பழைய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்–7)
ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஏழு. முதல் ஆறு பாகத்தை வாசிக்காதவர்கள் அதை வாசித்த பின்பு இந்த ஏழாம் பாகத்தை வாசிப்பீர்கள் என்றால் வேதாகமத்தை குறித்த புதிய கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள அது வாய்ப்பாக இருக்கும்.
முதல் ஆறு பாகங்களுக்கான லிங்க்-ஐ தொட்டு வாசிக்கவும்
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று (3)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு (4)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து (5)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஆறு (6)
தாவீது:
இஸ்ரவேலர்களின் வரலாறுகளில் மட்டுமல்ல
உலக வரலாற்றையும் ஆராய்சி செய்து பார்த்தார், தாவீதைப் போன்ற சிறந்த மன்னவர் எவரும்
இல்லை. தாவீது யுத்தத்திற்கு புறப்பட்டால்,
அந்த யுத்தம் நிச்சயம் வெற்றி பெறும். தாவீது
விவசாயம் செய்தால் செழிப்பாய் காணப்படும்.
தாவீதின் காலத்தில் இஸ்ரவேல் நாடு சுவிச்சத்தின் எல்லையை தொட்டது என்பார்கள். இஸ்ரவேலர்களின் பொற்காலம் என்று தாவீதின் காலத்தை
குறிப்பிடுவார்கள். இன்று வரை இஸ்ரவேலர்கள்,
தாவீதின் கல்லறைக்கு செல்லும்போது, ஆண்டவரே தாவீதைப்போல ஒரு மன்னனை எங்களுக்குத் தாரும்
என்று ஜெபிப்பார்கள்.
தாவீதிற்கு முன்பாக இருந்த எந்த ஒரு தலைவருக்கும்
கர்த்தருக்கென்று ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லை. தாவீது முதல் முதலாக கர்த்தருடைய உடன்படிக்கைப்
பெட்டியை வைப்பதற்காக ஆலயம் கட்ட வேண்டும் என்று தீர்மானம் பண்ணினார்.
நான்
மச்சுப்பாவப்பட்ட அரண்மனையில் இருக்கும்போது, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி மாத்திரம்
ஏன் கூடாரத்தில் இருக்க வேண்டும் என்று யோசித்த தாவீது, தனது யோசனையை தீர்க்கதரிசியாகிய
நாத்தானிடம் தெரியப்படுத்துகிறார். நாத்தான்
ஆண்டவரிடம் கேட்டபோது, ஆண்டவர் தாவீது யுத்த வீரன் என்பதால் அவன் கைகள் இரத்தக்கரைகளால்
நிறைந்துள்ளது. தாவீதின் மகன் எனக்காக ஆலயம்
கட்டுவான் என்று ஆண்டவர் சொல்லுகிறார். தாவீது
ஆலயம் கட்டத் தேவையான பணத்தையும் பொருட்களையும் சேகரிக்கிறார். தாவீதின் மகன் சாலொமோன் ஆண்டவருக்காக தேவாலயத்தைக்
கட்டுகிறார்.
கர்த்தருக்கு
ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்பது ஆண்டவருடைய யோசனை அல்ல. ஆண்டவர் தனக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்று எங்கும்
செல்லவில்லை. கர்த்தருக்கு ஆலயம் கட்ட வேண்டும்
என்பது தாவீதின் யோசனை. பிற்காலத்தில் தாவீதின்
யோசனையை தனது யோசனையாக மாற்றிக்கொண்டு, பரலோகத்தில் ஆண்டவர் ஒரு தேவாலயம் கட்டுகிறார்
என்றும், அந்த ஆலயத்தில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி காணப்பட்டது என்றம் வெளிப்படுத்தல்
11:19-ல் வாசிக்கிறோம்.
எபூசியர்கள்
கையிலிருந்து தாவீது சீயோனைப் பிடித்தார்.
சீயோன் என்பது ஒரு எபூசிய சொரூபம்.
சீயோன் என்பதன் அர்த்தம் சந்திரன்.
