Type Here to Get Search Results !

Exodus Thirty Four 34 Quiz Questions & Answers | யாத்திராகமம் 34 கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Thirty Four (34)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து நான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. கர்த்தர் மோசேயிடம் எதை இழைத்துக்கொள்ளச் சொன்னார்?
Answer: முந்தின கற்பலகைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை
    (யாத்திராகமம் 34:1)

2. மோசே செய்கிற கற்பலகையில் தேவன் எவைகளை எழுதுவார்?
Answer: மோசே உடைத்துப்போட்ட கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை எழுதுவார்
    (யாத்திராகமம் 34:1)

3. கர்த்தரின் கட்டளைப்படி மோசே அதிகாலமு ஏறியது எங்கு?
Answer: சீனாய் மலை
    (யாத்திராகமம் 34:4)

4. கர்த்தர் சீனாய் மலையில் எதில் இறங்கினார்?
Answer: மேகத்தில்
    (யாத்திராகமம் 34:5)

5. கர்த்தர் எத்தனை தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்?
Answer: ஆயிரம் தலைமுறை மட்டும்
    (யாத்திராகமம் 34:7)

6. கர்த்தர் பிதாக்களுடைய அக்கிரமத்தை எத்தனை தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்?
Answer: மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும்
    (யாத்திராகமம் 34:7)

7. கர்த்தர் எவைகளை மன்னிக்கிறவர்?
Answer: அக்கிரமம், மீறுதல், பாவத்தை
    (யாத்திராகமம் 34:7)

8. கர்த்தர் மோசேயோடிருந்து செய்யும் காரியம் எப்படியிருக்கும்?
Answer: பயக்கரமாயிருக்கும்
    (யாத்திராகமம் 34:10)

9. இஸ்ரவேலர் போய்ச்சேருகிற தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைப் பண்ணினால் அது அவர்கள் நடுவில் எப்படி இருக்கும்?
Answer: கண்ணியாயிருக்கும்
    (யாத்திராகமம் 34:12)

10. ---------------- என்பது கர்த்தருடைய நாமம்.
Answer: எரிச்சருள்ளவர்
    (யாத்திராகமம் 34:14)

11. ஆண்மக்கள் கர்த்தருடைய சந்நிதிக்கு எத்தனை தரம் வரவேண்டும்?
Answer: வருஷத்தில் மூன்று தரம்
    (யாத்திராகமம் 34:24)

12. மோசே அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் எத்தனை நாள் சீனாய் மலையில் இருந்தான்?
Answer: நாற்பது நாள்
    (யாத்திராகமம் 34:28)

13. பத்து கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை பலகைகளில் எழுதினேன் – நான் யார்?
Answer: மோசே
    (யாத்திராகமம் 34:28)

14. மோசே சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவன் முகத்தைப் பார்த்து, ஆரோனும் இஸ்ரவேலரும் ஏன் பயந்தார்கள்?
Answer: மோசேயின் முகம் பிரகாசித்திருந்ததால்
    (யாத்திராகமம் 34:30)

15. மோசேயின் முகம் எதினால் பிரகாசித்திருந்தது?
Answer: தேவன் மோசேயோடு பேசினதால்
    (யாத்திராகமம் 34:29)

16. மோசே எப்பொழுது முகத்தில் முக்காடு போட்டிருந்தான்?
Answer: ஜனங்களுடன் பேசும்போது
    (யாத்திராகமம் 34:33)

17. மோசே கர்த்தருடைய சந்திதியில் எப்பொழுது முக்காடு பேடவில்லை?
Answer: கர்த்தரோடு பேசும்போது
    (யாத்திராகமம் 34:34)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.