Type Here to Get Search Results !

Exodus Twelve 12 Bible Quiz Questions & Answers | யாத்திராகமம் 12 பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Twelve (12)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் பன்னிரண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. முதலாம் மாதம் எந்த தேதியில் வீட்டுத்தலைவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை தெரிந்துகொள்ளக்கடவர்கள்?
A) முதல் தேதி
B) ஏழாம் தேதி
C) பத்தாம் தேதி
Answer: C) பத்தாம் தேதி
    (யாத்திராகமம் 12:3)

02. பஸ்கா ஆட்டுக்குட்டி எத்தனை வயதுள்ளதாய் இருக்க வேண்டும்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: A) ஒன்று
    (யாத்திராகமம் 12:5)

03. நிலைக்கால்கள் இரண்டிலும், நிலையின் மேற்சட்டத்திலும் எதைத் தெளிக்க வேண்டும்?
A) கசப்பான கீரை
B) பஸ்கா ஆட்டு இரத்தம்
C) நயில் நதியின் தண்ணீர்
Answer: B) பஸ்கா ஆட்டு இரத்தம்
    (யாத்திராகமம் 12:7)

04. பஸ்கா ஆட்டுக்குட்டியை எப்போது புசிக்க வேண்டும்?
A) விடியற்காலம்
B) சாயங்காலம்
C) இராத்திரி
Answer: C) இராத்திரி
    (யாத்திராகமம் 12:8)

05. பஸ்கா ஆட்டுக்குட்டியை எதோடு சேர்த்து புசிக்க வேண்டும்?
A) புளித்த அப்பத்தோடும், கசப்பான கீரையோடும்
B) புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரையோடும்
C) புளிப்பில்லாத அப்பத்தோடும், இனிப்பான கீரையோடும்
Answer: B) புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரையோடும்
    (யாத்திராகமம் 12:8)

06. பஸ்கா ஆட்டுக்குட்டியை எப்படி புசிக்க வேண்டும்?
A) பச்சையாய்
B) தண்ணீரில் அவித்து
C) நெருப்பில் சுட்டு
Answer: C) நெருப்பில் சுட்டு
    (யாத்திராகமம் 12:9)

07. பஸ்காவை புசித்தபின் மீதியாய் இருக்கிறதை என்ன செய்ய வேண்டும்?
A) ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்
B) விதவைகளுக்கு கொடுக்க வேண்டும்
C) அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும்
Answer: C) அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும்
    (யாத்திராகமம் 12:10)

08. புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாள் புசிக்க வேண்டும்?
A) மூன்று நாள்
B) ஐந்து நாள்
C) ஏழு நாள்
Answer: A) மூன்று நாள்
    (யாத்திராகமம் 12:15)

09. எந்த நாளில் பரிசுத்த சபை கூடுதல் இருக்க வேண்;டும்?
A) முதலாம் நாள்
B) முதலாம் மற்றும் ஏழாம் நாள்
C) ஏழாம் நாள்
Answer: B) முதலாம் மற்றும் ஏழுhம் நாள்
    (யாத்திராகமம் 12:16)

10. முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரை எதை புசிக்க வேண்டும்?
A) புளித்த அப்பம்
B) பஸ்கா ஆட்டுக்குட்டி
C) புளிப்பில்லா அப்பம்
Answer: C) புளிப்பில்லா அப்பம்
    (யாத்திராகமம் 12:18)

11. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின பத்தாம் வாதை எது?
A) வெட்டுக்கிளிகள்
B) தலைப்பிள்ளைச் சங்காரம்
C) மூன்றுநாள் காரிருள்
Answer: B) தலைப்பிள்ளைச் சங்காரம்
    (யாத்திராகமம் 12:29)

12. பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைப் போகவிட்ட நேரம் எது?
A) அதிகாலை
B) சாயங்காலம்
C) இராத்திரி
Answer: C) இராத்திரி
    (யாத்திராகமம் 12:31,32)

13. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டு கால்நடையாய் பிரயாணம் பண்ணி எங்கு போனார்கள்?
A) கானான்
B) சுக்கோத்
C) இஸ்ரவேல்
Answer: B) சுக்கோத்
    (யாத்திராகமம் 12:37)

14. எகிப்திலிருந்து புரப்பட்ட புருஷர்கள் எத்தனைபேர்?
A) மூன்று லட்சம்
B) ஆறு லட்சம்
C) ஏழு லட்சம்
Answer: B) ஆறு லட்சம்
    (யாத்திராகமம் 12:37)

15. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் எத்தனை வருஷம்?
A) நானூறு
B) நானூற்று பத்து
C) நானூற்று முப்பது
Answer: C) நானூற்று முப்பது
    (யாத்திராகமம் 12:40)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.