்தார் என்று சொல்லுவார்கள். எனவே தான் ஆண்டவர் இதுபோன்று எந்த காரியமாக இருந்தாலும்,
அதற்காக என் நாமத்தை பயன்படுத்தக் கூடாது என்ற கட்டளையைக் கொடுத்தார்.
நான்காம்
கட்டளை:
ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்
என்பதன் பொருள், ஓய்ந்திருக்க வேண்டும் என்பது அல்ல. ஆறுநாளும் நீ செய்கிற வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு
எனக்காக வேலை செய்ய என்பதைத்தான் ஆண்டவர் சொல்லுகிறார். ஆண்டவருக்கு அது ஓய்வு நாள். மனுஷர்களாகிய நமக்கு அது ஓய்வுநாள் அல்ல. நாம் அந்த நாளில் ஆண்டவருக்காக பணி செய்ய வேண்டும்
பத்து கட்டளைகளையும் எழுதியது ஆண்டவர். எந்த மொழியில் எழுதுகிறார் என்றால் எபிரெய மொழியில்
எழுதுகிறார். மோசே இப்பொழுது தான் எபிரெய மொழியை
கற்றுக்கொண்டிருப்பார். ஆபிரகாமிற்கு ஆண்டவர்
எபிரெய மொழியைக்கொடுத்தார். அந்த நாள் முதல்
ஆண்டவர் பத்து கட்டளைகளை எழுதும் நாள் வரையிலும் எபிரெய மொழி பேச்சு மொழியாகவே இருந்தது. அதற்கு எழுத்து வடிவம் இல்லை. முதன் முதலாக எபிரெய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தது
ஆண்டவர். பத்து கட்டளைகளை எபிரெய மொழியில்
தான் ஆண்டவர் எழுதுகிறார். ஆண்டவர் பத்து கட்டளைகளை
எழுதும்போது அந்த எழுத்து வடிவத்தை மோசேக்கும் கற்றுக்கொடுக்கிறார். சுமார் நாற்பது நாட்கள் மோசே ஆண்டவரோடு இருக்கிறார்.
கீழே இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயை காணவில்லை. நாற்பது நாட்கள் சென்றுவிட்டன. நம்மை வழிநடத்தின மோசே மரித்துப்போனான் என்று எண்ணி,
எகிப்திலே அவர்கள் வணங்கின கன்றுக்குட்டியை (ஓப்புஸ் தெய்வம்) செய்து வணங்க ஆரம்பித்தார்கள். மோசே மலையிலிருந்து இறங்கி வந்தபோது, ஜனங்கள் செய்த காரியத்தைப் பார்த்து கோபமடைந்தவராக,
ஆண்டவர் கொடுத்த பத்து கட்டளையை உடைத்துப்போட்டார். (யாத்திராகமம் 32:19)
மீண்டும் ஆண்டவர் மோசேயை மழைக்கு அழைத்து. ஆண்டவர் கட்டளைகளை எழுதாமல் எப்படி எழுதவேண்டும்
என்று மோசேக்கு கற்றுக்கொடுக்கிறார். ஆண்டவர்
சொல்ல சொல்ல மோசே பத்துக் கட்டளைகளை பலகைகளில் எழுதுகிறார். முதன் முதலில் மனிதர்களில் எபிரெய மொழியை எழுதியது
மோசே. பத்து கட்டளைகளை மூலபாஷையில் வாசித்தால்
எபிரெயு மொழியில் உள்ள இருபத்து இரண்டு (22) எழுத்துக்களும் அதில் இடம் பெற்றுள்ளது. (யாத்திராகமம் 20 அதிகாரம்)
வேதாகமத்தின்
வரலாறு:
வேதாகமத்தில் ஆதியாகமம் புத்தகம் தான்
முதலில் இருக்கிறது. ஆனால் முழு வேதத்திலும்
முதலில் எழுதப்பட்டது இந்த பத்து கட்டளைகள்.
நமது வேதத்தை மூலபாஷையில் (எபிரெயு) படிப்போனால், இந்த பத்து கட்டளைகளிலும்
அதிஉயர்ரக எபிரெய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதன் பின்பு உள்ள யாத்திராகமம் 20:18-ல் இருந்து
யாத்திராகமம் 40-ம் அதிகாரம் வரை படித்தால் ஒரு குழந்தை எபிரெய மொழி எழுதுவதுபோல இருக்கும். சாதாரணமாக படிப்பவர்களுக்கு இதை கண்டிறிய முடியாது. எபிரெய மொழி அறிஞர்களால் அதை கண்டிறிய முடியும்.
