Type Here to Get Search Results !

பேதுருவின் அழைப்பு | St. Perter | Bible Character Message Tamil | Jesus Sam

திருமறைப்பாடம்:
யோவான் 21:15-17

தலைப்பு: சீமோன் பேதுரு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களில், இயேசு கிறிஸ்துவோடு நெருக்கி இருப்பவர் பேதுரு மாத்திரமே.
1. இயேசுவுக்கு அநேக முறை ஆலோசனை கொடுத்தவர் இந்த பேதுரு.

2. சீடர்களின் பெயர் பட்டியலைப் பார்க்கும்போதும், பேதுருவின் பெயர் முதலிடத்தில் இருப்பதை பார்க்க முடியும்.

3. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து சீமோனுக்கு தரிசனமானார் என்று வாசிக்கிறோம். (லூக்கா 23:34)

இப்படி பல முறை பேதுரு முன்னிருத்தப்படுவதை நாம் திருமறையில் பார்க்கிறோம். அதற்கான காரணம் என்ன?

காரணம் என்னவென்றால், பேதுருவின் வயது முதிர்வு மாத்திரமே காரணம். இயேசு கிறிஸ்து முப்பது வயதில் தனது ஊழிய பயணத்தை துவங்கினார். இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் 11 சீஷர்கள் இயேசு கிறிஸ்துவின் வயதை ஒட்டியவர்கள். பன்னிருவரில் யோவான் வயதில் மிகவும் சிறியவர் என்று நம்பப்படுகிறது.

ஆனால், பேதுரு 40 வயதையும் தாண்டியவர் என்பது சரித்திர ஆசிரியர்களின் கருத்து. பொதுவாக யூத ஆண் மக்கள் 40 வயதில் திருமணம் செய்வதுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், பேதுருவுக்கு மாமி இருந்ததாக வேதத்தில் வாசிக்கிறோம். அப்படியானால், பேதுரு 40 வயதைத் தாண்டியவராக இருக்க வேண்டும். எனவே தான், பேதுரு சில இடங்களில் முன்னுரிமைப்படுத்தப்படுகிறார்.

இயேசுவானர் தனக்கு பின்பு, இத்திருப்பணியை செய்ய பேதுருவையே கருவியாக எடுத்து பயன்படுத்த விரும்பினார். அதற்காக அநேக பயிற்ச்சிகளும் கொடுத்தார்.

1. இயேசுவானவர் பேதுருவுக்காக மன்றாடியதாக வாசிக்கிறோம்.
    (லூக்கா 22:32)

2. ஒரு மணி நேரமாவது விழித்திருக்கக்கூடாத என்று இயேசு யாரைப் பார்த்து கேட்கிறார்? – பேதுரு
    (மத்தேயு 26:40)

3. பேதுருவைக் கடிந்து கொள்ளுதல்
a) ஆண்டவரே உமக்கு இது நடைபெறக்கூடாது. எனக்கு பின்னாக போ சாத்தானே.
    (மத்தேயு 16:23)

b) உன் பட்டயத்தை உரையிலே போடு
    (யோவான் 18:11)

மூலைக்கல் கிறிஸ்துவே:
மத்தேயு 16:18
எனவே நான் உனக்குக் கூறுகிறேன். உன் பெயர் பேதுரு. இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.

இந்த வசனத்தை நாம் தவறாக புரிந்துகொண்டதினால், சபையின் தலைவர் பேதுரு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். பேதுருவைப் பார்த்து, நீ தான் சபையின் தலைவர் என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை.

பேதுரு – கூழாங்கல்
தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது, தன்னோடு எல்லா நேரத்திலும் கூழாங்கற்களை எடுத்துக்செல்லுவார். அதேபோல, என்னுடைய கையில் பயன்படுத்தப்படும் கூழாங்கள் நீ என்று இயேசு சொல்லுகிறார்.

பேதுரு என்ற கல்லில் நான் சபையைக் கட்டுவேன் என்று சொல்லி ஆண்டவர் சொல்லவில்லை.

அப்போஸ்தலன் பவுலின் விளக்கம்:
1 கொரிந்தியர் 3:11 (Bower)
போடப்பட்ட அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தை போட ஒருவனாலும் கூடாது.

சபைக்கு அஸ்திபாரம், தலைவர் கிறிஸ்து தான் என்பதை பவுல் வெளிப்படுத்துகிறார்.

