பழைய ஏற்பாட்டு ஆய்வு (பாகம்–6)
ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கம் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஆறு. முதல் ஐந்து பாகத்தைப் வாசிக்காதவர்கள் அதை வாசித்தபின்பாக இந்த ஆறாம் பாகத்தைப் பார்ப்பீர்கள் என்றால், வேதத்தில் உள்ள ஆழமான கருத்துக்களை அறிந்துகொள்ள அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கீழே உள்ள லிங்க்-யை பயன்படுத்தி முந்தைய பாகங்களை வாசிக்கவும்.
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஒன்று (1)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் இரண்டு (2)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் மூன்று (3)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் நான்கு (4)
பழைய ஏற்பாட்டு ஆய்வு பாகம் ஐந்து (5)
1 சாமுவேல்
சாமுவேல்:
சாமுவேலுக்கு சிறு வயதிலிருந்தே தாய்,
தகப்பனின் ஆதரவு கிடைக்கவில்லை. எனினும்,
ஆண்டவருடைய கிருபையின் கரம் சாமுவேலோடு கூட இருந்தது. சாமுவேல் சிறுவனாய் இருக்கும்போதே ஆண்டவர் அவனோடு
பேசினார். பின்நாட்களில் தாண் முதல் பெயர்செபா
வரைக்கும், அதாவது முழு இஸ்ரவேலுக்கும் தீர்க்கதசிரியாக சாமுவேலை ஆண்டவர் உயர்த்தினார்.
சாமுவேல் முழு இஸ்ரவேலையும் இரட்சிப்புக்குள்
வழிநடத்த மிகவும் பிரயாசப்பட்டார். பன்னிரண்டு
பிரிவுகள் அடங்கிய முழு இஸ்ரவேல் தேசத்திற்கும், நான்கு கோத்திரங்களுக்கு ஒன்று என்ற
விகிதத்தில் மூன்று பாடசாலைகளை (வேதாகம கல்லூரி) நிறுவினார். பாடசாலைகள் மூலமாக மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைக்
கற்பித்தார். ஒரு பாட சாலையில் மூன்று மாதங்கள்
தங்கியிருந்து அங்குள்ள ஜனங்களுக்கு நியாப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார்.
முதல் முன்று மாதங்கள் வடக்கு இஸ்ரவேல்
(இஸ்ரவேலின் மேல் பகுதி) பகுதியில் உள்ள கில்கால் என்ற இடத்தில் தங்கி, அங்குள்ள லேவிய
வாலிபர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார்.
ஏன்
லேவியருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை:
யோசுவா காலத்தில் அவர்கள் கைப்பற்றின இடங்களை
பன்னிரண்டு பிரிவுகளாக பிரித்தனர். இதில் பதினொரு
கோத்திரத்தார் பதினொரு பிரிவுளைக் கைப்பற்றினார்கள். பன்னிரண்டாவது பிரிவு காலேப்பின் சந்ததிக்கு கொடுக்கப்பட்டது. லேவி கோத்திரத்தாருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. லேவியர்கள் இந்த பன்னிரண்டு பிரிவுகளுக்கும் பிரிந்து
சென்று, மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பிரிவிற்கு நான்கு லேவிய பட்டணங்கள்
என்ற விகிதத்தில், பன்னிரண்டு பிரிவினருக்கு நாற்பத்து எட்டு லேவியப் பட்டணங்களை அமைத்து,
அந்த லேவியப்பட்டணங்களில் லேவி கோத்திரத்தார் வாழ்ந்து வந்தார்கள். ஒரு பிரிவில் நான்கு மூலைகளிலும் நான்கு லேவியப்
பட்டணங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்படையாகக்
கொண்டே, தற்போது இந்தியாவில் உள்ள பிராமணர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
சாமுவேல் கில்காலுக்கு சென்று வடக்கு இஸ்ரவேல்
பகுதியில் உள்ள நான்கு பிரிவில் வாழ்கின்ற, பதினாறு லேவியப் பட்டணங்களில் உள்ள லேவிய
வாலிபர்களை அழைத்து அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார். இந்த பதினாறு லேவியப் பட்டணங்களில் வாழ்கிற லேவிய
வாலிபர்கள் கில்காலில் உள்ள ஒரு இடத்தில் மூன்று மாதங்கள் தங்கி, சாமுவேலிடம் நியாயப்பிரமாணத்தைக்
கற்றுக்கொள்வார்கள். அப்படி இவர்கள் தங்கி
படித்த இடத்தின் பெயரையே வேதாகமத்தில் நாயோத் என்று வாசிக்கிறோம் (1 சாமுவேல் 19:18). நாயோத் என்பது ஒரு இடத்தின் பெயர் அல்ல, லேவிய வாலிபர்கள்
தங்கி நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொள்ளும் இடம்.