முதலாவதாக பத்து கட்டளையையும், அதை தொடர்ந்து
யாத்திராகமம் நாற்பது அதிகாரம் வரை ஆண்டவர் சொல்ல சொல்ல மோசே எழுதுகிறார்.
பின்பு ஆதியாகமம் 1-50 அதிகாரங்களை எழுதுகிறார்.
பின்பு யாத்திராகமம் 1-19 அதிகாரங்களை
எழுதுகிறார்
பின்பு லேவியராகமத்தை எழுதுகிறார். லேவியராகமத்தை மோசே ஆசாரியர்களுக்காக எழுதுகிறார். எனவே, அவர்களுக்கேற்ற மொழிநடையில் எழுதுகிறார். இஸ்ரவேலரின் ஆசாரியர்கள் பேசும் மொழியானது இஸ்ரவேலர்கள்
பேசும் எபிரெய மொழியைவிட சற்று வித்தியானமானது.
அவர்களும் எபிரெய மொழியை தான் பேசினார்கள். ஆனால், வித்தியாசமானது. எ.கா: இந்திய பிராமணர்கள்.
பின்பு எண்ணாகம புத்தகததை எழுதுகிறார்
பின்பு 39 ஆண்டுகள் சென்ற பின்பு நேபோ
மழையில் வைத்து உபாகமம் புத்தகத்தை எழுதுகிறார்.
உபாகமம் ஒரு பிரசங்க புத்தகம். யாத்திராகமத்தை
எழுதிய பின் 39 ஆண்டுகள் கழித்து உபாகமத்தை மோசே எழுதும்போது, மோசே எபிரெய மொழியில்
புலமை பெற்ற ஒரு நபராக மாறியிருப்பார். எனவே,
உபாகமம் புத்தகத்தில் அதிஉயர்ரக எபிரெய இலக்கணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மூலபாஷையில் ஆதியாகமம் நல்ல மொழிநடையில்
அமைந்திருக்கும். யாத்திராகமம் 1-19வரை அப்படியே
அமைந்திருக்கும். ஆனால், 20-40 வரை உள்ள அதிகாரத்தில்
மொழிநடைகள் மாறுபடும். ஏனென்றால், மோசே எபிரெய
மொழிகற்றுக்கொண்டபோது எழுதியவைகள் அவைகள்.
ஐந்து ஆகமங்ளையும் மோசே எழுதினாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் மொழிநடைகள் வேறுபடுவதால்,
அநேகர் ஐந்து புத்தகங்களையும் மோசே எழுதியிருக்க முடியாது என்று சொல்லுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம்,
எண்ணாகமம், உபாகமம் இவை ஐந்து புத்தகங்கைளும் எழுதியது மோசேயே.
உடன்படிக்கைப்பெட்டி:
ஆசரிப்புக் கூடாரம் உருவாக்கப்பட்டது,
ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டி உண்டாக்கப்பட்டது இவைகளெல்லாம் யாத்திராகமம் புத்தகத்தில்
இடம்பெற்றள்ளது.
ஆண்டவர் மனிதனோடு உடன்படிக்கையை ஏற்படுத்தினால்,
அது நித்திய உடன்படிக்கையாகவே இருக்கும்.
அப்படியானால், நித்திய உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும் உடன்படிக்கை பெட்டியும்
நித்தியமாகவே இருக்கும். அப்படிப்பட்ட உடன்படிக்கைப்
பெட்டி காணாமல் போவதற்கும், யாராவது அதை அழிப்பதற்கும் எந்த ஒரு வாய்ப்பும் இருக்க
முடியாது.
கி.பி 586-ல் நோபுகாத்நேச்சாரின் ராணுவம்
வந்து தேவாலயத்தை எரிக்கும்போது உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அது உண்மையான உடன்படிக்கைப் பெட்டி அல்ல. அது போலியான உடன்படிக்கைப் பெட்டி. உண்மையான உடன்படிக்கைப்
பெட்டி பரலோக்தில் உள்ளது என்று வெளிப்படுத்தல் 11:10-ல் வாசிக்கிறோம்.
