Type Here to Get Search Results !

Acts General Questions & Answers | அப்போஸ்தலர் நடபடிகள் பொதுவான கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

==============
Book of ACTS General Questions (GK)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பொதுவான கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. அப்போஸ்தலர் நடபடிகளின் ஆசிரியர் யார்?
Answer: லூக்கா

2. லூக்கா என்பதன் அர்த்தம் என்ன?
Answer: வெளிச்சம் கொடுப்பவர்

3. லூக்காவின் பணி என்ன?
Answer: வைத்தியர்

4. லூக்கா எந்த இனத்தைச் சார்ந்தவர்?
Answer: கிரேக்கர்
    (யூதக்குடியுரை பெற்றவர்)

5. அப்போஸ்தலர் நடபடிகளை லூக்கா யாருக்கு எழுதுகிறார்?
Answer: தெயோப்பிலுவுக்கு எழுதுகிறார்

6. தெயோப்பிலு என்பதன் அர்த்தம் என்ன?
Answer: தேவனுக்கு அன்பானவன்

7. தெயோப்பிலுவின் பணி என்ன?
Answer: வைத்தியர் (மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்)

8. தெயோப்பிலு எந்த இனத்தைச் சார்ந்தவர்?
Answer: கிரேக்கர்
    (யூதக்குடியுரைமை பெற்றவர்)

9. லூக்காவைப் பற்றி வேதத்தில் எத்தனை வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer: மூன்று
    கொலோசெயர் 4:14
    2 தீமோத்தேயு 4:11
    பிலேமோன் 24

10. அப்போஸ்தலர் என்பதன் கிரேக்க பதம் என்ன?
Answer: Apostlo

11. Apostlo என்பதன் அர்த்தம் என்ன?
Answer: Apostloவெளியே அனுப்பப்படுகிறவர்கள்
    Apo – வெளியே
    Stlo – அனுப்பப்படுகிறவர்கள்

12. அப்போஸ்தலர் நடபடிகள் எழுதப்பட்ட காலம் எது?
Answer: கி.பி.63

13. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Answer: 28

14. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள மொத்த வசனங்கள் எத்தனை?
Answer: 1007

15. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் எத்தனை?
Answer: பதினைந்து

16. அப்போஸ்தலர் நடபடிகளின் முக்கிய வசனம் எது?
Answer: அப்போஸ்தலர் 1:8
    அப்போஸ்தலர்2:42-47

17. அப்போஸ்தலர் நடபடிகளில் முக்கிய அதிகாரம் எது?
Answer: அப்போஸ்தலர் 2

18. அப்போஸ்தலர் நடபடிகளில் லூக்கா யாருடைய பணிகளை அதிகமாக குறிப்பிடுகிறார்?
Answer: பேதுரு(1-13)
    பவுல் (13-28)

19. அப்போஸ்தலர் நடபடிகளின் முக்கிய சொல்?
Answer: சபையின் வளர்ச்சி

20. அப்போஸ்தலர் நடபடிகள் வேதாகமத்தில் எத்தனையாவது நூல்?
Answer: 44

21. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள கேள்விகள் எத்தனை?
Answer: 75

22. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் எத்தனை?
Answer: 21

23. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் எத்தனை?
Answer: 20

24. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள வரலாற்று வசனங்கள் எத்தனை?
Answer: 949

25. அப்போஸ்தலர் நடபடிகளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் எத்தனை உள்ளது?
Answer: 49

26. அப்போஸ்தலர் நடபடிகளில் நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள் எத்தனை உள்ளது?
Answer: 14

27. அப்போஸ்தலர் நடபடிகளில் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து எத்தனை முறை வருகிறது?
Answer: 56

28. அப்போஸ்தலர் நடபடிகளில் பயன்படுத்தப்பட்ட பழை ஏற்பாட்டு பத்தகங்கள் எவை?
Answer: யோவேல், சங்கீதம், ஏசாயா

29. அப்போஸ்தலர் நடபடிகளில் பழைய ஏற்பாட்டு வசனங்கள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer: எட்டு முறை
    அப்போஸ்தலர் 2:17-21
    (யோவேல் 2:28-32)

    அப்போஸ்தலர் 2:25-28
    (சங்கீதம் 16:8-11)

    அப்போஸ்தலர் 2:35
    (சங்கீதம் 110:1)

    அப்போஸ்தலர் 4:11
    (சங்கீதம் 118:22)

    அப்போஸ்தலர் 4:25,26
    (சங்கீதம் 2:1,2)

    அப்போஸ்தலர் 7:49,50
    (ஏசாயா 66:1,2)

    அப்போஸ்தலர் 8:32,33
    (ஏசாயா 53:7,8)

    அப்போஸ்தலர் 28:26,27
    (ஏசாயா 6:9,10)

30. அப்போஸ்தலர் நடபடிகளின் மையப்பகுதி எது?
Answer: எருசலேம்

31. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள முக்கிய மனிதர்கள் யார்?
Answer: பேதுரு, யோவான், யாக்கோபு, ஸ்தேவான், பிலிப்பு, பவுல், பர்னபா, கொர்நேலியு, இயேசுவின் சகோதரன் யாக்கோபு, தீமோத்தேயு, லீதியாள், சீலா, தீத்து, அப்பொல்லோ, அகபு, அனனியா, பேலிக்ஸ், பெஸ்து, அகிரிப்பா, லூக்கா

32. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள முக்கிய இடங்கள் எது?
Answer: எருசலேம், சமாரியா, லித்தா, யோப்பா, அந்தியோகியா, சீப்புரு, பிசிதியாவின் அந்தியோகியா, இக்கொனியா, லீஸ்திரா, தெர்பை, பிலிப்பி, தெசலோனிக்கேயா, பெரேயா, அத்தேனே, கொரிந்து, எபேசு, செசரியா, மெலித்தா, ரோம்.

33. லூக்கா அப்போஸ்தலர் நடபடிகளில் எத்தனை நபர்களின் பெயர்களை குறிப்பிடுகிறார்?
Answer: 110

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.