சாமுவேல் முதல் மூன்று மாதங்கள் கில்காலில்
தங்கியிருந்து லேவிய வாலிபர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார். கற்றுக்கொண்ட வாலிபர்கள் தங்கள், தங்கள் பகுதிகளுக்கு
சென்று அங்குள்ள ஜனங்களுக்கு அடுத்த ஒன்பது மாதங்கள் நியாயப்பிரமாணத்தை கற்றுக்கொடுக்க
வேண்டும். ஒன்பது மாதங்களுக்குப் பின்பு சாமுவேல்
மறுபடியும் அதே கில்கால் பகுதிக்கு வந்து அடுத்த மூன்று மாதங்கள், இன்னும் ஆழமான நியாயப்பிரமாண சத்தியங்களைக் கற்றுக்கொடுப்பார்.
சாமுவேல் முதல் மூன்று மாதங்கள் வடக்கு
இஸ்ரவேல் பகுதியில் உள்ள கில்கால் என்ற இடத்ததில் பதினாறு லேவிய பட்டணங்களில் உள்ள
லேவிய வாலிபர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார். அடுத்த மூன்று மாதங்கள் இஸ்ரவேலின் நடுப்பகுதியில்
உள்ள பெத்தேல் என்னும் இடத்தில் பாடசாலை (நயோத்) அமைத்து நடுப்பகுதியில் உள்ள நான்கு
பிரிவுகளில், பதினாறு லேவியப் பட்டணங்களில் வாழ்கின்ற லேவிய வாலிபர்களை அழைத்து அவர்களுக்கு
நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார். அவர்களும்
அடுத்த ஒன்பது மாதங்களுக்கு சாமுவேல் மூன்று மாதங்களில் கற்றுக்கொடுத்ததை மற்றவர்களுக்கு
கற்றுக்கொடுக்க வேண்டும். அடுத்த மூன்று மாதங்கள்
இஸ்ரவேலின் தெங்கு பகுதியில் உள்ள மிஸ்பாவிற்கு அருகில் உள்ள, சீலோ என்ற இடத்தில் பாடசாலை
அமைத்து, அங்குள்ள நான்கு பிரிவுகளில், பதினாறு லேவியப் பட்டணங்களில் வாழ்கின்ற லேவிய
வாலிபர்களை அழைத்து அவர்களுக்கு நியாப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார். அவர்களும் சாமுவேல் கற்றுக்கொடுத்ததை அடுத்த மூன்று
மாதங்கள் ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒன்பது மாதங்கள் லேவிய வாலிபர்களுக்கு
நியாப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்த சாமுவேல், கடைசி மூன்று மாதங்கள் ராமால் உள்ள தன்
வீட்டில் தங்குவார். மூன்று மாதங்களுக்கு பின்பு
மறுபடியும் வடக்கு பகுதிக்கு சென்று லேவிய வாலிபர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்க
துவங்குவார். இந்த பிரகாரமாக இருபது ஆண்டுகள்
முழு இஸ்ரவேலிலும் வாழ்கிற லேவிய வாலிபர்களுக்கு நியாயப்பிரமாணத்தை சாமுவேல் கற்றுக்கொடுத்தார்.
