Type Here to Get Search Results !

EXODUS Twenty Eight 28 holy Bible Questions Answers | யாத்திராகமம் 28 விவிலிய வினா விடைகள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twenty Eight (28)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. ஆசாரிய ஊழியம் செய்யும்படி கர்த்தர் யாரை பிரித்தெடுத்தார்?
Answer: ஆரோனையும் அவன் குமாரரையும் பிரித்தெடுத்தார்
    யாத்திராகமம் 28:1

02. ஆரோனின் குமாரர்கள் பெயர் என்ன?
Answer: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்
    யாத்திராகமம் 28:1

03. மார்ப்பதக்கம், ஏபோத், அங்கி, விசித்திரமான உள்சட்டை, பாகை, இடைக்கச்சை இவைகள் யாருடைய வஸ்திரங்கள்?
Answer: ஆசாரியருடைய வஸ்திரங்கள்
    யாத்திராகமம் 28:3,4

04. பரிசுத்த வஸ்திரங்களை யாருக்கு உண்டுபண்ண வேண்டும்?
Answer: ஆசாரிய ஊழியம் செய்கிற ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும்
    யாத்திராகமம் 28:4

05. ஏபோத்தும், கச்சையும், மார்பதக்கமும் எதினால் செய்யப்பட வேண்டும்?
Answer: பொன்னினாலும், இளநீலநூலாலும், இரத்தாம்பர நூலாலும், சிவப்பு நூலாலும், திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் செய்யப்பட வேண்டும்
    யாத்திராகமம் 28:6,8,15

06. இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களை எதில் வெட்ட வேண்டும்?
Answer: கோமேதகக் கற்களில் வெட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:9

07. இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களை எத்தனை கற்களில் வெட்ட வேண்டும்?
Answer: இரண்டு கோமேதகக் கற்களில் வெட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:10

08. இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களை எந்த வரிசையில் வெட்ட வேண்டும்?
Answer: அவர்கள் பிறந்த வரிசையின்படியே, ஆறு நாமங்களை ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்களை மறு கல்லிலும் வெட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:10

09. கோமேதகக் கற்களில் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை எப்படி வெட்ட வேண்டும்?
Answer: இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறதுபோல வெட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:11

10. வளையங்களை எதினால் உண்டாக்க வேண்டும்?
Answer: பொன்னினால் வளைங்களை உண்டாக்க வேண்டும்
    யாத்திராகமம் 28:13

11. சங்கிலிகளை எதினால் உண்டாக்க வேண்டும்?
Answer: பசும்பொன்னால் உண்டாக்க வேண்டும்
    யாத்திராகமம் 28:14

12. சங்கிலிகளை என்ன செய்ய வேண்டும்?
Answer: வளையங்களில் பூட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:14

13. எத்தனை சங்கிலிகளை வளையங்களில் பூட்ட வேண்டும்?
Answer: இரண்டு சங்கிலிகள்
    யாத்திராகமம் 28:14

14. மார்ப்பதக்கத்தின் அளவு என்ன?
Answer: சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம்
    யாத்திராகமம் 28:16

15. மார்ப்பதக்கத்தில் எதை பதிக்க வேண்டும்?
Answer: நாலு பத்தி இரத்தினக் கற்களை பதிக்க வேண்டும்
    யாத்திராகமம் 28:17

16. முதலாம் பத்தியில் எதைப் பதிக்க வேண்டும்?
Answer: பத்மராகமும், புஷ்பராகமும், மாணிக்கமும்
    யாத்திராகமம் 28:17

17. இரண்டாம் பத்தியில் எதைப் பதிக்க வேண்டும்?
Answer: மரகதமும், இந்திர நீலமும், வச்சிரமும்
    யாத்திராகமம் 28:18

18. மூன்றாம் பத்தியில் எதைப் பதிக்க வேண்டும்?
Answer: கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்
    யாத்திராகமம் 28:19

19. நான்காம் பத்தியில் எதைப் பதிக்க வேண்டும்?
Answer: படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியும்
    யாத்திராகமம் 28:20

20. மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்ட கற்களில் எவைகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்?
Answer: இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நாமங்கள்
    யாத்திராகமம் 28:21

21. பொன்னினால் செய்த பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளை எதில் மாட்ட வேண்டும்?
Answer: மார்ப்பதக்கத்தின் இருபக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:24

22. மார்ப்பதக்கம் ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கு அதை எப்படி வைக்க வேண்டும்?
Answer: மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும் அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:28

