Type Here to Get Search Results !

Exodus Seventeen 17 Questions & Answers | Bible Quiz in Tamil | யாத்திராகமம் 17 விவிலிய வினா விடைகள் | பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Seventeen (17)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதினேழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. இஸ்ரவேல் புத்திரர் சீன் வனாந்தரத்தில் இருந்து எங்கு பாளயமிறங்கினார்கள்?
A) ஏலிம்
B) சுக்கோத்
C) ரெவிதீம்
Answer: C) ரெவிதீம்
    (யாத்திராகமம் 17:11)

02. இஸ்ரவேல் புத்திரர் யாருடைய கட்டளையின் படி சீன் வனாந்தரத்திலிருந்து ரெவிதீமிற்கு வந்தார்கள்?
A) மோசே
B) கர்த்தர்
C) ஆரோன்
Answer: B) கர்த்தர்
    (யாத்திராகமம் 17:1)

03. இஸ்ரவேல் புத்திரர் "எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர்" என்று யாரிடம் கேட்டார்கள்?
A) மோசே
B) கர்த்தர்
C) ஆரோன்
Answer: A) மோசே
    (யாத்திராகமம் 17:3)

04. "இவர்கள் என்மேல் கல்லெறியப்பார்க்கிறார்களே" யார்? யாரிடம் சொன்னது?
A) மோசே – கர்த்தர்
B) மோசே – ஆரோன்
C) கர்த்தர் - மோசே
Answer: A) மோசே – கர்த்தர்
    (யாத்திராகமம் 17:4)

05. கர்த்தர் மோசேயிடம் ஓரேபுக்கு யாரை கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்?
A) காலேப், யோசுவா
B) ஆரோன், யோசுவா
C) இஸ்ரவேல் மூப்பர்
Answer: C) இஸ்ரவேல் மூப்பர்
    (யாத்திராகமம் 17:5,6)

06. மோசே தன் கோலினால் எந்த இடத்தின் கன்மலையை அடித்தான்? தண்ணீர் வந்தது?
A) ஓரேப்
B) ரெவிதீம்
C) சீனாய்
Answer: A) ஓரேப்
    (யாத்திராகமம் 17:6)

07. இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தரை பரிட்சை பார்த்ததின் நிமித்தமும்; அந்த இடத்திற்கு மோசே என்ன பெயரிட்டான்?
A) சீன், சீனாய்
B) மாசா, மேரிபா
C) காசா, ஓரோப்
Answer: B) மாசா, மேரிபா
    (யாத்திராகமம் 17:7)

08. ரெவிதீமிலே இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம்பண்ணியது யார்?
A) மோவாபியர்
B) அமலேக்கியர்
C) அம்மோனியர்
Answer: B) அமலேக்கியர்
    (யாத்திராகமம் 17:8)

09. நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு அமலேக்கியரோடு யுத்தம்பண்ணு என்று மோசே யாரிடம் சொன்னான்?
A) ஊர்
B) யோசுவா
C) காலேப்
Answer: B) யோசுவா
    (யாத்திராகமம் 17:9)

10. அமலேக்கியரோடு யுத்தம் நடக்கும்போது மலையுச்சிக்கு ஏறியது யார்?
A) மோசே, ஆரோன்
B) மோசே, காலேப், யோசுவா
C) மோசே, ஆரோன், ஊர்
Answer: C) மோச, ஆரோன், ஊர்
    (யாத்திராகமம் 17:10)

11. மோசே தன் கையை ஏறெடுக்கையில் மேற்கொண்டது யார்?
A) இஸ்ரவேலர்
B) அமலேக்கியர்
C) அம்மோனியர்
Answer: A) இஸ்ரவேலர்
    (யாத்திராகமம் 17:11)

12. மோசே தன் கையை தாழவிடுகையில் மேற்கொண்டது யார்?
A) இஸ்ரவேலர்
B) அமலேக்கியர்
C) அம்மோனியர்
Answer: B) அமலேக்கியர்
    (யாத்திராகமம் 17:11)

13. மலையுச்சியில் மோசேயின் கை அசந்துபோனதினால், அவன் கையை தாங்கியது யார்? யார்?
A) ஆரோன், ஊர்
B) ஆரோன், யோசுவா
C) காலேப், யோசுவா
Answer: A) ஆரோன், ஊர்
    (யாத்திராகமம் 17:12)

14. யாருடைய கை சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாய் இருந்தது?
A) மோசே
B) யோசுவா
C) ஆரோன்
Answer: A) மோசே
    (யாத்திராகமம் 17:12)

15. அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறியடித்தது யார்?
A) மோசே
B) யோசுவா
C) ஆரோன்
Answer: B) யோசுவா
    (யாத்திராகமம் 17:13)

16. கர்த்தர் யாரை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன் என்றார்?
A) மோவாபியர்
B) இஸ்ரவேல் புத்திரர்
C) அமலேக்கியர்
Answer: C) அமலேக்கியர்
    (யாத்திராகமம் 17:14)

17. அமலேக்கியரை முறியடித்தபோது மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு என்ன பெயரிட்டான்?
A) யேகோவா யீரே
B) யோகோவா ஷம்மா
C) யோகோவா நிசி
Answer: C) யோகோவா நிசி
    (யாத்திராகமம் 17:15)

18. யாருடைய கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாய் இருந்தது?
A) மோவாபியன்
B) அமலேக்கியன்
C) அம்மோனியன்
Answer: B) அமலேக்கியன்
    (யாத்திராகமம் 17:16)

19. தலைமுறை தலைமுறை தோறும் யாருக்கு விரோதமாக கர்த்தரின் யுத்தம் நடக்கும்?
A) மோவாப்
B) அமலேக்கு
C) அம்மோன்
Answer: B) அமலேக்கு
    (யாத்திராகமம் 17:16)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.