Type Here to Get Search Results !

Exodus Twenty Five 25 Quiz Questions & Answers | Bible Kalvi Pathilgal | யாத்திராகமம் 25 விவிலிய வினா விடைகள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twenty Five (25)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து ஐந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. கர்த்தருக்கு எப்படி காணிக்கையை செலுத்த வேண்டும்?
Answer: மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் செலுத்த வேண்டும்
    யாத்திராகமம் 25:2

02. கர்த்தர் இஸ்ரவேலர் நடுவிலே வாசம் பண்ண எதை உண்டுபண்ண சொன்னார்?
Answer: பரிசுத்த ஸ்தலத்தை உண்டு பண்ண சொன்னார்
    யாத்திராகமம் 25:8

03. கர்த்தர்: எந்த மரத்தினால் ஒரு பெட்டியை செய்ய சொன்னார்?
Answer: சீத்திம் மரத்தினால்
    யாத்திராகமம் 25:10

04. சீத்திம் மரப்பெட்டியின் நீளம், அகலம், உயரம் என்ன?
Answer: நீளம் – இரண்டரை முழம்
    அகலம் – ஒன்றரை முழம்
    உயரம் – ஒன்றரை முழம்
    யாத்திராகமம் 25:10

05. சீத்திம் மரப் பெட்டியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் எதினால் மூட வேண்டும்?
Answer: பசும்பொன் தகட்டால் மூட வேண்டும்
    யாத்திராகமம் 25:11

06. சீத்திம் மரப்பெட்டியை சுற்றிலும் எதை உண்டாக்க வேண்டும்?
Answer: பொன்னினால் திரணையை உண்டாக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:11

07. சீத்திம் மரப்பெட்டியில் எத்தனை வளையங்களை வார்ப்பிக்க வேண்டும்?
Answer: நான்கு வளையங்களை வார்ப்பிக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:12

08. சீத்திம் மரப்பெட்டியில் வளையங்களை எப்படி வார்ப்பிக்க வேண்டும்?
Answer: ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களையும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களையும் வார்ப்பிக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:12

09. எந்த மரத்தால் தண்டுகள் செய்ய வேண்டும்? அதை எந்த தகட்டால் மூட வேண்டும்?
Answer: சீத்திம் மரத்தால் தண்டுகள் செய்ய வேண்டும்
    அதை பொன் தகட்டால் மூட வேண்டும்
    யாத்திராகமம் 25:13

10. சீத்திம் மரத்தண்டுகளை என்ன செய்ய வேண்டும்
Answer: சீத்திம் மரப்பெட்டியின் பக்கங்களில் இருக்கின்ற வளையங்களில் பாய்ச்ச வேண்டும்
    யாத்திராகமம் 25:14

11. சீத்திம் மரப்பெட்டிக்குள் என்ன வைக்க வேண்டும்?
Answer: கர்த்தருடைய சாட்சிப் பிரமாணத்தை வைக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:16

12. கிருபாசனத்தை எதினால் உண்டுபண்ண வேண்டும்?
Answer: பசும்பொன்னால்
    யாத்திராகமம் 25:17

13. கிருபாசனத்தின் நீளம், அகலம் என்னவாக இருக்க வேண்டும்?
Answer: நீளம் – இரண்டரை முழ நீளம்
    அகலம் – ஒன்றரை முழ அகலம்
    யாத்திராகமம் 25:17

14. கேரூபீன்களை எதினால் செய்ய வேண்டும்?
Answer: பொன்னை தகடாய் அடித்து அதினால் செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 25:18

15. கேரூபீன்களை எங்கு வைக்க வேண்டும்?
Answer: கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:18

16. எது தங்கள் செட்டைகளை உயர விரித்தும், தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்க வேண்டும்?
Answer: கேருபீன்கள்
    யாத்திராகமம் 25:20