இருபது ஆண்டுகளுக்கு பின்பு மிஸ்பா என்ற
இடத்தில் மிகப்பெரிய எழுப்புதல் வந்தது. அதற்கு
பின்பு முழு இஸ்ரவேல் தேசமும் மனமாற்றத்திற்குள்ளாக வந்தது. சாமுவேல் ஒரு தனி மனிதனாக முழு இஸ்ரவேல் தேசத்தையும்
மனமாற்றத்திற்குள் கொண்டு வந்தார்.
இவ்வளவு திறமை வாய்ந்த சாமுவேல் நியாயப்பிரமாணத்தை
எந்த ஒரு ஆசிரியரிடமும் சென்று கற்றுக்கொள்ளவில்லை. ஆவியானவரே சாமுவேலுக்கு கற்றுக்கொடுத்தார். எந்த அளவிற்கு சாமுவேலுக்கு நியாயப்பிரமாணம் தெரிந்திருந்தது
என்றால், இருபது ஆண்டுகளில் முழு இஸ்ரவேல் தேசமும் இரட்சிக்கப்படும் அளவிற்கு சாமுவேல்
நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்தார். இன்னும்
நியாயாதிபதிகள், ரூத், 1, 2 சாமுவேல் புத்தகத்தையும் எழுதியது இந்த சாமுவேல். இவை அனைத்தையும் ஆவியானவரின் துணையோடு எழுதுகிறார்.
சாமுவேல்
செய்த தவறு:
இருபது ஆண்டுகள் முழு இஸ்ரவேலுக்கும் நியாயப்பிரமாணத்தைக்
கற்றுக்கொடுத்து ஜனங்களை நல்வழிப்படுத்தின சாமுவேல், பதினான்கு நியாயாதிபதிகளின் வாழ்க்கை
சரித்திரத்தை ஆவியானவரின் துணையோடு எழுதிய சாமுவேல், ஆண்டவரின் ஆலோசனை இல்லாமலேயே தனது
இரண்டு மகன்களையும் பெயர்செபாவிலே நியாயாதிபதியாக ஏற்படுத்துகிறார்.
சாமுவேலின் இரண்டு குமாரரும் இஸ்ரவேலை
சரியாய் நியாயம் விசாரிக்காததால் ஜனங்கள் அதிருப்தி அடைந்து சாமுவேலிடம் வந்து எங்களுக்கு
ராஜா வேண்டும் என்று கேட்டார்கள்.
இஸ்ரவேலின்
முதல் ராஜா:
ஆண்டவர் ஏற்ற நேரம் வரும்போது, யூதா கோத்திரத்திலிருந்து
ஒருவனை ராஜாவாக ஏற்படுத்த வேண்டும் என்று சித்தம் வைத்திருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே ஜனங்கள் ராஜா வேண்டும்
என்று விரும்பியதால், அவர்கள் விரும்புகிறபடியே, ராஜா உடல் அமைப்புக் கொண்ட ஒரு பென்யமீனியனை
ராஜாவாக அவர்களுக்கு கொடுத்தார். இது ஆண்டவருடைய
அனுமதிக்கப்பட்ட சித்தம். ஆனால், ஆண்டவருடைய
தூய சித்தம் யூதா கோத்திரத்தானாகிய தாவீது ராஜாவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே.
ஜனங்கள் அதற்கு முன்பாகவே ராஜா வேண்டும் என்று
விரும்பியதால் ஜனங்கள் விரும்புகிறபடி ராஜா தோற்றம் கொண்ட ஒருவனை ஆண்டவர் ராஜாவாக ஏற்படுத்தினார்.
நாமும் கூட ஆண்டவரிடம் ஒரு காரியத்தைக்
கேட்கும்போது, ஆண்டவருடைய சித்தத்தை அறிந்து கேட்கவேண்டும். ஆண்டவரின் சித்தத்தை உணராமல் நம்முடைய சுயவிரும்பத்திற்காக
நாம் ஜெபிக்கும்போது ஆண்டவர் அதை நிறைவேற்றுவார்.
ஆனால் அது ஆண்டவரின் தூய சித்தம் அல்ல, நம்முடைய விருப்பத்திற்காக அவர் அனுமதித்த
சித்தம். தூய சித்தத்தை விட, அனுமதித்த சித்தத்தில்
நாம் முழுமையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.
