Type Here to Get Search Results !

Exodus Thirty One 31 Quiz Questions & Answers | யாத்திராகமம் 31 விவிலிய வினா விடைகள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Thirty One (31)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. விநோதமான வேலைகளை யோசித்து செய்கிறதற்கு தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன் – நான் யார்?
Answer: பெசலேயேல்
    (யாத்திராகமம் 31:2,3)

2. பெசலெயேல் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?
Answer: யூதா கோத்திரம்
    (யாத்திராகமம் 31:2)

3. பெசலெயேலின் தகப்பன் பெயர் என்ன?
Answer: ஊரி
    (யாத்திராகமம் 31:2)

4. பெசலெயேலுக்குத் துணையாக இருந்தேன் – நான் யார்?
Answer: அகோலியாப்
    (யாத்திராகமம் 31:6)

5. அகோலியாப் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?
Answer: தாண் கோத்திரம்
    (யாத்திராகமம் 31:6)

6. அகோலியாபின் தகப்பன் பெயர் என்ன?
Answer: அகிசாமாக்
    (யாத்திராகமம் 31:6)

7. எதை பரிசுத்ததக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்?
Answer: ஓய்வு நாளை பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்
    (யாத்திராகமம் 31:14)

8. கர்த்தர் ஏழாம் நாளில் என்ன செய்தார்?
Answer: கர்த்தர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து பூரித்தார்
    (யாத்திராகமம் 31:17)

9. கர்த்தர் சீனாய் மலையில் மோசேயோடே பேசி முடிந்த பின் எதை அவனிடம் கொடுத்தார்?
Answer: கர்த்தர் சீனாய் மலையில் மோசேயோடே பேசிமுடிந்த பின் தம்முடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளைக் கொடுத்தார்.
    (யாத்திராகமம் 31:18)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.