தென்னிந்தியத் திருச்சபை (காலை, மாலை ஆராதனை முறைகள்)
இரண்டாம் ஆராதனை முறை
ஆரம்ப ஜெபம்:
ஆரம்ப பாடல்:
நாம் கடவுளைத் தொழுவோம்.
கடவுள் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும். (யோவான் 4:24)
நம்முடைய பிதாவாகிய கடவுளாலும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (ரோமர் 1:7)
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். (சங்கீதம் 118:24)
கடவுள் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:5,7)
ஆயர்: ஆண்டவரே, எங்கள் உதடுகளைத் திறந்தருளும்;
சபை: அப்பொழுது எங்கள் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
ஆயர்: பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக;
சபை: ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென்.
(1)
திரியேகக் கடவுளைப் போற்றுவோம்
ஆயர்: சேனைகளின் கடவுளாகிய கர்த்தரே, நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்: வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன. உன்னதத்திலே ஓசன்னா.
சபை: கர்த்தரின் நாமத்தினாலே வந்தவரும், வருகிறவருமானவர் தோத்திரிக்கப்பட்டவர். உன்னதத்திலே ஓசன்னா.
ஆயர்: கடவுளே. நீர் பரிசுத்தர்.
சபை: கடவுளே நீர் பரிசுத்தர்.
ஆயர்: சர்வ வல்லவரே, நீர் பரிசுத்தர்
சபை: சர்வ வல்லவரே, நீர் பரிசுத்தர்
ஆயர்: சாவாமையுடையவரே, நீர் பரிசுத்தர்
சபை: சாவாமையுடையவரே, நீர் பரிசுத்தர்
ஆயர்: ஆண்டவரே, எங்களுக்காகச் சிலுவையில் அறையுண்ட எங்கள் மீட்பரே, எங்கள் மேல் கிருபையாயிரும்.
சபை: ஆண்டவரே, எங்களுக்காகச் சிலுவையில் அறையுண்ட எங்கள் மீட்பரே, எங்கள் மேல் கிருபையாயிரும்.
ஆயர்: பரிசுத்த ஆவியாகிய ஆண்டவரே, எங்கள் மேல் கிருபையாயிரும்.
சபை: பரிசுத்த ஆவியாகிய ஆண்டவரே, எங்கள் மேல் கிருபையாயிரும்.
ஆயர்: ஆண்டவரே, எங்கள் ஜெபங்களையும், ஆராதனையையும் ஏற்றுக்கொண்டு, எங்கள் மேல் கிருபையாயிரும்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மேல் மனதுருகி, எங்கள் மேல் கிருபையாயிரும்.
(2)
ஆராதனை நடத்துகிறவர் சொல்லலாம்:
எங்கள் தந்தையாம் கடவுளே, உமது வல்லமையாலும் ஞானத்தாலும் எல்லாவற்றையும் படைத்து, உமது குமாரனை எங்கள் இரட்சகராகத் தரும்படி உலகத்தில் அன்புகூர்ந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். குமாரனாம் கடவுளே, பாவத்தைத் தவிர்த்து எல்லாவற்றிலும் எங்களைப்போல் மனிதன் ஆகி, எங்கள் பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டு, எங்கள் நீதிக்காக உயிர்த்தெழும்பியவரே, உம்மைப் போற்றுகிறோம். பரிசுத்த ஆவியானவராகிய கடவுளே, எல்லா உண்மைக்குள்ளும் எங்களை வழிநடத்தி, கடவுளின் அன்பை எங்கள் நெஞ்சில் பொழிகிறவரே, உம்மைப் போற்றுகிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய கடவுளே, உமக்கே எக்காலமும் எல்லாப் புகழும் மகிமையும்உண்டாவதாக. ஆமென்.
பாவ அறிக்கை
நமக்குப் பாவமில்லை என்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாவோம், நமக்குள் உண்மை இல்லை. நமது பாவங்களை அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எவ்வித அநீதமும் நீங்க நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் நம்பத்தக்கவரும் நீதியும் உள்ளவர். (1 யோவான் 1:8,9)
நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய், தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ்செய்தேன். இனி உம்முடைய மகன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்லன், உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன். (லூக்கா 15:18,19)
கடவுள் இராஜ்யம் சமீபத்திருக்கிறது; மனந்திரும்பிச் சுவிசேஷத்தில் நம்பிக்கை வையுங்கள். (மாற்கு 1:15)
நமது பலவீனங்களுக்காகப் பரிதபிக்க முடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாத பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். (எபிரெயர் 4:15)
ஆயர்: நாம் முழங்காற்படியிட்டு மௌனமாக நம்மை நாமே சோதனை செய்வோம். (அமைதி)
ஆயர்: சர்வ வல்லமையுள்ள கடவுளிடத்தில் நாம் நமது பாவங்களைத் தாழ்மையோடு அறிக்கையிடுவோம்.