எபூசியர்கள் தாவீதைப் பார்த்து, நீ மற்ற எல்லைகளைப் பிடிக்கலாம், ஆனால் நீ எங்கள்
சீயோனைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், ஏபூசியரில் உள்ள குருடர்களும், சப்பானிகளுமே
உன்னை தோற்கடித்துவிடுவார்கள் என்று சவால்விடடார்கள். இதனால் கோபமடைந்த தாவீது அவர்களோடு போர்த்தொடுத்து
சீயோனையும் பிடித்தார். பின்பு தாவீது அந்த
சீயோனை தனது நகரமாக மாற்றிக்கொண்டார். தாவீது
சீயோனை தனது நகரமாக மாற்றினது போல, ஆண்டவரும் சீயோனை தனது நகரமாக மாற்றிக்கொண்டார். கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்.
(சங்கீதம் 128:5) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
தாவீது
செய்த இந்த இரண்டு காரியங்களை ஆண்டவர் தன்னுடையவைகளாக மாற்றிக்கொண்டார். தாவீது இந்த அளவிற்கு ஆண்டவரோடு இருந்ததனாலேயே,
ஆண்டவர் தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சொல்லுகிறார்.
தாவீதின்
முடிவும் ஒரு ஆசீர்வாதமான முடிவாகவே இருந்தது.
தாவீது யுத்தத்திலோ அல்லது நோய்வாய்ப்பட்டோ மறிக்கவில்லை. முதிர்வயதில் எந்த ஒரு குறைவும் இல்லாமல் மரணமடைந்தார்.
சாலொமோன்:
தாவீதுக்குப் பின் தாவீதின் மகன் இஸ்ரவேல்
தேசத்தை அரசாண்டான். சாலொமோன் ஆரம்ப நாட்களில்
மிகச் சிறப்பாகவே ஆட்சி செய்தான். சவுலும்
சாலொமோனும் பரலோகம் சென்றிருக்க முடியாது.
சவுல் மரிப்பதற்கு முந்தின நாள் சூனியக்காரியை
சந்தித்தான். அவன் பரலோகம் சென்றிருக்க வாய்ப்பு
இல்லை.
1 இராஜாக்கள் 6-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்,
சாலொமோனுடைய மனைவிமார்கள் அவனை அந்நிய தெய்வங்களை வணங்கவும், அவைகளுக்கு ஆராதனை செய்யவும்
வைத்தார்கள். இதுதான் சாலொமோனின் முடிவு. அதன் பின்பு அவர் மனம் திரும்பியதாகவோ, ஆண்டவரிடம்
மன்னிப்புக் கேட்டதாகவோ நாம் வேதத்தில் வாசிக்க
முடியாது. சாலொமோனும் பரலோகம் சென்றிருக்க
முடியாது.
சாலொமோன் ஆரம்ப காலத்தில் சிறந்த மனிதனாகவே
இருந்தார். நமக்கு தாவீது என்ற ஒரு சிறந்த
மனிதனைப் பார்ப்பதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. சாலொமோன் அவருடைய பிள்ளையாக வாழ்ந்தவர்.
நாம்
கணவில் கூட ஆண்டவரை தரிசித்தது இல்லை. ஆனால்,
சாலொமோனுக்கு ஆண்டவர் தரிசனமாகி நீ விரும்புவதை எண்ணிடத்தில் கேள் என்றார். சாலொமோன் ஆண்டவரிடம் ஞானத்தைக் கேட்டார். ஆண்டவரும் அவருக்கு ஞானத்தையும், ஐசுவரியத்தையும்
கொடுத்தார்.
வேதாகமத்தில்
மூன்று புத்தகங்களை எழுதும் பாக்கியத்தை ஆண்டவர் சாலொமோனுக்கு கொடுத்தார். (நீதிமொழிகள்,
பிரசங்கி, உன்னதப்பாட்டு). முப்பத்து ஒரு நீதிமொழிகளும்
சாலொமோன் எழுதியது அல்ல, ஆனால் அதிகபடியான நீதிமொழிகளை சாலொமோன் எழுதியுள்ளார்.