17. சீத்திம் மரப்பெட்டிக்குள் எதை வைக்க வேண்டும்?
Answer: கர்த்தர் கொடுத்த சட்டப்பிரமாணத்தை வைக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:21

18. சீத்திம் மரத்தால் செய்யும் மேஜையின் நீளம், அகலம், உயரம் என்ன?
Answer: நீளம் – இரண்டு முழம்
    அகலம் – ஒரு முழம்
    உயரம் ஒன்றரை முழம்
    யாத்திராகமம் 25:23

19. மேஜையை எதினால் மூட வேண்டும்?
Answer: பசும் பொன்தகட்டால் மூட வேண்டும்
    யாத்திராகமம் 25:24

20. மேஜைக்கு எத்தனை விரட்கடை அளவு சட்டத்தை உண்டு பண்ண வேண்டும்?
Answer: நாலு விரட்கடையளவு
    யாத்திராகமம் 25:25

21. மேஜையின் சட்டத்தை சுற்றிலும் என்ன செய்ய வேண்டும்?
Answer: பொன்னினால் திரணையை உண்டாக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:25

22. மேஜையின் சட்டத்திற்கு எத்தனை பொன்வளையங்களை உண்டாக்க வேண்டும்?
Answer: நான்கு
    யாத்திராகமம் 25:26

23. சாட்சிப்பெட்டிக்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் எதினால் செய்ய வேண்டும்?
Answer: பசும்பொன்னினால் செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 25:29

24. கர்த்தருடைய சமுகத்தப்பங்களை எங்கு வைக்க வேண்டும்?
Answer: மேஜையின் மேல் வைக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:30

25. குத்துவிளக்கை எதினால் செய்ய வேண்டும்?
Answer: பசும்பொன்னினால்
    யாத்திராகமம் 25:31

26. குத்துவிளக்கின் தண்டுகளும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும் பூக்களும் எதினால் செய்யப்பட வேண்டும்?
Answer: பொன்னினால் செய்யப்பட வேண்டும்
    யாத்திராகமம் 25:31

27. குத்துவிளக்கில் எத்தனை கிளைகளை விட வேண்டும்?
Answer: ஆறு கிளைகளை விட வேண்டும்
    யாத்திராகமம் 25:32

28. குத்துவிளக்கில் இருந்து புறப்படும் ஒவ்வொரு கிளையிலும் என்ன இருக்க வேண்டும்?
Answer: வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:33

29. விளக்கின் தண்டில் என்ன இருக்க வேண்டும்?
Answer: வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:34

30. விளக்குத் தண்டிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளுக்கு எத்தனை பழம் இருக்க வேண்டும்?
Answer: இரண்டு கிளையின் கீழ் ஒரு பழம் இருக்க வேண்டும்
    யாத்திராகமம் 25:35

31. விளக்குத் தண்டின் பழங்களையும், கிளைகளையும் எதினால் செய்ய வேண்டும்?
Answer: பொன்னினால் செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 25:36

32. சாட்சிப்பெட்டிக்கு எத்தனை அகல்களை செய்ய வேண்டும்?
Answer: ஏழு அகல்களை செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 25:37

33. சாட்சிப்பெட்டியின் கத்திரிகளும், சாம்பல் பாத்திரங்களும் எதினால் செய்யப்பட வேண்டும்?
Answer: பசும்பொன்னினால் செய்யப்பட வேண்டும்
    யாத்திராகமம் 25:38

34. குத்துவிளக்கையும் அதற்குரிய பரிமுட்டுகளையும் எந்த அளவு பசும்பொன்னினால் செய்ய வேண்டும்?
Answer: ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்ய வேண்டும்
    யாத்திராகமம் 25:39

35. சாட்சிப்பெட்டியின் மாதிரியை கர்த்தர் மோசேக்கு எங்கு வைத்து காண்பித்தார்?
Answer: மலையில் வைத்துக் காண்பித்தார்
    யாத்திராகமம் 25:40

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.