(1)
சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே, தப்பிப்போன ஆடுகளைப்போல நாங்கள் உம்முடைய வழிகளை விட்டு வழுவி அலைந்து போனோம். எங்கள் இருதயத்தின் யோசனைகளுக்கும் விருப்பங்களுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம். உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தோம். செய்யத் தக்கவைகளைச் செய்யாமல், செய்யத் தகாதவைகளைச் செய்து வந்தோம்; எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும் ஆண்டவரே, தேவரீர் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய், மனிதருக்கு அருளிச் செய்த வாக்குத்தத்தங்களின்படியே, நிர்ப்பாக்கியமுள்ள குற்றவாளிகளாகிய எங்களுக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும். பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களைச் சீர்ப்படுத்தும். மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி நாங்கள் இனித் தேவ பக்தியும், நீதியும், தெளிந்த புத்தியும் உள்ளவர்களாய் நடந்துவர, இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்கு கிருபை செய்தருளும். ஆமென்.
(2)
எங்கள் தந்தையாம் கடவுளே. நினைவினாலும் வார்த்தையினாலும் செய்கையினாலும் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்திருக்கிறோம். முழு மனதோடு நாங்கள் உம்மை நேசிக்கவில்லை. எங்களிடத்தில் நாங்கள் அன்பு கூருவதுபோல அயலாரிடத்தில் நாங்கள் அன்பு கூரவில்லை. எங்கள் மேல் இரக்கமாயிருக்க உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம். எங்கள் பாவ அழுக்கை நீக்கி எங்களைச் சுத்திகரியும். எங்கள் குற்றங்களை விட்டுவிட எங்களுக்கு உதவி புரியும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். பிதாவே, ஆமென்.
ஆயர்: சர்வ வல்லமையும், மிகுந்த இரக்கமுமுள்ள ஆண்டவர் மன்னிப்பையும் பாவ நிவர்த்தியையும் நமக்கு கட்டளையிட்டருளி, வாழ்க்கையைச் சீர்படுத்துவதற்கான காலத்தையும், தமது பரிசுத்தாவியின் கிருபையையும் தேற்றுதலையும் தந்தருளுவாராக. ஆமென்…
ஆயர்: ஆண்டவரைத் துதியுங்கள்.
சபை : ஆண்டவர் நாமம் துதிக்கப்படுவதாக.
(1)
சங்கீதம் 95
கர்த்தரைக் கெம்பீரமாகப் பாடி. நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம். வாருங்கள்.
துதித்தலுடனே அவர் சன்னிதிக்கு முன்பாக வந்து சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
கர்த்தரே மகா தேவனும்: எல்லாத் தேவர்களுக்கும் மகா ராஜனுமாயிருக்கிறார்.
பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக் கடவோம் வாருங்கள்.
அவர் நம்முடைய தேவன்: நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
(இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்; வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல. உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து; என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து; அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப் பதில்லையென்று; என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்)
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக;
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான, சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
(2)
சங்கீதம் 100
பூமியின் குடிகளே, எல்லோரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்; மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவருடைய ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாய் இருக்கிறோம்.
அவர் வாசல்களில் துதியோடும் அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து; அவரைத் துதித்து அவருடைய நாமத்தை தோத்திரியுங்கள்.
கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்; அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக, ஆமென்.
மாறி மாறி வாசிக்க வேண்டிய சங்கீதம்
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாட்டுப் பகுதி
நிருபப்பகுதி
நற்செய்திப் பகுதி
அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.
அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீரம் உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.
இறைவேண்டல்:
அறிவிப்புகள்:
அருளுரை:
காணிக்கைப் பாடல்:
ஜெபங்கள்
கர்த்தர் உங்களோடிருப்பாராக:
அவர் உமது ஆவியோடும் இருப்பாராக,
ஜெபம் செய்வோம்
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்
கிறிஸ்துவே எங்களுக்கு இரங்கும்
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.
ஆசீர்வாதம்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களை காக்ககடவர்; கர்த்தர் தம்முடைய திருமுகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உங்கள் மேல் கிருபையாய் இருக்கக்கடவர்; கர்த்தர் தம்முடைய திருமுகத்தை உங்கள் மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். ஆமென்.
அல்லது
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியாரின் ஐக்கியமும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
நிறைவு கீதம்

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.