Type Here to Get Search Results !

Exodus Twenty Three 23 Bible Questions with Answers Tamil | யாத்திராகமம் 23 வினாக்களும் விடைகளும் | விவிலியத்தில் ஓர் தேடல் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twenty Three (23)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. எப்படிப்பட்ட சொல்லை ஏற்றுக் கொள்ள கூடாது?
Answer: அபாண்டமான சொல்லை
    (யாத்திராகமம் 23:1)

02. ஆகாதவனோடே கலந்தால் என்ன ஆகும்?
Answer: கொடுமையுள்ள சாட்சிக்காரனாவாய்
    (யாத்திராகமம் 23:1)

03. வழக்கிலே எப்படி உத்தரவு சொல்லாதிருக்க வேண்டும்?
Answer: நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்கள் பட்சத்தில் சாய்ந்து உத்தரவு சொல்லாதிருக்க வேண்டும்
    (யாத்திராகமம் 23:2)

04. ---------------- தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.
Answer: வியாச்சியத்திலே
    (யாத்திராகமம் 23:3)

05. உன் சத்துருவின் மாடாவது, கழுதையாவது தப்பிப்போகக்கண்டால் என்ன செய்ய வேண்டும்?
Answer: அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விட வேண்டும்
    (யாத்திராகமம் 23 4)

06. உன்னைப் பகைக்கிவறவனுடைய கழுதை சுமையோடே விழுந்து கிடக்கக்கண்டால் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவி செய்ய வேண்டும்
    (யாத்திராகமம் 23:5)

07. உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுக்கு என்ன செய்ய வேண்டும்?
Answer: அவனுடைய நியாயத்தைப் புரட்டாதிருக்க வேண்டும்
    (யாத்திராகமம் 23:6)

08. எந்த காரியத்துக்கு தூரமாயிருக்க வேண்டும்?
Answer: கள்ளக்காரியத்துக்கு தூரமாய் இருக்க வேண்டும்
    (யாத்திராகமம் 23:7)

09. யாரை கொலை செய்ய கூடாது?
Answer: குற்றமில்லாதவைனையும், நீதிமானையும்
    (யாத்திராகமம் 23:7)

10. கர்த்தர் யாரை நீதிமான் என்று தீர்க்கமாட்டார்?
Answer: துன்மார்க்கனை
    (யாத்திராகமம் 23:7)

11. எது பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைதகளைப் புரட்டும்?
Answer: பரிதானம்
    (யாத்திராகமம் 23:8)

12. ஆறு வருஷம் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனை சேர்த்துக்கொண்டு ஏழாம் வருஷம் என்ன செய்ய வேண்டும்?
Answer: எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும் அந்த நிலத்தை சும்மா கிடக்க விட்டுவிட வேண்டும்
    (யாத்திராகமம் 23:10,11)

13. வருஷத்தில் எத்தனை தரம் கர்த்தருக்கு பண்டிகை ஆசரிக்க வேண்டும்?
Answer: மூன்று தரம்
    (யாத்திராகமம் 23:14)

14. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை எந்த மாதத்தில் கொண்டாட வேண்டும்?
Answer: ஆபீப் மாதம்
    (யாத்திராகமம் 23:15)

15. புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாள் புசிக்க வேண்டும்?
Answer: ஏழுநாள் புசிக்க வேண்டும்
    (யாத்திராகமம் 23:15)

16. கர்த்தருடைய சந்நிதிக்கு எப்படி வரக்கூடாது?
Answer: வெறுங்கையாய் வரக்கூடாது
    (யாத்திராகமம் 23:15)

17. வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்தும் பண்டிகை என்ன பண்டிகை?
Answer: அறுப்புக்கால பண்டிகை
    (யாத்திராகமம் 23:16)

18. வருஷத்தின் முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்த்த போது ஆசரிக்கும் பண்டிகை என்ன பண்டிகை?
Answer: சேர்ப்புக்கால பண்டிகை
    (யாத்திராகமம் 23:16)

19. வருஷத்தில் எத்தனை முறை ஆண்மக்கள் அனைவரும் கர்த்தராகிய ஆண்டவருடைய ஆலயத்திற்கு வர வேண்டும்?
Answer: மூன்று முறை
    (யாத்திராகமம் 23: 17)

20. கர்த்தருக்கு இடும் பலியின் இரத்தத்தை என்ன செய்ய கூடாது?
Answer: இரத்தத்தை புளித்த மாவுடன் செலுத்த கூடாது
    (யாத்திராகமம் 23:18)

21. கர்த்தருக்கு இடும் பலியின் கொழுப்பை என்ன செய்ய கூடாது?
Answer: விடியற்காலம் வரைக்கும் வைக்கக்கூடாது
    (யாத்திராகமம் 23:18)

22. வெள்ளாட்டுக்குட்டியை எப்படி சமைக்கக்கூடாது?
Answer: அதின் தாயின் பாலிலே சமைக்கக்கூடாது
    (யாத்திராகமம் 23:19)

23. வழியிலே இஸ்ரவேலரை காக்கிறதற்கும், கர்த்தர் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு அவர்களை கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் கர்த்தர் யாரை அனுப்பினார்?
Answer: ஒரு தூதனை அனுப்பினார்
    (யாத்திராகமம் 23:20)

24. கர்த்தர் எப்பொழுது நம்முடைய சத்துருக்களுக்கு சத்துருவாயும், விரோதிக்கு விரோதியாயும் இருப்பார்?
Answer: அவருடைய வாக்கை நான்றாய்க் கேட்டு, அதன்படி செய்யும்போது
    (யாத்திராகமம் 23:22)

25. இஸ்ரவேலுக்கு முன்பாக சென்று எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், கானானியரையும், ஏவியரையும், எபூசியரையும், அதம்பண்ணியது யார்?
Answer: கர்த்தருடைய தூதனானவர்
    (யாத்திராகமம் 23:23)

26. அந்நிய தேவர்களைப் பணிந்து கொள்ளாமல், நம்முடைய தேவனாகிய கர்த்தரை சேவித்தால், கர்த்தர் நம்முடைய எதை ஆசீர்வதிப்பார்? எதை விலக்குவார்?
Answer: அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பார், வியாதியை விலக்குவார்
    (யாத்திராகமம் 23:25)

27. எது உன் தேசத்தில் இருப்பதில்லை. உன் ஆயுசுநாட்கள் பூரணப்படும்?
Answer: கர்ப்பம் விழுகிறதும், மலடும்
    (யாத்திராகமம் 23:26)

28. கர்த்தர்: நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, சத்துருக்களை என்ன செய்வார்?
Answer: சத்துருக்களை முதுகுகாட்டப்பண்ணுவார்
    (யாத்திராகமம் 23:27)

29. ஏவியரையும், கானானியரையும், ஏத்தியரையும் துரத்திவிட கர்த்தர் என்ன செய்வார்?
Answer: குளவிகளை அனுப்புவார்
    (யாத்திராகமம் 23:28)

30. சிவந்த சமுத்திரம் தொடங்கி எது வரைக்கும், வனாந்தரம் தொடங்கி எது வரைக்கும் இஸ்ரவேலரின் எல்லை என்று கர்த்தர் சொன்னார்?
Answer: சிவந்த சமுத்திரம் தொடங்கி – பெலிஸ்தரின் சமுத்திரம் வரைக்கும், வனாந்தரம் தொடங்கி - நதிவரைக்கும்
    (யாத்திராகமம் 23:31)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.