தென்னிந்திய திருச்சபை
மதுரை - இராமநாதபுரம் திருமண்டிலம்
C.S.I. இம்மானுவேல் தேவாலயம்
அருப்புக்கோட்டை நகர் குருசேகரம்
ஆண்கள் ஞாயிறு சிறப்பு ஆராதனை - 2025
1. ஆரம்ப ஜெபம்
2. ஆரம்ப பாடல்
3. ஆராதனைக்கு அழைப்பு
நடத்துனர்: அல்லேலூயா. கர்த்தருடைய ஜனங்களே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
சபை: இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
நடத்துனர்: சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது அஸ்தமிக்கும் திசை மட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
சபை: கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
நடத்துனர்: உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு இணையானவர் யார்?
சபை: அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
நடத்துனர்: அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
சபை: அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
4. பாவ அறிக்கைக்கு அழைப்பு
மனுஷனே, நன்மை இன்னவென்று கர்த்தர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம் செய்து, இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல், வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்? தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும் என்று கடவுளிடத்தில் மனத்தாழ்மையாய் நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவோம்.
5. பாவ அறிக்கை
நடத்துனர்: நானோ கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன்:" எல்லா படைப்புகளையும் பண்படுத்தி பாதுகாக்க வேண்டிய நாங்கள். எம் சகபடைப்புகளை புண்படுத்தி வேதனைபடுத்தியமைக்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை: திரங்கொண்டாவி வரங்கொண்டுய்யச் சிறுமை பார், ஐயா, - ஏழை-வறுமை தீர்,ஐயா.
நடத்துனர்: உம் நாமம் தரிக்கபட்ட ஜனமாகிய நாங்கள் தினந்தோறும், நீர் எங்களுக்குத் தந்த வேலைகளில் உண்மையற்றவர்களாய், கிறிஸ்தவ சாட்சி இழந்தவர்களாய் சீர்கேடுள்ள வாழ்வின் வாயிலாய் உம் நாமத்திற்கு இகழ்ச்சி சேர்த்தமைக்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை: அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகிறேன், மிகப்-பயந்து சாகின்றேன்.
நடத்துனர்: உம் சாயலில் உருவானோமே. ஆனால், எம் வாழ்வில் உம் சாயலை இழந்தவர்களாய் நாங்கள் எங்கள் அயலகத்தாரை உம் சாயலில் பார்க்காமல்; வேற்றுமை, வெறுப்பு, கசப்பு, மனஸ்தாபம் போன்றவைகளை எங்களில் வளர்த்து, அந்நியராய் அவர்களை அவமதித்து வாழ்கிறமைக்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை: தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா, -தெரிவைப்-புரிகிலேன், ஐயா.
நடத்துனர்: வாழ்வளிக்க வேண்டிய நாங்கள் அநேக நேரங்களில் சுய பெருமை, வறட்டு கௌரவம், ஆண் என்ற அகந்தை போன்றவைகளால் பிணைக்கப்பட்டு, குடும்பத்திலும், சமுதாயத்திலும் பிறர் வாழ்வை அழிக்க முயற்சித்ததற்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை: பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள், ஐயா; - தயை - புரிந்து மீள், ஐயா.
நடத்துனர்: சகோதரனாய், தகப்பனாய், கணவனாய், குடும்பத்தில், நாங்கள் அநேக நேரங்களில் இவ்வுறவுகளினுள் தூய்மையை அழித்து சீர்கேடு உருவாக்கினதற்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை: இரங்கும், இரங்கும், கருணைவாரி, ஏசு ராசனே, பாவ-நாசநேசனே!
6. பாவ மன்னிப்பு கூறுதல்
கர்த்தர் அனைவரையும் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்; அனைவரது உட்காருதலையும், எழுந்திருக்குதலையும், நினைவுகளையும் அறிந்திருக்கிறார். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளின்படி நடந்து. அவருடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய அவர் உங்களுக்கு ஏக இருதயத்தை தந்து, உங்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களில் அருளிச் செய்து, உங்களை பெலப்படுத்தி நித்திய வாழ்வின் வழியில் நடத்துவாராக. ஆமென்.
7. ஸ்தோத்திர ஜெபம்
நடத்துனர்: எல்லாம் வல்ல ஆண்டவரே, இவ்வேளையில் எங்களை கூட்டிச்சேர்த்திருக்கிறீர். உம்முடைய ஜனமாய் உம் துதியை சொல்ல எங்களை ஏற்படுத்தினீரே
சபை: உமது பரிசுத்த நாமத்தை புகழ்கிறோம் ஆண்டவரே
நடத்துனர்: கடவுளே, எங்களை மீட்டுக்கொண்டு. மீட்பின் பொருளாய் இவ்வுலகினில் உமக்கு சாட்சியாய் வாழ அழைத்ததற்காக,
சபை: உமது பரிசுத்த நாமத்தை புகழ்கிறோம் ஆண்டவரே.
