Type Here to Get Search Results !

Exodus Twenty Seven 27 Quiz Questions Tamil | யாத்திராகமம் 27 வேதாகமத்தில் ஓர் தேடல் | Bible Questions & Answers | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twenty Seven (27)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து ஏழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. பலிபீடத்தின் நீளம், அகலம், உயரம் என்ன?
Answer: நீளம் – ஐந்து முழம்
    அகலம் – ஐந்து முழம்
    உயரம் – மூன்று முழம்
    யாத்திராகமம் 27:1

02. பலிபீடத்தை எந்த மரத்தில் செய்ய வேண்டும்?
Answer: சீத்திம் மரத்தில் செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 27:1

03. பலிபீடத்தை எந்த வடிவில் செய்ய வேண்டும்?
Answer: சதுர வடிவல் செய்ய வேண்டுமம்
    யாத்திராகமம் 27:1

04. பலிபீடத்தின் நாலு மூலைகளிலும் எதை உண்டாக்க வேண்டும்?
Answer: கொம்புகளை உண்டாக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:2

05. பலிபீடத்தின் கொம்புகளை எதினால் மூட வேண்டும்?
Answer: வெண்கலத் தகட்டால் மூட வேண்டும்
    யாத்திராகமம் 27:2

06. பலிபீடத்தில் சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும், அதின் பணிமுட்டுகளெல்லாவற்றையும் எதினால் செய்ய வேண்டும்?
Answer: வெண்கலத்தால் செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 27:3

07. வலைப்பின்னல் போன்ற சல்லடையை எதினால் உண்டாக்க வேண்டும்?
Answer: வெண்கலத்தில் உண்டாக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:4

08. சல்லடையின் நாலு மூலைகளிலும் என்ன இருக்க வேண்டும்?
Answer: நாலு வெண்கல வலையங்கள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:4

09. சல்லடையை எங்கு வைக்க வேண்டும்?
Answer: பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப்பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
    யாத்திராகமம் 27:5

10. பலிபீடத்துக்கு எந்த மரத்தால் தண்டுகளை செய்ய வேண்டும்?
Answer: சீத்திம் மரத்தால் தண்டுகளை செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 27:6

11. பலிபீடத்தின் தண்டுகளை எதினால் மூட வேண்டும்?
Answer: வெண்கலத் தகட்டால் மூட வேண்டும்
    யாத்திராகமம் 27:6

12. வாசஸ்தலத்தின் தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்கு எத்தனை முழ நீளம் கொண்ட தொங்கு திரையை உண்டாக்க வேண்டும்?
Answer: திரித்த மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட நூறு முழ நீளமான தொங்குதிரையை உண்டாக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:9

13. வாசஸ்தலத்தின் தெற்கே இருக்கிற பிராகாரத்திற்கு எத்தனை தூண்கள், இருக்க வேண்டும்?
Answer: இருபது தூண்கள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:10

14. வாசஸ்தலத்தின் தெற்கே இருக்கிற பிராகாரத்திற்கு எத்தனை பாதங்கள் இருக்க வேண்டும்?
Answer: இருபது பாதங்கள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:10

15. வாசஸ்தலத்தின் தெற்கே இருக்கிற பிராகாரத்திற்கு தூண்களும், பாதங்களும் எதினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்?
Answer: வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:10

16. வாசஸ்தலத்தின் தெற்கே இருக்கிற பிராகாரத்து தூண்களின் கொக்கிகளும், அவைகளின் பூண்டுகளும் எதினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்?
Answer: வெள்ளியினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:10

17. பிராகாரத்தின் மேற்பக்கத்திற்கு எத்தனை முழ நீளம் கொண்ட தொங்குதிரைகள் இருக்க வேண்டும்?
Answer: ஐம்பது முழ நீளம் கொண்ட தொங்குதிரைகள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:12

18. பிரகாரத்தின் மேற்பக்கத்திலிருக்கிற தொங்குதிரைக்கு எத்தனை தூண்கள், எத்தனை பாதங்கள் இருக்க வேண்டும்?
Answer: பத்துத் தூண்கள், பத்துப் பாதங்கள்
    யாத்திராகமம் 27:12

19. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழு்ப்பக்கத்தின் பிராகாரம் எத்தனை முழ அகலமாக இருக்க வேண்டும்?
Answer: ஐம்பது முழ அகலமாக இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:13

20. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தின் ஒரு புறத்திற்கு எத்தனை முழ நீளம் கொண்ட தொங்குதிரைகள் இருக்க வேண்டும்?
Answer: பதினைந்து முழு நீளம் கொண்ட தொங்கு திரை இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:14

21. பிராகாரத்தின் கீழ்பக்கத்தின் ஒரு புறத்திற்கு எத்தனை தூண்களும், பாதங்களும் இருக்க வேண்டும்?
Answer: மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:14

22. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தின் மறு புறத்திற்கு எத்தனை முழ நீளம் கொண்ட தொங்குதிரைகள் இருக்க வேண்டும்?
Answer: பதினைந்து முழ நீளம் கொண்ட தொங்கு திரைகள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:15

23. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தின் மறு புறத்திற்கு எத்தனை தூண்கள், எத்தனை பாதங்கள் இருக்க வேண்டும்?
Answer: மூன்று தூண்கள், மூன்று பாதங்கள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:15

24. பிராகாரத்தின் வாசலுக்கு எத்தனை முழ நீளம் கொண்ட தொங்குதிரைகள் இருக்க வேண்டும்?
Answer: இருபது முழ நீளம் கொண்ட தொங்கு திரைகள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:16

25. பிராகாரத்தின் வாசலில் இருக்கும் தொங்குதிரை எதினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்?
Answer: இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்ட்ட தொங்குதிரைகள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:16

26. பிராகாரத்தின் வாசல்பகுதியில் இருக்கிற தொங்குதிரைக்கு எத்தனை தூண்கள், எத்தனை பாதங்கள் இருக்க வேண்டும்?
Answer: நாலு தூண்கள், நாலு பாதங்கள் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:16

27. சுற்றுப்பிராகாரத்தின் தூண்கள் எதினால் பூண் கட்டப்பட்டிருக்க வேண்டும்?
Answer: வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:17

28. சுற்றுப் பிராகாரத்து தூண்களின் கொக்கிகள் எதினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்?
Answer: வெள்ளியினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:17

29. சுற்றுப்பிராகாரத்து தூண்களின் பாதங்கள் எதினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்?
Answer: வெண்கலத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:17

30. பிராகாரத்தின் நீளம், அகலம், உயரம் எவ்வளவாக இருக்க வேண்டும்?
Answer: நீளம் – நூறு முழம்
    அகலம் – ஐம்பது முழம்
    உயரம் – ஐந்து முழம்
    யாத்திராகமம் 27:18

31. வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணி முட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் எதினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்?
Answer: வெண்கலத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:19

32. குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதில் எதை பயன்படுத்த வேண்டும்?
Answer: இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணையை பயன்படுத்த வேண்டும்
    யாத்திராகமம் 27:20

33. ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக என்ன இருக்க வேண்டும்?
Answer: குத்து விளக்கு
    யாத்திராகமம் 27:21

34. குத்துவிளக்கு எப்பொழுது எரிய வேண்டும்?
Answer: சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் மட்டும் எரிய வேண்டும்
    யாத்திராகமம் 27:21

35. குத்துவிளக்கை யார் எரிய வைக்க வேண்டும்?
Answer: ஆரோனும் அவன் குமாரரும் எரிய வைக்க வேண்டும்
    யாத்திராகமம் 27:21

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.