23. நியாயவிதி மார்ப்பதக்கத்தில் எவைகள் வைக்கப்பட வேண்டும்?
Answer: ஊரீம், தும்மீம்
    யாத்திராகமம் 28:30

24. கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதும் ஆரோன் தன் இருதயத்தின்மேல் எதை தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதிகளை தரித்துக்கொள்ள வேண்டும்
    யாத்திராகமம் 28:30

25. ஏபோத்தின் கீழ் அங்கியை எதினால் உண்டாக்க வேண்டும்?
Answer: இளநீலநூலால் உண்டாக்க வேண்டும்)
    யாத்திராகமம் 28:31

26. ஏபோத்தின் தலை நுழைகிறதற்கு என்ன இருக்க வேண்டும்?
Answer: துவாரம்
    யாத்திராகமம் 28:32

27. ஏபோத்தின் கீழோரங்களில் சுற்றிலும் தொங்கும்படி எவைகளை பண்ணிவைக்க வேண்டும்?
Answer: இளநீலநூல், இரத்தாம்பரநூல், சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம் பழங்களும் இடையிடையே பொன்மணிகளும் வைக்க வேண்டும்
    யாத்திராகமம் 28:33

28. கர்த்தருடைய சந்நிதியில் பிரவேசிக்கும்போதும் வெளியே வரும்போதும் ஆரோன் ஏன் ஏபோத்தை தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: அவன் சாகாதபடி ஏபோத்தை தரித்துக்கொள்ள வேண்டும்
    யாத்திராகமம் 28:35

29. பசும்பொன்னினால் பட்டத்தில் முத்திரைவெட்டாக எப்படி வெட்டி பாகையின் முகப்பிலே கட்ட வேண்டும்?
Answer: கர்த்தருக்கு பரிசுத்தம் என்று காட்ட வேண்டும்
    யாத்திராகமம் 28:36

30. இஸ்ரவேலரின் பரிசுத்தக் காணிக்கைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, எது ஆரோனின் நெற்றியின்மேல் இருக்க வேண்டும்?
Answer: கர்த்தருக்கு பரிசுத்தம் என்று எழுதப்பட்ட பட்டயம்
    யாத்திராகமம் 28:36,38

31. கர்த்தருக்கு பரிசுத்தம் என்று எழுதப்பட்ட பட்டம், யார் அங்கிகரிக்கும்படி ஆரோனின் நெற்றியின்மேல் இருக்க வேண்டும்?
Answer: பரிசுத்த காணிக்கை படைக்கும் இஸ்ரவேலர் அங்கிகரிக்கும்படி
    யாத்திராகமம் 28:38

32. மெல்லிய பஞ்சு நூலால் எவைகளை பண்ண வேண்டும்?
Answer: விசித்திரமான உள்சட்டையையும் பாகையையும்
    யாத்திராகமம் 28:39

33. சித்திரதையல் வேலையாக எதைப்பண்ண வேண்டும்?
Answer: இடைக்கச்சையை பண்ண வேண்டும்
    யாத்திராகமம் 28:39

34. ஆரோனுடைய குமாரருக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்படி எவைகளை உண்டுபண்ண வேண்டும்?
Answer: அங்கிகள், இடைக்கச்சைகள், குல்லாக்கள்
    யாத்திராகமம் 28:40

35. ஆரோனையும் அவன் குமாரனையும் ஆசாரிய ஊழியம் செய்ய எப்படி பரிசுத்தம் பண்ண வேண்டும்?
Answer: வஸ்திரங்களை (பரிசுத்த) உடுத்தி, அபிஷேகம் செய்து, பிரதிஷ்டைபண்ணி, பரிசுத்தப்படுத்த வேண்டும்
    யாத்திராகமம் 28:41

36. ஆசாரிய ஊழியம் செய்பவர்களின் நிர்வாணத்தை மூடும்படி இடுப்பு தொடங்கி, முழுங்கால் மட்டும் எதை உடுத்த வேண்டும்?
Answer: சணல்நூல் சல்லடங்கள்
    யாத்திராகமம் 28:42

37. ஆசரிப்புக் கூடாரத்திலும் பலிபீடத்தண்டையில் சேரும்போதும் எதற்காக சணல்நூல் சல்லடங்களை உடுத்த வேண்டும்?
Answer: அக்கிரமம் சுமந்து சாகாதபடிக்கு
    யாத்திராகமம் 28:43

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.