ஞானம்:
நீதிமொழிகள் புத்தகத்தில் அதிக இடங்களில்
ஞானம் என்ற வார்த்தையை நாம் பார்க்கலாம். இவை
அனைத்தும் சாலொமோன் எழுதின நீதிமொழிகள். நீதிமொழிகள்
8:17-ல் அதிகாலையிலே என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் என்று வாசிக்கிறோம். இதை சொன்னவர் ஆண்டவர் அல்ல. “ஞானம்” என்னை அதிகாலையில் தேடுங்கள் என்று சொல்லுகிறது. ஆண்டவரை எந்த நேரத்தில் தேடினாலும் அவர் பதில் தருவார்.
ஞானம் தான் கடவுள் என்று நினைப்பது தவறு. கடவுளிடம் ஞானம் இருக்கிறது. நான் அவருடைய மடியில் செல்லப்பிள்ளையாய் இருப்பேன்
என்று ஞானம் தான் சொல்லுகிறது. இயேசு அப்படி
சொல்லவில்லை.
இயேசு கிறிஸ்து ஏழு ஆவிகளை உடையவர் என்று வெளிப்படுத்தல் 3:1-ல் வாசிக்கிறோம். இந்த வசனம் ஏசாயா 11-ம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டது. இயேசு பரிசுத்த ஆவியை உடையவர் என்றும். அந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஏழு அம்சங்கள் உள்ளதாகவும்
நாம் இங்கு வாசிக்கிறோம். அந்த ஏழு அம்சங்களில்
ஒன்று அவர் ஞானத்தின் ஆவியானவர். இயேசு கிறிஸ்துவிடம்
ஞானம் உள்ளது. ஆனால் இயேசு கிறிஸ்து ஞானம்
அல்ல.
வார்த்தை என்பது கடவுள். வார்த்தைக்குள்ளாகத்தான் ஞானம் இருக்கிறது. கடவுள் தான் ஞானத்தைக் கொடுக்க முடியும். யாக்கோபு 1:5.
ஞானக்கன்மலை என்பது இயேசுவைக் குறித்து
சொல்லப்பட்ட ஒரு உவமேயம். இயேசு கன்மலை அல்ல. யூதாவின் ராஜ சிங்கம் என்று இயேசு கிறிஸ்துவை சொல்லுகிறோம். அப்படியானால் இயேசு கிறிஸ்து சிங்கம் அல்ல. அது ஒரு உவமேயம். அவருடைய வல்லமையைக் காண்பிப்பதற்கு அவர் சிங்கம்
என்றும், அவருடைய உறுதியைக் காட்டுவதற்கு அவர் கன்மலை என்றும் எழுதப்பட்டுள்ளது. அவர் சர்வ ஞானி என்பதைக் காட்டுவதற்கு ஞான ஒளி என்றும்
கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து ஞானம் அல்ல. இவை அனைத்தும் உவமேயங்கள்.
உன்னதப்பாட்டு:
தீர்க்கதரிசனங்களை புரிந்து கொள்வது என்பது
கடினமான காரியம். கவிதையை புரிந்துகொள்வது
என்பது கடினமான காரியம். கவிதை என்பது ஏதோ
ஒரு காரியத்தை சொல்வதற்கு, ஏதோ ஒரு காரியத்தைப் பேசிக்கொண்டிருக்கும்.
எ.கா: நாம் ஜெபிக்கும்போது ஆண்டவரை சாரோனின்
ரோஜா என்றும், பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் என்று அழைக்கிறோம். ஆனால், நாம் சாரோனின் ரோஜாவையும் பார்த்தது இல்லை,
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்தையும் பார்த்தது இல்லை. இவைகளெல்லாம் இஸ்ரவேல் தேசத்தில் உள்ள பூக்கள். நாம் இவைகள் என்ன என்று தெரியாமலேயே சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
உன்னதப்பாட்டு என்பது தீர்க்கதரிசனமும்,
கவிதையும் சேர்ந்த ஒரு புத்தகம். இயேசு கிறிஸ்துவுக்கும்
சபைக்கும் உள்ள உரவை, இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்பாக
பாடலாக பாடிவிட்டார் சாலொமோன்.
