Type Here to Get Search Results !

Acts One 1 Bible Quiz Questions & Answers in Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் 1 கேள்விகளும் பதில்களும் | Jesus Sam

==============
Book of ACTS Chapter One(1)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

I. வினா விடைகள்
01. இயேசுவானவர் பாடுபட்ட பின்பு எத்தனை நாள் அப்போஸ்தலருக்குத் தரிசனமானார்?
Answer: நாற்பது நாள் அப்போஸ்தலருக்குத் தரிசனமானார்
(அப்போஸ்தலர் 1:3)

02. இயேசுவானவர் அப்போஸ்தலரோடு நாற்பது நாளளவும் எதைக்குறித்து பேசினார்?
Answer: தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளைக் குறித்து பேசினார்
    (அப்போஸ்தலர் 1:3)

03. இயேசுவானர் அப்போஸ்தலருக்கு எப்படி தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார்?
Answer: அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார்
    (அப்போஸ்தலர் 1:3)

04. ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தது யார்?
Answer: யோவான்
    (அப்போஸ்தலர் 1:4)

05. இயேசுவானவர் அப்போஸ்தலரிடம் நீங்கள் சில நாளுக்குள்ளே எதினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்றார்?
Answer: பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நாம் பெறுவீர்கள் என்றார்
    (அப்போஸ்தலர் 1:4)

06. இயேசுவானர் அப்போஸ்தலரிடம் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற எங்கு காத்திருக்கச் சொன்னார்?
Answer: எருசலேம்
    (அப்போஸ்தலர் 1:5)

07. கூடிவந்திருந்தவர்கள் இயேசுவானவரிடம் என்ன கேட்டார்கள்?
Answer: ஆண்டவரே இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்
    (அப்போஸ்தலர் 1:6)

08. பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் -------------- அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
Answer: வேளைகளையும்
    (அப்போஸ்தலர் 1:7)

09. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எங்கு சாட்சிகளாய் இருக்க வேண்டும் என்று இயேசுவானவர் சொன்னார்?
Answer: எருசலேம், யூதேயா முழுவதும், சமாரியா, பூமியின் கடைசி பரியந்தம்
    (அப்போஸ்தலர் 1:8)

10. இயேசுவானவரை எடுத்துக்கொண்டது எது?
Answer: மேகம்
    (அப்போஸ்தலர் 1:9)

11. அப்போஸ்தலர்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கையில் வெண்வஸ்திரம் தரித்த எத்தனை பேரை பார்த்தார்கள்?
Answer: இரண்டு
    (அப்போஸ்தலர் 1:10)

12. வெண்மையான வஸ்திரம் தரித்த இரண்டு பேர் வானத்தை அண்ணாந்து பார்க்கிறவர்களை எப்படி அழைத்தார்கள்?
Answer: கலிலேயராகிய மனுஷரே
    (அப்போஸ்தலர் 1:10,11)

13. எருசலேமிலிருந்து ஒலிவமலைக்கு எவ்வளவு தூரம்?
Answer: ஒரு ஓய்வு நாள் தூரம்
    (அப்போஸ்தலர் 1:12)

14. இயேசுவானர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அப்போஸ்தலர்கள் ஒலிவமலையிலிருந்து எங்கு சென்றார்கள்?
Answer: எருசலேம்
    (அப்போஸ்தலர் 1:12)

15. மேல் வீட்டில் சீஷர்கள் ஸ்திரீகளோடும், இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ------------, -------------, தரித்திருந்தார்கள்.
Answer: ஜெபத்திலும், வேண்டுதலிலும்
    (அப்போஸ்தலர் 1:14)

16. முதல் முதலில் பேதுரு பேசத் தொடங்கிய போது அங்கு சீஷர்கள் எத்தனை பேர் கூடியிருந்தார்கள்?
Answer: நூற்று இருபது பேர்
    (அப்போஸ்தலர் 1:15)

17. இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டியது யார்?
Answer: யூதாஸ்
    (அப்போஸ்தலர் 1:16)

18. யூதாசைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் யார் மூலமாக வாக்குறைத்திருக்கிறார்?
Answer: தாவீது
    (அப்போஸ்தலர் 1:16)

19. அநீதத்தின் கூலியினால் ஒரு நிலத்தை சம்பாதித்தது யார்?
Answer: யூதாஸ்
    (அப்போஸ்தலர் 1:18)