சாவுலை ஆண்டவர் தான் ராஜாவாக ஏற்படுத்தினார். சாமுவேல் என்ற மிகப்பெரிய தீர்க்கதரிசி மூலமாக ஏற்படுத்தினார். ஆனால் அது தேவனுடைய தூய சித்தம் அல்ல. மனிதர்களின் விருப்பத்தின் படி அனுமதிக்கப்பட்ட
சித்தம்.
சவுல்:
சவுல் ஆரம்ப காலத்தில் ஆண்டவரோடு நல்ல
ஐக்கியத்தில் இருந்த ஒரு மனிதன். தீர்க்கதரிசிகளில்
ஒருவனாக என்னப்படும் அளவிற்கு ஒரு சிறந்த மனிதன் இந்த சவுல். (1 சாமுவேல் 10:12, 1
சாமுவேல் 19:24)
ஆனால் பின்நாட்களில் கர்த்தருடைய ஆவியானவர்
அவனிடமிருந்து எடுக்கப்பட்டார். பொல்லாத ஆவி
அவனைப் பிடித்துக்கொண்டது. (1 சாமுவேல்
16:14)
ஆண்டவர் சாமுவேலின் மூலமாக அமலேக்கில்
உள்ள ராஜா முதல் அனைத்து ஜனங்களையும், கால்நடைகளையும் கொலை செய்ய வேண்டும் என்று சவுலிடம்
சொன்னார். சவுல் தன் சுய பெறுமைக்காக, அமலேக்கின்
ராஜா ஆகாகை உயிரோடே பிடித்தான். சவுல் ஆகாகை
உயிரோடே வைத்திருக்கிதைப் பார்த்த வீரர்கள், அவர்களுடைய சுய ஆசைக்காக கால்நடைகளை உயிரோடே
பிடித்தார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலிடம்
வந்து, நீ எதற்காக கால்நடைகளை உயிரோடே வைத்திருக்கிறாய் என்று கேட்ட போது, சவுல் உம்முடைய
ஆண்டவருக்கு பலியிடும்படியாக வைத்திருக்கிறேன் என்று பொய் சொல்லுகிறார். எனவே, சாமுவேல் கோபமூண்டவராக ஆண்டவர் உன் ராஜ்யத்தைப்
பிடுங்கி உன்னைவிட திறமையான ஒருவனுக்கு கொடுப்பார் என்று சொல்லுகிறார். இதுவே சாமுவேல் சவுலைப் பார்த்த கடைசி தருணம்.
(1 சாமுவேல் 15-ம் அதிகாரம்)
சவுல்
- சூனியக்காரி:
சவுலிடம் இருந்த கர்த்தருடைய ஆவியானவர்
எடுக்கப்படுகிறார். இஸ்ரவேல் நாட்டைவிட்டு
சூனியக்காரிகளை துரத்திய சவுல், மாறுவேடத்தில் சூனியக்காரியைத்தேடி புறப்படுகிறார்.
சவுல் சூனியக்காரியிடம் சென்று இறந்த சாமுவேல்
தீர்க்கதரிசியை உயிரோடு எழுப்ப வேண்டும் என்று சொல்லுகிறான். இறந்த மனிதர்களை உயிரோடு எழும்ப முடியாது. அப்படியானால், அங்கு வந்தது சாத்தான். சாத்தான் ஒலியின் தூதுனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே
என்று 2 கொரிந்தியர் 11:14-ல் வாசிக்கிறோம்.
வந்தது சாத்தான். ஆனால், வந்தது சாமுவேல்தான் என்று சூனியக்காரியும்
நினைத்தாள், சவுலும் நினைக்கிறான். அந்த அளவிற்கு
சாத்தான் நயவஞ்சகமாக சாமுவேலைப்போலவே பேசுகிறான்.
