Type Here to Get Search Results !

Exodus Nineteen 19 Questions with Answers Tamil | யாத்திராகமம் 19 வினா விடைகள் | வேதாகம கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Nineteen (19)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதிதொன்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் தேதியில் எங்கு வந்து சேர்ந்தார்கள்?
Answer: சீனாய் வனாந்தரம்
    யாத்திராகமம் 19:1

02. இஸ்ரவேல் புத்திரர் ரெவிதீமிலிருந்து பிரயாணப்பட்டு, எந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்?
Answer: சீனாய் வனாந்தரம்
    யாத்திராகமம் 19:2

03. இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வானந்தரத்தில் எங்கு பாளயமிறங்கினார்கள்?
Answer: மலைக்கு எதிரே பாளயமிறங்கினார்கள்
    யாத்திராகமம் 19:2

04. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எப்படி சுமந்து, அவர்களை தன்னன்டைக்குச் சேர்த்துக்கொண்டார்?
Answer: கழுகுகளின் செட்டைகளின்மேல் சுமந்து
    யாத்திராகமம் 19:4

05. நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்கு எப்படி இருப்பீர்கள் என்று கர்த்தர் சொன்னார்?
Answer: சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் என்று கர்த்தர் சொன்னார்
    யாத்திராகமம் 19:5

06. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும், --------- இருப்பீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Answer: பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்
    யாத்திராகமம் 19:6

07. கர்த்தர் மோசேயோடே பேசுகிறதை ஜனங்கள் கேட்டு, அவரை விசுவாசிக்கும்படி கர்த்தர் மோசேயினிடத்திற்கு எப்படி வருவதாக கூறினார்?
Answer: கார்மேகத்தில் வருவதாக கூறினார்
    யாத்திராகமம் 19:9

08. ஜனங்கள் பரிசுத்தமான பின் எத்தனையாவது நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாய் இறங்குவார்?
Answer: மூன்றாம் நாளில்
    யாத்திராகமம் 19:11

09. கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாக எந்த மலையில் இறங்குவார்?
Answer: சீனாய் மலையில்
    யாத்திராகமம் 19:11

10. கர்த்தர் மலையில் இறங்கும்போது மலையை தொட்டால் என்ன ஆகும்?
Answer: மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சமயாகவே கொல்லப்படுவான்
    யாத்திராகமம் 19:12

11. கர்த்தர் மலையில் இறங்கும்போது மலையை தொடுகிறவன் எப்படி சாக வேண்டும்?
Answer: கல்லெறியுண்டு சக வேண்டும் அல்லது ஊடுருவ எய்யுண்டு சாக வேண்டும்
    யாத்திராகமம் 19:13

12. எப்போது ஜனங்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்?
Answer: எக்காலம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில்
    யாத்திராகமம் 19:13

13. மூன்றாம் நாள் விடியற்காலத்தில் மலையின்மேல் உண்டானது என்ன?
Answer: இடிமுழக்கம், மின்னல், கார்மேகம், மகா பலத்த எக்கால சத்தம்
    யாத்திராகமம் 19:16

14. கர்த்தர் சீனாய் மலையின்மேல் எப்படி இறங்கினார்?
Answer: அக்கினியில் இறங்கினார்
    யாத்திராகமம் 19:18

15. கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்கியபோது மலை எப்படி இருந்தது?
Answer: புகை்ககாடாய் இருந்தது
    யாத்திராகமம் 19:18

16. கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்கியபோது வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது எது?
Answer: எக்காள சத்தம்
    யாத்திராகமம் 19:19

17. கர்த்தர் சீனாய் மலையில் எங்கு இறங்கினார்?
Answer: கொடுமுடியில் இறங்கினார்
    யாத்திராகமம் 19:20

18. கர்த்தர் சீனாய் மலையில் இறங்கியபோது மோசேயை எங்கு வரவழைத்தார்?
Answer: கொடுமுடிக்கு
    யாத்திராகமம் 19:20

19. கொடுமுடியில் இருந்த மோசேயை கர்த்தர் இறங்கிப்போய் யாரை அழைத்துவரச் சொன்னார்?
Answer: ஆரோன்
    யாத்திராகமம் 19:24

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.