20. தலைகீழாக விழுந்து, வயிறு வெடித்து, குடல் சரிந்து மரித்தது யார்?
Answer: யூதாஸ்
    (அப்போஸ்தலர் 1:18)

21. "அக்கெல்தமா" என்பதன் அர்த்தம் என்ன?
Answer: இரத்த நிலம்
    (அப்போஸ்தலர் 1:19)

22. அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக, அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்று எந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?
Answer: சங்கீத புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது
    (அப்போஸ்தலர் 1:20)

23. யூதாசிற்கு பதிலாக மற்றொரு நபரை தெரிந்தெடுக்க வேண்டும் என்று சொன்னது யார்?
Answer: பேதுரு
    (அப்போஸ்தலர் 1:15,22)

24. பர்சபா எனப்பட்ட யோசேப்பின் மறுபெயர் என்ன?
Answer: யுஸ்து
    (அப்போஸ்தலர் 1:23)

25. யூதாசுக்காக வேறொருவரை தெரிந்தெடுக்க யார்? யார்? பெயரை எழுதி சீட்டுப்போட்டார்கள்?
Answer: யோசேப்பு, மத்தியா
    (அப்போஸ்தலர் 1:23,26)

26. சீட்டு யாருடைய பெயருக்கு விழுந்தது?
Answer: மத்தியா
    (அப்போஸ்தலர் 1:26)


II. சரியான பதிலை தேர்வு செய்க:
1. உயிர்த்தெழுந்த இயேசு எத்னை நாள் பூமியில் இருந்தார்?
A) இருபது நாள்
B) முப்பது நாள்
C) நாற்பது நாள்
Answer: C) நாற்பது நாள்
    (அப்போஸ்தலர் 1:3)

2. அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினானாலே தாம் உயிரோடிருப்பதாக இயேசு யாருக்கு காண்பித்தார்?
A) யூதர்கள்
B) அப்போஸ்தலர்கள்
C) ஜனங்கள்
Answer: B) அப்போஸ்தலர்கள்
    (அப்போஸ்தலர் 1:3)

3. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றது யார்?
A) இயேசு கிறிஸ்து
B) யோவான்ஸ்நானன்
C) அப்போஸ்தலர்கள்
Answer: C) அப்போஸ்தலர்கள்
    (அப்போஸ்தலர் 1:4)

4. இயேசுவானவர் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற அப்போஸ்தலர்களை எங்கு காத்திருக்கச் சொன்னார்?
A) யூதேயா
B) கலிலேயா
C) எருசலேம்
Answer: C) எருசலேம்
    (அப்போஸ்தலர் 1:5)

5. இயேசுவை உயர எடுத்துக்கொண்டது?
A) பிதாவானவர்
B) தேவதூதர்கள்
C) மேகம்
Answer: C) மேகம்
    (அப்போஸ்தலர் 1:9)


6. எருசலேமிற்கும் ஒலிவமலைக்கும் டைப்பட்ட தூதரம் எவ்வளவு?
A) ஒரு நாள் பிரயாண தூரம்
B) ஒரு ஓய்வு நாள் பிரயாண தூதரம்
C) மூன்று நாள் பிரயான தூதரம்
Answer: B) ஒரு ஓய்வு நாள் பிரயாண தூதரம்
    (அப்போஸ்தலர் 1:12)

7. இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் எது?
A) எருசலேம்
B) ஒலிவமலை
C) கலிலேயா
Answer: B) ஒலிவமலை
    (அப்போஸ்தலர் 1:12)

8. நூற்று இருபது பேர் கூடியிருந் இடத்தில் பேசுவதற்காக எழுந்து நின்றது யார்?
A) பேதுரு
B) அந்திரேயா
C) யோவான்
Answer: A) பேதுரு
    (அப்போஸ்தலர் 1:15)

9. அநீதத்தின் கூலியினால் ஒரு நிலத்தை வாங்கி தலைகீழாக விழுந்தது யார்?
A) பேதுரு
B) யூதாஸ் காரியோத்து
C) யோவான்
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (அப்போஸ்தலர் 1:18)

10. தன் வயிறு வெடித்து குடல் சரிந்து இறந்தவன் யார்?
A) பேதுரு
B) யூதாஸ் காரியோத்து
C) யோவான்
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (அப்போஸ்தலர் 1:18)


