திருமறைப்பகுதி:
ஓசேயா 5:13-6:11
அருளுரை:
நூல்
- ஓசேயா நூலின் மையக்கருத்து "கர்த்தரிடத்தில் திரும்புங்கள்" என்பதாகும்.
- ஓசேயா நூலைக் குறித்து வேதாகமத்தில் வேறு எங்கும் குறிப்பிடப்படவில்லை.
- ஓசேயா புத்தகத்தில் 14 பிரிவுகளும், 197 திருமொழிகளும் உள்ளது.
- கடவுளிடத்தில் உள்ள உண்மை, மன்னிப்பு, அன்பு போன்றவற்றை வலியுறுத்துகிறது.
- இஸ்ரவேலரின் பாவம் – பொய்யுரைத்தல், நன்றியில்லாதிருத்தல், விக்கிரகவழிபாடு செய்தல், கொலை செய்தல், இச்சித்தல் போன்றவற்றை சுட்டிக்காட்டுகிறது.
ஆசிரியர்
- ஓசேயா – இரட்சிப்பு அல்லது மீட்பு என்பது பொருள்.
- ஓசேயாவின் தகப்பன் பெயர் – பெயேர் (ஓசேயா 1:1)
- ஓசேயாவின் மனைவி பெயர் – கோமேர் (ஓசேயா 1:3)
- ஓசேயாவின் பிள்ளைகள் – ஒரு குமாரத்தி, இரண்டு குமாரர்
- அவர்கள்: யெஸ்ரயேல், லோருகாமா, லோகம்மீ.
- ஓசேயாவின் ஊழிய காலம் சுமார் ஐம்பது ஆண்டுகள்.
சாலொமோனுக்கு பின்பு, இஸ்ரவேல் நாடு இரண்டு நாடுகளாக பிரிக்கப்படுகிறது.
- வட நாடு
- தென் நாடு
தென் நாடு: யூதா, பென்யமீன் கோத்திரம்
தென்நாடு: யூதா நாடு, தென்நாடு என்று அழைக்கப்படுகிறது.
வட நாடு: மற்ற பத்து கோத்திரம்
வடநாடு: வடநாடு, இஸ்ரவேல் நாடு, சமாரியா, எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிறது.
சமாரியா – வடநாட்டின் தலைநகரம்
எப்பிராயீம் – வடநாட்டில் உள்ள பெரிய கோத்திரம்,
வடநாட்டிலும், தென்நாட்டிலும் அநேக அரசர்கள் ஆட்சி செய்தது வந்தார்கள்.
இந்த இரண்டு நாடுகளும் ஒரு கட்டத்தில் அந்நியர்களால் கைப்பற்றப்பட்டது.
சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்பு வடநாடு அசீரியர்களால் கைப்பற்றப்பட்டது. (கி.மு. 722)
தென்நாடு கி.மு. 597 ஆண்டு பாபிலோனியர்களால் கைப்பற்றப்படுகிறது.
தென்நாடு பாபிலோனியர்களால் கைப்பற்றப்படும் அந்த சூழலில் தென்நாட்டிற்கு இறைவாக்கு வரைத்தவர் எரேமியா இறைவாக்கினர்.
வடநாடு அசீரியர்களால் கைப்பற்றப்படும் அந்த சூழலில் வடநாட்டில் உள்ளவர்களுக்கு இறைவாக்கு உறைத்தவர் ஒசேயா.
வடநாட்டில் ஓசேயா இறைவாக்கு உரைத்தபோது, தென்நாட்டில் இறைவாக்கு உரைத்தவர் ஆமோஸ் இறைவாக்கினர்.
ஓசேயா வடநாட்டில் இறைவாக்கு உரைத்தபோது, வடநாட்டு அரசராயிருந்தவர்கள், உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா. தென் நாட்டு அரசராயிருந்தவர் எரொபாவா (ஓசேயா 1:1)
தென்நாடு அவ்வப்போடு கடவுளின் கட்டளையை மீறிநடந்தாலும், அவ்வப்போது, கடவுளின் வார்த்தை்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள். ஆனால், வடநாட்டு பத்து கோத்திரங்கள் எப்போது பிரிந்ததோ, அப்போது இருந்தே அவர்கள் கடவுளை மறந்து, தங்களுக்கென தெய்வங்களை உருவாக்கிக்கொண்டு, கடவுளை மறந்தார்கள்.
