Type Here to Get Search Results !

Hebrews 7 Seven Quesions and Answers | எபிரெயர் 7 வேதாகம கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
ஏழாம் (7) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Seven (7)
Bible Quiz Question & Answers
=============

01) சாலேமின் ராஜா யார்?
Answer: மெல்கிசேதேக்கு
    எபிரெயர் 7:1

02) உன்னதமான தேவனுடைய ஆசாரியன் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
    எபிரெயர் 7:1

03) ராஜாக்களை முறியடித்தது யார்?
Answer: ஆபிரகாம்
    எபிரெயர் 7:1

04) மெல்கிசேதேக்கு யாருக்கு எதிர்கொண்டு போய், அவனை ஆசீர்வதித்தார்?
Answer: ஆபிரகாம்
    எபிரெயர் 7:1

05) ஆபிரகாம் யாருக்கு தசமபாகம் கொடுத்தார்?
Answer: மெல்கிசேதேக்கு
    எபிரெயர் 7:2

06) மெல்கிசேதேக்கு என்பதன் அர்த்தம் என்ன?
Answer: நீதியின் ராஜா
    எபிரெயர் 7:2

07) சாலேமின் ராஜா என்பதற்கு அர்த்தம் என்ன?
Answer: சமாதானத்தின் ராஜா
    எபிரெயர் 7:2

08) தகப்பனும், தாயும் வம்சவரலாறும் இல்லாதவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
    எபிரெயர் 7:3

09) ஜீவனின் துவக்கமும் முடிவுமில்லாதவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
    எபிரெயர் 7:3

10) மெல்கிசேதேக்கு யாருக்கு ஒப்பானவராய் என்றென்றைக்கும் ஆசாரியாய் நிலைத்திருக்கிறார்?
Answer: தேவகுமாரனுக்கு ஒப்பானவாய்
    எபிரெயர் 7:3

11) கோத்திரத்தலைவன் யார்?
Answer: ஆபிரகாம்
    எபிரெயர் 7:4

12) ஆபிரகாம் எவைகளில் தசமபாகம் கொடுத்தார்?
Answer: கொள்ளையிடப்பட்ட பொருள்களில்
    எபிரெயர் 7:4

13) கொள்ளையிடப்பட்ட பொருள்களில் தசமபாகம் கொடுத்தது யார்?
Answer: ஆபிரகாம்
    எபிரெயர் 7:4

14) எந்த சந்ததியார் ஆசாரியத்தவத்தை அடைகிறார்கள்?
Answer: லேவியின் புத்திரர்
    எபிரெயர் 7:5

15) நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறவர்கள் யார்?
Answer: லேவியின் புத்திரர் (ஆசாரியர்கள்)
    எபிரெயர் 7:5

16) ஆசாரியர்கள் யாரிடத்தில் தசமபாகம் வாங்குகிறதற்கு கட்டளைபெற்றிருக்கிறார்கள்?
Answer: தங்கள் சகோதரரான ஜனங்களிடத்தில்
    எபிரெயர் 7:5

17) லேவியர் தங்கள் சகோதரரான ஜனங்களிடத்தில் தசமபாகம் வாங்க எதன்படி கட்டளை பெற்றார்கள்?
Answer: நியாயப்பிரமாணத்தின்படி
    எபிரெயர் 7:5

18) லேவியின் வம்சவரிசையில் வராமல் தசமபாகம் வாங்கியது யார்? யார் கையில் வாங்கினார்?
Answer: மெல்கிசேதேக்கு, ஆபிரகாமின் கையில்
    எபிரெயர் 7:6

19) வாக்குத்தத்தங்களைப் பெற்றவர் யார்?
Answer: ஆபிரகாம்
    எபிரெயர் 7:6

20) வாக்குத்தத்தங்களைப் பெற்றவரை ஆசீர்வதித்தது யார்?
Answer: மெல்கிசேதேக்கு
    எபிரெயர் 7:6

21) சிறியவன் யாரால் ஆசீர்வதிக்கப்படுவான்?
Answer: பெரியவனால்
    எபிரெயர் 7:7

22) இங்கே தசமபாகம் வாங்குவது யார்?
Answer: மரிக்கிற மனுஷர்கள்
    எபிரெயர் 7:8

23) அங்கே தசமபாகம் வாங்கியது யார்?
Answer: பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் (மெல்கிசேதேக்கு)
    எபிரெயர் 7:8

24) மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுக்கும்போது, லேவியானவன் எங்கே இருந்தான்?
Answer: ஆபிரகாமின் அறையிலிருந்தான்
    எபிரெயர் 7:9

25) தசமபாகம் வாங்குகிறவன் தசமபாகம் கொடுத்தான். அவன் யார்? யார் மூலமாய்க் கொடுத்தான்?
Answer: லேவியன், ஆபிரகாமின் மூலமாய்க் கொடுத்தான்
    எபிரெயர் 7:9,10

26) இஸ்ரவேல் ஜனங்கள் எந்த முறைமைக்குட்பட்டிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்?
Answer: லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்து
    எபிரெயர் 7:11