11. இரத்த நிலம் என்பதன் அர்த்தம் என்ன?
A) கபத்தா
B) கொல்கொதா
C) அக்கெல்தமா
Answer: C) அக்கெல்தமா
    (அப்போஸ்தலர் 1:19)

12. அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும ்அதில் வாசம்பண்ணாதிருப்பனாக என்று எழுதப்பட்ட புத்தகம் எது?
A) சங்கீத புத்தகம்
B) பிரசங்கி புத்தகம்
C) ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம்
Answer: A) சங்கீத புத்தகம்
    (அப்போஸ்தலர் 1:20

13. யுஸ்து மற்றும் பர்சபா என்று அழைக்கப்பட்டது யார்?
A) யோனா
B) யோசேப்பு
C) மத்தியா
Answer: B) யோசேப்பு
    (அப்போஸ்தலர் 1:23)

14. யூதாஸ் காரியோத்திற்கு பதிலாக சீட்டு போன தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் யார்?
A) யோனா
B) யோசேப்பு
C) மத்தியா
Answer: B) யோசேப்பு, C) மத்தியா
    (அப்போஸ்தலர் 1:23)

15. யூதாஸ்காரியோத்திற்கு பதிலாக அப்போஸ்தலரோடு சேர்க்கப்பட்ட சீஷன் யார்?
A) யோனா
B) யோசேப்பு
C) மத்தியா
Answer: C) மத்தியா
    (அப்போஸ்தலர் 1:26)


III. பொதுவான சில தகவல்கள்
1. சீஷர்கள் எத்தனை நாள் எருசலேமில் காத்திருந்தார்கள்?
Answer: பத்து நாள்
    இயேசுவானர் நாற்பது நாளளவும் அவர்களோடு இருந்தார். பின்பு பத்து நாள் சென்று ஐம்பதாவது நாள் பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார்.
    (அப்போஸ்தலர் 1:5)

2. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த இயேசு கிறிஸ்துவின் வாக்கு எங்கெங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
    யோவான் 1:33
    யோவான் 7:37-39
    யோவான் 14:16,17
    யோவான் 20:22
    (அப்போஸ்தலர் 1:8)

3. இயேசு கிறிஸ்துவை எடுத்துக்கொண்ட மேகம் என்ன மேகம்?
Answer: ஷகினா மகிமையின் மேகம்
    இந்த மேகம் தான் ஆசரிப்புகூடாரத்தில் கர்த்தர் மோசேயோடு பேசியபோது இருந்தது.
    (அப்போஸ்தலர் 1:9)

4. "வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசுவானர்" என்பது எதைக் குறிக்கிறது?
Answer: இயேசுவானவர் மறுபடியும் தம்முடைய மாம்சத்தோடும், எலும்போடும் வருவார்
    (அப்போஸ்தலர் 1:11)
    (லூக்கா 24:47-53)

5. இயேசு கிறிஸ்து பரமேரிய மலை, மற்றும் இரண்டாம் வருகையின் போது வரப்போகும் மலை எந்த மலை?
Answer: ஒலிவ மலை
    (அப்போஸ்தலர் 1:11)
    (சகரியா 14:4)

6. ஒரு ஓய்வு நாள் தூரம் என்பது எவ்வளவு தூரம்?
Answer: சுமார் ஒரு மைல் தூரம்
    (அப்போஸ்தலர் 1:12)

7. இயேசுவின் தாயாகிய மரியாளைக் குறித்து வேதத்தில் கடைசியாக சொல்லப்பட்ட வசனம் எது?
    (அப்போஸ்தலர் 1:14)

8. யூதாசைக் குறித்து தாவீது சொன்ன வாக்கியம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: சங்கீதம் 41:9
    (அப்போஸ்தலர் 1:16)

9. அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது இந்த வசனம் சங்கீத புஸ்தகத்தில் எங்கு உள்ளது?
Answer: சங்கீதம் 69: 25-28
    (அப்போஸ்தலர் 1:20)

10. அக்காலத்தில் ஒரு காரியத்தை முடிவு செய்வதற்காக என்ன செய்தார்கள்?
Answer: ஜெபித்து சீட்டுபோட்டார்கள்
    (அப்போஸ்தலர் 1:26)
    (லேவியராகமம் 16: 8, 9)
    (யோசுவா 14:1,2)

11. யூதாசிற்கு பதிலாக தேவன் யாரை தெரிவு செய்தார்;?
Answer: அப்போஸ்தலனாகிய பவுல்
    (கலாத்தியர் 1:1)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.