Type Here to Get Search Results !

Exodus Forty 40 Holy Bible Quiz Questions with Answres Tamil | யாத்திராகமம் 40 வேதாகம கேள்விகளும் பதில்களும் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Forty (40)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் நாற்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. வாசஸ்தலத்தை எப்பொழுது ஸ்தாபனம்பண்ண கர்த்தர் மோசேயிடம் கூறினார்?
Answer: முதல் மாதம் முதல் தேதியில்
    (யாத்திராகமம் 40:2)

2. சாட்சிப்பெட்டியை எதனால் மறைக்க வேண்டும்?
Answer: திரையினால்
    (யாத்திராகமம் 40:3)

3. பொன் தூபபீடத்தை வைக்க வேண்டியது எங்கே?
Answer: சாட்சிப்பெட்டிக்கு முன்னே
    (யாத்திராகமம் 40:5)

4. தகனபலிபீடத்தை எதற்கு முன்பாக வைக்க வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைக்க வேண்டும்
    (யாத்திராகமம் 40:6)

5. தொட்டியை எவைகளுக்கு நடுவே வைக்க வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே
    (யாத்திராகமம் 40:7)

6. வாசஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் எதினால் அபிஷேகம்பண்ணி பரிசுத்தப்படுத்த வேண்டும்?
Answer: அபிஷேகத் தைலம்
    (யாத்திராகமம் 40:9)

7. தகனபலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி பரிசுத்தப்படுத்தும்போது அது எப்படியிருக்கும்?
Answer: மகா பரிசுத்தமான பலிபீடம்
    (யாத்திராகமம் 40:10)

8. ஆரோனும் அவன் குமாரரும் பெறும் அபிஷேகம் தலைமுறைதோறும் எதற்கு ஏதுவாயிருக்கும்?
Answer: நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும்
    (யாத்திராகமம் 40:15)

9. எந்த நாளில் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது?
Answer: இரண்டாம் வருஷம் முதல் மாதம் முதல் தேதியில்
    (யாத்திராகமம் 40:17)

10. வாசஸ்தலத்துக்குள்ளே திரைச்சீலையால் மறைத்து வைக்கப்பட்டது எது?
Answer: சாட்சிப்பெட்டி
    (யாத்திராகமம் 40:21)

11. ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாக எதை வைத்து, அதின் மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டப்பட்டது?
Answer: பொற்பீடம்
    (யாத்திராகமம் 40:26,27)

12. ஆசரிப்புக் கூடாரத்தின் வேலையெல்லாம் முடித்தபின், ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது எது?
Answer: ஒரு மேகம்
    (யாத்திராகமம் 40:33,34)

13. வாசஸ்தலத்தை நிரப்பினது எது?
Answer: கர்த்தருடைய மகிமை
    (யாத்திராகமம் 40:34)

14. இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது பிரயாணம் பண்ணப்புறப்படுவார்கள்?
Answer: வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது
    (யாத்திராகமம் 40:36)

15. ---------- எழும்பாதிருந்தால் அது எழும்பும் நாள் வரைக்கும் இஸ்ரவேலர் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்?
Answer: மேகம்
    (யாத்திராகமம் 40:37)

16. இஸ்ரவேல் புத்திரர் பண்ணும் எல்லா பிரயாணங்களிலும் அவர்கள் கண்களுக்குப் பிரத்தியட்சமாக பகலும் இரவிலும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தவைகள் எவை?
Answer: பகலில் கர்த்தருடைய மேகம், இரவில் அக்கினி
    (யாத்திராகமம் 40:38)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.