எபேசியர் 2:20
திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

திருத்தூர்களும், இறைவாக்கினர்களும் உங்களுக்கு நற்செய்தியை அறிவித்திருக்கலாம், அவர்கள் மூலைக்கல் அல்ல, கிறிஸ்துவே மூலைக்கல் என்று பவுல் எழுதுகிறார்.

பேதுருவின் விளக்கம்:
திருத்தூதுவர் பணிகள் 4:11,8
இந்த இயேசுவே, “கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார்“.

பேதுருவின் குணங்கள்:
1. இயேசு கிறிஸ்துவை அறியேன் என்று சபித்து, சத்தியம் செய்தவர்.
(மத்தேயு 26:69-74)
பேதுருவைப்போல ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களாகிய நாம், அழைப்பை மறந்தவர்களாக வாழ்ந்து வருகிறோம்.

எத்தனையோ பேர், இறையியல் கல்வி படிக்க முடியாமல், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல், பேராயர் அனுமதி கிடைக்காமல், வாய்ப்புக்கல் இல்லாமல் ஏங்கித் தவிக்கிறார்கள்.

ஆனால், கடவுளின் அழைப்பைப் பெற்றவர்களாகிய நாம், அழைப்பை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

2. இயேசு மரித்த பின்பு, மீன்பிடிக்கப்போகிறேன், என்று சொன்னவர் (யோவான் 21:3)
இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார், இனி நம்முடைய சொந்த வேலைகளை பார்ப்போம் என்று மற்றவர்கள் சொன்னாலும், இல்லை, நம்மை அழைத்த ஆண்டவர் உண்மையுள்ளவர் என்று சொல்லி, ஆறுதல் படுத்தக்கூடிய பேதுரு, மற்றவர்கள் அமைதியாய் இருக்கையில், நான் மீன்பிடிக்க செல்கிறேன் என்று சொல்லுகிறார்.

இயேசு – பேதுருவின் கேள்வி:
யோவான் 21:15
…….யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமயா் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

இங்கே ஆண்டவர் பேதுரு என்ற பதத்தை பயன்படுத்தாமல், சீமோன் என்று செல்லுவதை நாம் கவனிக்க வேண்டும்.

இவ்வளவு காலமாய் என் கையில் நீ கூழாங்கல்லாய் செயல்பட்டுக்கொண்டிருந்தாய். இப்போது, என்னை நீ மறந்து விட்டாய் என்று சொல்லுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆண்டவர் கேட்ட கேள்விக்கு பேதுரு ஆம் என்று பதில் சொன்னாரா? இல்லை என்று பதில் சொன்னாரா என்று பார்ப்போமானால்? பேதுரு இல்லை என்றே பதில் சொல்லுகிறார்.

கிரேக்க மொழியில் அன்பைக் குறிக்கும் பல வார்த்தைகள் உள்ளன. தமிழ் மொழியில் நாம் அந்த அழகை புரிந்து கொள்ள முடியாது.

நான் எனது தாயைப் பார்த்து, I Love You Mummy. என்று சொல்லுவதற்கும், யாரோடு ஒரு எதிர்பாலினரைப் பார்த்து, அதே வார்த்தையைச் சொல்லுவதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு.

கிரேக்க மொழியில், முதல் தரமான அன்பு அகாப்பே அன்பு. எதையும் எதிர்பாராத, சுயநலமற்ற ஓர் அன்பு. கடவுள் நம்மீது அந்த அன்பையே வைத்திருக்கிறார்.

மற்றொரு வித அன்பு, பிளயோஸ் அன்பு. பிளயோஸ் என்றால் சகோதரத்துவமான அன்பு.

இந்த வசனத்தை Bower திருமறையில் அகாப்பே அன்பிற்கு அன்பு என்றும், பிளயோஸ் அன்பிற்கு நேசம் என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள்.

ஆண்டவர் அகாப்பே அன்பு உள்ளதா? என்று கேட்டதற்கு, பேதுரு, அகாப்பே அன்பு இல்லை ஆண்டவரே, பிளயோஸ் அன்புதான் இருக்கிறது என்று உண்மையை சொல்லுகிறார்?