இப்படி ஆண்டவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு
பாத்திரம் தான் சாலொமோன். இந்த சாலொமோன் பின்நாட்களில்
ஆண்டவரை விட்டு வழிவிலகி ஆண்டவர் அறுவெறுக்கக்கூடிய காரியங்களைச் செய்தார்.
Block Magic என்பது சாத்தான் சம்பந்தப்பட்ட
ஒரு இடம். இதன் தலைமையகம் ஸ்காட்லாந்தில் உள்ள
பெர்த் என்ற இடத்தில் உள்ளது. இங்கு சாத்தானைப்
பற்றி அநேக புத்தங்கள் உள்ளது. அதில் சிறந்த
புத்தகம் தான் Solomon’s Block Book. வேதாகமத்தை
எழுதுவதற்கு மிகக் குறுகிய நபர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் ஒருவர் சாலொமோன். வேதாகமத்தில் மூன்று புத்தகங்களை எழுதின சாலொமோன்
கடைசி நாட்களில் சாத்தான்களில் உதவியால் Solomon’s Block Book என்ற புத்தகத்தை எழுதுகிறார். இப்புத்தக்தில் சாத்தானை எப்படி எழுப்புவது, சாத்தானை
எப்படி வளர்ப்பது, இப்படி பல்வேறு காரியங்களை சாலொமோன் பெரிய சாத்தானை அழைத்து, அதை
கட்டுப்படுத்தி, அதன் ஆலோசனைப்படி எழுதியுள்ளார்.
இதை மையமாக வைத்துதான் இன்று சாத்தான் சபைகள் இயங்கி வருகின்றன. சாலொமோன் நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டை
எழுதிய அந்த உயர்ரக எபிரெய மொழியைக் கொண்டே பிசாசுகளை வர்ணித்து இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
சாலொமோன் கட்டிய ஆலயம் திறக்கப்படும்போது
வானத்திலிருந்து ஷக்கினா மகிமையின் மேகம் இறங்கி வந்தது. அப்படியெல்லாம் ஆண்டவருக்குள்ளாக இருந்த மனிதன்,
வழிதவறி சென்றதால் ஆண்டவர் கோபமடைந்தார். எனவே
ராஜ்யத்தை இரண்டாக பிரித்தார். சாலோமோன் காலத்தில்
பிரிக்கவில்லை. அவனுடைய மகன் காலத்தில் முழு
இஸ்ரவேலையும் ஆண்டவர் இரண்டாகப் பிரித்தார்.
தாவீதுக்கு வாக்குப்பண்ணியதால் ஆண்டவர் சாலொமோன் காலத்தில் ராஜ்யத்தை பிரிக்கவில்லை. சாலொமோன் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேலை ஆட்சி செய்து
மரித்துப்போனான்.
ராஜ்யம்
பிரிக்கப்படுதல்:
சாலொமோனின் நாட்களுக்குப் பின்பு சாலொமோனின்
மகன் ரெகோபெயாம் ஆட்சிக்கு வந்தான். ரெகோபெயாம்
பெத்தேலுக்கு சென்றபோது ஜனங்கள் அனைவரும் அவனிடம் வந்து, உங்கள் தகப்பன் எங்கள் மேல்
அதிக வரியை சுமத்தினார். நீர் எங்களுக்கு வரியைக்
குறைக்க வேண்டும் என்று முறையிட்டார்கள். அவன்
மூன்று நாள் அவகாசம் கேட்டு, தன் ஆலோசனைக் காரரிடத்தில் ஆலோசனை கேட்டான். ஆலோசனைக்காரர்கள் ஜனங்கள் கேட்பது சரிதான் உங்கள்
தகப்பன் அதிக வரியை ஜனங்களிடமிருந்து வாங்கினார், நீங்கள் குறைக்க வேண்டும் என்று சொன்னார்கள். ரெகோபெயாம் தன்னை ஒத்த வாலிபர்களிடம் சென்று இதைப்
பற்றி கேட்ட போது, அவர்கள் நீ ஆட்சிக்கு வந்ததும் ஜனங்கள் விருப்பத்தை நிறைவேற்றினால்
ஜனங்கள் உன்னை மதிக்கமாட்டார்கள். வரியை குறைக்க
வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்கள்.