உலகத்தில் இருந்து எந்த ஒரு பொருளும்,
பரலோகத்திற்கு போக முடியாது. ஆண்டவருக்குள்
வாழ்ந்த மனிதர்களின் ஆத்துமாக்கள் மட்டுமே பரலோகத்திற்கு போகமுடியும். அப்படியிருக்க உலகத்திலிருந்து ஒரு பொருள் பரலோகத்திற்கு
எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்றால் அந்த உடன்படிக்கைப் பெட்டி எவ்வளவு முக்கியமானது
என்று பாருங்கள்.
உடன்படிக்கைப் பெட்டிக்கென்று தனி மதிப்பு
இருக்கிறது. அதை வைப்பதற்காக தனி ஆசரிப்புக்
கூடாதத்தை ஆண்டவர் அமைக்க சொன்னார். இவை அனைத்தையும்
நாம் யாத்திராகமம் புத்தகத்தில் பார்க்க முடியும்.
லேவியராகமம்
லேவியராகமம் இரண்டு முக்கிய குறிப்புகளை
உள்ளடக்கியது. ஒன்று பண்டிகைகள். மற்றொன்று பலிகள்.
பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு காரிங்களும்
புதிய ஏற்பாட்டின் நிழலாயிருக்கிறது.
பலிகள்:
1.
சர்வாங்க தகனபலி
முழு
மிருகமும் எரிக்கப்படுகிற ஒரு பலி. வருஷத்தில்
ஒரு நாள் முழு இஸ்ரவேல் ஜனங்களுக்காக கொடுக்கப்படும் ஒரு பலி.
நம்முடைய
ஆண்டவரும் தன்னுடைய முழு சரீரத்தையும் சர்வாங்க தகனபலியாக நமக்காக கொடுத்தார். கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தினார் என்பதற்கான
நிழல்தான். இந்த சர்வாங்க தகனபலி.
2.
பாவ நிவாரண பலி:
ஒரு நபர் மற்றொருவருக்கு விரோதமாய் குற்றம்
செய்தால், அந்த குற்றத்தை சரிசெய்ய முடியவில்லை என்றால், பாவநிவாரண பலி செலுத்த வேண்டும்.
எ.கா: கொலை செய்தல்
3.
குற்ற நிவாரண பலி:
ஒரு நபர் மற்றொருவருக்கு விரோதமாய் குற்றம்
செய்தால், அந்த குற்றத்தை சரிசெய்ய முடியுமானால், அந்த குற்றத்தை அவர் சரிசெய்ய வேண்டும். அதற்காக ஒரு பலியையும் செலுத்த வேண்டும்.
எ.கா: மற்றவனுடைய மாட்டைத்
திருடுதல்
4.
சமாதான பலி:
ஆண்டவரே நான் உங்களை மறக்கவில்லை. நீங்கள் தான் எனக்கு எல்லாம். நான் எப்பொதும் ஆண்டவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன்
என்பதற்கு அடையாளமாக, ஆண்டவரோடு நல்லுறவை பேனிக்கொள்வதற்காக இந்த சமாதான பலி கொடுக்கப்படுகிறது.
5.
போஜன பலி (அ) ஆகார பலி (அ) தானிய பலி:
தானியங்களை, ஆகாரங்களை ஆண்டவருக்கு பலி
செலுத்துவது. பொருத்தனை பன்னுதல் இதுபோன்ற
பலிகளை செலுத்துவது. இதுவும், ஆண்டவரோடு நல்லுறவை
ஏற்ப்படுத்திக்கொள்வதற்காக கொடுக்கப்பட்ட பலி.
பண்டிகைகள்:
இஸ்ரவேலர்களுக்கு ஆண்டவர் ஏழு பண்டிகைகளை
ஏற்படுத்தினார். பிற்காலத்தில் ஜனங்களாகவே
இரண்டு பண்டிகைகளை சேர்த்துக்கொண்டார்கள்.
இஸ்ரவேலர்களின் மொத்த பண்டிகைகள் ஒன்பது.
