Type Here to Get Search Results !

Hebrews 2 Two Bible Quiz Questions & Answers | எபிரெயர் 2 கேள்வி பதில்கள் | விவிலிய வினா விடைகள் | Jesus Sam

=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
இரண்டாம் (2) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter Two (2)
Bible Quiz Question & Answers
=============


01) நாம் எதற்காக எவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்?
Answer: நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு
    எபிரெயர் 2:1

02) தண்டனை வரத்தக்கதாக யாருடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டது?
Answer: தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனம்
    எபிரெயர் 2:2

03) எதற்கு நீதியான தண்டனை வரும்?
Answer: வசனத்திற்கு விரோதமான செய்கைக்கும், கீழ்ப்படியாமைக்கும்
    எபிரெயர் 2:2

04) முதலாவது யார் மூலமாய் அறிவிக்கப்பட்டது?
பின்பு யார் மூலமாய் உறுதியாக்கப்பட்டது?
Answer: கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டது
கர்த்தரிடத்தில் கேட்டவர்களாலே உறுதியாக்கப்பட்டது
    எபிரெயர் 2:3

05) கர்த்தருடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுக்கப்பட்டது எது?
Answer: பரிசுத்த ஆவியின் வரங்கள்
    எபிரெயர் 2:4

06) பரிசுத்த ஆவியின் வரங்கள் எப்படிக் கொடுக்கப்பட்டது?
Answer: அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும்
    எபிரெயர் 2:4

07) தேவன் எதைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்?
Answer: இரட்சிப்பைக் குறித்து
    எபிரெயர் 2:4

08) எதைக் குறித்து கவலையற்றிருப்போமானால், எதற்கு தப்பித்துக்கொள்ள முடியாது?
Answer: இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள முடியாது
    எபிரெயர் 2:4

09) கர்த்தர் எதை யாருக்குக் கீழ்ப்படுத்தவில்லை?
Answer: இனி வரும் உலகத்தை, தூதர்களுக்கு கீழ்ப்படுத்தவில்லை
    எபிரெயர் 2:5

10) யாரை நீர் நினைக்கிறதற்கும்? யாருடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
Answer: மனுஷனை, மனுஷனுடைய குமாரனை
    எபிரெயர் 2:6

11) கர்த்தர் மனுஷனை யாரைவிட சற்று சிறியவனாக்கினார்?
Answer: தேவதூதரைவிட
    எபிரெயர் 2:7

12) கர்த்தர் மனுஷனை எப்படி முடிசூட்டினார்?
Answer: மகிமையினாலும், கனத்தினாலும்
    எபிரெயர் 2:7

13) கர்த்தர் மனுஷனை எதற்கு அதிகாரியாக வைத்தார்?
Answer: தம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல்
    எபிரெயர் 2:7

14) கர்த்தர் எதை மனுஷனுடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினார்?
Answer:சகலத்தையும்
    எபிரெயர் 2:7

15) ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தது யார்?
Answer: இயேசு
    எபிரெயர் 2:9

16) இயேசு எதனால் மரணத்தை ருசிபார்த்தார்?
Answer: தேவனுடைய கிருபையினால்
    எபிரெயர் 2:9

17) இயேசு எதற்காக தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டார்?
Answer: மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு
    எபிரெயர் 2:9

18) இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் எப்படி முடிசூட்டப்பட்டார்?
Answer: மகிமையினாலும், கனத்தினாலும்
    எபிரெயர் 2:9

19) கடவுள் -------, -------- சகலத்தையும் உண்டாக்கினார்?
Answer: தமக்காகவும், தம்மாலேயும்
    எபிரெயர் 2:10

20) அநேகம் பிள்ளைகளை எங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்?
Answer: மகிமையில்
    எபிரெயர் 2:10

21) யாரை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது கடவுளுக்கு ஏற்றதாயிருக்கிறது?
Answer: இரட்சிப்பின் அதிபதியை
    எபிரெயர் 2:10

22) -------------- ------------- யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்.
Answer: பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களும்
    எபிரெயர் 2:11

23) இயேசு பரிசுத்தஞ்செய்யப்படுவோரை எப்படி அழைக்க வெட்கப்படவில்லை?
Answer: சகோதரர் என்று அழைக்க
    எபிரெயர் 2:11

24) உம்முடைய நாமத்தை யாருக்கு அறிவித்து? எங்கே உம்மைத் துதித்துப் பாடுவேன்?
Answer: என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில்
    எபிரெயர் 2:12

25) நானும் (இயேசு) ------------------- நம்பிக்கையாயிருப்போம்
Answer: தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும்
    எபிரெயர் 2:13

26) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்கள் யார்?
Answer: பிள்ளைகள்
    எபிரெயர் 2:14

27) பிள்ளைகளைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய் மாறியது யார்?
Answer: இயேசு
    எபிரெயர் 2:14

28) மரணத்துக்கு அதிகாரி யார்?
Answer: பிசாசு
    எபிரெயர் 2:14

29) இயேசு மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை எப்படி அழித்தார்?
Answer: தமது மரணத்தினாலே
    எபிரெயர் 2:14

30) ஜீவகாலமெல்லாம் எப்படி அடிமைத்தனத்திற்குள்ளானார்கள்?
Answer: மரணபயத்தினாலே
    எபிரெயர் 2:15

31) இயேசு யாரை விடுதலைபண்ணும்படிக்கு மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்?
Answer: மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும்
    எபிரெயர் 2:15

32) இயேசு யாருக்கு உதவ கைகொடுக்கவில்லை?
Answer: தேவதூதர்கள்
    எபிரெயர் 2:16

33) இயேசு யாருக்கு உதவ கைகொடுத்தார்?
Answer: ஆபிரகாமின் சந்ததி
    எபிரெயர் 2:16

34) இயேசு எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர்?
Answer: இரக்கமும், உண்மையுமுள்ள
    எபிரெயர் 2:17

35) இயேசு எதற்காக தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது?
Answer: இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு
    எபிரெயர் 2:17

36) இயேசு யாருடைய பாவங்களை நிவிர்த்தி செய்யும்படிக்கு, தம்முடைய சகோதருக்கு ஒப்பானார்?
Answer: ஜனங்களின்
    எபிரெயர் 2:17

37) இயேசு எதினாலே சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்?
Answer: அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினால்
    எபிரெயர் 2:18


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.