Type Here to Get Search Results !

EXODUS Twenty Nine 29 Quiz Questions & Answers | யாத்திராகமம் 29 வேதாகம வினா விடைகள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twenty Nine (29)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து ஒன்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசாரிய ஊழியம் செய்ய பரிசுத்தப்படுத்தும்படி எவைகளைக் கொண்டு வர வேண்டும்?
Answer: ஒரு காளை, பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்கள், புளிப்பில்லாத அப்பம், எண்ணெயில் பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்கள், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளை கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி கூடையில் கொண்டு வர வெண்டும்.
    யாத்திராகமம் 29:1,2,3

2. ஆரோனையும் அவன் குமாரரையும் எதன் முன்பாக சேரப்பண்ணி தண்ணீரினால் கழுவ வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாக சேரப்பண்ணி தண்ணீரினால் கழுவ வேண்டும்
    யாத்திராகமம் 29:4

3. அபிஷேக தைலத்தைத் தலையின்மேல் வார்த்து அபிஷேகம் பண்ணும்போது ஆரோன் எவைகளைத் தரித்திருக்க வேண்டும்?
Answer: உள்சட்டை, ஏபோத்தின் கீழ் அங்கி, ஏபோத், மார்ப்பதக்கம் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையை கட்டி, தலையின்மேல் பாகையை வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்திருக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:5-7

4. ஆரோனின் குமாரரை அபிஷேகம் பண்ணும்போது அவர்களை் எவைகளைத் தரித்திருக்க வேண்டும்?
Answer: அங்கிகள், இடைக்கச்சைகள், குல்லாக்களைத் தரித்திருக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:8,9

5. தங்கள் கைகளை காளையின் தலையின்மேல் வைக்க வேண்டியவர்கள் யார்?
Answer: ஆரோனும் அவன் குமாரரும்
    யாத்திராகமம் 29:10

6. ஆசரிப்புக்கூடார வாசலண்டையில் கர்த்தருடைய சந்நிதானத்தில் அடிக்கப்பட்ட காளையின் இரத்தத்தை என்ன செய்ய வேண்டும்?
Answer: காளையின் கொஞ்ச இரத்தத்தை மோசேயின் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள் மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்ற வேண்டும்
    யாத்திராகமம் 29:12

7. அடிக்கப்பட்ட காளையின் எவைகளை பலிபீடத்தின்மேல் தகித்துப்போட வேண்டும்?
Answer: காளையின் குடல்களை மூடிய கொழுப்பு, கல்லீரலின் மேலுள்ள சவ்வு, இரண்டு குண்டிக்காய்கள்,. அவைகளின் கொழுப்பு ஆகியவைகளை பலிபீடத்தின்மேல் தகித்துப்போட வேண்டும்
    யாத்திராகமம் 29:13

8. காளையின் மாம்சம், தோல், சாணி இவைகளை அக்கினியால் எங்கு சுட்டெரிக்க வேண்டும்?
Answer: பாளயத்துக்குப் புறம்பே அக்கினியினால் சுட்டெரிக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:14

9. காளையினால் இடப்படும் பலியின் பெயர் என்ன?
Answer: பாவநிவாரண பலி
    யாத்திராகமம் 29:14

10. ஆரோனாலும் அவன் குமாரராலும் தலையின்மேல் கைவைத்து பின்பு அடிக்கப்பட்ட முதல் ஆட்டுக்கடாவின் இரத்தத்தை எங்கே தெளிக்க வேண்டும்?
Answer: பலிபீடத்தின் மேல் சுற்றில் தெளிக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:15,16

11. அடிக்கப்பட்ட முதல் ஆட்டுக்கடாவை என்ன செய்ய வேண்டும்?
Answer: சந்து சந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும், தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த துண்டங்களின்மேலும் தலையின்மேலும் வைத்து ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின் மேல் தகித்துவிட வேண்டும்
    யாத்திராகமம் 29:17,18

12. முதல் ஆட்டுக்கடாவினால் இடும் பலியின் பெயர் என்ன?
Answer: சர்வாங்க தகனபலி
    யாத்திராகமம் 29:18

13. அடிக்கப்பட்ட இரண்டாம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை என்ன செய்ய வேண்டும்?
Answer: கொஞ்சம் இரத்தத்தை ஆரோன் மற்றும் அவன் குமாரரின் வலது காது மடல்களிலும், வலது கைகளின் பெருவிரலிலும், கால்களின் பெருவிரலிலும் இட வேண்டும். மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் மேல் சுற்றில் தெளிக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:20

14. ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தமாக்கப்படும்படி அவர்கள் மேலும் அவர்கள் வஸ்திரங்கள் மேலும் எவைகளைத் தெளிக்க வேண்டும்?
Answer: பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும், அபிஷேக தைலத்தில் கொஞ்சமும் தெளிக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:21

15. ஆரோனும் அவன் குமாரரும் ஆட்டுக்கடாவின் எந்த பாகங்களை உள்ளங்கையில் வைத்து அசைவாட்ட வேண்டும்?
Answer: ஆட்டுக்கடாவின் கொழுப்பு, வால், குடல்களை மூடிய கொழுப்பு, கல்லீரலின் மேலுள்ள சவ்வு, இரண்டு குண்டிக்காய்கள், அவைகளின் மேலுள்ள கொழுப்பு, வலது பக்கத்து முன்னந்தொடை ஆகியவற்றை ஆரோனும் அவன் குமாரரும் உள்ளங்கையில் வைத்து அசைவாட்ட வேண்டும்
    யாத்திராகமம் 29:22

16. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடா கர்த்தருக்கு செலுத்தப்படும் --------- .
Answer: பிரதிஷ்டையின் ஆட்டுக்கடா கர்த்தருக்கச் செலுத்தப்படும் தகனபலி
    யாத்திராகமம் 29:25

17. ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டம் யாருடைய பங்காய் இருக்க வேண்டும்?
Answer: மோசேயின் பங்காய் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:26

18. ஆரோனும் அவன் குமாரரும் பிரதிஷ்டைக்கு நியமித்த ஆட்டுக்கடாவின் எவைகளை பரிசுத்தப்படுத்த வேண்டும்?
Answer: ஆட்டுக்கடாவின் அசைவாட்டப்படுகின்ற மார்க்கண்டம், ஏறெடுத்துப்படைக்கிற முன்னந்தொடையை பரிசுத்தப்படுத்த வேண்டும்
    யாத்திராகமம் 29:27

19. இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் ஏறெடுத்துப் படைக்கிறவைகள் யாரைச் சேரும்?
Answer: ஏறெடுத்துப் படைக்கிறவர்கள் ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்
    யாத்திராகமம் 29:28

20. ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் அவனுக்குப்பின் யாரைச் சேரும்?
Answer: ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் அவனுக்குப் பின் அவனுடைய குமாரரைச் சேரும்
    யாத்திராகமம் 29:29

21. ஆரோனின் பட்டத்திற்கு வருகிற ஆவன் குமாரன், பரிசுத்த வஸ்திரங்களை ஆசரிப்பு கூடாரத்திற்கு வரும்போது எத்தனை நாள் மட்டும் உடுத்தியிருக்க வேண்டும்?
Answer: ஏழு நாள் மட்டும் உடுத்தியிருக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:30

22. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை எங்கே வேவிக்க வேண்டும்?
Answer: பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை பரிசுத்த இடத்தில் வேவிக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:31

23. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை எங்கே வைத்து ஆரோனும் அவன் குமாரரும் புசிக்க வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடார வாசலில்
    யாத்திராகமம் 29:32

24. பிரதிஷ்டையின் மாம்சத்திலும், அப்பத்திலும் எதை சுட்டைரிக்க வேண்டும்?
Answer: விடியற்காலம் வரை மீந்திருப்பதை சுட்டெரிக்க வேண்டும்
    யாத்திராகமம் 29:34

25. ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணும ஏழு நாளளவும் பாவ நிவிர்த்திக்காக தினமும் எதை பலியிட வேண்டும்?
Answer: பாவ நிவிர்த்திக்காக தினமும் ஒரு காளையை பலியிட வேண்டும்
    யாத்திராகமம் 29:36

26. இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் பலிபீடத்தின்மேல் எவைகளை பலியிட வேண்டும்?
Answer: ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு ஆட்டுக்குட்டியும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியும் பலியிட வேண்டும்
    யாத்திராகமம் 29:38,39

27. கர்த்தருடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்பட்டதும், கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை சந்திக்கும் இடமுமாய் இருப்பது எது?
Answer: ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலாகிய கர்த்தருடைய சந்நிதி
    யாத்திராகமம் 29:42

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.