Type Here to Get Search Results !

Exodus Thirty Three 33 Bible Quiz Questions & Answers | யாத்திராகமம் 33 விவிலிய வினா விடைகள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Thirty Three (33)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. கர்த்தர் ஏன் ஜனங்களின் நடுவே செல்லமாட்டேன் என்று கூறினார்?
Answer: ஜனங்களை நிர்மூலம் பண்ணாதபடிக்கு
    (யாத்திராகமம் 33:3)

2. கர்த்தர் சொல்லியிருந்தபடி ஜனங்கள் தங்கள் ஆபரணங்களை கழற்றிப்போட்ட இடம் எது?
Answer: ஓரேப் மலையருகே தங்கள்
    (யாத்திராகமம் 33:6)

3. மோசே கூடாரத்துக்கு என்ன பெயரிட்டான்?
Answer: ஆசரிப்புக் கூடாரம்
    (யாத்திராகமம் 33:7)

4. பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போகிறவர்கள் யார்?
Answer: கர்த்தரைத் தேடுகிறவர்கள்
    (யாத்திராகமம் 33:7)

5. மோசே கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது கூடாரவாசலில் நின்றது எது?
Answer: மேகஸ்தம்பம்
    (யாத்திராகமம் 33:9)

6. ஒருவன் --------- பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய் பேசினார்?
Answer: தன் சிநேகிதனோடே
    (யாத்திராகமம் 33:11)

7. ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு பிரியாதிருந்த மோசேயின் பணிவிடைக்காரன் யார்?
Answer: யோசுவா
    (யாத்திராகமம் 33:11)

8. என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு -------- தருவேன்?
Answer: இளைப்பாறுதல்
    (யாத்திராகமம் 33:14)

9. கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததென்று அறியப்படுவது எப்போது?
Answer: கர்த்தர் தம்மோடு வருவதினால்
    (யாத்திராகமம் 33:16)

10. மோசே கர்த்தருடைய ------------ தனக்குக் காண்பிக்கும்படி வேண்டினான்?
Answer: மகிமையை
    (யாத்திராகமம் 33:18)

11. எந்த மனுஷனும் யாரைக் கண்டு உயிரோடிருக்க முடியாது?
Answer: தேவனைக் கண்டு
    (யாத்திராகமம் 33:20)

12. கர்த்தர் கடந்து போகுமட்டும் மோசே நிற்கவேண்டியது எங்கே?
Answer: கன்மலையில்
    (யாத்திராகமம் 33:21)

13. கர்த்தர் கடந்துபோகுமட்டும், யாரைத் தம் கரத்தினால் மூடினார்?
Answer: கன்மலையின் வெடிப்பில் நிற்கும் மோசேயின் கண்களை
    (யாத்திராகமம் 33:22)

14. மோசே கர்த்தருடைய ------------- கண்டான்?
Answer: பின்பக்கத்தைக்
    (யாத்திராகமம் 33:23)

15. மோசே கர்த்தருடைய ------------- பார்க்கவில்லை?
Answer: முகத்தைப் பார்க்கவில்லை
    (யாத்திராகமம் 33:23)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.