Type Here to Get Search Results !

Exodus Sixteen 16 Questions & Answers in Tamil | யாத்திராகமம் 16 பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Sixteen (16)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பதினாறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருந்த வனாந்தரத்தின் பெயர் என்ன?
A) சீன்வனாந்தரம்
B) பாரான் வனாந்தரம்
C) சூர்வனாந்தரம்
Answer: A) சீன்வனாந்தரம்
    (யாத்திராகமம் 16:1)

02. இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எகிப்திலிருந்து புறப்பட்டு எத்தனையாவது நாளில் சீன்வனாந்தரம் வந்தார்கள்?
A) முதல் மாதம் பத்தாம் தேதி
B) இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதி
C) மூன்றாம் மாதம் இருபதாம் Nதி
Answer: B) இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதி
    (யாத்திராகமம் 16:1)

03. சீன் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் யாருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்?
A) கர்த்தர்
B) மோசே, ஆரோன்
C) மோசே
Answer: B) மோசே, ஆரோன்
    (யாத்திராகமம் 16:2)

04. இஸ்ரவேல் புத்திரர்: நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையில் உட்கார்ந்து அப்பத்தை திர்ப்தியாகச் சாப்பிட்ட இடம் என்று எதை சொன்னார்கள்?
A) எகிப்து
B) வனாந்தரம்
C) கானான்
Answer: A) எகிப்து
    (யாத்திராகமம் 16:3)

05. இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரெல்லாரும் வனாந்தரதிசையாய்த் திரும்பிப்பார்த்தபோது கர்த்தருடைய மகிமை எங்கு காணப்பட்டது?
A) மலையில்
B) முட்டிசெடியில்
C) மேகத்தில்
Answer: C) மேகத்தில்
    (யாத்திராகமம் 16:10)

06. வனாந்தரத்தில் காடைகள் விழுந்தது எப்போது?
A) அதிகாலை
B) மத்தியானம்
C) சாயங்காலம்
Answer: C) சாயங்காலம்
    (யாத்திராகமம் 16:13)

07. மன்னாவை கர்த்தர் தலைக்கு எத்தனை ஓமர் அளவு எடுக்கச் சொன்னார்?
A) ஒரு ஓமர்
B) இரண்டு ஓமர்
C) மூன்று ஓமர்
Answer: A) ஒரு ஓமர்
    (யாத்திராகமம் 16:16)

08. மீதியாக வைத்த மன்னா என்ன ஆனது?
A) கரைந்துபோயிற்று
B) பூச்சிபிடித்து நாற்றமெடுத்தது
C) காணாமல்போயிற்று
B) பூச்சிபிடித்து நாற்றமெடுத்தது
    (யாத்திராகமம் 16:20)

09. மன்னாவை விடியற்காலம் மட்டும் மீதியாய் வைத்தவர்கள் மீது கோபம் கொண்டது யார்?
A) மோசே
B) கர்த்தர்
C) ஆரோன்
Answer: A) மோசே
    (யாத்திராகமம் 16:20)

10. தேவன் கொடுத்த மன்னாவை இஸ்ரவேல் புத்திரர் எப்போது சேர்த்தார்கள்?
A) விடியற்காலம்
B) மத்தியானம்
C) சாயங்காலம்
Answer: A) விடியற்காலம்
    (யாத்திராகமம் 16:21)

11. மன்னா எப்போது உருகிப்போகும்?
A) வெளியில் ஏறஏற
B) வெளியில் இறங்க இறங்க
C) மழை பெய்ய பெய்ய
Answer: A) வெளியில் ஏறஏற
    (யாத்திராகமம் 16:21)

12. எந்த நாளிலே தலைக்கு இரண்டு ஓமர் அளவு மன்னாவைச் சேர்த்தார்கள்?
A) முதல் நாள்
B) ஆறாம் நாள்
C) ஏழாம் நாள்
Answer: B) ஆறாம் நாள்
    (யாத்திராகமம் 16:22)

13. என் கட்டளைகளையும், என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்? யார்? யாரிடம் சொன்னது?
A) கர்த்தர் - மோசே
B) கர்த்தர் - இஸ்ரவேல் புத்திரர்
C) மோசே - இஸ்ரவேல் புத்திரர்
Answer: A) கர்த்தர் - மோசே
    (யாத்திராகமம் 16:28)

14. இஸ்ரவேல் ஜனங்கள் எந்த நாளில் ஓய்ந்திருந்தார்கள்?
A) முதல் நாள்
B) ஆறாம் நாள்
C) ஏழாம் நாள்
Answer: C) ஏழாம் நாள்
    (யாத்திராகமம் 16:30)

15. வானத்திலிருந்து வந்த அப்பத்திற்கு இஸ்ரவேல் வம்சத்தார் என்ன பெயரிட்டார்கள்?
A) மன்னா
B) புளிப்பில்லாத அப்பம்
C) தேனிட்ட அப்பம்
Answer: A) மன்னா
    (யாத்திராகமம் 16:4,31)

16. கொத்துமல்லி அளவாயும், வெண்மை நிறமாயும் இருந்தது எது?
A) காடை
B) அப்பம்
C) மன்னா
Answer: C) மன்னா
    (யாத்திராகமம் 16:31)

17. மன்னாவின் ருசி எப்படி இருந்தது?
A) அப்பம் போன்று
B) தேனிட்ட பணிகாரம் போன்று
C) இறைச்சி போன்று
Answer: B) தேனிட்ட பணிகாரம் போன்று
    (யாத்திராகமம் 16:31)

18. ஒரு ஓமர் அளவு மன்னாவை எடுத்து ஒரு கலசத்திலே வை என்று மோசே யாரிடம் சொன்னான்?
A) காலேப்
B) யோசுவா
C) ஆரோன்
Answer: C) ஆரோன்
    (யாத்திராகமம் 16:33)

19. இஸ்ரவேல் புத்திரர் எத்தனை நாள் மன்னாவை புசித்தார்கள்?
A) நாற்பது நாள்
B) நாற்பது மாதம்
C) நாற்பது வருஷம்
Answer: C) நாற்பது வருஷம்
    (யாத்திராகமம் 16:35)

20. இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்தின் எல்லையை சேரும்வரைக்கும் எதை புசித்தார்கள்?
A) மன்னா
B) புளிப்பில்லா அப்பம்
C) காடைகள்
Answer: A) மன்னா
    (யாத்திராகமம் 16:35)

21. ஒரு ஓமரானது எப்பாவில் எத்தனை பங்கு?
A) ஐந்தில் ஒரு பங்கு
B) ஏழில் ஒரு பங்கு
C) பத்தில் ஒரு பங்கு
Answer: C) பத்தில் ஒரு பங்கு
    (யாத்திராகமம் 16:36)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.