சாலேமோன் ஆலோசனைக் காரரின் ஆலோசனையை தள்ளி,
ஜனங்களிடம் வந்து நான் வரியை குறைக்க மாட்டேன். என் தகப்பன் உங்களுக்கு விதித்த வரியைக்
காட்டிலும் நான் உங்களுக்கு விதிக்கும் வரி அதிகமாய் இருக்கும். என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்கிலும்
பருமனாயிருக்கும். (1 இராஜாக்கள் 12:10) என்று கூறினான். இதைக் கேட்ட ஜனங்கள் அவனை ராஜாவாக ஏற்றுக்கொள்ள
மறுத்தார்கள். ரெகோபெயாமை துரத்தி அடித்தார்கள். உலக வரலாற்றிலேயே ஜனங்கள் ராஜாவை துரத்தி அடித்த
நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும். ரெகோபெயாம்
எருசலேமில் வந்து ஒளிந்து கொண்டார்.
வடக்கு
ராஜ்யம்:
ஜனங்கள் எகிப்தில் வாழ்ந்து வந்த நேபாத்தின்
குமாரனாகிய எரொபெயாமை அழைத்து அவனை தங்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார்கள். யூதா, பென்யமீன் கோத்திரத்தை தவிற மற்ற பத்து கோத்திரங்கள்
இந்த எரொபெயாமை ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த எரொபெயாம் ஜனங்கள் கடவுளை ஆராதிப்பதற்காக எருசலேமிற்கு அதாவது யூத எல்லைக்குள்
செல்லக்கூடாது என்பதற்காக, வடக்கு எல்லை தானிலும், தெற்கு எல்லை பெத்தேலிலும் இரண்டு
கோயில்கலை கட்டினான். ஒரு பலிபீடத்தை உண்டு
பண்ணி தங்கத்தில் எகிப்தியர்கள் வணங்கும் ஓப்பூஸ் தெய்வத்தை அதாவது மாட்டு சிலையை பலிபீடத்தின்
மேல் வைத்தான்.
ஜனங்கள் பொதுவாக பார்ப்பதை அதிகம் விரும்புவார்கள். பார்ப்பதை மாத்திரமே நம்பினார்கள். எருசலேம் தேவாலயத்தில் கடவுளையோ, உடன்படிக்கைப்
பெட்டியையோ பார்க்க முடியாது. ஆனால், இந்த
எரொபெயாம் கட்டின அந்த ஓப்பூஸ் கன்றுக்குட்டியை அவர்களால் பார்க்க முடிந்தது. ஜனங்களுக்கும் அதுதான் தங்கள் கடவுள் என்ற எண்ணம்
வந்தது.
ஆசாரிய வேலைக்கென்று கர்த்தர் லேவி கோத்திரத்தை
தெரிந்துவைத்திருந்தார். இந்த எரொபெயாம் ஆசாரியராக விரும்புகிற அனைவரையும் ஆசாரியராக்கினான். இப்படி ஜனங்களுடைய மனதில் இடம் பிடித்தான்.
எரொபெயாம்
முதல் ஓசெயா வரை மொத்தம் பத்தொன்பது ராஜாக்கள் வடக்கு ராஜ்யத்தை ஆட்சி செய்தார்கள். வடக்கு ராஜ்யத்தில் ராஜாவாக வந்த எவரும் யூதா கோத்திரத்தார்
அல்ல. இவர்கள் தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்தவர்களும்
அல்ல, ஒருவர் மரித்தபின்பு, வேறொரு நபரை ஜனங்களாகவே ராஜாவாக ஏற்படுத்திவிடுவார்கள்,
இல்லையேல் ராஜாவை வெட்டி கொலை செய்து, கொலைசெய்த படைத்தலைவன் ராஜாவாக ஏற்படுத்தப்படுவான். இந்த பத்தொன்பது நபர்களில் ஒருவரும் தேவபக்தி நிறைந்தவர்கள்
அல்ல. இந்த பத்தொன்பது ராஜாக்களில் மிகவும்
மோசமான ராஜா ஆகாப் ராஜா.
