Type Here to Get Search Results !

Exodus Thirty Nine 39 Quiz Questions with Answers Tamil | யாத்திராகமம் 39 விவிலிய வினாக்களும் விடைகளும் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Thirty Nine (39)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து ஒன்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. ஏபோத்தை எவைகளால் செய்தார்கள்?
Answer: பொன், இளநீல நூல், இரத்தாம்பரநூல், சிவப்பு நூல், மெல்லிய பஞ்சு நூல்
    (யாத்திராகமம் 39:2,3)

2. கோமேதகக் கற்களில் முத்திரை வெட்டு வேலையாக வெட்டப்பட்டது எது?
Answer: இஸ்ரவேல் புத்திரரின் நாமங்கள்
    (யாத்திராகமம் 39:6)

3. இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எவைகளாயிருக்கும்படி பொன் குவளைகளை போத்துத் தோள்களின்மேல் வைத்தார்கள்?
Answer: ஞாபகக்குறிக்கற்களாய்
    (யாத்திராகமம் 39:7)

4. ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திர வேலையாய் செய்யப்பட்டது எது?
Answer: மார்ப்பதக்கம்
    (யாத்திராகமம் 39:8)

5. மார்ப்பதக்கம் எப்படி செய்யப்பட்டது?
Answer: சதுரமும் இரட்டையுமாய்
    (யாத்திராகமம் 39:9)

6. மார்ப்பதக்கத்தின் அளவு என்ன?
Answer: நீளம் ஒரு ஜாண், அகலம் ஒரு ஜாண்
    (யாத்திராகமம் 39:21)

7. மார்ப்பதக்கத்தில் எத்தனை பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்?
Answer: நாலு பத்தி
    (யாத்திராகமம் 39:10)

8. மார்ப்பதக்கம் எதற்கு மேலாக இருக்கும்படிக்கு இளநீல நாடாவினால் கட்டினார்கள்?
Answer: ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்க மேலாக
    (யாத்திராகமம் 39:21)

9. ஏபோத்தின் கீழ் அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாக எவைகளைப் பண்ணினார்கள்?
Answer: திரித்தத இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்பு நூலுமான வேலையாக மாதளம் பழங்கள்
    (யாத்திராகமம் 39:24)

10. அங்கியின் கீழ் ஓரங்களில் எவைகளை மாதளம் பழங்களின் இடையிடையே தொங்க வைத்தார்கள்?
Answer: பசும்பொன்னினால் செய்த மணிகள்
    (யாத்திராகமம் 39:25)

11. வாசஸ்தலத்தின் சகல வேலைகளையும் இஸ்ரவேல் புத்திரர் எப்படி செய்தார்கள்?
Answer: கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடி செய்தார்கள்
    (யாத்திராகமம் 39:32)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.