எத்தனையோ இறைவாக்கினர்களை வடநாட்டுப் பகுதிக்கு ஆண்டவர் அனுப்பியிருந்தும், அவர்கள் அண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை. சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்பு அசீரியர்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்டதின் பெயரில், அசீரியர்கள் வடநாட்டை அதாவது இஸ்ராயேலை கைப்பற்றுகிறார்கள்.
இவ்வாறு அசீரியர்கள் இஸ்ராயேலைக் கைப்பற்றுவதற்கு முன்பாக கடைசியாக இஸ்ராயேல் நாட்டிற்கு இறைவாக்கு உரைத்தவர் இந்த ஓசேயா.
இந்த பகுதியில், இஸ்ராயேலின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
இஸ்ரவேலர்களின் மனநிலை
ஓசேயா இறைவாக்கினர் நூல் பிரிவு 5:13-6:11 – இஸ்ரயேல் மக்களின் மனநிலையை இங்கே ஒசேயா எடுத்துரைக்கிறார்.
ஓசேயா இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களின் தீச்செயல்களை கண்டித்த இறைவாக்கு உரைத்த கடைசி இறைவாக்கினர் ஆவார்.
சுமார் கி.மு 723-ம் ஆண்டு இஸ்ராயேல் மக்கள் அசீரியர்களால் கைப்பற்றப்பட்டார்கள்.
இஸ்ராயேல் மக்கள் அசீரியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, கடவுளால் இஸ்ராயேல் மக்களுக்கு கடைசியாக அனுப்பப்பட்ட இறைவாக்கினர் ஓசேயா இறைவாக்கினர்.
ஓசேயா இந்த பகுதியில் இஸ்ராயேல் மக்களின் மனிநிலையை விவரிக்கிறார்.
14 திருமொழிகள் அடங்கிய இந்த பகுதியில், இஸ்ராயேல் மக்கள் எவ்வளவு கொடுமைகள் செய்திருக்கிறார்கள் என்று இறைவாக்கினார் விளக்குகிறார். 14 திருமொழிகளையும் குறித்து கற்றுக்கொள்ள நேரம் போதாது, மிக சுருக்கமாக, மூன்று காரியங்களை மாத்திரம் கற்றுக்கொள்வோம்.
1. என்னால் முடியும் என்ற நிலை
ஓசேயா 5:13
எப்பிராயீம் அசீரியாவிடம் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான்.
எப்பிராயீம் – என்பது வட நாடான பத்து கோத்திரத்தைக் குறிக்கிறது. வடநாடு இஸ்ரயேல் என்றும் அழைக்கப்படுகிறது. பத்து கோத்திரத்தில் மிகவும் பெரிய கோத்திரம் எப்பிராயீம் கோத்திரம். அந்த கோத்திரத்தின் பெயராலேயே வடநாடு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிறது.
இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு ஆபத்து வந்தபோது, கடவுளை மறந்து, அசீரியாவின் ராஜாவிடம் புகலிடம் தேடினார்கள். இதில் வேடிக்கை எண்ணவென்றால், அசீரியர்கள தான் இஸ்ரயேல் நாட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ராயேல் மக்கள் எந்த அளவிற்கு கடவுளை மறந்தார்கள் என்று சொன்னால், யார் ஒருவர் தன்னை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவரிடமே அடைக்கலம் தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படும் அளவிற்கு அவர்கள் கடவுளை மறந்து போனார்கள்.
கடவுள் இஸ்ராயேல் மக்களைப் பார்த்து சொல்லுகிறார், நீங்கள் என்னை மறந்து எங்கு அழைந்து திரிந்தாலும், உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதாக.
நாமும் இஸ்ரயேல் மக்களைப் போல, வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும்போது, போராட்டங்கள் ஏற்ப்படும் போது, கடவுளை மறந்து உலக மனிதர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த மனிதர் எனக்கு உதவி செய்ய மாட்டாரா? என் வாழ்வின் உயர்விற்கு, எனக்கு ஓர் பாதை காட்ட இந்த ஆயர், இந்த பேராயர் ஒரு வழியை திறந்து கொடுக்க மாட்டாரா என்று மனிதர்களை நம்பிக்கொண்டிருக்கிறோம்.
