Type Here to Get Search Results !

Exodus Thirty 30 Questions with Answers | யாத்திராகமம் 30 வேதாகம கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Thirty (30)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. தூபங்காட்டுகிறதற்கு தூபபீடத்தை எந்த மரத்தால் பண்ண வேண்டும்?
Answer: சீத்தீம் மரத்தால் தூப பீடத்தை உண்டுபண்ண வேண்டும்
    (யாத்திராகமம் 30:1)

2. தூபபீடத்தின் நீளம், அகலம், உயரம் என்ன?
Answer: நீளம் ஒரு முழம், அகலம் ஒரு முழம், உயரம் இரண்டு முழம்
    (யாத்திராகமம் 30:2)

3. தூபபீடத்தை எங்கே வைக்க வேண்டும்?
Answer: தூபபீடத்தை சாட்சி பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், சாட்சி சந்நிதியின் மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக வைக்க வேண்டும்
    (யாத்திராகமம் 30:6)

4. தூபபீடத்தின் மேல் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதெல்லாம் தூபங்காட்ட வேண்டும்?
Answer: காலைதோறும் சுகந்த தூபமும், மாலையில் விளக்கேற்றும்போதும், விளக்குகளை விளக்கும்போதும் துபங்காட்ட வேண்டும்
    (யாத்திராகமம் 30:7,8)

5. வருஷத்தில் ஒருமுறை எதினால் தூபபீடத்தின் கொம்புகள் மேல் பிராயச்சித்தம் பண்ண வேண்டும்?
Answer: வருஷத்தில் ஒருமுறை பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் தூபபீடத்தின் கொம்புகள் மேல் பிராயசித்தம் பண்ண வேண்டும்
    (யாத்திராகமம் 30:10)

6. இஸ்ரவேல் புத்திரர் கணக்கு பார்க்கும்படி எண்ணப்படுகிறபோது, வாதை உண்டாகாதபடி எதைக் கொடுக்க வேண்டும்?
Answer: வாதை உண்டாகாதபடி ஒவ்வொருவனும் தன்தன் ஆத்துமாவுக்காக கர்த்தருக்கு மீட்கும் பொருளை கொடுக்க வேண்டும்
    (யாத்திராகமம் 30:12)

7. தன் ஆத்துமாவுக்கு பாவநிவிர்த்தியாக அரை சேக்கல் கொடுக்க வேண்டியது யார்?
Answer: இருபது வயது முதுற்கொண்டு எண்ணப்படுகிறவன் தன் ஆத்துமாவுக்கு பாவிநிவிர்த்தியாக அரை சேக்கல் கொடுக்க வேண்டும்
    (யாத்திராகமம் 30:13,14)

8. ஒரு சேக்கல் என்பது எவ்வளவு கேரா?
Answer: ஒரு சேக்கல் என்பது இருபது கேரா
    (யாத்திராகமம் 30:13)

9. பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரவேலரிடம் வாங்கி எதற்கு கொடுக்க வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்க வேண்டும்
    (யாத்திராகமம் 30:16)

10. ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு எதை உண்டு பண்ண வேண்டும்?
Answer: கால்களை கழுவ வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தின் அதின் பாதத்தையும் உண்டாக்க வேண்டும்
    (யாத்திராகமம் 30:18)

11. ஆரோனும் அவன் குமாரனும சாகாதபடிக்கு எப்பொழுதெல்லாம் தங்களைக் கழுவ வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்கு தகனத்தை கொளுத்தவும், பலிபீடத்தில் ஆராதனை செய்ய சேரும்போதும் தங்களை கழுவ வேண்டும்
    (யாத்திராகமம் 30:20)

12. பரிசுத்த அபிஷேக தைலத்தை எவைகளால் உண்டுபண்ண வேண்டும்?
Answer: பரிசுத்த அபிஷேக தைலத்தை சுத்தமான வெள்ளைப்போளத்தில் ஐந்நூறு சேக்கல் எடை, சுகந்த கருவாப்பட்டையில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடை, சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடை, இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடை, ஒரு குடம் ஒலிவ எண்ணெயினால் உண்டுபண்ண வேண்டும்
    (யாத்திராகமம் 30:23,24)

13. பரிசுத்த அபிஷேக தைலத்தால் எவைகளை அபிஷேகம் பண்ணி அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படி பரிசுத்தப்படுத்த வேண்டும்?
Answer: பரிசுத்த அபிஷேக தைலத்தால் ஆசரிப்புக்கூடாரம், சாட்சிப்பெட்டி, மேஷை அதன் பணிமுட்டுகள், குத்துவிளக்கு அதன் கருவிகள், தூபபீடம், தகன பலிபீடம் அதன் பணிமுட்டுகள், தொட்டி அதன் பாதம் ஆகியவற்றை பரிசுத்தப்படுத்த வேண்டும்
    (யாத்திராகமம் 30:26-28)

14. பரிசுத்த அபிஷேக தைலம் ----------- மேல் வார்க்கப்படலாகாது?
Answer: மனித சரீரத்தின்மேல் வார்க்ப்படலாகாது
    (யாத்திராகமம் 30:32)

15. பரிசுத்த தூபவர்க்கத்தை எப்படி செய்ய வேண்டும்?
Answer: சுத்த வெள்ளைப்போளம், குங்கிலியம், அல்பான் பிசினாகிய கந்தவர்க்கங்கள், சுத்தமான சாம்பிராணி இவைகளை சமநிறையாக எடுத்து, பரிமளமேற்றி துப்புரவான பரிசுத்த தூபமாக்க வேண்டும்
    (யாத்திராகமம் 30:34,35)

16. தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போகிறவர்கள் யார்?
Answer: மகா பரிசுத்தமான தூபவர்க்கத்தை முகருகிறதற்காக செய்கிறவனும், பரிசுத்த அபிஷேக தைலத்தை அந்நியன்மேல் வார்க்கிறவனும் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்
    (யாத்திராகமம் 30:33,38)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.