ராஜாக்கள் பரம்பரையாக ஆட்சி செய்யாததால்,
வடக்கு ராஜ்யத்திற்கென்று தலைநகரம் என்று ஒன்று இல்லை. ஆகாபின் தகப்பன் ஒம்ரி வடக்கு ராஜ்யத்திற்கென ஒரு
தலைநகரை ஏற்படுத்தினார். அந்த தலைநகரத்திற்கு
தனது பெயரையே சூட்டினான். ஒம்ரி ஏற்படுத்தின
தலைநகரத்தின் பெயர் சம்ஒம்ரியா. இதுவே பிற்காலத்தில்
சமாரியா என்று அழைக்கப்பட்டது. ஒம்ரியின் காலத்திலிருந்து
வடக்கு ராஜ்யத்தின் தலைநகரம் சமாரியா.
சாலொமோனின் நாட்கள் வரை இஸ்ரவேல் என்றால்
அது முழு இஸ்ரவேல் தேசத்தையும் குறிக்கும்.
சாலொமோனுக்கு பின்பு இஸ்ரவேல் அல்லது இஸ்ரவேல் புத்திரர் என்றால், இவற்றுள்
யூதா மற்றும் பென்யமீன் கோத்திரம் இடம் பெறாது.
தேசம் பிரிக்கப்பட்ட பின்பு, தாண் முதல் பெத்தேல் வரை உள்ள பத்து கோத்திரங்களே
இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
சமாரியா
என்பதும் இந்த பத்து கோத்திரங்களைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். இந்த பத்து கோத்திரத்திற்கும் சமாரியா தலைநகரம்
என்பதால், சமாரியா என்பதும் தாண் முதல் பெத்தேல் வரை உள்ள பத்து கோத்திரத்தையே குறிக்கும்.
எப்பிராயீம்
அல்லது எப்பிராயீம் புத்திரர் என்பது இந்த பத்து கோத்திரத்தைக் குறிக்கிறது. தேசம் பிரிக்கப்பட்ட பின்பு எப்பிராயீம் என்பது
எப்பிராயீம் கோத்திரத்தை மட்டும் குறிப்பதில்லை, தாண் முதல் பெத்தேல் வரை உள்ள அந்த
பத்து கோத்திரங்களையும் குறிக்கும். இந்த பத்து
கோத்திரங்களில் எப்பிராயீம் கோத்திரத்தில் அதிக ஜனங்கள் வாழ்ந்ததால் எப்பிராயீம் என்பது
வடக்கு ராஜ்யம் முழுவதையும் குறிக்கும்.
பாசான்
என்பதும் இந்த பத்து கோத்திரத்தையே குறிக்கும்.
ஏசாயா தீர்க்கதரிசி வடக்கு ராஜ்யத்தைக் குறிக்கும் போது பாசான் மாடுகளே என்று
அநேகமுறை குறிப்பிடுகிறார்.
இஸ்ரவேல்,
சமாரியா, எப்பிராயீம், பாசான் இவையனைத்தும் வடக்கு ராஜ்யம் தாண் முதல் பெயர்செபா வரை
உள்ள பத்து கோத்திரங்களைக் குறிக்கும்.
அசீரியர்கள்:
கி.மு
722-ம் ஆண்டு அசீரியர்கள் வடக்கு ராஜ்யத்தை தாக்கி அவர்களை தோற்கடித்தார்கள். இந்த அசீரியா ராஜா பல நாடுகளை கைப்பற்றியிருந்தார். ஆசீரிய
ராஜா வடக்கு ராஜ்யத்தைக் கைப்பற்றியபோது, தான் கைப்பற்றியிருந்த மற்ற நாடுகளில் வடக்கு
ராஜ்யத்தின் புத்திரரை குடியேறப்பண்ணினான்.
சிலர் மாத்திரமே வடக்கு ராஜ்யத்தில் இருந்தார்கள்.