நான் உங்களிடத்தில் இன்று காலையில் இட்டலி சாப்பிட்டீர்களா? என்று கேட்டால், நீங்கள் சாப்பிட்டேன், ஆனால், தோசை சாப்பிட்டேன் என்று சொன்னால், அது முழுமையான பதில் ஆகாது. சாப்பிட்டீர்களா? என்றால் ஆம். இட்லி சாப்பிட்டீர்களா? என்றால் இல்லை என்று தான் பொருள்.

பேதுருவின் பதிலைக் கேட்ட ஆண்டவர், உண்மையில் மனவேதனைப் படுகிறார். இவனையல்லயோ நான் தொரிந்துகொண்டு, மூன்றறை ஆண்டுகள் பயிச்சி கொடுத்தேன் என்று சொல்லி, ஓர் சிறிய பொறுப்பை கொடுக்கிறார். சிறுவர் ஊழியம் செய் என்று கட்டளையிடுகிறார். என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்று சொல்லுகிறார்.

மிகவும் வேதனைப்பட்டவராக இரண்டாவது முறை பேதுருவைப் பார்த்து கேட்கிறார், யோனாவின் குமாரனாகிய சீமோனே இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? (16 வசனம்)

அதற்கு பேதுருவின் பதில்: ஆம், ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர் என்றார்.

ஆண்டவர் மிகவும் கலங்கினவராக என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லுகிறார். பெரியவர்கள் ஊழியத்தையும் செய் என்று சொல்லுகிறார்.

நாமும் ஒருவேலை இந்த பேதுருவைப் போல, வழிதப்பி நடந்து கொண்டிருந்தாலும், ஆண்டவர் மீண்டும் நமக்கு ஓர் வாய்ப்புக் கொடுக்கிறார்.

மூன்றாவது முறையாக ஆண்டவர் பேதுருவைப் பார்த்து கேட்கிறார். யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா? (17 வசனம்) என்று கேட்கிறார்.

இந்த இடத்திலும் பேதுரு நான் உம்மை நேசிக்கிறேன் என்றே பதில் சொல்லுகிறார்.

பேதுரு ஒருவேலை ஆண்டவரே, என்னிடம் அகாப்பே அன்பு இல்லை, பிளயோஸ் அன்பு தான் இருக்கிறது என்று சொல்லியிருந்தாலும், அதன் பின்பு பேதுருவின் வாழ்க்கையை எடுத்து பார்ப்போம் என்று சொன்னால், தன் வாழ்நாளில் இறுதி வரை கடவுளிடத்தில் அகாப்பே அன்பு கொண்டவராகவே பேதுரு வாழ்ந்தார்.

திருத்தூதர் பணிகள் 5:41
இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச்சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

திருத்தூதர்கள் என்பது பேதுருவையே குறிக்கிறது. பேதுரு தான் இந்த பிரிவில் கைது செய்யப்படுகிறார்.

ஆயர் பணி என்பது சொகுசான ஒரு வாழ்வாக மாறிவிட்டது. பயிற்ச்சியில் இருக்கும்போதே, நாம் என்ன கேட்கிறோம்? இந்த ஆலயத்திற்கு சென்றால், எவ்வளவு பணம் கொடுப்பார்கள். எப்படிப்பட்ட வசதிகள் அங்கே இருக்கும்.

பேதுருவின் மரணம்:
ஆண்டவரே என்னிடத்தில் அகாப்பே அன்பு இல்லை என்று சொன்ன பேதுரு, தன் வாழ்நாளின் நிறைவு பரியந்தம், கடவுளிடத்தில் அகாப்பே அன்பு கொண்டவராக வாழ்ந்தார்.

இன்று நாம் மிக எளிதாக I Love You Jesus என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த உண்மையான அன்பு, நம்மிடத்திலே காணப்படுகிறதா? என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

பேதுரு கி.பி. 67-ம் ஆண்டு ரோம அதிகாரிகளால் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

பேதுரு தவறான போதனையை பரப்புகிறான் என்று சொன்னபோது, அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அப்பொழுது பேதுரு, என் இயேசு நாதரைப் போல என்னை சிலுவையில் அறைய வேண்டாம். அதற்கு நான் எந்த அளவிற்கும் தகுதியற்றவன். என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லுகிறார். இப்படியாக தன் வாழ்நாளின் இறுதி வரை கர்த்தரிடத்தில் அகாப்பே அன்பு கொண்டவராக பேதுரு வாழ்ந்தார்.

நான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.