Type Here to Get Search Results !

Hebrews 3 Three Questions & Answers | எபிரெயர் 3 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
மூன்றாம் (3) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Three (3)
Bible Quiz Question & Answers
=============

01) ----------- பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே.
Answer: பரம அழைப்புக்கு
    எபிரெயர் 3:1

02) நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியரும் யார்?
Answer: இயேசு கிறிஸ்து
    எபிரெயர் 3:1

03) யாரை கவனித்துப் பார்க்க வேண்டும்?
Answer: கிறிஸ்து இயேசுவை
    எபிரெயர் 3:1

04) தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர் யார்?
Answer: மோசே
    எபிரெயர் 3:2

05) தம்மை ஏற்படுத்தினவருக்கு (தேவன்) உண்மையுள்ளவராயிருந்தது யார்?
Answer: கிறிஸ்து இயேசு
    எபிரெயர் 3:2

06) வீட்டைப் பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவர் யார்?
Answer: வீட்டை உண்டுபண்ணினவர்
    எபிரெயர் 3:3

07) மோசேயைப் பார்க்கிலும் அதிக மகிமைக்குப் பாத்திரர் யார்?
Answer: கிறிஸ்து இயேசு
    எபிரெயர் 3:3

08) எந்த வீடும் --------- உண்டாக்கப்படும்
Answer: ஒருவனால்
    எபிரெயர் 3:4

09) எல்லாவற்றையும் உண்டாக்கினவர் யார்?
Answer: தேவன்
    எபிரெயர் 3:4

10) மோசே எப்படிப்பட்டவராய் தேவனுடைய வீட்டில் உண்மையுள்ளவராய் இருந்தார்?
Answer: பணிவிடைக்காரராய்
    எபிரெயர் 3:4

11) எதற்கு சாட்சியாக மோசே தேவனுடைய வீட்டில் உண்மையுள்ளவராய் இருந்தார்?
Answer: சொல்லப்பட்ட காரியங்களுக்கு சாட்சியாக
    எபிரெயர் 3:5

12) தேவனுடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருந்தது யார்?
Answer: கிறிஸ்து
    எபிரெயர் 3:6

13) நம்பிக்கையினாலே உண்டாவது எது?
Answer: தைரியம், மேன்மைப்பாராட்டல்
    எபிரெயர் 3:6

14) எதை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?
Answer: நம்பிக்கையினால் உண்டாகும் தைரியத்தையும், மேன்மைப்பாராட்டலையும்
    எபிரெயர் 3:6

15) நாம் எப்பொழுது கர்த்தருடைய வீடாயிருப்போம்?
Answer: தைரியத்தையும் மேன்மைப்பாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளம்போது
    எபிரெயர் 3:6

16) யார் சொல்லுகிறபடி இன்று கடவுளின் சத்தத்தைக் கேட்பீர்களாக?
Answer: பரிசுத்த ஆவியானவர்
    எபிரெயர் 3:7

17) எங்கு கோபமூட்டினீர்கள்?
Answer: வனாந்தரத்தில்
    எபிரெயர் 3:8

18) வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனை நாளிலும் நடந்ததுபோல, ---------- கடினப்படுத்தாதிருங்கள்
Answer: உங்கள் இருதயங்களைக்
    எபிரெயர் 3:8

19) கர்த்தரை சோதித்து, பரீட்சைபார்த்தது யார்?
Answer: பிதாக்கள்
    எபிரெயர் 3:9

20) பிதாக்கள் எத்தனை வருஷகாலம் கர்த்தரின் கிரியைகளைக் கண்டார்கள்?
Answer: நாற்பது வருஷம்
    எபிரெயர் 3:9

21) பிதாக்கள் நாற்பது வருஷகாலம் எதைக் கண்டார்கள்?
Answer: கர்த்தரின் கிரியைகளைக் கண்டார்கள்
    எபிரெயர் 3:9

22) கர்த்தர் யாரை ஆரோசித்தார்?
Answer: இஸ்ரவேல் சந்தததியார்
    எபிரெயர் 3:10

23) அவர்கள் எப்படிப்பட்ட இருதயமுள்ள ஜனங்கள்?
Answer: வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனங்கள்
    எபிரெயர் 3:10

24) இஸ்ரவேல் சந்ததியார் எதை அறியாதவர்கள்?
Answer: கர்த்தருடைய வழிகளை
    எபிரெயர் 3:10

25) அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் எப்போது ஆணையிட்டார்?
Answer: அவருடைய கோபத்தில்
    எபிரெயர் 3:11

26) எப்படிப்பட்ட பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Answer: ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான பொல்லாத இருதயம்
    எபிரெயர் 3:12

27) எதினால் கடினப்பட்டுப்போகாதபடிக்கு புத்திசொல்ல வேண்டும்?
Answer: பாவத்தின் வஞ்சனையினால்
    எபிரெயர் 3:13

28) எப்போறு ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வேண்டும்?
Answer: நாடோறும்
    எபிரெயர் 3:13

29) எதை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றக்கொண்டிருக்க வேண்டும்?
Answer: ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை
    எபிரெயர் 3:14

30) நாம் எப்போது கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்?
Answer: ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கும்போது
    எபிரெயர் 3:14

31) எப்போது நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்?
Answer: கோபமூட்டுதலில் நடந்ததுபோல
    எபிரெயர் 3:15

32) கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்?
Answer: மோசேயினால் எகிப்திருந்து புறப்பட்ட யாவரும்
    எபிரெயர் 3:16

33) கர்த்தர் நாற்பதுவருஷ காலமாய் யாரை ஆரோசித்தார்?
Answer: எகிப்திலிருந்து ’புறப்பட்டவர்களை (இஸ்ரவேல் புத்திரர்)
    எபிரெயர் 3:16,17

34) யாருடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்று?
Answer: பாவஞ்செய்தவர்கள்
    எபிரெயர் 3:17

35) பாவஞ்செய்தவர்களுடைய சவங்கள் எங்கு விழுந்தது?
Answer: வனாந்தரத்தில்
    எபிரெயர் 3:17

36) யார் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் ஆணையிட்டார்?
Answer: கீழ்ப்படியாதவர்கள்
    எபிரெயர் 3:18

37) எதினாலே அவர்கள் கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கக்கூடாமல் போனார்கள்?
Answer: அவிசுவாசத்தினால்
    எபிரெயர் 3:19

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.