சல்மனேசார்,
சனகெரிப் இவர்கள் அசீரியாவின் மன்னர்கள். அசீரியா
என்பது மிகப் பெரிய சாம்ராஜ்யம். அசீரியர்கள்
அநேக நாடுகளைக் கைப்பற்றினார்கள். அசீரியர்கள்
கைப்பற்றின நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரையும் அடிமையாக ஏற்படுத்தவில்லை. ஒரு நாட்டைக் கைப்பற்றியதும், அந்நாட்டில் உள்ள
ஜனங்களை பிடித்து, அவர்கள் கைப்பற்றியுள்ள மற்ற நாடுகளில் அவர்களைப் போட்டார்கள். அசீரியர்கள் அநேக நாடுகளை கைப்பற்றினதால், அவர்கள்
அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களுக்கு விரோதமாக செயல்படக் கூடாது என்பதற்காக அசீயர்கள்
தாங்கள் கைப்பற்றின நாடுகளில் உள்ள ஜனங்களை ஒரே இடத்தில் வாழ விடவில்லை. அங்கும் இங்கும் ஜனங்களை சிதறியடித்தார்கள்.
அசீரியா
ராஜா வடக்கு ராஜ்யத்தில் இருந்த ஜனங்களில் சிலரை, வேறுதேசங்களுக்கு கொண்டு சென்றதுபோல,
தாங்கள் கைப்பற்றின வேறு தேசங்களில் வாழ்கின்ற ஜனங்களை வடக்கு ராஜ்யத்தில் குடியமர்த்தினான். வடக்கு ராஜ்யத்தில் வாழ்கின்ற இஸ்ரவேலர்கள், வேறு
தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு விருத்தசேதனம் செய்து, அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். இப்படி வேறு தேசத்திலிருந்து வந்தவர்களையும் இஸ்ரவேலராக
மாற்றிக்கொண்டார்கள் இந்த வடக்கு ராஜ்யத்தில் வாழ்கின்றவர்கள்.
அசீரியர்கள்
வடக்கு ராஜ்யத்தில் பிடித்த ஜனங்களில் சிலரை ஆப்பிரிக்காவில் குடியமர்த்தினார்கள். அவர்களுடைய சந்ததியில் வந்தவர் தான் சிரேனே ஊரானாகிய
சீமோன். இவனுடைய மூதாதையர்கள் 722 வருஷங்களாக
ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததால், அவர்களுடைய நிரங்கள் அனைத்தும் ஆப்பிரிக்கர்களைப்போலவே
மாறியிருக்கும். இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து
கொண்டு போகையில், கருப்பு நிறத்தில் ஒருவனை கண்டதும், ரோம வீரர்கள் அந்த சிரேனே ஊரானாகிய
சீமோனை அழைத்து, இயேசு கிறிஸ்துவின் சிலுவையை தூக்குமாறு வர்புறுத்தினார்கள்.
தெற்கு
ராஜ்யத்தில் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தார் வாழ்ந்து வருகிறார்கள்.
வடக்கு
ராஜ்யத்திற்கு வேறு தேசத்திலிருந்து வந்த ஜனங்கள், விருத்தசேதனம் செய்து வடக்கு ராஜ்யத்தில்
உள்ளவர்களை திருமணம் செய்ததால், நாங்களும் இஸ்ரவேலர்கள், நாங்களும் யூதர்கள் என்று
தங்களை அழைத்துக்கொண்டார்கள். இதை யூதா மற்றும்
பென்யமீன் கோத்திரத்தார் அதாவது தெற்கு ராஜ்யத்தினர் வெறுத்தார்கள்.
வடக்கு
ராஜ்யத்தில் உள்ள அனைவரும் சிதறடிக்கப்பட்டதால், அவர்கள் தெற்கு ராஜ்யத்தில் உள்ள யூதா
மற்றும் பென்யமீன் கோத்திரத்தோடு இணையப் பார்த்தார்கள். ஆனால் தெற்கு ராஜ்யத்தில் உள்ள யூதர்கள் அவர்களை
ஏற்றுக்கொள்ளவில்லை. சமாரியர்களை யூதர்கள்
ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் அவர்களுக்கென தனி டோராவை (நியாயப்பிரமானத்தை) ஏற்படுத்திக்
கொண்டார்கள். இவர்கள் கெரிசீம் என்ற மலையை
ஆண்டவருடைய மலையாக்கிக்கொண்டு, அதை வணங்க ஆரம்பித்தார்கள். இதனால் யூதர்கள் சமாரியர்களை அறுவெறுத்தார்கள்.
