Type Here to Get Search Results !

Exodus Six 6 Bible Quiz Questions & Answers in Tamil | யாத்திராகமம் 6 கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Six (6)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் ஆறாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபிற்கு எந்த நாமத்தினால் தரிசனமானார்?
A) யேகோவா
B) சர்வவல்லமையுள்ள தேவன்
C) இருக்கிறவராக இருக்கிறேன்
Answer: B) சர்வவல்லமையுள்ள தேவன்
    (யாத்திராகமம் 6:3)

02. எந்த நாமத்தினாலே தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு தரிசனமாகவில்லை?
A) யேகோவா
B) சர்வவல்லமையுள்ள தேவன்
C) இருக்கிறவராக இருக்கிறேன்
Answer: A) யேகோவா
    (யாத்திராகமம் 6:3)

03. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு பரதேசியாய் சஞ்சரித்த தேசம் எது?
A) எகிப்து
B) கல்தேயர்
C) கானான்
Answer: C) கானான்
    (யாத்திராகமம் 6:4)

04. நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: A) மோசே
    (யாத்திராகமம் 6:12,30)

05. ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ இவர்கள் யாருடைய வம்சங்களின் தலைவர்கள்?
A) லேவி
B) சிமியோன்
C) ரூபன்
Answer: C) ரூபன்
    (யாத்திராகமம் 6:14)

06. சிமியோனின் மனைவி கானானிய ஸ்திரியின் குமாரன் பெயர் என்ன?
A) சவுல்
B) எமுவேல்
C) சோகார்
Answer: A) சவுல்
    (யாத்திராகமம் 6:15)

07. எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், சவுல் இவர்கள் யாருடைய வம்சங்களின் தலைவர்கள்?
A) லேவி
B) சிமியோன்
C) ரூபன்
Answer: B) சிமியோன்
    (யாத்திராகமம் 6:15)

08. உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரரின் நாமங்கள் என்ன?
A) எமுவேல், சோகார், சவுல்
B) ஆனோக்கு, பல்லூ, என்ரோஸ்
C) கெர்சோன், கோகாத், மெராரி
Answer: C) கெர்சோன், கோகாத், மெராரி
    (யாத்திராகமம் 6:16)

09. லேவி உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்று இருபது
B) நூற்று முப்பத்து மூன்று
C) நூற்று முப்பத்து ஏழு
Answer: C) நூற்று முப்பத்து ஏழு
    (யாத்திராகமம் 6:16)

10. லிப்னீ, சிமேயீ இவர்கள் யாருடைய குமாரர்?
A) கெர்சோன்
B) கோகாத்
C) மொரரி
Answer: A) கெர்சோன்
    (யாத்திராகமம் 6:17)

11. அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் இவர்கள் யாருடைய குமாரர்?
A) கெர்சோன்
B) கோகாத்
C) மெராரி
Answer: B) கோகாத்
    (யாத்திராகமம் 6:18)

12. கோகாத்தின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்று மூன்று
B) நூற்று முப்பத்து மூன்று
C) நூற்று முப்பத்து ஏழு
Answer: B) நூற்று முப்பத்து மூன்று
    (யாத்திராகமம் 6:18)

13. மகேலி, மூசி இவர்கள் யாருடைய குமாhர்?
A) கெர்சோன்
B) கோகாத்
C) மெராரி
Answer: C) மெராரி
    (யாத்திராகமம் 6:19)

14. தன் அத்தையை விவாகம் பண்ணியது யார்?
A) மெராரி
B) கெர்சோன்
C) அம்ராம்
Answer: C) அம்ராம்
    (யாத்திராகமம் 6:20)

15. யோகெபேத்தின் கணவன் பெயர் என்ன?
A) அம்ராம்
B) எமுவேல்
C) ஊசியேல்
Answer: A) அம்ராம்
    (யாத்திராகமம் 6:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.