நடத்துனர்: கர்த்தாவே. ஒரே கடவுளாய் எங்கள் எல்லார்மேலும். எல்லாரோடும், எங்கள் எல்லோருக்குள்ளும் இருந்து செயல்படுகிறதற்காக.
சபை: உமது பரிசுத்த நாமத்தை புகழுகிறோம் ஆண்டவரே
8. மன்றாட்டு ஜெபம்
நடத்துனர்: அப்பா பிதாவே, திருச்சபையிலுள்ள யாவருக்கும் நீர் ஒரே தந்தையாயிருப்பதால் நாங்கள் ஒவ்வொருவரும், சகோதர, சகோதரிகள் என்ற உணர்வோடுகூட, பேதமின்றி உம்மை ஆராதிக்க, இணைந்து வாழ விசால மனதை எங்களுக்குத் தரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே, தேவா இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: வாழ்வில் வறுமையினாலும், ஏமாற்றங்களினாலும், துரோகங்களினாலும், நம்பிக்கையற்று. மனங்கலங்கி, துவண்டுபோன ஒவ்வொரு மக்களுக்காக விசேஷமாக இவைகளில் சிக்கி தவிக்கும் ஆண்கள் விடுதலை பெற்று சுகமாய் வாழ ஜெபிப்போமாக.
நடத்துனர்: ஏற்றுக்கொண்டருளுமே, தேவா இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: குடிப்பழக்கம், போதை, விபச்சாரம், வீண் ஆடம்பரம், ஆண் என்ற கர்வம் போன்றவை நம் வாழ்வில் தகர்க்கப்பட, குடும்பங்கள் அழிவிலிருந்து காக்கப்பட ஜெபிப்போமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே, தேவா இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: நம்முடைய ஆட்சியாளர்கள். பிரதமர், முதலமைச்சர். அதிகாரம் வகிப்போர் மற்றும் திருச்சபையின் தலைவர்கள், நமது பேராயர் சுத்த மனசாட்சியுடன் அழைக்கப்பட்ட கடவுளின் அழைப்பிற்க்கு உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டிக்கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்:: கிறிஸ்துவிற்காக ஊழியம் செய்து வரும் ஒவ்வொருவரும், விசேஷமாய் மிஷனரிகளை, ஆயர்களை, தன்னார்வ ஊழியர்கள் மற்றும் திருச்சபைகளில் எல்லா நிலைகளிலும் இறைபணி செய்கிறவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த வேண்டிக்கொள்வோமாக.
சபை: ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
நடத்துனர்: கிறிஸ்துவைப்போல சிந்தை உள்ளவர்களாய். எங்கள் திருச்சபை ஆண்கள் மற்றும் அனைவரும் வாழவும், கிறிஸ்துவை போன்று குணத்திலும், செயல்களிலும், அன்பிலும் வளர்ந்து நிலைத்துநிற்க வேண்டிக்கொள்வோமாக
சபை: ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
9. கர்த்தருடைய ஜெபம்
10. உடன்படிக்கை ஜெபம்
நான் எனக்கல்ல, உமக்கே சொந்தம்: உமக்குச் சித்தமானதைச் செய்யவும், உமக்குச் சித்தமானவர்களோடு இருக்கவும். நற் செயல்களைச் செய்யவோ அல்லது துன்பங்களைச் சகிக்கவோ. உமது பணிக்கென்று பயன்படுத்தப்படவோ: பயன்படுத்தப்படாமலிருக்கவோ: உயர்த்தப்படவோ: தாழ்த்தப்படவோ: நிரப்பப்படவோ. வெறுமையாக்கப் படவோ: எல்லாமுடையவனாகவோ, யாதுமற்றவனாகவோ: எதுவானாலும் உம்முடைய விருப்பப்படியேயும். உமது தீர்மானத்தின்படியேயும் நடப்பேனென்று எல்லாவற்றையும் உமக்குப் பூரணமாகவும், மனமுவந்தும் ஒப்படைக்கிறேன்.
மகிமையும் கிருபையும் நிறைந்த பிதா, குமாரன் பரிசுத்தாவியுமாகிய கடவுளே, நீர் என்னுடையவர், நான் உம்முடையவன், அப்படியே ஆகக்கடவது, பூலோகத்தில் நான் புதுப்பித்த இந்த உடன்படிக்கை. பரலோகத்திலும் முத்தரிக்கப்படுவதாக, ஆமென்
11. வேதபாடம்
12. விசுவாச பிரமாணம்
13. அறிவிப்புகள்
14. ஆண்கள் சிறப்பு நிகழ்வுகள்
15. செய்தி
16. காணிக்கை பாடல்
17.ஜெபமும் ஆசீர்வாதமும்
18. நிறைவு பாடல்

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.