27) லேவிகோத்திர ஆசாரிய முறைப்படி உண்டானது என்ன?
Answer: பூரணப்படுதல்
    எபிரெயர் 7:11

28) ------------ முறைமையின்படி அழைக்கப்படாமல், --------- முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியதென்ன?
Answer: ஆரோனுடைய, மெல்கிசேதேக்கினுடைய
    எபிரெயர் 7:11

29) ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமானால், எதுவும் மாற்றப்பட வேண்டியதாகும்?
Answer: நியாயப்பிரமாணம்
    எபிரெயர் 7:12

30) நம்முடைய கர்த்தர் எந்த கோத்திரத்தில் தோன்றினார்?
Answer: யூதா கோத்திரம்
    எபிரெயர் 7:14

31) யூதாகோத்திரத்தைப் பற்றி பேசுகையில் மோசே எதைப்பற்றி சொல்லவில்லை?
Answer: ஆசாரியத்துவத்தைப் பற்றி
    எபிரெயர் 7:14

32) யூதா கோத்திரத்தைக் குறித்துப் பேசுகையில் ஆசாரியத்துவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாதது யார்?
Answer: மோசே
    எபிரெயர் 7:14

33) யாருக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லப்பட்டது?
Answer: மெல்கிசேதேக்கு
    எபிரெயர் 7:15

34) இயேசு எந்த நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகவில்லை?
Answer: மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணம்
    எபிரெயர் 7:16

35) இயேசு எப்படிப்பட்ட வல்லமையின்படி ஆசாரியரானார்?
Answer: அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படி
    எபிரெயர் 7:17

36) பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்தது எது?
Answer: முந்தின கட்டளை
    எபிரெயர் 7:18

37) பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது எது?
Answer: முந்தின கட்டளை
    எபிரெயர் 7:18

38) முந்தின கட்டளை ஏன் மாற்றப்பட்டது?
Answer: பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினால்
    எபிரெயர் 7:18

39) ஒன்றையும் பூரணப்படுத்தாதது எது?
Answer: நியாயப்பிரமாணம்
    எபிரெயர் 7:19

40) எந்த நம்பிக்கையை வருவிப்பது பூரணப்படுத்தும்?
Answer: அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பது
    எபிரெயர் 7:19

41) எந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்?
Answer: அதிக நன்மையான நம்பிக்கை
    எபிரெயர் 7:19

42) லேவியர் எது இல்லாமல் ஆசாரியராயிருக்கிறார்கள்?
Answer: ஆணையில்லாமல்
    எபிரெயர் 7:20

43) நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று ஆணையிட்டது யார்?
Answer: கர்த்தர்
    எபிரெயர் 7:20

44) விசேஷித்த காரியம் என்ன?
Answer: இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது
    எபிரெயர் 7:21

45) விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானது யார்?
Answer: இயேசுவானவர்
    எபிரெயர் 7:21,22

46) லேவியர் எதினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால் அநேகர் ஆசாரியராக்கப்படுகிறார்கள்?
Answer: மரணத்தினிமித்தம்
    எபிரெயர் 7:23

47) மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராய் இருப்பது யார்?
Answer: இயேசு
    எபிரெயர் 7:24

48) இயேசுவானவர் யாருக்காக வேண்டுதல் செய்கிறார்?
Answer: தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக
    எபிரெயர் 7:25

49) இயேசுவானவர் தேவனிடத்தில் சேருகிறவர்களை எப்படி இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்?
Answer: முற்றுமுடிய இரட்சிக்க
    எபிரெயர் 7:25

50) இயேசுவானவர் எதினாலே தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்?
Answer: எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால்
    எபிரெயர் 7:25

51) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எவைகளை விட உயர்ந்தவர்?
Answer: வானங்களிலும் உயர்ந்தவர்
    எபிரெயர் 7:26

52) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எப்படிப்பட்டவர்களுக்கு விலகினவர்?
Answer: பாவிகளுக்கு விலகினவர்
    எபிரெயர் 7:26

53) நம்முடைய பிரதான ஆசாரியர் (இயேசு) எப்படிப்பட்டர்?
Answer: பரிசுத்தர், குற்றமற்றவர், மாசில்லாதவர், பாவிகளுக்கு விலகினவர், வானங்களிலும் உயர்ந்தவர்
    எபிரெயர் 7:26

54) முன் சொந்த பாவங்களுக்காகவும், பின் ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடுகிறவர்கள் யார்?
Answer: பிரதான ஆசாரியர்கள்
    எபிரெயர் 7:27

55) இயேசுவானவர் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ---------- செய்து முடித்தார்
Answer: ஒரேதரம்
    எபிரெயர் 7:27

56) நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டவர்களை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது?
Answer: பெலவீனமுள்ள மனுஷர்களை
    எபிரெயர் 7:28

57) நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு உண்டான ஆணையோடே விளங்கியது எது?
Answer: வசனம்
    எபிரெயர் 7:28

58) என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராக பூரண குமாரனை ஏற்படுத்தியது எது?
Answer: நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு உண்டான ஆணையோட விளங்கிய வசனம்
    எபிரெயர் 7:28


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.