யூதர்கள்
எருசலேமிலிருந்து கலிலேயா செல்ல வேண்டுமானால் சமாரியாவைக் கடந்துதான் செல்ல வேண்டும்,
ஆனால் யூதர்கள் மாற்று வழியாக எருசலேமிரிருந்து யோப்பா சென்று, கடற்கரை வழியாக செசரியாவிற்கு
வந்து, அங்கிருந்து மெகிடோ பள்ளத்தாக்கு வழியாக கலிலேயாவிற்கு வருவார்கள். அல்லது எருசலேமிலிருந்து எரிகோவிற்கு வந்து, யோர்தான்
நதிக்கு வந்து கலிலேயாவிற்கு செல்வார்கள்.
சமாரியாவிற்குள் மாத்திரம் நுழைய மாட்டார்கள்.
வடக்கு
ராஜ்யத்தில் உள்ள இஸ்ரவேலர்கள், அசீரியர்களால் தங்கள் தேசத்தில் குடியமர்த்தப்பட்ட
மற்ற தேசத்தார்களுக்கு விருத்தசேதனம் செய்து, அவர்களை திருமணம் செய்து அவர்களோடு கலந்ததுபோல,
வடக்கு ராஜ்யத்திலிருந்து பிரிந்து சென்று, வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்ற இஸ்ரவேலர்கள்
அந்த நாட்டில் உள்ள ஜனங்களோடு கலக்கவில்லை.
இப்படி சிதறடிக்கப்பட்டவர்களே கி.பி.1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி இஸ்ரவேல்
நாட்டிற்குள் வந்தார்கள்.
ஐந்து
சாம்ராஜ்யங்கள்:
உலகில்
முதன் முறையாக அநேக நாடுகளைக் கைப்பற்றிய பெருமை அசீரியர்களையே சாரும். அசீரியர்களே உலகத்தின் முதல் சாம்ராஜ்யமாக விளங்கினார்கள். இரண்டாவதாக பாபிலோனியர்கள் அசீரியர்களைக் கைப்பற்றியதால்,
அவர்கள் இரண்டாவது சாம்ராஜ்யமாக உருவாகினார்கள்.
மூன்றாவதாக மேதியர்களும், பெர்சியர்களும் இணைந்து பாபிலோனியர்களைக் கைப்பற்றியதால்,
மேதியா பெர்சியா சாம்ராஜ்யம் மூன்றாவது பெரிய சாம்ராஜ்யமாக உருவானது. இந்த மேதிய பெர்சியர்களின் ஆட்சியில் அவர்களுக்கு
கீழ் இருந்த நாடுகளின் எண்ணிக்கை நூற்று இருபத்து ஏழு (எஸ்தர் 1:1). கி.மு.334-ல் மகா அலெக்சாண்டர் எழும்பி மேதியா,
பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினார். எனவே உலகில்
தோன்றி நான்காவது சாம்ராஜ்யம் கிரேக்க சாம்ராஜ்யம். மகா அலெக்சாண்டர் ஒரு கிரேக்கர். கி.பி64-ல் ரோமர்கள் கிரேக்க சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றி
முழு உலகையும் ஆட்சி செய்தார்கள். உலகில் தோன்றிய
ஐந்தாவது சாம்ராஜய்ம் ரோம சாம்ராஜ்யம்.
அசீரியா என்பது தற்போது உள்ள ஈசான், ஈராக் பகுதியாகும். பாபிலோனியா என்பது ஈராக் பகுதி. பெர்சியா என்பது ஈரான் பகுதி. நினிவே ஈராக் பகுதியில் உள்ளது. அசீரியர்களின் தலைநகரம் நினிவே.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.