01. இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும்,
தண்ணீரும் கொடுக்காதது யார்?
A) எகிப்தியர், கானானியர்
B) அம்மோனியர், மோவாபியர்
C) பெலிஸ்தியர், அமலேக்கியர்
Answer: B) அம்மோனியர், மோவாபியர்
(நெகேமியா
13:1)
02. இஸ்ரவேல் புத்திரரை சபிக்கும்படி
பிலேயாமிற்கு கூலி கொடுத்தது யார்?
A) எகிப்தியர், கானானியர்
B) அம்மோனியர், மோவாபியர்
C) பெலிஸ்தியர், அமலேக்கியர்
Answer: B) அம்மோனியர், மோவாபியர்
(நெகேமியா
13:1)
03. தேவனுடைய ஆலயப் பிரகாரங்களில் ஒரு
அறையை தொபியாவுக்கு ஆயத்தம்பண்ணியது யார்?
A) மல்கியா
B) நெகேமியா
C) எலியாசிப்
Answer: C) எலியாசிப்
(நெகேமியா
13:5)
04. எலியாசிப் தொபியாவிற்காக தேவனுடைய
ஆலயத்தின் பிரகாரத்தில் அறையை உண்டுபண்ணும்போது நெகேமியா எங்கு இருந்தான்?
A) எருசலேம்
B) பாபிலோன்
C) எகிப்து
Answer: B) பாபிலோன்
(நெகேமியா
13:6,7)
05. தொபியாவின் வீட்டு தட்டு முட்டுகளையெல்லாம்
வெளியே எறிந்தது யார்?
A) எஸ்றா
B) நெகேமியா
C) சகரியா
Answer: B) நெகேமியா
(நெகேமியா
13:8)
06. எலியாசிப் தொபியாவுக்காக ஆயத்தம்
பண்ணின அறையில் என்ன இருந்தது?
A) காணிக்கை
B) சாம்பிராணி
C) பணிமுட்டுகள்
D) A & B & C இம்மூன்றும் சரி
Answer: D) A & B & C இம்மூன்றும்
சரி
(நெகேமியா
13:5,9)
07. ஓய்வு நாளில் எருசலேமிற்குள் மீன்களையும்,
சகலவித சரக்குகளையும் விற்றது யார்?
A) தீரு நகரத்தார்
B) சீதோன் பட்டணத்தார்
C) மோவாப் தேசத்தார்
Answer: A) தீரு நகரத்தார்
(நெகேமியா
13:16)
08. இரண்டொருதரம் எருசலேமுக்கு புறம்பே
இராத்தங்கியது யார்?
A) வர்த்தகர்
B) சகலவித சரக்குகளை விற்கிறவர்கள்
C) A & B இவை இரண்டும் சரி
Answer: C) A & B இவை இரண்டும்
சரி
(நெகேமியா
13:20)
09. யூதர்கள் எந்த தேசத்தின் ஸ்திரீகளை
திருமணம் செய்தார்கள்?
A) அம்மோன், மோவாப்
B) அஸ்தோத், அம்மோன், மோவாப்
C) எகிப்து, கானான்
Answer: B) அஸ்தோத், அம்மோன், மோவாப்
(நெகேமியா
13:23)
10. ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானது
யார்?
A) எலியாசிப்பின் குமாரன் ஒருவன்
B) மத்தனியாவின் குமாரன் ஒருவன்
C) யோத்சதாக்கின் குமாரன் ஒருவன்
Answer: A) எலியாசிபின் குமாரன் ஒருவன்
(நெகேமியா
13:28)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.