Type Here to Get Search Results !

Exodus Thirty Two 32 Bible Questions & Answers | யாத்திராகமம் 32 ஆதியாகமம் வினா விடைகள் தமிழில் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Thirty Two (32)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து இரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்ததால், தங்களுக்கு எதை உண்டு பண்ண வேண்டும் என்று ஜனங்கள் ஆரோனிடம் கூறினார்கள்?
Answer: தங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை உண்டு பண்ண வேண்டும் என்று கூறினார்கள்
    (யாத்திராகமம் 32:1)

2. ஆரோன் எதைக் கொண்டுவரும்படி ஜனங்களிடம் கூறினான்?
Answer: காதுகளிலிருக்கிற பொன்னணிகளை கொண்டு வரும்படி கூறினான்
    (யாத்திராகமம் 32:2)

3. ஆரோன் பொன்னை வாங்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து எதை வார்த்தான்?
Answer: ஒரு கன்றுக்குட்டியை வார்த்தான்
    (யாத்திராகமம் 32:4)

4. இஸ்ரவேலர் கன்றுக்குட்டிக்கு பலியிட்டு கூறியது என்ன?
Answer: கன்றுக்குட்டி எங்களை எகிப்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த தெய்வம் என்று கூறினார்கள்
    (யாத்திராகமம் 32:4)

5. ஆரோன் பொன் கன்றுக்குட்டிக்கு முன்பாக பலிபீடம் கட்டி நாளைக்கு -------------- என்று கூறினான்?
Answer: கர்த்தருக்குப் பண்டிகை
    (யாத்திராகமம் 32:5)

6. இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் – யார் இவர்கள்?
Answer: இஸ்ரவேல் ஜனங்கள்
    (யாத்திராகமம் 32:9)

7. கர்த்தர் யாரை அழித்துப் போடுவேன் என்றார்?
Answer: இஸ்ரவேலரை
    (யாத்திராகமம் 32:10)

8. இஸ்ரவேலருக்காக கெஞ்சிப் பிரார்த்தித்தேன் – நான் யார்?
Answer: மோசே
    (யாத்திராகமம் 32:11-13)

9. கர்த்தர் செய்ய நினைத்த எதை இஸ்ரவேலருக்கு செய்யவில்லை?
Answer: தீங்கை செய்யவில்லை
    (யாத்திராகமம் 32:14)

10. தேவன் மோசேயிடம் கொடுத்த இருபக்கமும் எழுதப்பட்ட சாட்சிப்பலகைகள் யாரால் செய்யப்பட்டும் எழுதப்பட்டும் இருந்தது?
Answer: தேவனால் செய்யப்பட்டும், எழுதப்பட்டும் இருந்தது
    (யாத்திராகமம் 32:16)

11. கன்றுக்குட்டியையும் ஜனங்களின் நடனத்தையும் கண்டபோது மோசே கோபமூண்டு என்ன செய்தார்?
Answer: சாட்சிப்பலகைகளை மலையின் அடியில் எறிந்து உடைத்துப்போட்டார்
    (யாத்திராகமம் 32:19)

12. மோசே எதைச் சுட்டெரித்து, பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி ஜனங்கள் குடிக்கும்படி செய்தார்?
Answer: கன்றுக்குட்டி
    (யாத்திராகமம் 32:20)

13. ஆரோன் ஜனங்கள்மேல் எதை சுமத்தியதாக மோசே கூறினான்?
Answer: ஆரோன் ஜனங்கள் மேல் பெரும்பாதகத்தை சுமத்தியதாக மோசே கூறினான்
    (யாத்திராகமம் 32:21)

14. ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாய் ஆரோன் அவர்களை என்ன செய்திருந்தான்?
Answer: நிர்வாணமாக்கியிருந்தான்
    (யாத்திராகமம் 32:25)

15. கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார் என்று மோசே கேட்டவுடன் அவனிடம் கூடிவந்தேன் – நான் யார்?
Answer: லேவியின் புத்திரர்
    (யாத்திராகமம் 32:26)

16. கர்த்தருடைய கட்டளைப்படி கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: மூவாயிரம் பேர் (3000)
    (யாத்திராகமம் 32:28)

17. ஜனங்களின் பாவத்தை கர்த்தர் மன்னிக்காவிட்டால், தன் பெயரை எதிலிருந்து கிறுக்கிப்போட மோசே கர்த்தரிடம் கூறினார்?
Answer: தேவனுடைய புஸ்தகத்திலிருந்து
    (யாத்திராகமம் 32:32)

18. யாருடைய பெயரை கர்த்தருடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Answer: கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களின் பெயரை கிறுக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொன்னார்
    (யாத்திராகமம் 32:33)

19. எதைச் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் ஜனங்களை உபாதித்தார்?
Answer: கன்றுக்குட்டி செய்ததின் நிமித்தம் கர்த்தர் ஜனங்களை உபாதித்தார்
    (யாத்திராகமம் 32:35)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.