2. போலியான மனமாற்றம்
ஓசேயா 6:1
வாருங்கள் ஆண்டவரிடத்தில் திரும்புவோம். நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார். நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.
இஸ்ராயேல் மக்கள் வாருங்கள் ஆண்டவரிடம் திரும்புவோம் என்று சொல்லி சொல்லுகிறார்கள்.
எதற்காக ஆண்டவரிடத்தில் திரும்புகிறார்கள் என்றால், அவர் என்னை குணமாக்குவார், அவர் என் காயங்களை கட்டுவார். ஒரு நன்மையை கவுளிடத்திருந்து பெற வேண்டும் என்பதற்காக, கடவுளால் தனக்கு ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக, கடவுளிடத்தில் திரும்புவோம் என்று சொல்லுகிறார்கள்.
இப்படி சொன்ன இஸ்ராயேல் மக்கள் கடவுளிடம் திரும்பினார்களா? என்றால், உண்மையில் அவர்கள் கடவுளிடம் திரும்பவில்லை.
கடவுளிடம் திரும்புவோம் என்ற பதம் இந்நூலில் 15 முறை பயன்படுத்தப்பட்டள்ளது.
கடவுளிடம் திரும்புவோம், கடவுளிடம் திரும்புவோம் என்று சொன்ன மக்கள் கடவுளிடம் திரும்பவே இல்லை. ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், அவர்கள் கடவுளிடம் திரும்பியிருப்பார்கள் என்றால், ஆண்டவர் அவர்களை அசீரியர்களின் கையில் ஒப்புக்கொடுத்திருக்க மாட்டார்.
இஸ்ராயேல் மக்களைப் போலவே, நாமும் ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதில் ஆண்டவருடைய ஆலயத்தில் அமர்ந்து, பிழை பொருத்தருளல் மன்றாட்டை ஏறெடுக்கிறோம். உண்மையான உள்ளத்தோடு, அதன் பொருள் உணர்ந்து ஏறெடுக்கின்றோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம். .
3. போலியான அன்பு (பக்தி)
ஓசேயா 6:4ஆ
……உங்கள் அன்பு காலைநேர மேகம்போலவும், கதிரவனைக் கண்ட பனி போலவும் மறைந்து போகிறதே!
இந்த திருமொழியை மற்ற மொழியாக்கங்களில் பார்க்கும்போது, அன்பு என்ற வார்த்தைக்கு பதிலாக, பக்தி, பற்றுறுதி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது.
இஸ்ராயேல் மக்களின் பக்தி என்பது ஒரு நாளின் ஒரு பகுதியில் மாத்திரமே இருப்பது போல கடவுள் கருதுகிறார்.
நாமும் அநேக நேரங்களில் காலை நேர வழிபாட்டில் மாத்திரமே பக்தியுள்ளவர்களாக காணப்படுகிறோம்.
இஸ்ராயேல் மக்களைப் போல, கடவுள் என்னை அழைத்திருக்கிறார், அவருடைய திருப்பணிக்கென்று என்னை பிரித்தெடுத்திருக்கின்றார். கடவுளுக்கும் எனக்குமான உறவில் நான் எப்படி இருக்கின்றேன்? என்னுடைய பக்தி எப்படி இருக்கின்றது? என்னுடைய பற்றுறுதியில் நான் உறுதியாய் இருககின்றேனா என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
4. கடவுளின் விருப்பம்
ஓசேயா 6:6
உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; எரிபலிகளைவிட கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகிறேன்.
கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது பலியை அல்ல, சர்வாங்க தகனபலிய அல்ல. நீங்கள் எனக்காக பெரிய காரிங்களைச் செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்க வில்லை.
கடவுளை அறியும் அறிவு என்பது – கடவுளுடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என்றே கடவுள் கற்றுக்கொடுக்கிறார்.
புதிய உடன்படிக்கையில் இயேசுவும் இரண்டு முறை இத்திருமொழியை மேற்கோல் காட்டுகிறதை நாம் பார்க்கிறோம்.
மத்தேயு 9:13
மத்தேயு 12:7
கடவுள் விரும்பாத தீய குணங்களை விட்டு, கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடப்போம். கடவுள் இந்த புதிய நாளில், அவருடைய அருளால் நம்மை வழிநடத்துவாராக. ஆமென்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.