Type Here to Get Search Results !

Exodus Twenty Two 22 Bible Questions & Answers Tamil | யாத்திராகமம் 22 பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twenty Two (22)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து இரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. ஒருவன் ஒரு மாட்டைத் திருடி அதைக் கொன்றால் அல்லது அதை விற்றால் அதற்கு பதிலாக அவன் என்ன கொடுக்க வேண்டும்?
Answer: ஐந்து மாடுகளை பதிலாக கொடுக்கக்கடவன்
    (யாத்திராகமம் 22:1)

02. ஒருவன் ஒரு ஆட்டைத் திருடி அதை கொன்றால் அல்லது அதை விற்றால் அதற்கு பதிலாக அவன் என்ன கொடுக்க வேண்டும்?
Answer: நான்கு ஆடுகளை பதிலக கொடுக்கக்கடவன்
    (யாத்திராகமம் 22:1)

03. திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் என்ன சுமராது?
Answer: இரத்தபழி சுமராது
    (யாத்திராகமம் 22:2)

04. திருடன் கன்னமிட்டு திருடுகையில், சூரியன் அவன்மேல் உதித்ததானால், அவன் நிமித்தம் என்ன சுமரும்?
Answer: இரத்த பழி சுமரும்
    (யாத்திராகமம் 22:2,3)

05. திருடன் கன்னமிட்டு திருடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தால், அந்த களவுக்காக அவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: திருடன் விலைப்படக்கடவன் (அடிமையாக விற்க்கப்பட வேண்டும்)
    (யாத்திராகமம் 22:3)

06. திருடன் திருடிய மாடாவது, கழுதையாவது, ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் இரட்டிப்பாய் கொடுக்க வேண்டும்
    (யாத்திராகமம் 22:4)

07. ஒருவன் பிறனுடைய வயலிலாவது, திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால் அவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் தன் சுய வயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து பதில் செலுத்தக்கடவன்
    (யாத்திராகமம் 22:5)

08. அக்கினி எழும்பி, முள்ளுகளில் பற்றி, தானியப்போரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், யார் அந்த அக்கினி சேதத்திற்கு உத்தரவாதம் பண்ண வேண்டும்?
Answer: அக்னியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதாரத்திற்கு உத்தரவாதம் பண்ண வேண்டும்
    (யாத்திராகமம் 22:6)

09. ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது அது திருடப்பட்டு, திருடன் அகப்பட்டானாகில் என்ன செய்ய வேண்டும்?
Answer: திருடன் இரட்டிப்பாய் கொடுக்க வேண்டும்
    (யாத்திராகமம் 22:7)

10. ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது அது திருடப்பட்டு, திருடன் அகப்படாதேபோனால் என்ன செய்ய வேண்டும்?
Answer: அந்த வீட்டுக்காரனை நியாயாதிபதியினிடத்தில் கொண்டுபோக வேண்டும்
    (யாத்திராகமம் 22:8)

11. காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று குற்றஞ்சாட்டினால், இருதிறத்தாருடைய வழக்கும் எங்கு வரக்கடவது?
Answer: நியாயாதிபதியினிடத்தில்
    (யாத்திராகமம் 22:9)

12. காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று குற்றஞ்சாட்டினால், நியாயாதிபதி எவனை குற்றவாளி என்று தீர்க்கிறானோ அவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்
    (யாத்திராகமம் 22:9)

13. ஒருவன் தன் கழுதையையாவது, மாட்டையாவது, ஆட்டையாவது மற்ற எந்த மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது
    (யாத்திராகமம் 22:11)

14. ஒருவனுடைய மிருகஜீவன் மற்றவன் வசத்தில் விட்டிருக்கும்போது அது திருடப்பட்டுப்போயிற்றானால் அவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம்பண்ண வேண்டும்
    (யாத்திராகமம் 22:12)

15. ஒருவனுடைய மிருகஜீவன் மற்றவன் வசத்தில் விட்டிருக்கும்போது அது பீறுண்டுபோயிற்றானால் அவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் அதற்கு சாட்சியை ஒப்புவிக்க வேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை
    (யாத்திராகமம் 22:13)

