Type Here to Get Search Results !

Exodus Eighteen 18 Quiz in Tamil | Bible Questions And Answers | யாத்திராகமம் 18 கேள்வி பதில்கள் | விவிலிய வினா விடைகள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Eignteen (18)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதினெட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. மோசேயின் மாமன் பெயர் என்ன?
Answer: எத்திரோ
    (யாத்திராகமம் 18:1)

02. கர்த்தர் எகிப்திலிருந்து இஸ்ரவேலரைப் புறப்படப்பண்ணினார் என்று கேள்விப்பட்டது யார்?
Answer: எத்திரோ
    (யாத்திராகமம் 18:1)

03. மோசேயினால் எத்திரோவினிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டவர்கள் யார்?
Answer: மோசே தன் மனைவியையும், இரண்டு குமாரரையும் எத்திரோவினிடத்திற்கு திரும்பி அனுப்பினான்
    (யாத்திராகமம் 18:2)

04. மோசேயின் மனைவி பெயர் என்ன?
Answer: சிப்போராள்
    (யாத்திராகமம் 18:2)

05. ”நான் அந்நிய தேசத்தில் பரதேசியானேன்” என்று சொல்லி, மோசே தன் மகனுக்கு என்ன பெயரிட்டான்?
Answer: கெர்சோம்
    (யாத்திராகமம் 18:3)

06. “என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார்” என்று சொல்லி, மோசே தன் இரண்டாவது மகனுக்கு என்ன பெயரிட்டான்?
Answer: எலியேசர்
    (யாத்திராகமம் 18:4)

07. எத்திரோ மோசேயைப் பார்க்க எங்கு வந்தார்?
Answer: மோசே பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்திற்கு வந்தார்
    (யாத்திராகமம் 18:5)

08. எத்திரோ மோசேயை பார்க்க வந்த போது யாரை கூட்டிக்கொண்டு வந்தான்?
Answer: மோசேயின் மனைவியையும், அவன் இரண்டு குமாரரையும்
    (யாத்திராகமம் 18:5)

09. மோசே யாருக்கு எதிர்கொண்டு போய் அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்?
Answer: எத்திரோ
    (யாத்திராகமம் 18:7)

10. மோசேயும், எத்திரோவும் ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு எங்கு பிரவேசித்தார்கள்?
Answer: கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்
    (யாத்திராகமம் 18:7)

11. வழியிலே தங்களுக்கு நேரிட்ட எதை மோசே தன் மாமனாகிய எத்திரோவுக்கு சொன்னான்?
Answer: எல்லா வருத்தத்தையும் மோசே தன் மாமனாகிய எத்திரோவுக்குச் சொன்னான்
    (யாத்திராகமம் 18:8)

12. கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து சந்தோஷப்பட்டது யார்?
Answer: எத்திரோ
    (யாத்திராகமம் 18:9)

13. உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றது யார்?
Answer: எத்திரோ
    (யாத்திராகமம் 18:10)

14. கர்த்தர் யாரைப் பார்க்கிலும் பெரியவர் என்று எத்திரோ சொன்னான்?
Answer: கர்த்தர் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்று எத்திரோ சொன்னான்
    (யாத்திராகமம் 18:11)

15. வேதாகமத்தில் முதல் முதலில் தேவனுக்கு சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தியது யார்?
Answer: எத்திரோ
    (யாத்திராகமம் 18:12)

16. எத்திரோவோடு தேவசமுகத்தில் போஜனம் பண்ணியது யார்?
Answer: ஆரோனும், இஸ்ரவேல் மூப்பரும்
    (யாத்திராகமம் 18:12)

17. ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தது யார்?
Answer: மோசே
    (யாத்திராகமம் 18:13)

18. மோசே எவ்வளவு நேரம் ஜனங்களை நியாயம் விசாரித்தான்?
Answer: காலமே துவக்கிச் சாயங்காலம் மட்டும்
    (யாத்திராகமம் 18:14)

19. ”தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் யாரிடத்தில் போனார்கள்?
Answer: மோசே
    (யாத்திராகமம் 18:15)

20. மோசே இஸ்ரவேலரின் வழக்கைத் தீர்த்து, அவர்களுக்கு தேவகட்டளைகளையும், --------------- தெரிவித்தான்?
Answer: அவருடைய பிரமாணங்களையும் தெரிவித்தான்
    (யாத்திராகமம் 18:16)

21. ”நீர் செய்கிற காரியம் நல்லதல்ல” யார்? யாரிடம் சொன்னது?
Answer: எத்திரோ – மோசேயிடம் சொன்னது
    (யாத்திராகமம் 18:17)

22. ”உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்” என்று யார்? யாரிடம் சொன்னது?
Answer: எத்திரோ – மோசேயிடம் சொன்னது
    (யாத்திராகமம் 18:19)

23. ஜனங்களுக்கு எதை வெளிப்படுத்த வேண்டும் என்று எத்திரோ சொன்னார்?
Answer: கட்டளைகளையும், பிரமாணங்களையும்
    (யாத்திராகமம் 18:20)

24. ஜனங்களுக்கு அதிபதியாக நியமிக்கக்கூடியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று எத்திரோ மோசேயிடம் சொன்னார்?
Answer: தேவனுக்குப் பயந்தவர்களாக, உண்மையுள்ளவர்களாக, பொறுளாசையை வெறுக்கிறவர்களாக, திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்
    (யாத்திராகமம் 18:21)

25. தேர்ந்தெடுத்தவர்களை எத்தனை எத்தனை பேருக்கு அதிபதியாக நியமிக்க வேண்டும் என்று எத்திரோ மோசேயிடம் சொன்னான்?
Answer: ஆயிரம் பேருக்கு அதிபதியாக, நூறு பேருக்கு அதிபதியாக, ஐம்பது பேருக்கு அதிபதியாக, பத்து பேருக்கு அதிபதியாக
    (யாத்திராகமம் 18:21)

26. மோசேயினால் ஏற்படுத்தப்பட்ட அதிபதிகள் எப்படிப்பட்ட காரியங்களை மாத்திரம் மோசேயிடம் கொண்டு வந்தார்கள்?
Answer: வருத்தமான காரியங்களை மாத்திரம் மோசேயினிடம் கொண்டு வந்தார்கள்
    (யாத்திராகமம் 18:26)

27. மோசேயினால் ஏற்படுத்தப்பட்ட அதிபதிகள் எப்படிப்பட்ட காரியங்களை தாங்களே தீர்த்தார்கள்?
Answer: சிறிய காரியங்களை
    (யாத்திராகமம் 18:26)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.