பூரீம்
பண்டிகை:
எஸ்தர்
புத்தகத்தில் வாசிக்கிறோம். ஆமான் யூத ஜனங்களை
அழிக்க நினைக்கிறார். யூதர்களின் ஜெபத்தால்,
ஆமான் யூதர்களை அழிக்க நினைத்த அதே நாளில், ஆமான் கொலைசெய்யப்படுகிறார். இதை நினைவுகூறும்படியாக பூரீம் என்கிற பண்டிகையை
இஸ்ரவேலர்கள் அனுசரித்தார்கள். இது எட்டாவது
பண்டிகை. பூர் என்பது சீட்டுக்குழுக்கி போடுவது. பூரீம் என்றால் சீட்டுகள்.
ஹனுக்கா
மல்கியாவிற்கு
பின்பு கி.மு.167-ம் ஆண்டு அந்தியோகஸ் எபிபனஸ் என்று சொல்லப்படும் சிரியா தேசத்து ராஜா,
எருசலேமிற்குள்ளாக வந்து தன்னுடைய செயூஸ் என்ற
ஒரு கிரேக்க தெய்வத்திற்கு எருசலேம் தேவாலயத்தில் பலியிட்டான். பிரதான ஆசாரியனின் மகன் எகூத் ஒருவன் அநேக வாலிபர்களோடு
இரண்டு ஆண்டுகள் ஒழிந்திருந்து, பின்பு எருசலேமிற்குள்ளாக வந்து, அந்தியோகஸ் எபிபனசை
அடித்து வீழ்த்தி, மீண்டுமாக தேவாலயத்தைக் கைப்பற்றி, தேவாலயத்தை சுத்திகரித்தான். மீண்டும் வெளிச்சம் வந்து என்று சொல்லி, ஹனுக்கா
என்று சொல்லப்படுகிற பண்டிகையைக் கொண்டாடினார்கள். இந்த பண்டிகை கொண்டாடப்பட்ட நாள் டிசம்பர்
25. இது இஸ்ரவேலர்களின் ஒன்பதாவது பண்டிகை.
இந்த
இரண்டு பண்டிகைகளும் ஜனங்களாகவே ஏற்பத்திக்கொண்ட பண்டிகைகள். இந்த பண்டிகைகளைப் பற்றி லேவியராகமத்தில் நாம் வாசிக்க
முடியாது.
லேவியராகமத்தில்
உள்ள ஏழு பண்டிகைகள்:
1. பஸ்கா பண்டிகை:
மாலை
ஆறு மணிக்கு துவங்கும். ஏனென்றால், இஸ்ரவேலர்களுக்கு
சூரியன் மறையும்போது தான் அந்த நாள் உதயமாகும்.
சூரியன் மறைந்து அந்த நாள் துவங்கின பின்பு அவர்கள் சாப்பிடும் உணவு இராபோஜனம். இதுதான் யூதர்களுடைய ஒருநாளின் முதல் ஆகாரம். இரண்டாவது ஆகாரம் காலை ஆகாரம். மூன்றாவது ஆகாரம் மதிய ஆகாரம். யூதர்களின் முக்கியமான ஆகாரம் இராபோஜனம்.
யூதர்கள்
இரவு உணவை சூரியன் மறைந்ததும் சாப்பிடுவார்கள்.
மாலை ஆறுமணிக்கு சாப்பிடவேண்டுமானால் மதியம் மூன்று மணிக்கெல்லாம் ஆட்டை அடித்து
சமைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
நம்முடைய
ஆண்டவரும் பஸ்கா ஆட்டுக்குட்டியாக வந்தபடியினால், பஸ்கா பண்டிகை ஆறு மணிக்கு துவங்கும்
முன், மூன்று மணிக்கு தன்னுடைய ஜீவனை விட்டார்.
2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை:
புளிப்பு
என்பது பாவத்தின் அடையாளம். புளிப்பில்லாத
அப்பம் என்றால் பாவமில்லாத அப்பம்.
நம்முடைய
ஆண்டவரே அப்பம். ஜீவ அப்பம் நானே (யோவான்
6:35,48,51) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
இயேசு பஸ்கா ஆடாய் சிலுவையை சுமந்தபோது அவர்மேல் பாவம் இருந்தது,. அவருக்குள் பாவம் இல்லை. அவர்மேல் பாவம் இருந்தது. யாருடைய பாவம் – நம்முடைய பாவம். இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ
ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
எதற்காக
ஆட்டுக்குட்டி என்று வாசிக்கிறோம். அவர் ஆடு
அல்ல ஆட்டுக்குட்டி. காரணம் யூதர்களைப் பொருத்த
வரை நாற்பது வயது நிரம்பியவரே ஒரு ஆண் மகன்.
நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அனைவரும் வாலிபர்கள். நாற்பது வயதில் தான் திருமணம் செய்ய முடியும். முப்பது வயதில் வீட்டை விட்டு வெளியே செல்லலாம். இயேசுவுக்கு நாற்பது வயது ஆகாததால், அவர் ஆடு அல்ல
ஆட்டுக்குட்டி. இயேசு கிறிஸ்து 331/2
வயதில் சிலுவையில் அறையப்பட்டார்.
33
வயதில் மனுஷனாகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு போகிறார். பின்பு சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு மீண்டுமாக
மனுஷனாக மாறுகிறார். ஏழு ஆண்டுகளுக்கு பின்பு
சபையை மனுஷனாகிய இயேசு கிறிஸ்து திருமணம் செய்கிறார். அந்த ஏழு ஆண்டுகள் தான் பூமியில் உபத்திரவக் காலமாக
இருக்கும்.
நம்முடைய
பாவங்களுக்காக சிலுவையில் இயேசு தொங்கியபோது பாவமாக தொங்கினார். கல்லறையில் வைக்கப்பட்டபோது அவருடைய சரீரம் பாவம்
இல்லாத சரீரம். அதாவது புளிப்பில்லாத அப்பம். யூதர்களுடைய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சனிக்கிழமை
துவங்கும். அந்த சனிக்கிழமை பாவமில்லாத சரீரம்
அந்த புளிப்பில்லாத அப்பம் கல்லறைக்குள் வைக்கப்பட்டது.
3. முதற்கனி (அ) முதற்பலன் பண்டிகை:
பஸ்கா
பண்டிகைக்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாள், வாரத்தின் முதல் நாள் முதற்கனி பண்டிகையை
அனுசரிப்பார்கள். இஸ்ரவேல் நாட்டில் கோதுமை
அதிகம் விளையும். கோதுமையை அறுவடை செய்யும்போது
அது பழுப்பு நில கலரில் இருக்கும். ஆனால்,
பச்சை நிரத்தில் இருக்கும்போதே கோதுமையில் முதல் பகுதியை ஆலயத்திற்கு கொண்டுவந்து அசைவாட்டுவார்கள்.
உயிர்த்தெழுந்தோரின்
முதற்பலனாக இயேசு கிறிஸ்து அந்த நாளில் உயிர்த்தெழுந்தார்.
4. பெந்தேகோஸ்தே பண்டிகை (அறுவடைப் பண்டிகை):
பெந்தேகோஸ்தே
என்பது ஐம்பதாவது நாள். பஸ்கா பண்டிகைக்கு
பின்பாக வரும் ஐம்பதாவது நாள். பஸ்கா பண்டிகைக்கு
பின் ஏழு வராத்துக்கடுத்த நாள் சவ்யாத் என்று சொல்லப்படும் அறுவடைப் பண்டிகை.
இயேசு
கிறிஸ்து உயிர்த்தெழுந்து நாள்பது நாள் சீஷர்களோடு இருக்கிறார். பரலோகத்திற்கு செல்லும்போது எனக்காக எருசலேமில்
காத்திருங்கள் என்று சொல்லுகிறார். நான் போனபின்பு
தேற்றரவாளன் வருவார் என்று இயேசு சொன்னார்.
இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்பட்டு பத்தாவது நாளில் அதாவது பெந்தேகோஸ்தே
நாளில் பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை நிரப்பினார். (அப்போஸ்தலர் 2 அதிகாரம்)
பெந்தேகோஸ்தே
பண்டிகையன்று சீஷர்கள் மேல்வீட்டில் கூடியிருந்தார்கள். மேல்வீடு என்பது தாவீதின் கல்லரைக்கு மேல் ஒரு வீடு
இருந்தது அந்த வீட்டைக் குறிக்கிறது. அந்த
வீட்டில் சீஷர்கள் கூடியிருந்தபோது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பஸ்கா பண்டிகைக்காக நாடு முழுவதும் இருந்து எருசலேமிற்கு
வந்த ஜனங்கள் இந்த ஐம்பதாவது நாள் தாவீதின் கல்லறையைப் பார்த்துவிட்டு தங்கள் ஊர்களுக்குப்
போவார்கள். அப்படி ஜனங்கள் புறப்பட்டுக்கொண்டிருக்கும்போது,
தாவீதின் கல்லறைக்கு மேல் இருந்த வீட்டில் இருந்த சத்தத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு யோவேல் தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து
ஜனங்களோடு பேசுகிறார். அதைக்கேட்ட ஜனங்களில்
மூவ்வாயிரம்பேர் இரட்சிக்கப்பட்டார்கள். ஆத்தும
அருவடை துவங்கியநாள் பெந்தேகோஸ்தே திருநாள்.