பெலிஸ்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் யுத்தம்
நடைபெற்ற போது இஸ்ரவேலர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். சவுல் தற்கொலை செய்து கொள்ளப்பார்த்து ஈட்டியை தரையில்
நட்டு அதின் மேல் படுத்தான். ஆனால் அதினால்
அவன் உயிர் அவனைவிட்டு பிரியவில்லை. அந்த நேரத்தில்
அந்த வழியே வந்த அமலேக்கியனைப்பார்த்த சவுல் ”எனக்கு வேதனை அதிகமாக இருக்கிறது” என்னை
குத்தி கொன்றுபோடு என்று சொல்லுகிறான். குத்தியது
அமலேக்கியன். அமலேக்கியன் அங்கு வருவதற்கு
வாய்ப்பே இல்லை. காரணம் யுத்தம் இஸ்ரவேலருக்கும்
பெலிஸ்தியருக்கும் நடைபெறுகிறது. அப்படியானால்,
அந்த அமலேக்கியனை அனுப்பியது ஆண்டவர். காரணம்,
அமலேக்கிலே ஒருவனையும் மீதியாக வைக்கவேண்டாம் என்று ஆண்டவர் சொன்ன வார்த்தையை சவுல்
கேட்கவில்லை. எனவே, ஆண்டவர் அதே அமலேக்கியனைக்
கொண்டு சவுலை கொலை செய்கிறார்.
தாவீது:
தாவீது எபிரோனில் ராஜாவான பிறகு, ஏழு வருடத்தில் ஆறு மனைவிகளை
திருமணம் செய்கிறார். எனவேதான், மகன் சாலொமோன்
எழுநூறு மனைவிகளை திருமணம் செய்தான். தாவீதுக்கு
எத்தனையோ பெலவீனங்கள் இருந்தாலும், முழு வேதாகமத்திலும் ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்றவன்
என்ற பட்டத்தை வாங்கியவர் இந்த தாவீது மாத்திரமே.
(1 சாமுவேல் 13: 14) (அப்போஸ்தலர் 13:22)
தாவீது ஆடு மேய்ததால், அவர் ஒரு ஏழை குடும்பத்தைச்
சார்ந்தவர் என்று அநேகர் நினைக்கிறார்கள்.
ஆனால், அவர் ஒரு மிகப்பெரிய கோடிஸ்வரர்.
நகோமி பணக்கார ஸ்திரீ. அந்நாட்களில் ஒரு குடும்பத்திற்கு ஒரு காணி வைத்திருப்பார்கள். ஆனால் நகோமியின் கணவன் மூன்று காணிகளை வைத்திருந்தான். தனக்கு ஒன்றும், தன் இரண்டு மகன்கள் மக்ளோன், கிளியோனுக்கு
இரண்டும் என மொத்தம் மூன்று காணிகளுக்கு சொந்தக்காரி இந்த நகோமி.
போவாஸ் மிகப்பெரிய கோடீஷ்வரர். ரூத்தை திருமணம் செய்யும்போது நகோமியிடமிருந்த மூன்று
காணிகளையும் வாங்குகிறார். இந்த போவாஸின் மகன்
ஓபேத். ஓபேத்தின் மகன் ஈசாய். அப்படியானால் ஈசாய் மிகப்பெரிய கோடீஸ்வரர். ஈசாயின் மகன் தாவீதும் கோடீஸ்வரர்.
உலகத்திலேயே அதி உயர் ரக செம்மறியாடு நொக்கோட்
என்று சொல்லப்படும் ஆடு. இந்த வகை ஆடுகளைத்தான்
தாவீது மேய்த்தார். தாவீது உண்மையில் ஆடுகளை
மேய்க்கவில்லை, பொழுதுபோக்குக்காக அந்த உயர்ரக ஆடுகளை வனாந்திரத்தில் மேய்த்துக்கொண்டிருந்தார்.
சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயின் வீட்டிற்கு
வந்தபோது ஈசாய் தன் குமாரர் எல்லோரையும் அழைத்து வந்தார். தாவீதை மாத்திரம் அழைக்கவில்லை. காரணம், தாவீதுக்கு இன்னும் முப்பது வயது ஆகவில்லை. இஸ்ரவேலர்கள் முப்பது வயது நிரம்பிய மனிதனையே ஒரு
வாலிபனாக எண்ணுவார்கள். அதுவரையிலும் அவர்களை
குழந்தைகளாகவே கருதுவார்கள். தாவீது பதினாறு
வயது சிறுவன் என்பதால், தகப்பனார் அவனை அழைக்கவில்லை.