16. ஒருவன் பிறனிடத்தில் எதையாகிறலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும் யார் அதற்கு உத்தரவாதம் பண்ண வேண்டும்?
Answer: இரவலாக வாங்கினவன்
    (யாத்திராகமம் 22:14)

17. ஒருவன் பிறனிடத்தில் எதையாவது இரவலாக வாங்கி, அது சேதப்படும்போது அல்லது சாகும்போது அதற்கு உடையவன் கூட இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: இரவலாக வாங்கியவன் உத்தரவாதம் பண்ண வேண்டியதில்லை
    (யாத்திராகமம் 22:15)

18. ஒருவன் பிறனிடத்தில் எதையாவது வாடகைக்கு வாங்கி, அது சேதப்பட்டுப்போனால் அல்லது செத்துப்போனால் என்ன செய்ய வேண்டும்?
Answer: வாடகைக்கு வாங்கியவன் உத்தரவாதம் பண்ண வேண்டியதில்லை. அது அவன் வாடகைக்கு வந்த சேதம்
    (யாத்திராகமம் 22:15)

19. நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: சயனித்தவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம் பண்ணக்கடவன்
    (யாத்திராகமம் 22:16)

20. ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்து, அவளுடைய தகப்பன் அவளை அவனுக்கு கொடுக்க மாட்டேன் என்றானாகில் என்ன செய்ய வேண்டும்?
Answer: கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்க வேண்டும்
    (யாத்திராகமம் 22:17)

21. சூனியக்காரியை என்ன செய்ய வேண்டும்?
Answer: உயிரோடே வைக்க வேண்டாம்
    (யாத்திராகமம் 22:18)

22. மிருகத்தோடே புணருகிறவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் கொல்லப்பட வேண்டும்
    (யாத்திராகமம் 22:19)

23. கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் சங்கரிக்கப்படக்கடவன்
    (யாத்திராகமம் 22:20)

24. யாரை சிறுமைப்படுத்தாமலும், ஒடுக்காமலும் இருக்க வேண்டும்?
Answer: அந்நியனை
    (யாத்திராகமம் 22:21)

25. இஸ்ரவேல் புத்திரர் எங்கு அந்நியராய் இருந்தார்கள்?
Answer: எகிப்து தேசத்தில்
    (யாத்திராகமம் 22:21)

26. யாரை ஒடுக்காமல் இருக்க வேண்டும்?
Answer: விதவைகளையும் திக்கற்ற பிள்ளைகளையும்
    (யாத்திராகமம் 22:22)

27. விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் ஒடுக்கும்போது அவர்கள் கர்ததரை நோக்கி முறையிட்டால் கர்த்தர் என்ன செய்வார்?
Answer: கர்த்தர் கோபம்மூண்டவராகி உங்களை பட்டயக்கருக்கினால் கொலை செய்வார்
    (யாத்திராகமம் 22:24)

28. சிறுமைப்பட்டிருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் பணம் கடனாக கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: வட்டி வாங்காதிருக்க வேண்டும்
    (யாத்திராகமம் 22:25)

29. பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால் என்ன செய்ய வேண்டும்?
Answer: பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்கு திரும்ப கொடுக்க வேண்டும்
    (யாத்திராகமம் 22:26)

30. நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியை ---------- இருப்பாயாக.
Answer: சபியாமலும் இருப்பாயாக
    (யாத்திராகமம் 22:28)

31. முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் என்ன செய்ய வேண்டும்?
Answer: தாமதியாமல் காணிக்கையாக செலுத்த வேண்டும்
    (யாத்திராகமம் 22:29)

32. மாடுகளிலும் ஆடுகளிலும் முதற்பலனை எத்தனையாவது நாளில் கர்த்தருக்கு செலுத்த வேண்டும்?
Answer: குட்டியானது ஏழு நாள் தன் தாயோடே இருக்கட்டும், எட்டாம் நாளில் அதை கர்த்தருக்கென்று செலுத்த வேண்டும்
    (யாத்திராகமம் 22:30)

33. வெளியே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல் என்ன செய்ய வேண்டும்?
Answer: நாய்களுக்குப் போட வேண்டும்
    (யாத்திராகமம் 22:31)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.