இன்றுவரை நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
இந்த
முதல் நான்கு பண்டிகைகளில் முன்று பண்டிகைகள் நிறைவேறி விட்டது. நான்காவது பண்டிகை நிறைவேறிக்கொண்டிருக்கிறது. அடுத்து வருகிற மூன்று பண்டிகைகள் நிறைவேறப்போகிறது.
5. எக்காளப் பண்டிகை:
எக்காளம்
ஊதி வெற்றியைக் கொண்டாடும் பண்டிகை. வேதத்தில்
வாசிக்கிறோம் பிரதான தூதருடைய சத்தத்தோடு கூட ஆண்டவர் இயேசு வருவார். அப்பொழுது சபை எடுத்துக்கொள்ளப்படும் (1 தெசலோனிக்கேயர்
4:16)
6. பாவ நிவிர்த்தி பண்டிகை:
சபை
எடுத்துக்கொள்ளப்படுதல். பூமியிலிருந்து சபையை
அழைத்துச் செல்பவர் பரிசுத்த ஆவியானவர். சபை
பரலோகத்திற்கு செல்லும்போது பாதிவழியில் வந்து இயேசுவானர் சபையை அழைத்துச் செல்வார்.
ரெபேக்காளை
எலியேசர் பதான் ஆராமிலிருந்து அழைத்து வந்தபோது ஈசாக்கு பாதிவழியிலிருந்து தன் தாயின்
வீட்டிற்கு அழைத்துச் செல்வதுபோல, பரிசுத்த ஆவியானவரும், இயேசுவானவரும் இணைந்து சபையை
பிதாவினிடத்திற்கு அழைத்துச் சொல்வார்கள்.
சபை பிதாவை இயேசு இல்லாமல் சந்திக்க முடியாது. பிதா பரிசுத்தர். எனவே பாவமான மனிதன் பிதாவை தரிசிக்க முடியாது. அதற்காகவே இயேசு கிறிஸ்து பாவநிவிர்த்தி பலி ஆடாக
பலியிடப்பட்டார். அதாவது சபையை பரிசுத்தப்படுத்தி
பிதாவிடம் அழைத்துச்செல்ல மனுஷகுமாரன் பாவநிவிர்த்தி பலியானார்.
7. கூடாரப் பண்டிகை:
பின்பு
சபையானது நிரந்தரக் கூடாரத்திற்குள்ளாக பிரவேசிக்கும். அதன் அடையாளமாகத் தான் கூடாரப்பண்டிகை. கூடாரம் என்பது பரலோகத்தைக் குறிக்கிறது.
லேவியராகமம்
முழுவதும் ஆசாரியர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம்.
ஆசாரியர்கள் எப்படி உடை அணிய வேண்டும். ஆசாரியர்கள் எப்படி ஆயத்தப்பட வேண்டும்,
எப்படி ஆசரிப்புக் கூடாரத்தில் பணி செய்ய வேண்டும் என்பது குறித்து எழுதப்பட்டிருக்கும்.
எண்ணாகமம்
எண்ணாகமம்
புத்தகத்தில் அதிகமாக நாம் எண்ணிக்கைகளை பார்க்க முடியும். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து பிரயாணப்பட்ட வரலாற்றோடு,
ஜனங்களின் எண்ணைக்கைகள் அதிகம் கொடுக்கப்பட்ட ஒரு புத்தம் எண்ணாகமம். பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க நினைத்த வரலாற்றை இதில் நாம் வாசிக்க முடியும்.