சாமுவேல் ஈசாயிடம் உனக்கு இவ்வளவுதானா
பிள்ளைகள் என்ற கேட்டதும், ஈசாய் இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் சிறுவன் ஆடுகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறான்
என்று சொல்லுகிறார். உடனே ஆண்டவர் சாமுவேலுக்கு
உணர்த்துகிறார், அவன்தான், அவனை ராஜாவாக அபிஷேகம் செய் என்று சொல்லுகிறார்.
ஆள் அனுப்பி தாவீதை அழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் முன்பாக சிறுவன் தாவீதை சாமுவேல்
தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்கிறார். சாமுவேல் அபிஷேகம் செய்யும்போது அடுத்த இருபது ஆண்டுகளில்
சவுல் மரித்தபின்பு நீ இஸ்ரவேலின் ராஜாவாவாய் என்று சொல்லவில்லை. இன்று முதல் நீ இஸ்ரவேலின் ராஜா என்று தான் அபிஷேகம்
செய்கிறார். ஆனால், தாவீது மீண்டும் முன்போலவே,
ஆடுகளை மேய்க்க புறப்படுகிறார். அந்த அளவிற்கு
தாழ்மையுள்ளவர் தாவீது. தாழ்மையினாலேயே ஆண்டவருடைய
இருதயத்தில் இடம்பிடித்தார் தாவீது.
அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது ஆடுகளை மேய்த்துக்
கொண்டிருக்கிறார். பொல்லாத ஆவி பிடித்த சவுல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான். சவுலின் பொல்லாத ஆவியை விரட்ட வேண்டும் என்பதற்காக
இசைக்கருவிகளை வாசிக்க வேண்டும், நீ இசைக்கலைஞன் ஆனபடியினால் நீ அரண்மனைக்கு வரவேண்டும்
என்று தாவீதுக்கு அழைப்பு வருகிறது. ராஜாவாக
அபிஷேகம் செய்யப்பட்ட நான், ராஜாவாக நடித்துக்கொண்டிருக்கும் பொல்லாத ஆவிக்கு ஏன் இசை
வாசிக்க வேண்டும் என்று தாவீது யோசிக்கவில்லை.
ராஜாவாக இருந்தாலும் தாழ்மையோடு சென்று சவுலின் பொல்லாத ஆவியை விரட்ட இசையை வாசிக்கிறார்.
தாவீது தினந்தோறும் சவுலுக்காக இசைக்கருவியை
வாசித்துக்கொண்டிருக்கிறார். ஒருநாள் அரண்மனையில்
யாரும் இல்லாத நேரத்தில் சவுல் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். தாவீது இசைக்கருவி வாசித்துக்கொண்டிருக்கிறார்.
திடீரென்று சவுல் அருகில் இருந்த ஈட்டியை எடுத்து
தாவீதை நோக்கி எரிந்து கொலைசெய்யப்பார்த்தார்.
தாவீது ஈட்டியைப் பார்த்ததும் தப்பிச் சென்றுவிட்டார். தப்பிச் சென்ற தாவீது அதே ஈட்டியை வைத்து சவுலை
குத்தி கொலைசெய்துவிட்டு, சவுல் தன்னைத்தானே குத்திக்கொண்டு மரித்து விட்டார் என்று
சொல்லியிருந்தால், அனைவரும் அதை நம்பியிருப்பார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் ரகசிய கேமராக்கள் இல்லை. சவுலுக்குள் இருந்த பொல்லாத ஆவி அவரை கொன்றுவிட்டது
என்றே அனைவரும் நம்பியிருப்பார்கள். ஆனால்
தாவீது, சவுல் தன்னை கொலை செய்ய முயற்சித்தபோதும் பொறுமையோடு காத்திருந்தார்.
