Type Here to Get Search Results !

Exodus Twenty 20 Bible Quiz in Tamil | யாத்திராகமம் 20 பைபிள் வினா விடைகள் தமிழில் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twenty (20)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. இஸ்ரவேல் புத்திரரின் அடிமைத்தன வீடு எது?
Answer: எகிப்து
    (யாத்திராகமம் 20:2)

02. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் ------------------- .
Answer: நானே
    (யாத்திராகமம் 20:2)

03. என்னையன்றி உனக்கு --------------------- உண்டாயிருக்க வேண்டாம்.
Answer: வேறே தேவர்கள்
    (யாத்திராகமம் 20:3)

04. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் ------------ உண்டானவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையும் உண்டாக்க வேண்டாம்.
Answer: தண்ணீரிலும் உண்டானவைகளுக்கு ஒப்பான
    (யாத்திராகமம் 20:4)

05. ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு ------------------ நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
Answer: விக்கிரகத்தையாகிலும்
    (யாத்திராகமம் 20:4)

06. நீ அவைகளை சமஸ்கரிக்கவும், -------------------- வேண்டாம்.
Answer: சேவிக்கவும் வேண்டாம்
    (யாத்திராகமம் 20:5)

07. உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எப்படிப்பட்ட தேவன்?
Answer: எரிச்சலுள்ள தேவன்
    (யாத்திராகமம் 20:5)

08. கர்த்தர்: பிதாக்களுடைய அக்கிரமங்களை பிள்ளைகளிடத்தில் எத்தனையாவது தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்?
Answer: மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் விசாரிக்கிறவர்
    (யாத்திராகமம் 20:5)

09. கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு எத்தனை தலைமுறை மட்டும் இறக்கஞ்செய்வார்?
Answer: ஆயிரம் தலைமுறை மட்டும் இறக்கஞ்செய்வார்
    (யாத்திராகமம் 20:6)

10. எதை வீணிலே வழங்கக்கூடாது?
Answer: தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை
    (யாத்திராகமம் 20:7)

11. கர்த்தர் யாரை தண்டியாமல் விடார்?
Answer: அவருடைய (கர்த்தருடைய) நாமத்தை வீணிலே வழங்குகிறவனை
    (யாத்திராகமம் 20:7)

12. ஓய்வுநாளை எப்படி ஆசரிக்க வேண்டும்?
Answer: பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்
    (யாத்திராகமம் 20:8)

13. ஆறுநாளும் நீ வேலை செய்து, ----------------- நடப்பிப்பாயாக.
Answer: உன் கிரியைகளையெல்லாம்
    (யாத்திராகமம் 20:9)

14. தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாளிலே யார் யாதொரு வேலையும் செய்ய கூடாது?
Answer: நீ, உன் குமாரர், உன் குமாரத்தி, உன் வேலைக்காரன், உன் வேலைக்காரி, உன் மிருகஜீவன், உன் வாசலில் இருக்கிற அந்நியன்
    (யாத்திராகமம் 20:10)

15. கர்த்தர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் எத்தனை நாளில் உண்டாக்கினார்?
Answer: ஆறுநாளில் உண்டாக்கினார்
    (யாத்திராகமம் 20:11)

16. கர்த்தர் எந்த நாளை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கினார்?
Answer: ஓய்வு நாளை
    (யாத்திராகமம் 20:11)

17. உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
Answer: உன் தகப்பனையும் தாயையும், கனம்பண்ண வேண்டும்
    (யாத்திராகமம் 20:12)

18. ------------------ பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Answer: பிறனுக்கு விரோதமாய்
    (யாத்திராகமம் 20:16)

19. எதை இச்சியாதிருக்க வேண்டும்?
Answer: பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக
    (யாத்திராகமம் 20:17)

20. மலையிலிருந்து தேவன் ஜனங்களோடே பேசுகையில், ஜனங்கள் எதைக் கண்டு பின்வாங்கி, தூரத்திலே நின்றார்கள்?
Answer: இடிமுழக்கத்தையும், மின்னல்களையும், எக்காளச் சத்தத்தையும், மலை புகைகிறதையும் கண்டு
    (யாத்திராகமம் 20:18)

21. தேவன் எங்களோடு பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றது யார்?
Answer: இஸ்ரவேல் ஜனங்கள்
    (யாத்திராகமம் 20:18,19)

22. ஜனங்களை சோதிப்பதற்காகவும், அவர்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் அவர்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும் எழுந்தருளியது யார்?
Answer: தேவன்
    (யாத்திராகமம் 20:20)

23. தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய் சேர்ந்தது யார்?
Answer: மோசே
    (யாத்திராகமம் 20:21)

24. எதினாலே பலிபீடத்தை உண்டாக்கி, அதின்மேல் ஆடுகளையும், மாடுகளையும், சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்த வேண்டும்?
Answer: மண்ணினாலே பலிபீடத்தை உண்டாக்கி
    (யாத்திராகமம் 20:24)

25. என் பலிபீடத்தில் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு என்ன செய்ய கூடாது?
Answer: படிகளால் பலிபீடத்தின் மேல் ஏறக் கூடாது
    (யாத்திராகமம் 20:26)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.