உபாகமம்
எகிப்திலிருந்து
புறப்பட்ட இஸ்ரவேலர்களில் இரண்டு பேர் மாத்திரமே கானான் தேசத்திற்குள் பிரவேசித்தார்கள். மற்றவர்களுடைய பிள்ளைகள் கானான் தேசத்திற்குள் பிரவேசித்தார்கள். ஆனால் எகிப்திலிருந்து புறப்பட்ட பொழுது இருந்த
நபர்களில் கானான் தேசத்திற்குள் நுழைந்தது இரண்டு நபர்கள் மட்டுமே. அவர்கள் காலேப், யோசுவா. யோசுவா என்பதன் அர்த்தம் இரட்சிப்பு. காலேப் என்பதன் அர்த்தம் நாய்.
கானான்
தேசத்திற்குள் பிரவேசித்த காலேப், யோசுவா மாத்திரமே நாற்பது வயதிற்கு மேற்ப்பட்டவர்கள். மற்றவர்கள் அனைவரும் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள்.
யூதக்கலாச்சாரப்படி
ஒரு ஆண் மகன் நாற்பது வயதில் திருமணம் செய்ய வேண்டும். பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்வார்கள். ஆனால் ஆண்கள் நாற்பது வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும். அப்படியானால், இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள்
நுழையும்போது 98% ஆண்கள் திருமணம் செய்யாதவர்களாகவே இருந்தார்கள். பெண்கள் அநேகர் விதவைகளாக இருந்தார்கள்.
ஒரு
இளம் தலைமுறையினர் தான் கானான் தேசத்திற்குள் பிரவேசித்தார்கள். கானான் தேசத்திற்குள்
பிரவேசித்த இளம் தலைமுறையினருக்கு பத்து கட்டளைகளைப் பற்றியும், பத்து வாதைகளைப் பற்றியும்,
செங்கடல் இரண்டாக பிளந்ததையும், எகிப்தில் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றியும் அதிகமாக
தெரிந்திருப்பதில்லை. இவர்கள் அனைவரும் பாலைவனத்தில்
பிறந்தவர்கள்.
இவர்களுடைய
பெற்றோர் நாங்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தோம் என்று சொல்லும்போது, நம்பியிருக்க
மாட்டார்கள். எகிப்தியர் உங்களை அடித்து வேலைவாங்கும்போது
நீங்கள் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்று கேட்டிருப்பார்கள். ஏனென்றால், பாலைவனத்தில் யாராவது இஸ்ரவேலர்களை எதிர்த்தால்
அவர்களை திருப்பி அடித்துதான் இவர்களுக்கு பழக்கம். இவர்களுக்கு விரோதமாய் யார் வந்தாலும் ஆண்டவர் அவர்ளை
தோற்கடித்துவிடுவார். விவசாயம் என்றால் என்ன
என்று தெரியாது, காரணம் வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை உண்டவர்கள். நதி, கடல் என்றால் என்ன என்று தெரியாது.
இப்படிப்பட்ட
ஜனங்களுக்கு தான் மோசே நோபோ மழையில் மரிப்பதற்கு முன்பாக மூன்று பெரிய பிரசங்கங்களை
செய்கிறார்.
1. கர்த்தருடைய செயல்கள்
2. கர்த்தருடைய உடன்படிக்கை
3. கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள்
என்ற
மூன்று தலைப்புகளில் மிக நீண்ட ஒரு பிரசங்கத்தை மோசே செய்கிறார். உபாகமம் புத்தகத்தை வாசித்தால் யாத்திராகமம், லேவியராகமம்,
எண்ணாகமம் இந்த மூன்று புத்தகங்களின் சுருக்கம் எழுதப்பட்டிருக்கும். மூன்று பிரசங்கங்களும், அதைத் தொடர்ந்து மோசே ஜனங்களுக்கு
சொன்ன ஆலோசனையோடு உபாகமம் புத்தகம் முடிவடைகிறது.
ஆண்டவர்
மோசேயிடம் மலையைப் பார்த்து பேச சொன்னபோது, மோசே பேசாமல் மலையை தனது கோலால் அடிக்கிறார். அதனால் ஆண்டவர் நீ கானான் தேசத்தைப் பார்ப்பாய்
அதற்குள் பிரவேசிக்க மாட்டாய் என்று கட்டளையிடுகிறார். மோசேக்கு பின்பு முழு அதிகாரமும், பொறுப்பும் யோசுவாவுக்குக்
கொடுக்கப்படுகிறது.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.