கோலியாத்-தாவீது:
பின்பு ஒருநாள் தாவீது தன் வீட்டில் இருக்கும்போது,
தகப்பனாகிய ஈசாய் இராணுவீரர்களாய் இருக்கிற தன் அண்ணன்மார்களுக்கு உணவு தயார் செய்து,
அதை தாவீதிடம் கொடுத்து அனுப்புகிறார். தாவீதின்
சகோதரரில் மூன்று பேர் சவுலின் இராணுவத்தில் இருந்தார்கள். தாவீது தன் அண்ணன்மார்களுக்கு மாத்திரம் உணவு கொண்டுசெல்லவில்லை. தன் அண்ணன்மாரோடு இணைந்து வேலை செய்யக்கூடிய ஆயிரம்
வீரர்களுக்கும் கொண்டு செல்கிறார். ஏறக்குறைய
ஆறு வண்டிகள் நிரம்பும் அளவிற்கு உணவுப்பொருட்களை தாவீது கொண்டு செல்கிறார். தாவீது உணவுப்பொருட்களை தன் அண்ணன்மாரிடம் கொடுக்கவில்லை. இராணுவ வீரர்களில் ஆயிரம் பேருக்கு அதிபதியாய் இருப்பவனிடம்
கொடுக்கிறார். இராணுவ வீரர்களுக்கு உணவு கொடுப்பது
என்பது சாதாரண காரியம் அல்ல. அவ்வளவு எளிதில்
அவர்களுக்கு யார் வேண்டுமானாலும் உணவு கொடுத்துவிட முடியாது. அதற்கென அநேக வழிமுறைகள் இருந்திருக்கும். ஆனால் சிறுவன் தாவீது இராணுவ வீரர்களுக்கு உணவு
கொண்டுசெல்கிறான், ஆயிரம் பேருக்கு அதிபதியிடம் அதைக் கொடுக்கிறான். அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார் என்றால், அந்த அளவிற்கு
மதிக்கப்பட்ட குடும்பம் தான் தாவீதின் குடும்பம்.
தாவீது தன் சகோதரரைப் பார்க்க வந்தபோது,
கோலீயாத் என்று சொல்லப்படுகிற பெலிஸ்தியன் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து உங்களில் திறமையான
ஒருவன் தனி நபராக என்னோடு சண்டையிட்டு என்னை வென்றால் நானும் என் ஜனங்களும் உங்களுக்கு
அடிமை என்று சவால் விட்டு இஸ்ரவேலின் கடவுளை நிந்தித்தான். அங்கு இருந்த அனைத்து இராணுவ வீரர்களும் பயந்துகொண்டிருக்கிற
அந்த நேரத்தில் தாவீது கோலியாத்தை தோற்கடிக்க புறப்படுகிறான். அதைப் பார்த்த அவனது அண்ணன்மார் அவனை தடுக்கிறார்கள். உனக்கு அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது, உன்னை கொன்றுவிடுவான்
என்று சொல்லி அவனை பயமுறுத்துகிறார்கள். ஆனால்,
தாவீது சவுலின் அனுமதியோடு கோலியாத்தோடு போர்புரிய தன் தடியைக் கையில் பிடித்துக்கொண்டு,
ஐந்து கூலாங்கற்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். ஆண்டவர் அவனோடே இருந்ததால், பெலிஸ்தியனாகிய கோலியத்தை
தோற்கடித்தான்.
தாவீதுக்கு சவுல் எத்தனையோ கஷ்டங்களைக் கொடுத்தாலும், எத்தனையோ முறை கொலை செய்ய முயற்சித்தாலும், தாவீது சவுலை கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதனாகவே பார்த்தார். சவுலை கொலை செய்துவிட்டு, அந்த அமலேக்கியன் தாவீதிடம் வந்து சவுல் மரித்துப்போனார் என்று சொன்னதும் அந்த அமலேக்கியனை தாவீது கொலை செய்துவிடுகிறான். அந்த அளவிற்கு ஆண்டவருடைய அபிஷேகத்தை கனப்படுத்தினான் தாவீது. எனவேதான், ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக மாறுகிறான்.
சவுல் இஸ்ரவேலை நாற்பது ஆண்டுகள் அரசாண்டார்.
தாவீது இஸ்ரவேலை நாற்பது ஆண்டுகள் அரசாண்டார்
சாலொமோன் இஸ்ரவேலை நாற்பது ஆண்டுகள் அரசாண்டார்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.